Thursday, October 29, 2009

சத்யராஜினால் மாட்டிக் கொண்ட கவுண்டமணி!

ஊரோடு வாழ்ந்த பனை மரம் வேறொடு விழுந்து நசுக்குச்சாம்...! கவுண்டமணி-சத்யராஜ் விவகாரத்தை பார்த்தால் இப்படிதான் சொல்ல தோன்றுகிறது. உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசிய நடிகர் நடிகைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொடர்ந்தவர், தராசு இதழின் நிருபர் தாமோதரன். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, போலீசாரிடம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். வழக்கில் சுமார் 20 பேர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதில் கவுண்டமணியும் ஒருவர்!


பிரச்சனையே அதுதான். அங்கு நடந்த கண்டன கூட்டத்தில் பேசியவர்களை வார்த்தைக்கு வார்த்தை கிண்டலடித்துக் கொண்டிருந்தாராம் கவுண்டர். அவரை போய் வழக்கில் சேர்ப்பது நியாயமா? பத்திரிகையாளர்களில் சிலரே, வழக்கு போட்ட நிருபரை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் நிருபர் சொன்ன பதில் இதுதான்.

“அன்னைக்கு பேசிய சத்யராஜ், இங்கு வந்திருக்கிற எல்லார் மீதும் வழக்கு போடுங்க. உங்களால என்ன புடுங்க முடியுதுன்னு பார்க்கிறேன் என்று பேசியிருக்கிறார். அவரு சொன்ன மாதிரியே அங்கு வந்த எல்லாரையும் வழக்குல சேர்த்திருக்கேன். அந்த லிஸ்ட்டில்தான் கவுண்டமணியும் வந்திட்டாரு. இதுக்கு காரணம் நான் இல்லே. சத்யராஜ்தான்” என்றாராம்.

இதைதான் கூட இருந்தே குழி பறிக்கிறதுன்னு சொல்வாங்களோ?

Read More...

அப்படியே ஷாக் ஆயிட்டேன்...

அப்படியே ஷாக் ஆயிட்டேன்.... வடிவேலு ஸ்டைலில் சந்தியா சொன்னபோது நமக்கும் ஷாக்! ஓடிப்போலாமா படத்தின் கதையை பற்றி சொல்லும் போதுதான் இப்படி ஆரம்பித்தார் சந்தியா. சங்கீதாவின் தம்பி பரிமளுடன் இவர் ஜோடி சேரும் ஓடிப்போலாமா படத்தின் கதையை சொல்வதற்கு முன் டைட்டிலை கேட்டதுமே இன்ப ஷாக் ஆனாராம். முழு கதையை கேட்டு முடிச்சதும் எனக்கு ஆச்சர்யம். ஏன்னா, இப்படி ஒரு தலைப்பு வச்சிட்டு யாருமே எதிர்பார்க்காதது மாதிரி ஒரு கதையை சொன்னார் டைரக்டர் கண்மணி. இந்த படத்திலே வொர்க் பண்ணியது சந்தோஷம். அதே நேரத்திலே ஒரு வருத்தம்னு சொல்லிவிட்டு சந்தியா நிறுத்திய போது, ஏதோ குண்டை து£க்கி போடப் போகிறார் என்றுதானே தோன்றும்? ஆனால் சப்....


இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் சத்யம் வளாகத்திலே நடந்திச்சு. கேசட் வெளியிடுற நேரத்திலே நான் ஃபிளைட்ல வட்டமடிச்சிட்டு இருந்தேன். க்ளைமேட் சரியில்லேன்னு ஐதராபாத்திலிருந்து எட்டரைக்குதான் கிளம்புச்சு ஃபிளைட். இங்கே வந்தால் இறங்கறதிலேயும் பிரச்சனை. வேற வழி? கடவுளே... இந்த படம் நல்லா வரணும்னு மேலே இருந்தே பிரார்த்தித்து கொண்டேன் என்றார். இவருக்கும் பரிமளுக்கும் லவ்வோ லவ் என்று ஊரெல்லாம் வதந்தி. ஆனால் ஒன்றுமே தெரியாத மாதிரி பேசினார் சந்தியா. என்னோட குட் ஃபிரண்ட் பரிமள். நல்ல டான்சரும் கூட. இந்த படத்திலே அவரோட ஆட்டம் ரொம்ப பேசப்படும் என்றார்.


பரிமள் என்ன சொல்கிறார்? அவங்க என்னை விட சீனியர் ஆர்ட்டிஸ்ட். ஆனால் அந்த பந்தா எதுவுமே இல்லாம பழகினாங்க. என்னோட மேக்கப்பை கூட சரி பண்ணினாங்கன்னா பார்த்துக்கோங்களேன் என்றார். இவங்க ரெண்டு பேரோட முகத்தையும் பார்த்தால், செய்தி டுபாக்கூராக இருக்குமோ?


இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இவரது கல்யாண நாளன்றுதான் கதையே கேட்டு இசையமைக்க ஒப்புக் கொண்டாராம். கல்யாண நாளும் அதுவுமா இப்படி ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன்னு மனைவியிடம் எப்படி சொல்றது? தைரியமாக 'ஓடிப்போலாமா' என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கேன்னு சொன்னதும், "டைட்டில் புதுசா இருக்கே?" என்று ஆச்சர்யப்பட்டாராம் திருமதி இமான்.

Read More...

மாதவனின் அடுத்த அவதாரம் கதாசிரியர்

மாடலிங்கில் கலை வாழ்க்கையை தொடங்கிய மாதவன் பின்னர் நடிகராக அவதாரம் எடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் மற்றும் இந்திப்படங்களில் நடித்து வரும் மாதவன் எவனோ ஒருவன் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். இந்நிலையில் தற்போது அவர் கதாசிரியர் என்ற அடுத்த அவதாரத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதையை எழுதியிருக்கும் மாதவன், அந்த கதையை டைரக்டர் குமரவேலனிடம் கொடுத்து படம் இயக்குமாறு கேட்டிருக்கிறார். கதையை படித்து பார்த்த குமரவேலன், இந்த படத்தில் மாத‌வனையே நடிக்குமாறு கோரியுள்ளாராம். இதுபற்றி குமரவேலன் அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சூப்பரான ஸ்டோரி. இந்த படத்தில் நடித்தால் மாதவனின் இன்னொரு முகம் வெளிப்படும். திரைக்கதை பற்றி விவாதிக்க மும்பை சென்று மாதவனை சந்திக்க இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

Read More...

பழைய பேப்பரை விற்று 6 வயது சிறுமிக்கு உயிர் கொடுத்த மாணவர்கள்

மதுரை : மதுரை வடமலையான் மருத்துவமனையின் "ஊர் கூடி உதவுவோம்' என்ற திட்டத்தின்கீழ், பழைய பேப்பரை சேகரித்து விற்று, அதில் கிடைத்த தொகையை 6 வயது சிறுமியின் ஆப்பரேஷனுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றினர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.

பொதுமக்களிடம் பழைய நாளிதழ்களை நன்கொடையாக பெற்று, அதில் கிடைக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இதுகுறித்து மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் பயனாக, மதுரை டால்பின் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 11 ஆயிரம் பழைய நாளிதழ்களை விற்று 47 ஆயிரம் ரூபாயும், பொதுமக்கள் 4,658 ரூபாயும் நன்கொடையாக அளித்தனர். இதைக் கொண்டு, பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டை இருந்த திண்டுக்கல் சிறுமி சித்ராவுக்கு அறுவை சிகிச்சையின்றி, கேத்லாப் முறை மூலம் இருதய ஓட்டை அடைக்கப்பட்டது. மொத்த செலவு 1.10 லட்சம் ரூபாயில், நன்கொடை போக, மீதமுள்ள தொகையை மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக்கொண்டது.

ஆப்பரேஷன் செய்த டாக்டர் கண்ணனும் கட்டணம் பெறவில்லை. நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி கூறுகையில், ""ஒவ்வொரு துளி நீரும் சேர்ந்துதான் சமுத்திரத்தை உருவாக்குகிறது. அதுபோல் அனைவரும் இத்திட்டத்தில் பங்கேற்று இதனை வெற்றி பெற செய்ய வேண்டும்'' என்றார்.திட்டமேலாளர் ஹேமலட்சுமி, ரேடியோ மிர்ச்சி நிலைய இயக்குனர் தினேஷ், நிகழ்ச்சி இயக்குனர் ராதா உடனிருந்தனர்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009