Saturday, September 12, 2009

எனக்கு எதிராக வதந்தி; தருணை திருமணம் செய்யவில்லை; பிரியாமணி மறுப்பு

பிரியாமணியும், தெலுங்கு நடிகர் தருணும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. தெலுங்கு இணைய தளங்களும் இச்செய்தியை போட்டி போட்டி பரப்பின. இருவரும் சில வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது காதல் ஏற்பட்டதாகவும், ரகசியமாக சந்தித்து வந்த அவர்கள் இப்போது திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

பிரியாமணி தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஏற்கனவே பிருதிவிராஜுடனும் பிரியாமணியை இணைத்து கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த பிரியாமணியிடம் தருணை திருமணம் செய்ததாக வந்துள்ள செய்திகள் பற்றி கேட்டபோது ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:-

எனக்கும், தருணுக்கும் திருமணம் நடக்கவில்லை. என்னைப்பற்றி ஏன்தான் இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. தருணும், நானும் மூன்று வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தோம். அவரை நான் கடைசியாக சந்தித்தது கூட அந்த படப்பிடிப்பில்தான். அதன்பிறகு அவரை பார்க்கவே இல்லை. தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. தருண் இப்போது என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது கூட எனக்கு தெரியாது.

உண்மை இப்படி இருக்க எங்களுக்கு திருமணம் நடந்ததாக வதந்தி பரப்புவது வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலை என்றே நான் கருதுகிறேன். இந்த வதந்திகளுக்காக நான் வருத்தப்பட போவதும் இல்லை. நான் நடித்த நினைத்தாலே இனிக்கும் படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அதில் எனது நடிப்பை பாராட்டி நிறைய பேர் வாழ்த்து தெரிவித்தனர்.

Read More...

ரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு

எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற காட்சிகள் படமானது.

மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டில் தான் கண்டுபிடித்த ரோபோவை ரஜினி அறிமுகம் செய்வது போன்ற காட்சியை எடுத்தனர். ரஜினி, ஐஸ்வர்யாராய் பாடல் காட்சி அமெரிக்காவில் படமாக்கப்பட்டது.
தற்போது எந்திரன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் வேலையில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். கிளைமாக்ஸ்சில் ஒரு பகுதி சிறுசேரியில் உள்ள தொழில்பேட்டையில் படமாக்கப்பட்டது. ஓடும் பஸ்சில் அமைக்கப்பட்ட பரிசோதனை கூட அரங்கிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இறுதியாக பிரகாஸ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து முடிய உள்ளது. இதற்காக அங்கு பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அவற்றை தீயிட்டு எரிக்கப்படுகிறது. அந்த தீயை அணைப்பது போன்ற காட்சிகள் நவீன கேமராக்கள் மூலம் பிரமாண்டமாக படமாக்கப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாக படப்பிடிப்பு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், டப்பிங் உள்ளிட்ட இதரபணிகள் நடக்க உள்ளன. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் எந்திரன் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More...

Wednesday, September 9, 2009

Ninaithale Inikkum [2009] DVD Quality (HQ-TC) [P Dvd Rip] - நினைத்தாலே இனிக்கும்


Screen Shots


Prithviraj, Sakthi, Karthik Kumar, Priyamani, Anuja Iyer, Jeeva, Bhagiyaraj
Direction: G N R Kumaravelan
Music: Vijay Anthony

http://www.megaupload.com/?d=4FRKWMK3
http://www.megaupload.com/?d=ODUYBF2E
http://www.megaupload.com/?d=VFJVPI50
http://www.megaupload.com/?d=6NHAHL2Z

http://rapidshare.com/files/277233137/Ninaithale_Inikkum_HQ_TC_VCD_RIP_By_KG_Part1.WMV.html
http://rapidshare.com/files/277231507/Ninaithale_Inikkum_HQ_TC_VCD_RIP_By_KG_Part2.WMV.html
http://rapidshare.com/files/277233358/Ninaithale_Inikkum_HQ_TC_VCD_RIP_By_KG_Part3.WMV.html
http://rapidshare.com/files/277231394/Ninaithale_Inikkum_HQ_TC_VCD_RIP_By_KG_Part4.WMV.html

Read More...

Monday, September 7, 2009

Ninaithale Inikkum Movie Download (2009) GOOD CAM DVD Rip


Code:
http://hotfile.com/dl/11764456/23a38f1/Ninaithale_Inikkum_GoodCAM_Dvd_Rip_By_KG.part1.rar.html
http://hotfile.com/dl/11764962/b5b91bb/Ninaithale_Inikkum_GoodCAM_Dvd_Rip_By_KG.part2.rar.html


http://hotfile.com/dl/11765101/d6b1d77/Ninaithale_Inikkum_GoodCAM_Dvd_Rip_By_KG.part3.rar.html
http://hotfile.com/dl/11765167/652afa0/Ninaithale_Inikkum_GoodCAM_Dvd_Rip_By_KG.part4.rar.html
http://hotfile.com/dl/11765218/e58faa8/Ninaithale_Inikkum_GoodCAM_Dvd_Rip_By_KG.part5.rar.html
http://hotfile.com/dl/11765349/32c9569/Ninaithale_Inikkum_GoodCAM_Dvd_Rip_By_KG.part6.rar.html
http://hotfile.com/dl/11765394/fc664b4/Ninaithale_Inikkum_GoodCAM_Dvd_Rip_By_KG.part7.rar.html
http://hotfile.com/dl/11765411/dbc61dc/Ninaithale_Inikkum_GoodCAM_Dvd_Rip_By_KG.part8

Read More...

கிரிக்கெட் - இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா?

மும்பை : முத்தரப்பு தொடரில் சாதிக்க காத்திருக்கிறது தோனி தலைமையிலான இந்திய அணி. இத்தொடரில் அசத்தும் பட்சத்தில் 11 ஆண்டுகளுக்கு பின் இலங்கை மண்ணில் கோப்பை வென்று வரலாறு படைக்கலாம். இலங்கை செல்லும் இந்திய அணி முத்தரப்பு ஒரு நாள் தொடரில்(செப்., 8-14) பங்கேற்கிறது. இதில் மூன்றாவது அணியாக நியூசிலாந்து கலந்து கொள்கிறது. வரும் 11ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

பொதுவாக இரண்டு அணிகள் பங்கேற்ற தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட அணிகள் மோதும் தொடர்களில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. அதிலும் இலங்கை மண்ணில் நடந்த பல அணிகள் பங்கேற்ற தொடர்களில் பெரிதாக சாதிக்கவில்லை. இங்கு கடைசியாக 1998ல் நடந்த முத்தரப்பு தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி, சிங்கர் கோப்பையை வென்றது. இப்போட்டி யில் சச்சின், சவுரவ் கங்குலி சதம் அடித்து அணிக்கு கைகொடுத்தனர். பின்னர் 2002ல் மழை காரணமாக சாம்பியன்ஸ் டிராபியை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது.

இதற்கு பின் இலங்கையில் நடந்த பல நாடுகள் மோதிய 5 ஒரு நாள் தொடர்களில் இந்தியா பங்கேற்றது. இதில் கோப்பை கைப்பற்ற தவறியது. கடந்த 1998ல் வென்ற சிங்கர் கோப்பைக்கு பின் இந்திய துணை கண்டத்தில் நடந்த பல நாடுகள் மோதிய 12 ஒரு நாள் தொடர்களில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் 2002ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி, வங்கதேசத்தில் 2003ல் நடந்த டி.வி.எஸ்., கோப்பையை முறையே இலங்கை, தென் ஆப்ரிக்காவிடம் பகிர்ந்து கொண்டது. 7 முறை இரண்டாம் இடம் பெற்றது. மூன்று முறை லீக் சுற்றில் வெளியேறியது.

தோனி எழுச்சி: இந்த சோகங்களை கடந்து தோனி தலைமையிலான அணி தற்போது மகத்தான எழுச்சி கண்டுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக திகழ்கிறது. கடந்த 2008ல் இலங்கை, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது. 2009ல் இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 5 ஒரு நாள் போட்டி தொடர்களில் வெற்றிக் கொடி நாட்டியது.

முத்தரப்பு தொடரில் இம்முறை சந்திக்க உள்ள இலங்கை அணியை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் சொந்த மண்ணில் வைத்து இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராகவும் வெற்றி கண்டுள்ளது. எனவே, 1998க்கு பின் இலங்கை மண்ணில் சாதிக்க தோனிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்முறை இளம் நட்சத்திரங்களுடன் சேர்ந்து சச்சின், டிராவிட் போன்ற அனுபவ வீரர்களும் களமிறங்க இருப்பதால், சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் பல அணிகள் பங்கேற்கும் தொடரில் கோப்பை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சமீபத்திய "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சந்தித்த படுதோல்விக்கு பரிகாரம் தேடலாம். தவிர, அடுத்து நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாதிக்கவும் முத்தரப்பு தொடர் வெற்றி பெரும் உதவியாக இருக்கும்.

Read More...

அ‌ஜித்தின் 50வது படத்துக்கு போட்டி | Ajith 50th film Producer?

எஸ்.தாணு, ஆஸ்கர் ரவிச்சந்திரன்... இந்த இரு பெயர்களுடன் தயாநிதி அழகி‌ரியின் பெயரும் சேர்ந்திருக்கிறது. அ‌ஜித்தின் 50வது படத்தை தயா‌ரிக்கப் போவது யார் என்ற கேள்விக்கான சாய்ஸ் இவர்கள்.

தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் மூவிஸ் தற்போது தமிழ் படம் என்ற படத்தை தயா‌ரித்து வருகிறது. இதையடுத்து அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தையும் கிளவுட் நைன் தயா‌ரிக்கிறதாம்.

அ‌ஜித் தற்போது நடித்துவரும் அசல் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை தயா‌ரிக்க முன்னணி தயா‌ரிப்பாளர்கள் முட்டி மோதுகிறார்கள். அதில் முதலில் இருப்பவர் தாணு.

ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தை தயா‌ரிக்கும் விருப்பம் இருக்கிறது. தற்போது தயாநிதியின் பெயரும் அடிபடுவதால், அவருக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில்.

ஆதவனுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது. அசல் படத்துக்காக வெளிநாடு சென்றிருக்கும் அ‌ஜித் திரும்பி வந்தால் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கலாம்.

Read More...

கந்தசாமி - வடிவேலு காட்சிகள் நீக்கம் | Vadivelu Scenes cut from Kandasamy

புட்டே‌ஜில் முதலில் அடிவாங்குவது காமெடி காட்சிகள். அப்படிதான் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகக்கூறி, மன்மதன் படத்தில் கவுண்டமணியின் காமெடி காட்சிகளில் கை வைத்தார்கள். அது அப்போது சிம்புவுக்கும், கவுண்டமணிக்கும் இடையில் பிரச்சனையை கிளப்பியது.

மூன்று மணி நேரத்துக்கும் மேல் ஓடுகிறது கந்தசாமி. ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆலோசனைப்படி படத்தின் நீளம் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. கதைக்கு நேரடியாக சம்பந்தப்பட்ட காட்சிகளில் கை வைக்க முடியாது என்பதால் வடிவேலு வரும் காமெடி காட்சிகளை கத்த‌ரித்திருக்கிறார்கள்.

வடிவேலுவின் அறிமுக காட்சி உள்பட பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு படம் ட்‌ரிம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த செதுக்கல்களுக்குப் பிறகு படம் கச்சிதமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெ‌ரிவித்துள்ளனர்

Read More...

Sunday, September 6, 2009

நடன இயக்குனர் ஆன கவர்ச்சி நடிகை!

ஒரு காலத்தில் கோடம்பாக்கமே பள்ளமாகிற அளவுக்கு ஆடி தீர்த்தவர் அனுராதா. கதாநாயகி கனவோடு திரையுலகுக்கு வந்த அவரை ஒற்றை பாடலுக்கு பயன்படுத்திக் கொண்டது தமிழ்சினிமா. பிறகு சின்னத்திரை பக்கமாக ஒதுங்கிக் கொண்ட அவர், தான் அடையாத புகழை தனது மகளாவது அடைய வேண்டும் என்று விரும்பினார். எப்படியோ ‘பிரண்ட்ஸ்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மகள் அபிநயஸ்ரீ யை அறிமுகப்படுத்தினார்.



ஆனால் காலம் போட்ட கால்குலேஷன் வேறு. அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியிருந்தாலும், அபிநயஸ்ரீ க்கு வாய்ப்புகள் இல்லை. கதாநாயகி கூட வேண்டாம். செகண்ட் ஹீரோயின் வேடமே போதும் என்று நினைத்தார். அதுவும் கை கூடவில்லை. பிறகென்ன? அம்மா வழியில் அயராத ஆட்டம்! குத்தாட்ட புகழ் நடிகையாகிவிட்டார். பழுத்த சினிமா அனுபவம் இருந்தும் தனது மகளை பெரிய நாயகி ஆக்க முடியவில்லையே என்ற கவலை இன்னும் இருக்கிறது இந்த லட்சிய அம்மாவுக்கு.


தானே முடிவெடுக்கிற வயது வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக குத்தாட்டத்தை குறைத்துக் கொண்டார் அபிநயஸ்ரீ. தனது ஆட்டத் திறமையை பயன்படுத்தி முன்னணி நடன இயக்குனராக ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். மார்கழி 16 என்ற படத்தில் நடன இயக்குனராக அறிமுகம் ஆகிறார் அபிநயஸ்ரீ. நடன இயக்குனர்களுக்கும் ரசிகர் மன்றம் வைக்கிற அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது அந்த தொழில். ஏற்கனவே பிரபலமாகியிருக்கும் அபிநயஸ்ரீ தனக்கென்று பெரிய ரசிகர் வட்டாரத்தை வளைத்து போடுவார் என்பதை மட்டும் இப்போதே உறுதியாக நம்பலாம்!

-மனஸ்வினி

Read More...

“ரசிகர் மன்றம் வேண்டாம்” -அனுஷ்கா

“அருந்ததி” படம் மூலம் முன்னணி நடிகையாகியுள்ளார் அனுஷ்கா. தெலுங்கு, தமிழ் ஹீரோக்கள் அவருடன் ஜோடி சேர போட்டி போடுகின்றனர். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் மாதவன் ஜோடியாக “ரெண்டு” படத்தில் அனுஷ்கா நடித்தார். அப்படம் பெரிதாக போகாததால் மீண்டும் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். இப்போது அருந்ததி வெற்றியால் மீண்டும் தமிழ்பட அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

விஜய் ஜோடியாக “வேட்டைக்காரன்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. தற்போது சூர்யாவுடன் “சிங்கம்” படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார். ஒரே நேரத்தில் இரு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பதால் இதர நடிகைகள் கலக்கமடைந்துள்ளனர். நயன்தாரா, திரிஷா வரிசையை அனுஷ்கா எட்டிப்பிடிப்பார் என்கின்றனர்.

“சிங்கம்” முடிந்ததும் இன்னொரு மெகா பட்ஜெட் படத்தில் பெரிய கதாநாயக நடிகர் ஒருவருடன் ஜோடி சேர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அனுஷ்காவுக்கு ரசிகர் மன்றம் துவங்க அவரது ரசிகர்கள் பிரியப்பட்டனர். அனுஷ்காவை அணுகி அதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கக்கூடாது என்று அனுஷ்கா கண்டிப்பாக கூறி விட்டார்.

ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கு பெரிய நடிகை இல்லை. இப்போது தான் வளர்ந்து கொண்டு இருக்கிறேன். நடிப்பில்தான் இப்போது என் முழு கவனமும் உள்ளது. ரசிகர் மன்றம் தேவையில்லை. சில காலம் கழித்து அதுபற்றி யோசிக்கலாம் என்று கூறி ரசிகர்களை திருப்பி அனுப்பிவிட்டார்.

திரிஷா, நமீதா ஏற்கனவே ரசிகர் மன்றங்களை துவங்கி சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009