Friday, July 3, 2009

லொள்ளு சபா - கில்லி









Read More...

லொள்ளு சபா - பாஷா



Read More...

லொள்ளு சபா - பிஞ்சிலே பழுத்தது



Read More...

மைசூர் போண்டா

மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டாவை, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துக்கும் செய்யலாம்.
தேவையானப் பொருட்கள் :
உளுத்தம்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள்.


இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேகவிட்டு எடுங்கள்.

Read More...

பருப்பு‌க் குழ‌ம்பு

தேவையானவை:
து.பருப்பு- அரை கப்
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
உப்பு- ‌சி‌றிது
புளி- ‌சி‌றிது
மா வடு (சின்ன மாங்க்காய்) - 6
சின்ன வெங்காயம்- 10

அரைக்க:
காய்ந்த மிளகாய்- 12
சோம்பு- ‌சி‌றிது
சீரகம்- ‌சி‌றிது
உப்பு- சிறிது

தாளிக்க:
எண்ணெய் - 5 தே‌க்கர‌ண்டி
மிளகு- 10
கடுகு- அரை தே‌க்கர‌ண்டி
உளுத்தம்பருப்பு- 1 தே‌க்கர‌ண்டி
சோம்பு- ‌சி‌றிது
பூண்டு- சில பல்

செய்முறை:
பருப்பை ஊறவைத்து, மஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும். மா வடுவை வெந்நீரில் ஊறவைக்கவும். வெங்காய‌ம், பூ‌ண்டை நறுக்கவும்.அரைக்க வே‌ண்டியதை விழுதாக அரைக்கவும்.உப்பு, புளியைக் கரைத்து, அதில் அரைத்த பருப்பு, மசாலா சேர்த்து, 5 கப் நீர் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தா‌ளி‌த்து வெங்காய‌த்தை வதக்கவும். அத்துடன், ஊறவைத்த மா வடுவையும் போட்டு வதக்கி, கரைத்து வைத்திருக்கும் பருப்புக் கலவையை ஊற்றி, பூண்டையும் போட்டு, குறை‌ந்த தணலில் அடிப்பிடிக்காமல் கிளற குழ‌ம்பு வ‌ற்‌றியது‌ம் இற‌க்கவு‌ம்.

Read More...

நாடோடிகள் - விமர்சனம்











நடிப்பு: சசிகுமார், பரணி, விஜய், கஞ்சா கருப்பு, அனன்யா, அபிநயா, ஷாந்தினி தேவாஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர்இசை: சுந்தர் சி பாபுதயாரிப்பு: எஸ்.மைக்கேல் ராயப்பன்எழுத்து, இயக்கம்: பி சமுத்திரக்கனிமக்கள் தொடர்பு: நிகில்...

தொடர்ந்து பாடாவதிப் படங்களாகப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, பளிச் சென்று ஒரு படம் பார்த்தால் எத்தனைப் புத்துணர்ச்சியாக இருக்கும்... அந்தப் புத்துணர்ச்சியைத் தருகிறது நாடோடிகள்!வெற்றிக்கான பார்முலா எது என்பதை சுப்பிரமணியபுரத்தில் சசிகுமாரோடு இணைந்து கற்றுக் கொண்ட சமுத்திரக்கனி, அதே போன்றதொரு கதைக் களத்தில் உருவாக்கியிருக்கும் படம் நாடோடிகள்.

சுப்பிரமணியபுரத்தில் விசுவாசத்துக்காக கொலையும் செய்யும் நண்பர்கள், இந்தப் படத்தில் காதலைச் சேர்த்து வைக்க வாழ்க்கையையே பணயம் வைக்கிறார்கள்.ஒரு கவர்ன்மெண்ட் வேலை கிடைத்தால் போதும், மாமா மகளை கைப்பிடிக்கலாம் என்ற கனவில் காத்திருக்கும் கர்ணா (சசிகுமார்), வங்கி லோன் கிடைத்ததும் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து செட்டிலாகத் துடிக்கும் சந்திரன் (சென்னை 28 விஜய்), பாஸ்போர்ட் வந்ததும் வெளிநாட்டுக்குப் பறக்கும் கனவில் மிதக்கும் பாண்டி (பரணி)... என மூன்று நண்பர்கள். ராத்திரியானதும் தண்ணியடித்து மொட்டை மாடியில் கைலி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் ஒன்றாகத் தூங்கும் அளவுக்கு மிக நெருங்கிய நண்பர்கள். ரொம்ப நல்லவர்கள்...

இவர்களுக்கு இடையில் வருகிறான் இன்னொரு நண்பன் சரவணன். முன்னாள் எம்பியின் மகன். நாமக்கல் பழனிவேல் ராமன் (ஜெயப்பிரகாஷ்) எனும் கோடீஸ்வரரின் மகளைக் காதலிக்கிறான். ஆனால் இருவரின் பெற்றோரும் தங்கள் கவுரவம் பார்த்து குறுக்கே நின்றதால், காதலியைப் பிரிகிறான். கர்ணா மற்றும் அவனது நண்பர்கள் இருக்கும் ஊருக்கு வரும் அவன், திடீரென்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயல்கிறான்.அவனைக் காப்பாற்றும் கர்ணா, விஷயம் அறிந்து, காதலர்களைச் சேர்த்து வைக்க சபதம் ஏற்கிறான். நாமக்கல்லுக்குப் போகிறார்கள் நண்பர்கள். உயிரைப் பணயம் வைத்து பழனிவேல் ராமனின் பெண்ணைத் தூக்குகிறார்கள். இதில் கர்ணாவுக்கு ஒரு கண்ணே பறிபோகும் அளவு படுகாயம் ஏற்படுகிறது. பாண்டிக்கு இரண்டு காதும் செவிடாகிப் போகிறது. சந்திரன் ஒரு காலையே இழக்கிறான். அதுமட்டுமல்ல... மூவரையும் போலீஸ் கைது செய்கிறார்கள்.

விஷயம் தெரிந்ததும் பழனிவேல் ராமன் ஆட்கள் கர்ணாவின் வீட்டில் புகுந்து நடத்திய வன்முறையில், கர்ணாவின் பாட்டி மரணிக்கிறார்.இனி கர்ணாவுக்கு அரசு வேலை கிடைக்காது என்று தெரிந்து, அவர் மாமா தன் மகளை வேறு ஒருவனுக்கு கட்டிக் கொடுத்துவிட, வாழ்க்கையே பறிபோகிறது கர்ணாவுக்கு.இவ்வளவு இழப்புகளையும் அவர்கள் நட்புக்காக தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் இத்தனை கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த ஜோடிகளோ, ஊதாரித்தனமாக ஊரைச் சுற்றி, உடல் பசி தீர்ந்ததும் பிரிந்து விடுகிறார்கள்.கொதித்துப் போகிறார்கள் நண்பர்கள். மீண்டும் புறப்படுகிறார்கள்...

தங்கள் நட்பைக் கொச்சைப்படுத்திய அந்த ஜோடிகளுக்கு பாடம் கற்பிக்க. அது எந்த மாதிரி பாடம் என்பது திரையில்!அநேகமாக, இன்றைய இளைஞர்கள் அல்லது இளமையை ஜஸ்ட் பாஸ் செய்த முன்னாள் வாலிபர்கள் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் சந்தித்த அனுபவமே படத்தின் முதல்பாதி என்பதால், எடுத்த எடுப்பிலேயே படம் மனசுக்கு மிக அருகில் நெருக்கமாகி விடுகிறது.கிராமங்களில் படித்துவிட்டு, வேலை தேடுகிறோம் என்ற பெயரில் சும்மா இருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் அன்றாட செயல்களே திரைக்கதை என்பதால் இன்னும் இணக்கமான மனசோடு படம் பார்க்கிறோம். மிகப் பிடித்துப் போகிறது.நண்பன் தங்கையைக் காதலிப்பதா என்ற உறுத்தலோடு திரியும் இளைஞர்களுக்கு புதிய விளக்கம் கொடுத்து அவர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. தன் நண்பனை தங்கை விரும்புகிறாள் என்பது தெரிந்த பிறகு அதை கண்டும் காணாத மாதிரி நடந்து கொள்ளும் சசிகுமார் மாதிரி தங்களுக்கும் ஒரு நண்பனில்லையே என்ற ஏக்கம் நிறைய பேருக்கு வரக்கூடும்!மூன்று நண்பர்களில் டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்பவர் சசிகுமார்.

நடிப்பு என்பது வலிந்து திணித்து வருவதல்ல. இயல்பாக, ஒரு மனிதனின் உணர்வுகளைக் காட்டக் கூடியதாக இருந்தாலே போதும். அதைத்தான் சசிகுமார் செய்திருக்கிறார். நம்மில் ஒருவராகவே மாறியிருப்பதால், சசிகுமாரின் சின்ன சின்ன தடுமாற்றங்கள் (நடனம்) கூட ஒரு ப்ளஸ்ஸாகவே தெரிகின்றன.நண்பன் செவித்திறன் இழந்து பரிதவிப்பதைப் பார்த்து அவர் கலங்கும் காட்சியும், தன் பாசத்துக்குரிய பாட்டியின் மரணத்தை எண்ணி அவர் உருகும் காட்சியும் மகா இயல்பானவை.தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல கதாநாயகன் கிடைத்து விட்டார்.மற்ற இரு நண்பர்களில் 'கல்லூரி' புகழ் பரணி கலக்குகிறார். தன் கண்ணெதிரே நண்பனின் தங்கை இன்னொரு நண்பனுக்கு பச்சக் கென்று கன்னத்தில் 'இச்' கொடுத்து விட்டுச் செல்ல, மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் அவர் திகைத்து நிற்பதில் அரங்கம் அதிர்கிறது.'சென்னை 28' விஜய் ஓகே. ஆனால் அவர் தந்தையாக வரும் நபர் அவரை விட அருமையாக நடித்துள்ளார். நாயகிகளில் அனன்யா அசத்தல் அழகு. அபிநயாவுக்கு நல்ல வாய்ப்புகள் வரக்கூடும்.மற்ற புதுமுகங்களும் நிறைவாகச் செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல பிரமாதப்படுத்தியிருக்கிறார்.படத்தின் இரண்டாம் பகுதிதான் பலருக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

ஆனால் இந்தக் கதைக்கு வேறு எந்த மாதிரியான தொடர்ச்சியைத் தந்தாலும் அதில் செயற்கைத்தனமே மிஞ்சியிருக்கும். சமுத்திரக்கனி செய்த தவறு, இந்த இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட சீரியலில் வருவது போல காட்சிகளை ஜவ்வாக இழுத்திருப்பதுதான். அதைத் தவிர்த்திருக்கலாம். க்ளைமாக்ஸ் வசனங்களில் இன்னும் அழுத்தம் தேவை.ஆனால் படத்தின் நிறைவுக் காட்சி அட்டகாசம். அதுதான் நட்பின் இயல்பும் கூட... தன்னோடு சேரும் எதையும் எரிக்கும் நெருப்பு மாதிரி நட்பு என்பதை உணர்த்தும் காட்சி அது!நண்பர்களால் கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கப்பட்ட காதல், இணை பிரியாமல் இருக்கிறதா இல்லையா என்று தொடர்ந்து கண்காணிப்பதில், அந்த நண்பர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதுதான் சமுத்திரக்கனி சொல்லும் நீதி.

சரிதான்... ஆனால் பல நட்புகள், அவரவருக்கு திருமணமாகி குடும்பம் குழந்தை என செட்டிலானதும் பிரிந்து போகிற யதார்த்தத்தையும் மறந்துவிடக் கூடாதல்லவா... (அது தனியாக படமாக்கப்படவேண்டிய சமாச்சாரம் என்கிறீர்களா!!)சுந்தர் சி பாபு இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. அந்த 'சம்போ...' பாடல் படத்துக்கு ஜெட் வேக எபெக்ட் தருவது நிஜம்.கதிரின் ஒளிப்பதிவு இயல்பாக உள்ளது. எடிட்டர் ரமேஷ் தனது கத்தரிக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம்.நாடோடிகள் ஒரு மிகச்சிறந்த படமாக இல்லாமல் இருக்கலாம்... ஆனால் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல படம் என்பது மட்டும் உண்மை.அதனால்தான் பாக்ஸ் ஆபீஸில் இந்த நாடோடிகளுக்கு ஏற்கெனவே க்ரீடம் சூட்டிவிட்டார்கள் ரசிகர்களும்!

To Download & Watch the Movie:

Read More...

Thursday, July 2, 2009

மனத்தில் சாந்தியைக் கொண்டு வரும் வழி

முதலில் சாந்தி வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும். அதன்பின் முயன்று பார்க்க வேண்டும், தொடர்ந்து முயல வேண்டும்.

அதற்கான முறைகள் பல உள்ளன. இது ஒரு வழி. நன்றாக உட்கார்ந்து கொள், பின், ஆயிரம் எண்ணங்கள் எண்ணுவதை விட்டுவிட்டு "சாந்தி, சாந்தி, சாந்தி" என்று தொடர்ந்து பாடம் போடு. அமைதியையும் மோனத்தையும் பாவனை செய்து கொள். வரும் எண்ணங்களை ஏறிட்டுப் பார்க்காதே, அவைகளின் கூச்சலுக்குச் செவிகொடுக்காதே.உனக்கு மிகுந்த தொல்லை கொடுக்கும் ஒருவனை விலக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறாய்? அவன் சொல்லுவதைக் கேட்க மறுத்துவிடுகிறாய், முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு எதையோ பார்க்கிறாய். உனது எண்ணங்களையும் அவ்வாறே நடத்து.


மீண்டும் மீண்டும் உட்கார்ந்து சாந்தி உச்சாடனம் போட வாய்ப்புக்களை உண்டாக்கிக்கொள். உறங்கி எழுந்ததும் முதல் வேலையாக இதைச் செய். அதேப்போல் இரவில் உறங்கப் போகுமுன்னும் செய். இதனால் உனது உடல்நலம் கூட முன்னேற்றமடையும். உணவு கொள்ளச் சில நிமிடங்களுக்கு முன் இதைச் செய். உணவு நன்றாகச் செரிப்பதற்கு இது எவ்வளவு உதவி செய்கிறது என்பதை அறிந்து ஆச்சரியப்படுவாய்.இதை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து செய்து வந்தால் சாந்தி வெளியிலிருந்து உனது மனத்திற்குள் வரத் தேவையிராது. நீ என்ன செய்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் உனது மனத்தில் எப்பொழுதும் சாந்தி இருக்கும்.

ஆனால் இதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.தொடக்கத்தில் இந்தச் சாந்தி மந்திரத்தை இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குப் பழகு - மிக எளிய முறையில் செய்.நெருங்கிய நண்பனொருவனை உன்னிடம் வர எப்படிக் கூப்பிடுவாய். சும்மா ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதுதான் தாமதம், பக்கத்தில் வந்துவிடுவான். அதைப் போலத்தான் சாந்தியை உனது நண்பனாக்கிக் கொண்டு கூப்பிட வேண்டும்.

ந‌ன்‌றி : வைகறை (ஸ்ரீஅர‌‌வி‌ந்த ஆ‌சிரம‌க் காலா‌ண்டு வெ‌ளி‌யீடு)

Read More...

‌த‌யி‌ர் லஸ்ஸி

பொதுவாக த‌யிரை மோரா‌க்‌கி‌‌‌த்தா‌ன் குடி‌ப்போ‌ம், ல‌ஸ்‌ஸி செ‌ய்து குடி‌ப்பது குறைவுதா‌ன். இ‌னி ல‌ஸ்‌ஸிதா‌ன் உ‌ங்களது ‌விரு‌ப்பமாக இரு‌க்கு‌ம்.
சமையல் குறிப்பு
தேவையான பொருட்கள்:

பு‌திய தயிர் - 1 க‌ப்
சர்க்கரை - 2 தே‌க்கரண்டி
உ‌ப்பு - 1 ‌சி‌ட்டிகை
கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ர் - 1 ட‌ம்ள‌ர்

செய்முறை:

த‌யிரு‌ட‌ன், உ‌ப்பு, ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அதனுட‌ன் கு‌ளி‌ர்‌ந்த ‌நீரை சே‌ர்‌த்து ‌ந‌ன்கு கல‌க்கவு‌ம்.

தேவையான அளவு ட‌ம்ள‌ர்க‌ளி‌ல் ஊ‌ற்‌றி ‌விரு‌ந்‌தின‌ர்களு‌க்கு‌ப் ப‌ரிமாறலா‌ம். குடு‌ம்ப‌த்‌துட‌னு‌ம் அரு‌ந்தலா‌ம்.

Read More...

ஜோக்ஸ் - வெரி குட்

எப்ப கல்யாணம்?
உன்னோட காத‌லி‌க்கு‌ம் உனக்கும் எப்ப கல்யாணம்?
எப்பவோ முடிஞ்சுருக்க வேண்டியது. அவளோட குடும்பம்தான் குறுக்கால நிக்குது?
குடும்பமா?
ஆமாம். அவளோட ஹஸ்பண்டும், மூன்று குழந்தைகளும்தான். !!!!!!!

பிச்சைக்காரன்
கோம‌தி : தான் பிச்சைக்காரனுக்கு 25 ரூபாய் கொடுத்தேன்னு பெருமை அடிச்சுக்கறாளே, அவ புருஷன் ஒண்ணுமே சொல்ல மாட்டானா?
சும‌தி : அவ பிச்சைக்காரன்னு சொல்றதே அவளோட புருஷன தான்!கோம‌தி : ?!?!?

அதிக மார்க்:
என் பையன் இவ்வளவு அதிக மார்க் வாங்கி பாஸ் பண்ணுவான்னு நினச்சு கூட பாக்கல்ல!
வெரி குட் அடுத்து என்ன செய்யப்போற?
இதுல நான் என்ன செய்ய வே‌ண்யடிது இரு‌க்கு, அவனே 2ம் கிளாஸ்ல போ‌ய் உ‌ட்கா‌ந்து‌க்க வே‌ண்டியதுதா‌ன்.

அண்ணாச்சி கடை:
நீதிபதி: அண்ணாச்சி கடையில போய் திருடணும்னா உனக்கு என்ன தைரியம்?

திருடன்: எடுத்துக்கோ! எடுத்துக்கோ! அண்ணாச்சி கடையில எடுத்துக்கோன்னு அவங்கதான் எசமான் விளம்பரம் செஞ்சாங்க!

ஞாபக மறதி:
டாக்டர் ஞாபக மறதியால கண்ணு போச்சு!

அதெப்படி ஞாபக மறதியால கண்ணு போகும்?
சாப்டுட்டு குச்சியால பல்ல குத்தறதுக்கு பதிலா கண்ண குத்திட்டேன் டாக்டர்.

மனை‌வி:
முதல் நபர் : ஏன் இப்படி இஷ்டத்துக்கு குடிக்கிறே? ஏதாவது கவலையா?
இரண்டாம் நபர் : என் பொண்டாட்டியை பக்கத்து வீட்டுக்காரன் இழுத்துக்கிட்டு போயிட்டான்.
முதல் நபர் : நீ கவலைப் படறது நியாயம் தான்.
இரண்டாம் நபர் : அதுக்கு கவலைப்படலே. எ‌ங்கே மறுபடியும் கொண்டு வந்து விட்டுடுவானோன்னுதா‌ன் பயமா இருக்கு.

Read More...

பட்டர் பிஸ்கெட்

பட்டர் பிஸ்கெட் செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிதானது. இது 10 நாள் வரை கெடாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
மைதா மாவு 2 கப்
சர்க்கரைப்பவுடர் 1-1/2 கப்
டால்டா 1-1/2 கப்
ஏலக்காய்ப்பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:
டால்டா, சர்க்கரைப்பொடியை நன்றாக கலந்து கொள்ளவும். மைதா மாவை இதில் சிறிதுசிறிதாக சேர்த்து பிசையவும். வெடிப்புகள் இல்லாமல் வழவழவென சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்திக் வட்ட வடிவில் செய்து கொள்ளவும். இதனை நெய் தடவிய தட்டில் இடைவெளி விட்டு அடுக்கி 15 நிமிடங்கள் ஓவனில் மிதமான சூட்டில் பேக் செய்யவும். பிஸ்கெட் நன்கு உப்பி வரும் போது வெளியே எடுத்து, சற்று ஆற விட்டு, விரலால் லேசாக சமப்படுத்தவும். வெண்நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் பட்டர் பிஸ்கெட் தயார்!.

Read More...

இட்லி பருப்புப் பொடி

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலைப் பருப்பு - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
காய்ந்த கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

செய்யும் முறை:
அடுப்பல் ஒரு வாணலியைப் போட்டு பருப்புகளை எல்லாம் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.பின்பு சிறிது எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.மிக்சியில் இவை அனைத்தையும் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.தேவைப்படும்போது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

Read More...

Yuvi's 6 Sixes vs England in Twenty20 Worldcup - DVD Quality

Read More...

Pasanga Lotus Original Just 480MB










Read More...

முத்திரை - விமர்சனம்


திருட்டு, கொலை, என்கவுண்‌ட்டர் என நெகடிவ் விஷயங்களை வைத்தே தனது முதல் படம் முத்திரையை நெய்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத். நிதின் சத்யாவின் காமெடியும், ராக்கி சாவந்த், லட்சுமிராயின் கவர்ச்சியும் படத்தின் எக்ஸ்ட்ரா போனஸ்.லோக்கல் பர்ஸ் திருடன் நிதின் சத்யா. ஹைடெக் பாஸ்போர்ட் திருடன் டேனியல் பாலா‌ஜி. இவர்கள் இணைந்து காஸ்‌ட்லியாக கல்லாகட்ட நினைக்கும்போது வழியே போகும் ஒருவனால் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு லேப்டாப்பால் வரும் அந்தப் பிரச்சனை நான் ஸ்டாப்பாக துரத்த, இருவரும் எப்படி அதிலிருந்து எஸ்ஸாகிறார்கள் என்பது கதை.

டேனியல் பாலா‌ஜிக்கு முதல் ஹீரோ அனுபவம். தெனாவட்டாக தி‌ரிகிறவர் லட்சுமிராயின் முன் ஈரத்துணி போர்த்திய கோழியாக பம்முவதும், அதற்கு காரணமான திருமண ப்ளாஷ்பேக்கும் இனிமையான அதிர்ச்சி. இந்த மூஞ்சியைப் பார்த்தா சிபிஐ ஆபிசர் போலவா இருக்கு என்று மஞ்ச‌ரியிடம் நிதின் சத்யாவை கலாய்க்கும் இடத்தில் டேனியலுக்கு காமெடி டைமிங் கைகூடி வந்திருக்கிறது.கோவில் உண்டியலில் கைவைத்து ஊரா‌ரிடமிருந்து தப்பித்து ஓடிவரும் நிதின் சத்யா முதல் காட்சியிலேயே மனசுக்குள் ப்ரேம் போட்டு உட்கார்ந்து விடுகிறார். சிபிஐ ஆபிஸர் என்று அவர் விடும் அலப்பறைக்கு திரையரங்குக்குள் சி‌ரிப்பலை. மஞ்ச‌‌ரியை கவர அவர் விடும் காதல் மாஞ்சா செம ரவுசு.நிதினுக்கு மஞ்ச‌ரி, டேனியலுக்கு லட்சுமிராய் என கோடு கிழித்த மாதி‌ரி இரண்டு ஹீரோயின்கள். பார் டான்சராக வரும் லட்சுமிராய் கவர்ச்சி, சென்டிமெண்ட் என இரண்டிலும் பாஸ் மார்க் வாங்குகிறார். முதல்வரை கொலை செய்தவன் யார் என்ற த்‌ரில்லிங்கான சேஸிங் இருந்தும் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு. போலீஸ் கமிஷனராக வரும் கிஷோரின் திடீர் வில்லன் அவதாரம் அதிர்ச்சிக்குப் பதில் ஆயாசத்தையே தருகிறது. என்கவுண்‌ட்ட‌ரில் பலியாகும் சேத்தன், முதலமைச்சர் அழகர் அதியமானாக வரும் சரவணன், அவரது தம்பி தொண்டை அதியமானாக வரும் ஆனந்த், பதவி ஆசை பிடித்த ஆதிகேசவனாக வரும் பொன்வண்ணன் என அனைவரும் தத்தமது பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.கிளைமாக்ஸில் வரும் திடீர் திருப்பங்களில் உள்ளேன் ஐயா என ஆஜராகிறார் திரைக்கதையாசி‌ரியர் அனீஸ் தன்வீர். கொலையாளி யார் என்று யூகிக்க முடிவது படத்தின் மிகப் பெ‌ரிய பலவீனம். யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை ரகம். சீரான இடைவெளியில் வரும் பாடல்கள் படத்தின் ஸ்பீடு பிரேக்கர்கள்.அவ்வப்போது காணாமல் போகும் லா‌ஜிக்கை மன்னித்தால் முத்திரையை ரசிக்கலாம்.

To Download & Watch the Movie:

Read More...

Wednesday, July 1, 2009

மாசிலாமணி


அடித்தட்டு ஹீரோ அப்பர் கிளாஸ் ஹீரோயினை சவால்விட்டு காதலிக்கிறார். இரண்டரை மணிநேர படம் முடிவதற்குள் பல படங்கள் மலரும் நினைவுகளாக மனதில் வந்து போகிறது. முக்கியமாக மாசிலாமணியை பார்க்கையில் துள்ளாத மனமும் துள்ளுகிறது.

ராணி அண்ணாநக‌ரின் ராஜா நகுல். அவருக்கு நடனாலயா ஆசி‌ரியர் சுனேனா மீது காதல். அநியாயம் கண்டால் அடித்து வெளுக்கும் நகுலின் கேரக்டரால் சுனேனாவிடம் டேமேஜாகிறது அவரது இமே‌ஜ். நீதான் என் பொண்டாட்டி என சுனேனாவிடம் சவால் விடும் நகுல், சபதத்தில் ஜெயிக்க நடத்தும் ஆள் மாறாட்ட சடுகுடு படத்தின் பிரதான அம்சம். கிளைமாக்ஸ், படம் தொடங்கும்போதே நாம் யூகித்த மாதி‌ரி சுபம்.தீமையை கண்டால் தினவெடுக்கும் ஹீரோ, முதலில் மறுத்து இறுதியில் ஹீரோவிடம் மயங்கும் அதே பழைய ஹீரோயின் என கேரக்டர்களில் புராதன வாசம். மாசியாக வரும் நகுலும் ஆள் மாறாட்ட நகுலான மணியும் ஒருவர்தான் என்பதை நிரூபிக்க தலைகீழாக நிற்கும் பவனின் போலீஸ் அதிகா‌‌ரி வேடத்திலும் அதே புளிப்பு வாசனை. நகுலின் அக்காள் மகள் மீது ‌ஜீப்பை மோதவிடுவதெல்லாலம் டூ மச்.திரைக்கதைக்கு வந்தால் அங்கும் இதே பழமை பிரச்சனை. நல்லது செய்யும் நகுல் சுனேனா பார்வையில் ரவுடியாக தெ‌ரிவதற்கு தேர்ந்தெடுத்திருக்கும் காட்சிகள் அரதபழசு. கழிவு நீர் தேங்கியதற்காக எம்.எல்.ஏ.வை துரத்தி துரத்தி அடிக்கிறார், திருடனை பிடிக்கிறார்... சுனேனாவின் வீட்டில் நுழைய அவரது நாயை கடத்தி அவரே மீட்டதுபோல் நாடகமாடுகிறார்... புதுசா யோசித்திருக்கலாமே? பவன் நகுலை லாக்கப்பில் அடைத்து, இப்போ மணியை கூப்பிடு என்று கூறும் காட்சியில் மட்டும் பளிச்சிடுகிறது இயக்குன‌ரின் புத்திசாலித்தனம்.ஒரு ஊரே நகுலனுக்காக ட்ராமா ஆடுகிறது. பார்க்கிற நம் காதுகளில் ஆடுவதோ தொங்கும் தோட்டம். படத்தை காப்பாற்றுவது காமெடி. ஒரு பக்கம் சந்தானம், ஸ்ரீநாத், இன்னொரு பக்கம் கெட்டப் எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ். கருணாஸ் எம்.எஸ்.பாஸ்கரை உசுப்பேற்றுவதும், அதற்கேற்ப அவர் கெட்டப் மாறுவதும் நகைச்சுவை உற்சவம்.டோரா பாடல் மட்டும் தேறுகிறது. வெற்றியின் கேமரா படத்தின் மைனஸ்களை குறைக்க பாடுபட்டிருக்கிறது. ஆட்டம் பாட்டம் என்று அசத்தும் நகுலுக்கு வில்லன் வடநாட்டு முகம். மாசிலாமணி... கதை, திரைக்கதை என அனைத்திலும் பழமையின் மாசுகள் நிறைந்த மணி.

Read More...

Tuesday, June 30, 2009

USA vs Brazil 2-3 All Goals & Highlights - Final [FIFA Confederations CUP South Africa] 28.06.2009

Read More...

The Universal Currency Converter Services

UCC

Read More...

என்ன செய்கிறார் எந்திரன்?



ர‌ஜினி படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படம் எந்திரன். இயக்கம் ஷங்கர், ஜோடி உலக அழகி ஐஸ்வர்யா ராய் என எல்லாமே ஏ கிளாஸ். பாபாவுக்கு பாபா பக்கம் என்று தனி பத்தி ஒதுக்கிய பத்தி‌ரிகைகள்கூட எந்திரன் பற்றி எழுத தயங்குகின்றன. ஏனிந்த பாராமுகம்?படத்தின் தயா‌ரிப்பு கை மாறியதால்தான் இந்த சுணக்கம் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில். படத்தைப் பற்றி நாம் ஏதாவது எழுதப்போய் அது அவர்களுக்கு உறுத்தலாக இருந்துவிட்டால் வீணாக கரண்டை கக்கத்தில் விட்டது போலாகிவிடுமே என அனைவருக்கும் சின்ன உதறல். தவிர சமீபத்தில் நடந்த அனைத்து சுப கா‌ரியங்களிலும் முதலாளாக கலந்து கொண்டார் ர‌ஜினி. படம் நடிக்கும்போது இப்படி பப்ளிக் த‌ரிசனம் தருகிறவர் அல்லவே சூப்பர் ஸ்டார் என இன்டஸ்ட‌‌ரியிலும் புருவம் உயர்த்துகிறார்கள். நாம் விசா‌ரித்ததில் பிஸியாகவே இருக்கிறார் ர‌ஜினி. கடந்த வாரத்தில் மாயாஜாலில் எந்திரன் படத்தின் சில காட்சிகளை ஷங்கர் படமாக்கியிருக்கிறார். இதற்காக பிரமாண்ட அரங்குகள் போடப்பட்டிருந்தன. இங்கு நடந்த ஷூட்டிங்கில் ர‌ஜினியும் கலந்து கொண்டிருக்கிறார்.விரைவில் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக எந்திரன் யூனிட் வெளியூர் கிளம்புகிறது. படம் முடிய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை அடக்கி வாசிக்க சொல்லியிருக்கிறாராம் ர‌ஜினி. அதுதான் இந்த மவுனம். புயலுக்குமுன் அமைதி?

Read More...

Monday, June 29, 2009

காதல்(?!) நகைச்சுவை கதைகள்

காத‌‌ல் நகை‌ச்சுவைக‌ள் ஏராள‌ம் உ‌ண்டு. அவை வெறு‌ம் நகை‌ச்சுவை‌க்காக ம‌ட்டுமே. அ‌ந்த ரக‌த்‌தி‌ல் தா‌ன் இவையு‌ம் சேரு‌ம்.

  • காதலிக்கும்போது காதலி பேசுவாள், காதலன் கேட்பான்.திருமணத்திற்குப் பிறகு காதலன் பேசுவான், காதலி கேட்பாள்.
    சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பேசுவார்கள். ஊரே கேட்கும்.

  • வாய்ப்பு கிடைத்தால்ஒரு வங்கியில் கொள்ளையன் வங்கியை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவனிடம் நான் வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆம் என்றான்.உடனே கொள்ளையன் அவனை சுட்டுவிட்டான். பிறகு ஒரு ஜோடியிடம் வந்து பெண்ணிடம் நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான். அதற்கு அந்த பெண் நான் பார்க்கவில்லை. ஆனால் இவர் பார்த்துவிட்டார் என்றாள்.

  • தம்பதிகளின் விருப்பம்ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான். பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள். கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.

Read More...

தோரணை

காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆ‌க்சன் அனைத்தும் கலந்து வெளிவந்திருக்கிறது, தோரணை. இயக்குனர் சபா ஐயப்பனின் முதல் படம். சொந்த ஊ‌ரில் சுகமாக பொழுதை கழிக்கும் இளந்தா‌ரி விஷால். இவரது அம்மா கீதா. அவருக்கு ஒரு சோகம். இருபத்தைந்து வருடங்களுக்குமுன் வீட்டைவிட்டு ஓடிய மூத்த மகனை மீண்டும் எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும். அம்மாவின் கண்ணீருக்கு விடைதேடி சென்னைக்கு கிளம்புகிறார் விஷால். சென்னை மாநகரமோ இரண்டு தாதாக்களின் பிடியில் சிக்கி தவிக்கிறது. அண்ணனைத் தேடி சென்னை வரும் விஷால் சென்னையில் கால் பதித்த அந்த நொடியே ஒரு கொலைக்கு சாட்சியாகி இந்த இரு வில்லன்களுக்கிடையே மாட்டிக் கொள்கிறார். சாட்சி சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் ஒரு தாதா. சொல்லாவிட்டால் கொன்று விடுவதாக உறுமுகிறார் மற்றொருவர். எப்படியும் சாவு உறுதி என்ற சூழலில், விஷால் ரோட்டில் சந்திக்கும் ஸ்ரேயாவிடம் மனதை பறி கொடுக்கிறார். டூயட் பாடுகிறார். காதல் பு‌ரிகிறார்.நடுவில் தாதாக்களில் ஒருவர்தான் தனது அண்ணன் என்பதை கண்டு பிடிக்கிறார். அண்ணனின் உயிரை பறிக்க முயலும் இன்னொரு தாதாவை துவ‌ம்சம் செய்து இறுதியில் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுகிறார்.ரயிலில் தண்ணீர் பிடிக்க இறங்கும் அண்ணன் தண்ணீர் பிடித்து வருவதற்குள் ரயில் கிளம்பிவிட தம்பியை பி‌ரிவதாக‌தான் தமிழ் சினிமாவில் கதை வந்திருக்கிறது. இதில் சின்ன வித்தியாசம். பால்குடி மாறாத பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக் கொள்கிறான். இது பிரச்சனையாக அம்மா கீதா மகனின் பச்சைக் குத்திய நெஞ்சில் சூடு போடுகிறார். பையன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு போய்விடுகிறான். இயக்குன‌ரின் மெச்சூரிட்டிக்கு இது ஒரு துணுக்கு சான்று.தாதாக்கள் பிடியில் சிக்கியிருக்கும் சென்னைக்கு விஷால் வரும்போதே, தாதாக்களை விஷால் துவ‌ம்சம் செய்யும் அடுத்தடுத்த காட்சிகளுக்கு தயாராகி விடுகிறோம். சண்டக்கோழி, திமிரு, மலைக்கோட்டை படங்களில் இதைத்தானே செய்தார் விஷால். சென்னை வரும் ஹீரோவுக்கு தங்க இடம் கொடுப்பதற்காகவே ஒரு காமெடி நண்பர் இருப்பார். இதில் சந்தானம். படத்தின் ஒரே சுவாரஸிய அம்சமும் இவர்தான்.

Read More...

நட்பு மொழிகள்

  1. ந‌ட்‌பி‌ல் இரு‌ந்துதா‌ன் காத‌ல் ‌பிற‌க்‌கிறது. ‌சில காத‌ல்களை‌த் த‌விர.
  2. பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.
  3. எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
  4. உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
  5. வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
  6. உரிமை கொண்டாடும் உறவை ‌விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
  7. உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
  8. பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க் கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.
  9. ந‌‌ண்பனு‌க்காக உ‌யிரை‌க் கொடு‌ப்பதை ‌விட, உ‌யிரை‌க் கொடு‌க்கு‌ம் அள‌வி‌ற்கு ந‌ண்ப‌ன் ‌கிடை‌ப்பதுதா‌ன் அ‌ரிது.
  10. நா‌ன் உ‌ன் மு‌ன்னா‌ல் நட‌‌‌ந்து வ‌ழிகா‌ட்டியாக இரு‌க்க மா‌ட்டே‌ன், உ‌ன் ‌பி‌ன்னா‌ல் வ‌ந்து உ‌ன்னை‌க் க‌ண்கா‌ணி‌க்க மா‌ட்டே‌ன். உ‌ன் ப‌க்க‌த்‌தி‌ல் நட‌க்‌கிறே‌ன் ந‌ண்பா உ‌ன் துணையாக.
  11. ந‌ண்ப‌ர்க‌ள் காதல‌ர்களாகலா‌ம். ஆனா‌ல் காதல‌ர்க‌ள் ந‌ண்ப‌ர்களாக‌க் கூடாது.
  12. உ‌ன் ந‌ண்ப‌ர்களை அ‌றிமுக‌ப்படு‌த்‌தி வை. ‌உ‌‌ங்க‌ள் ந‌ட்பு ஒரு வளைய‌ம் ஆகு‌ம்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009