இயக்குனர் சேரன் தனது பொக்கிஷத்தை 14ஆம் தேதி திரையிடுகிறார். கடித இலக்கியமாக செல்லுலாய்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் குறிப்பாக காதலர்களிடம் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
பொக்கிஷம் படத்தின் போஸ்டரும், இசை வெளியீட்டு விழாவும் கூட ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். இப்போது சென்சார் போர்டால் யு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது படத்துக்கு இன்னுமொரு ப்ளஸ்பாய்ண்ட்.
இத்தனை பாசிட்டிவ் பாயிண்டுகள் இருப்பதால்தான் சேரனின் பொக்கிஷம் பன்மடங்கு எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
கந்தசாமி ரிலீஸ் என்பதால் பல படங்கள் களத்தில் இறங்கத் தயங்கி ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ள இந்த நேரத்தில், சேரன் தனது பொக்கிஷத்தை வெளியிடுகிறார்.
வாழ்த்துக்கள் சேரன்.


0 comments:
Post a Comment