Saturday, August 8, 2009

சுற்றுலா செல்ல இருக்கீங்களா...?

சுற்றுலா செல்வதென்றால் எல்லாருக்கும் குஷ’ தான். ஆனால், உள்ளூரில் இருக்கும் போது எடுக்கும் முன்னெச்சரிக்கையை விட, சுற்றுலாவின் போது நாம் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற குறிப்பிட்ட கோளாறை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை, மருந்து சாப்பிடுவது என்பது முக்கியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பொதுவாக பாதிக்கக்கூடிய கோளாறு, "டிராவில் டயேரியா'' தான். போகிற இடங்களில் சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருந்தாலோ, சரியான சுற்றுச்சூழல் சுகாதாரம் இல்லாமல் இருந்தாலோ இந்த கோளாறு யாருக்கும் வரும். அதிலும், குழந்தைகளுக்கு சுலபமாக வரும்.

சாதாரண மலச்சிக்கலில் இருந்து ஆரம்பிக்கும் இந்த பாதிப்பு, ஒரு வாரம் வரை விடாது. காய்ச்சல், வயிற்று வலி என்று பாடாய்ப்படுத்தி விடும். இன்னொரு பொதுவான சுற்றுலா பயணத்தில் வரும் கோளாறு கிறுகிறுப்பு.

"தலைசுற்றலில் ஆரம்பித்து வாந்தி, பேதியில் முடியும். அதனால், உடலில் தண்­ர் வற்றிப்போய், வேறு கோளாறில் விட்டுவிடும்; சிறுநீர் போவதில் பிரச்னை ஏற்படும்; இதனால், சுற்றுலா போகும் ஆசையே விட்டுவிடும் நிலை ஏற்படும்'' என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிபுணர் சுப்ரமணியன் கூறினார்.

இதனால், சுற்றுலா போகும் போது முதலுதவி பெட்டியில், அயோடின், பேன்டேஜ், டேப், கொசுவர்த்தி, எலக்ட்ரோலைட்ஸ், ஆன்டாசிட்ஸ், ஆன்டிபயோடிக் ஆயின்ட்மென்ட்ஸ், டயேரியா தடுப்பு மருந்து, காய்ச்சல், வலி நிவாரணி ஆகியவை வைத்திருக்க வேண்டும்.

சுற்றுலா போகும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பில் வாந்தி, பேதி ஏற்படும் போது, எலக்ட்ரோலைட்ஸ் மிக முக்கியம். அதை தண்­ரில் கலக்கி குடித்தாலே போதுமானது; பாதிப்பை தவிர்க்கலாம். மூக்கை உறிஞ்சுவது, இருமல் போன்ற பாதிப்புபோக, "ஆன்டிஹ’ஸ்டாமின்'' மாத்திரை பலனளிக்கும்.

தலை சுற்றல் இருப்பவர்கள் எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்க்கலாம். தலைவலி தைலங்களையும் எடுத்துச் செல்லலாம்.

Read More...

கடி ஜோக்ஸ் - Romba Kadi ! ! !

''எதுக்குடா எதிர்க்கட்சித் தலைவரை கடிச்சு வச்சீங்க?''

''நீங்கதானே தலைவரே அவர் மேல ''பல்முனை'' தாக்குதல் தொடர வேண்டுமுன்னு மேடையில அறிவிச்சீங்க!''

''இனிமேல் நீங்க அதிகமா நடக்கணும்!''

''உங்ககிட்டே ட்ரீட்மெண்டுக்கு வந்த பின்னாடி எங்கிட்டே இருந்த காரை வித்துட்டு இப்பல்லாம் எங்கே போனாலும் நடந்தேதான் போறேன் டாக்டர்!''

''நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்...''

''அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க...!''


''எருமை வெளியே போகும்போது தன் ஆண் கன்றிடம் என்ன சொல்லிட்டுப் போகும்?''


''BI SON''

மனைவி: என்னங்க இது ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே.. எதுக்கு?
கணவன்: நீ தானே "டெய்லி காலண்டர்" வாங்கிட்டு வாங்கனு சொன்னே..!

ராமு: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க...
சோமு: பரவாயில்லையே... நிஜமாகவா..?
ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..



மேனேஜர்: இந்த ஆபிஸ”க்கு நான் மேனேஜரா? இல்லே நீ மேனேஜரா?
வேலையாள்: நீங்க கோபப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்?
மேனேஜர்: அட... அதில்லையா.. கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு. அதான் கேட்டேன்..!

அந்தப் படம் பயங்கர சண்டைபடம்தான். அதுக்காக இப்படி பண்ணக் கூடாது...
ஏன்?
டிக்கட் கொடுக்கும் போதே மூஞ்சியில் ஒரு குத்து விடறாங்க.


ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் மசாலா படங்கள் எடுக்கறதில்லே?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.



பெரியவர்: டேய் உங்க அப்பா எங்கே.?
சிறுவன்: ஹோம் வொர்க் பண்ணிகிட்டு இருக்காரு...
பெரியவர்: உன்னோட ஸ்கூல் பாடத்தை அவர் எழுதறாரா?
சிறுவன்: இல்லே காய்கறி நறுக்கிகிட்டு இருக்காருன்னு சொன்னேன்.

Read More...

சாந்தனுவுடன் சந்தியா காதலா? Santhanu love with Sandhya

சாந்தனுவும், சந்தியாவும் காதலிப்பதாகச் செய்திகள் வெளியானது. இதுபற்றி சந்தியா கூறியதாவது: என் காதலை பற்றி நிறைய செய்திகள் வெளிவந்து விட்டது. இப்போது சாந்தனுவுடன் வருகிறது. அவரது சகோதரி சரண்யா எனக்கு நெருக்கமான தோழி. அவர் மூலமாக சாந்தனு அறிமுகமானார். இருவரும் நல்ல நண்பர்கள். அதை காதல் என்று கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். இதை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இந்த நிமிடம் வரைக்கும் யாருடனும் காதல் இல்லை. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஓடிப்போலாமா, நூற்றுக்கு நூறு, ஆப்த ரட்ஷகா என படங்கள் இருக்கிறது. இன்னும் புதிய புதிய கேரக்டர்களில் நடித்து புகழ்பெற வேண்டும் என்றார்.

Read More...

ஜ“வா - திவ்யா இணையும் சிங்கம் புலி

குத்து, கிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்த ரம்யா, இடையில் கன்னட சினிமாவுக்கு சென்றுவிட்டார். பொல்லாதவன் படம் மூலம் திவ்யாவாகி ரீ என்ட்ரி அடித்தவர், இப்போது கோலிவுட்டிலும் பிசி. ஐபிஎல் கிரிக்கெட் டீமை வாங்கியிருக்கிறார், அரசியலுக்கு வருகிறார் என பல பரபரப்புகளுக்கிடையே அவரை சந்தித்தபோது, அவர் அளித்த பேட்டி: என்னைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் அதை சாதாரணமா எடுத்துக் கொள்ளமாட்டேன். நிஜமான விஷயங்கள் வரும்போது அதை ஒப்புக்கொள்வேன். பொய்யான தகவல் பரவும்போது அதற்கு பதில் சொல்றது என் கடமை என பொறுப்பாக பேசுகிறார் திவ்யா. எம்.பி. சீட்டுக்கு போட்டியிட ஒரு கட்சியிலயிருந்து கேட்டாங்களாமே? என் குடும்பத்துக்காரங்க, சிலபேர் கர்நாடக அரசியல்ல இருக்கிறாங்க. அதனால கேட்டிருக்கலாம்.

ஆனா, எனக்கு அரசியல் ஞானம் கிடையாது. 25 வயசுதான் ஆகுது. எதை வச்சு என்னைப்போய் தேர்தல்ல போட்டியிட கேட்டாங்கன்னு யோசிக்கிறேன். ஐபிஎல் கிரிக்கெட் டீமை வாங்கிவிட்டதா பேச்சு அடிபட்டதே? புரளிதான். அது பத்தி பேசினது உண்மை. ஆனா அதுக்குன்னு நேரம் ஒதுக்கி, டீம் வளர்ச்சியில கவனம் செலுத்த நம்மால முடியாது. தமிழ்ல சிங்கம் புலி, காதல் டூ கல்யாணம் படங்கள் இருக்கு. கன்னடத்துல ரெண்டு படம் இருக்கு. வெற்றிமாறன் இயக்கத்துல இன்னொரு தமிழ் படத்துலேயும் நடிக்கப்போறேன். கன்னட டீம், ஐபிஎல்ல ஆடினா, அதை ஊக்குவிக்க போவேன். அக்டோபர்ல சாம்பியன் கோப்பை நடக்குது. அதுல பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் டீமோட விளம்பர அம்பாசிடரா என்னை தேர்வு பண்ணியிருக்காங்க. தமிழை விட கன்னட சினிமாவுக்கு முக்கியத்துவம் தர்றதா சொல்றாங்க? போன வருஷம் என்னோட ஒரு கன்னட படம் ரிலீசாச்சு. தமிழ்ல ரெண்டு படம். இப்போ தமிழ்ல மூணு படம் பண்றேன். கன்னடத்துல ரெண்டு படம்தான். என்னைப் பொறுத்தவரை மொழியை பார்க்கிறது கிடையாது. நல்ல ரோலுக்கு மட்டும் முக்கியத்துவம் தர்றேன். பெங்களூர்ல பிறந்தாலும் சென்னைல 16 வருஷம் இருந்திருக்கேன். என்னோட சிறுவயதை கழிச்ச இடம் இது. இதை மறக்கமாட்டேன். துரோகில நடிக்க மறுத்துட்டீங்களாமே? அது ரெண்டு ஹ“ரோயின் கதை. கதைப்படி அம்மா, பொண்ணுன்னு ரோல் இருக்கு. அது எனக்கு ஒத்துவராதுன்னு மறுத்துட்டேன்.

Read More...

சாயா சிங்குக்கு கல்யாணம் - Marriage for Chaya Singh

நடிகை சாயா சிங்குக்கு விரைவில் கெட்டிமேளம் கொட்டத் தயாராகிவிட்டனர் அவரது பெற்றோர். ஹைதராபாத்தைச் சேர்ந்த இரும்பு வர்த்தகரைத் திருமணம் செய்ய இருக்கிறார் சாயா சிங். திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் மூலம் படு பிரபலமாகி, பின்பு அதே வேகத்தில் காணாமல் போனவர் சாயா சிங். வல்லமை தாராயோ படத்தில் மீண்டும் நடிக்க வந்தாலும், பெரிய வரவேற்பு அவருக்குக் கிடைக்கவில்லை. இப்போது அவர் கைவசம் ஒரே ஒரு படம் மட்டும்தான் உள்ளது. அது ஷங்கர் தயாரிப்பில் நாகா இயக்கும் அனந்தபுரத்து வீடு. இப்போது இந்தப் படம் முடிந்த கையோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் சாயா.
அவருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த இரும்பு - ஹார்டுவேர் வர்த்தகர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப் பிறகும் சாயா நடிப்பைத் தொடர்வார் என முன்கூட்டியே தெரிவித்துள்ளார் சாயாவின் அம்மா.

Read More...

பாட கூப்பிட்டா சொல்லுங்க! - சரண்யா மோகன் (Ready to sing also by Saranya Mohan)!!!!!!!!!!

உள் மனசில் வைத்த ஐஸ் கிரீம் மாதிரி ஜில்லென்று இருப்பவர் சரண்யா மோகன். யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு என்று இவர் நடித்த படங்களில் பாதி சூப்பர் ஹிட்! மீதி படங்களோ சோக லிஸ்ட்! வெண்ணிலா ஹிட்டுக்கு பிறகு சென்னையில் பங்களா பிடித்து செட்டில் ஆகிவிடுவார் என்று எதிர்பார்த்தால், கேரளாவில் பி.ஏ.ஆங்கில இலக்கியம் படிக்க போய்விட்டாராம். அவ்வளவுதானா தமிழ்? கேரளாவுக்கு போன் போட்டு கேட்டால், “ஐய்யே... கொஞ்சம் கேப் விட்டா அப்படியே வீட்டுக்கு அனுப்பிடுவீங்களே” என்றார். (ஆஹா மூச் வந்திருச்சுங்க..)

தமிழ்ல நடிக்க நல்ல கதையா கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரம் அறிவிப்பு வரும் பாருங்க. வெண்ணிலா கபடிக் குழு படத்திற்கு பிறகு ஏராளமான படங்களில் நடிக்க ஆஃபர் வந்திச்சு. வந்தோமா, போனோமான்னு இல்லாம நல்ல கதையா இருக்கணும் என்று மெனக்கெடுறேன். அதனாலதான் இந்த கேப் என்றார். ஓய்வு நேரத்தில் சங்கீதம் கத்துக்கிறேன். யாராவது பாட கூப்பிட்டா சொல்லுங்க என்று ஐஸ்கிரீமில் மேலும் கொஞ்சம் சர்க்கரையை கொட்டுது பொண்ணு. ரீசண்ட்டா ஒரு கதை கேட்டேன். அப்படியே பிரமிச்சு போயிட்டேன். உடனே ஓ.கே சொல்லிட்டு ஷ§ட்டிங் போயாச்சு. கெமிஸ்ட்ரின்னு படத்து பேரு. வுஜி தம்பின்னு மலையாளத்திலே பேமஸ் ஆன டைரக்டர். புதுமுக ஹீரோவுடன் பாதி படத்துக்கு மேலே முடிஞ்சாச்சு. இதுக்கு பிறகு தமிழ்தான் என்றவரிடம், கிளாமரா நடிப்பீங்களா என்ற கேள்வியை கேட்டது தப்பா போச்சு. எதிர் முனை கட்! சிறிது நேரம் கழித்து நல்லாதானே பேசிட்டு இருந்தீங்க. ஏன் இப்படியெல்லாம் கேட்கிறீங்க என்றார். ஆஹா, கவர்ச்சிங்கிற வார்த்தையை சொன்னதுக்கே கட்டா? போச்சுரா...

Read More...

அரிசி, ரவையில் பூச்சியா...?


பருப்புகளை வேக வைக்க, தண்­ருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
உருளைக்கிழங்கை வேக வைக்க, தண்­ருடன் சிறிது மஞ்சள், எண்ணெய் சேர்த்து, வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

உளுத்தம் பருப்பை வடைக்கு ஊற வைக்கும்போது, ஒரு மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். அதிக நேரம் ஊற வைத்தால், நிறைய எண்ணெய் உறிஞ்சும்.


சிறு துண்டு பெருங்காய கட்டியை மஞ்சள் மற்றும் மிளகாய் தூளுடன் போட்டு வைத்தால் பூச்சுகள் வராது.

சர்க்கரை டப்பாவில் மூன்று அல்லது நான்கு கிராம்பை போட்டு வைத்தால் எறும்பு வராது.

சர்க்கரை டப்பாவை சுற்றி மஞ்சள் பொடி தூவி வைத்தால், எறும்பு வராது. அல்லது பெருங்காயத்துண்டுகள் உள்ள டப்பாவின் மேல் சர்க்கரை டப்பாவை வைத்தால் எறும்பு வராது.

Read More...

அன்புள்ள ஆவியே - A Lovable Ghost (Short story)

"ஙொய்ய்ய்..." என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத் துளைத்தது. படுத்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச் சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக் கூப்பிட்டார்.
"குருதேவா! இதென்ன விசித்திரமாக இருக்கிறது? இது மாதிரிச் சின்னச் சின்னப் பறவைகளை இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே!" என்றான் மட்டி.

அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன.

வலி தாங்காத குரு, கத்தினார், சீடர்களும் அவருடன் சேர்ந்து கூச்சல் போட்டனர்.

"குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?" எனக் கேட்டான், மடையன்.

அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், "ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் நூறு பறவைகள் இருந்தன. எல்லாவற்றையும் அம்பு கோட்டுக் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான் இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன" என்று புளுகினார்.

உடனே சிஷ்யர்கள், "அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை மன்னித்து, எங்களுக்குத் தொல்லை தராமல் இருங்கள்" என்று ஒவ்வொரு கொசுவிடமும் வேண்டினார்கள்.

"உஸ்ஸ்... சத்தம் போடாதே... ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால் எல்லாப் பறவைளையும் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்" என்று மெல்லக் கூறினான், முட்டாள்.


"குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!" என்று குதித்தான், மூடன்.


"அதைவிட, அதற்குக் 'கிச்சு கிச்சு' மூட்டி, அது சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!" என்றான் மண்டு.


"சரி...சரி... முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள்" என்று கட்டளை இட்டார் குரு.


மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை அடிக்க நினைத்தான் முட்டாள். தன் தலையில் இருந்த கொள்ளிக் கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.


மண்டையில நெருப்புப் பட்டதும், "ஐயோ..." என்று கதறினான் மண்டு.


மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப் பார்த்தார். அதற்குள் அது பறந்து போய் விட்டது.


சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் வேறு எங்கோ பறந்து சென்று விட்டன.


"குருவே" இந்தப் பறவைகளுக்கு மந்திரம் தெரியும் போலிருக்கிறது. நம் திட்டத்தைத் தெரிந்து கொண்டு மாயமாய் மறைந்து விட்டன" என்றான்.


"வேறு வழியில்தான் பிடிக்க வேண்டும்" என்றான், மண்டு.


"இந்தப் பறவைகளுக்கு எதிரியாக ஏதாவது பூச்சிகளைப் பிடித்து வந்துவிட வேண்டும். அவை இரண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்" என்றான் முட்டாள்.


முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர்.


இரண்டு நாட்கள் சென்றன. கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன.


"சே! பெரிய தொல்லையாகப் போய்விட்டதே! என்ன செய்வது?" என்று பரமார்த்தர் கேட்டார்.


"குருவே! எனக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றி விட்டது. 'மூட்டைப் பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம்' என்று சொல்கிறார்களே! அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று கேட்டான் மட்டி.


"ஆமாம் குருவே! நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம்!" என்றான் மடையன்.


"குருவே! அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம்! எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம்!" என்றான் மூடன்.


"அப்படிச் செய்தால் செத்துப் போய் விடுவோமே?" என்றான் மண்டு.


"செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!" என்றான் மூடன்.

"பலே மூடா!" என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர்.

அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்றனர்.

''திகு, திகு'' என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தலாய்க் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.

சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து காப்பாற்றினார்கள்.

அப்போதும் ''சே! இந்த அறிவு கெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப் பாழாக்கி விட்டார்களே!'' என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்!

Read More...

கந்தசாமியுடன் போட்டி போடும் பொக்கிஷம் - IS POKKISHAM CONTESTING WITH KANTHASWAMY

விக்ரம் நடிப்பில் கலைப்புலி தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள கந்தசாமி திரைப்படம் விரைவில் திரையைத் தொடவிருக்கிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தப் படம் 900 திரையரங்குகளில் ரிலீசாவதால், அந்த தேதியில் வெளியாகவிருந்த கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படமே தள்ளிப் போடப்படுகிறது. ஆனாலும் ஒரே ஒரு படைப்பாளி தனது படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக கந்தசாமியுடன் மோதத் தயாராக உள்ளார். அவர் சேரன்! அவரது பொக்கிஷம் படம் நாளை சென்சார் சான்றிதழ் பெறுகிறது.

கந்தசாமி வெளியாகும் அதே தேதியில் பொக்கிஷமும் உலகமெங்கும் வெளியாகிறது. நான் எந்தப் படத்தையும் போட்டியாக நினைப்பதில்லை. காரணம் நான் போட்டிக்குப் போவதில்லை. இந்தப் படம் இதயப்பூர்வமான காதல் கதை. இளைஞர்கள் விரும்பும் படமாக இருக்கும். ஜெயிக்கும், என்கிறார் சேரன்.

Read More...

இளமையாகும் குஷ்பு - Kuspoo

பல லட்சம் செலவில் குஷ்புவை இளமையாக்குகிறார்கள். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து தொழில்நுட்பக் கலைஞர்கள் சென்னை வந்துள்ளனர்.

என்ன குழப்பமாக இருக்கிறதா? குழம்புவதற்கு இதில் ஒன்றுமில்லை. விஷயத்தை வி‌ரிவாக கேட்டால் உங்களுக்கே விளங்கிவிடும்.

தியாகராஜன் இயக்கும் பொன்னர் சங்க‌ரில் குஷ்பு தாமரை நாச்சியார் என்ற வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஜெயராம். இவர்கள் இருவ‌ரின் இளமைக்கால காட்சி படத்தில் இடம் பெறுகிறது. இளமை என்றால், 16 வயது குஷ்பு, 20 வயது ஜெயராம்.

குஷ்புவை பதினாறு வயதாக காண்பிக்க வாரணம் ஆயிரம் சூர்யா மாதி‌ரி இளைக்க சொல்லவா முடியும்? கிராஃபிக்ஸில் இளமையாக மாற்றுவதற்கு ஹாலிவுட் கலைஞர்களை வரவழைத்திருக்கிறார்கள். இதற்கே பல லட்சம் பட்ஜெட்டில் காலியாகிவிடும் என்கிறார்கள்.

பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜரூராக நடந்து வந்தது. யானைகள் எல்லாம் படப்பிடிப்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தன. பழங்கால குடிசை, கோயில் என்று ஒரே அமர்க்களம். பிரசாந்த் நடித்த படங்களில் இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்கிறார்கள். எப்படியோ... அப்பாவும், புள்ளையும் கலக்குறாங்க.

Read More...

ஒரே மேடையில் ர‌ஜினி, சசிகுமார் - Eeram Audio Release Rajini, Sasikumar

உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? சசிகுமா‌ரிடம் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு அவரது பதில், கமல்ஹாசன். கமலின் ரசிகர் என்பதால் தனது பசங்க படத்தின் ஆடியோ விழாவுக்கு கமலை வரவழைத்தார். பல மேடைகளை இருவரும் பங்கு போட்டிருக்கிறார்கள். ஆனால் ஆகஸ்டு 9ஆம் தேதி அவர் மேடையை பகிர்ந்து கொள்ள இருப்பது சூப்பர் ஸ்டாருடன்.

ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தயா‌ரித்திருக்கும் ஈரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் 9ஆம் தேதி நடக்கிறது. விழாவின் சீஃப் கெஸ்ட் ர‌ஜினிமுதல் ஆடியோ சிடி-யை ர‌ஜினி வெளியிட பெற்றுக் கொள்கிறவர் சசிகுமார்.

ஈரம் படத்தை ஷங்க‌ரின் முன்னாள் அசிஸ்டெண்ட் அறிவழகன் இயக்கியுள்ளார். நந்தா, ஆதி, சிந்துமேனன், சரண்யா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். க்ரைம் த்‌ரில்லரான இப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

படத்துக்கு பாய்ஸ் படத்தில் நடித்த சாய் இசையமைத்துள்ளார். சாயின் இப்போதைய பெயர் தமன் எஸ். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக் படத்துக்கு இசையமைத்த அதே தமன் எஸ். தான் ஈரத்துக்கு இசையமைத்திருக்கிறார்.


Read More...

ஜெயம் ரவியின் தில்லாலங்கடி - Jayam Ravi

தில்லாலங்கடி என்றதும் ஜெயம் ரவி ஏதோ வில்லங்கம் செய்திருக்கிறார் என்று அவசரப்பட்டு நினைக்க வேண்டாம். இது அவர் நடிக்கப் போகும் படத்தின் பெயர்.

ஜனநாதனின் பேராண்மைக்குப் பிறகு மீண்டும் தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. வழக்கம்போல தெலுங்கில் வெற்றிபெற்ற கிக் படத்தின் ‌‌ரீமேக்தான் இது.

“ஜெயம் ரவியை வைத்து கிக் ‌‌ரீமேக்கை இயக்குகிறேன். இந்தப் படத்துக்குப் பிறகே அமீர் இயக்கும் கண்ணபிரான் தொடங்க உள்ளது. அப்படியே கிக் ‌‌‌ரீமேக்கை எடுத்து முடிப்பதற்குள் கண்ணபிரானைஅமீர் தொடங்கினால், கண்ணபிரான் படப்பிடிப்பில் கிடைக்கும் இடைவெளியில் ஜெயம் ரவி நடிப்பார்.” படம் குறித்து விளக்கமாகவே சொல்லியிருக்கிறார் ராஜா.

கிக் ‌‌‌ரீமேக்கில் ஜெயம் ரவி ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இன்னொரு ஹீரோ ஷாம். வடிவேலுவும் இருக்கிறார். படத்துக்கு தில்லாலங்கடி என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது. ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படம் வெளிவந்த நேரம்தான் தமிழக முதல்வர், தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வ‌ரிச் சலுகை அறிவிப்பை வெளியிட்டார். உடனே அவசர அவசரமாக சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், வெறும் உனக்கும் எனக்குமாக சுருக்கப்பட்டது.

இதேபோலொரு அவஸ்தை மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக. ‌தில்லாலங்கடி தமிழ் வார்த்தைதானா என்ற விவாதம் சூடாக நடந்து வருகிறது. தமிழ் வார்த்தை இல்லாவிட்டால் என்ன, தில்லாலங்கடியை முதல்வரை விட்டு தமிழ் வார்த்தையாக பிரகடனப்படுத்திவிட்டால் போச்சு.

Read More...

Thursday, August 6, 2009

‌சிவகா‌சி பட ‌விவகார‌ம்: நடிகர் விஜய் ம‌ன்‌னி‌ப்பு - Sivakasi Actor Vijay in Madras high court

'சிவகாசி' படம் தொடர்பான வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் மன்னிப்பு கோரியுள்ளனர்.

கடந்த 2005ஆ‌‌ம் ஆ‌ண்டு இயக்குநர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜ‌ய் நடித்த 'சிவகாசி' படம் வெளியானது. இந்தப் படத்தில் வழக்கறிஞர்களைப் புண்படுத்தும் விதமாக காட்சிகள் இருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அ‌ப்போது நடிகர் விஜய், படஅதிபர் ஏ.எம்.ரத்தினம், இயக்குனர் பேரரசு, காமெடி நடிகர் ஆகியோர் வருத்தம் தெரிவித்து மனுக்களை தாக்கல் செய்தனர்.

நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவில், ''சிவகாசி படத்தில் வழ‌க்க‌றிஞ‌ர்களை அவதூறு செய்ததாக 13 வழக்குகள் பல்வேறு மாஜிஸ்திரேட்டு ‌நீ‌திம‌ன்ற‌ங்களில், பல்வேறு வழ‌க்க‌றிஞ‌ர்களினால் என்மீதும், படஅதிபர், இய‌க்குந‌ர் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. வழ‌க்க‌றிஞ‌ர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நான் உடனடியாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

பொதுவாக வழ‌க்க‌றிஞ‌ர் தொழில் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 'தமிழன்' என்ற படத்தில் வழ‌க்க‌றிஞ‌ர்களின் புகழை உயர்த்தும் வகையில் நான் வழ‌க்க‌றிஞ‌ராக நடித்துள்ளேன். இதிலிருந்து வழ‌க்க‌றிஞ‌ர்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்பது தெரியும். வழ‌க்க‌றிஞ‌ர்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. வழக்கு தொடர்ந்தவர்களுக்கும், எனக்கும் எந்த விரோதமும் கிடையாது. இவர்களை எனக்கு தெரியாது. சிவகாசி படத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வழ‌க்க‌றிஞ‌ர்களின் உணர்வுகளை துன்புறுத்துவதாக கருதினால் நான் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்'' எ‌ன்று மனு‌வி‌ல் விஜய் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் தரப்பில் ஆஜரான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன், "எதிர்காலத்தில் இதுபோன்று வழக்கறிஞர் தொழிலை இழிவுப்படுத்தி காட்டும் சினிமா படங்கள் வரக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, நீதிபதி ரகுபதி வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தார்.

Read More...

Wednesday, August 5, 2009

தேசம் தலை நிமிர காலில் விழும் இளைஞர்கள் : தொண்டாமுத்தூர் தேர்தலில்

பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அந்த பாட்டி பதறிப்போனார்,திடீரென தன் காலில் விழுந்த அந்த இளைஞரைப் பார்த்து. ""யாருப்பா நீ? எதுக்கு என்னோட கால்ல விழுற?'' ""பாட்டி! உங்க ஊர்ல தேர்தல் நடக்குதுல்ல, அதுல காசு வாங்காம நீங்க ஓட்டுப் போடணும், அதுக்குத்தான் உங்க கால்ல விழுந்தேன்,'' என்று சொல்லி விட்டு, அவரது பதிலை எதிர்பார்க்காமல் அருகே இருந்த பூக்கடைப் பெண்மணியின் காலில் விழப்போய் விட்டார் அந்த இளைஞர்.

கோவை கணபதி பஸ் ஸ்டாப்பில் நேற்று அரங்கேறிய நிஜக் காட்சி இது. அந்த இளைஞருடன் கூடவே நான்கு இளைஞர்கள், இதேபோல அங்கே வந்த பலரது காலிலும் மாறி மாறி விழுந்த காட்சி, ஒரு நிமிடம் உறைய வைத்தது. விசாரித்த போது, அவர்களின் உன்னதமான நோக்கம் புரிய வந்தது. "சத்தியாகிரகா' இயக்கம்; இதுதான் அந்த இளைஞர்களை இணைத்துள்ள அமைப்பின் பெயர்.

விழுப்புரம் அருகேயுள்ள காரைக்கால்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாஸ்திரி(32) என்பவர் தான், இந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவர். மனித உரிமைகள் பாடத்தில் முதுநிலை பட்டம் படித்த இந்த இளைஞர், ஆங்கிலத்தில் பல நாவல்களையும் எழுதியுள்ள எழுத்தாளரும் கூட. கடந்த 2005ல் தான் இந்த அமைப்பை இவர் துவக்கியுள்ளார். வரும் 2015ல் இந்தியா வல்லரசாக வேண்டுமென்பதே இவரது விருப்பம், வேண்டுதல் எல்லாம். அதற்குத் தடையான வன்முறை, லஞ்சம், ஜாதி போன்றவற்றை ஒழிக்க வேண்டுமென்று விரும்பிய இவர், அதற்காக எடுத்த ஆயுதம் தான் காலில் விழும் சத்தியாகிரகம். தேர்தலில்துவங்கும் லஞ்சம் தான், தேசத்தின் எல்லா ஊழலுக்கும் அடிப்படை என்பது இவரது அழுத்தமான வாதம்.

அரசியல்வாதிகள் காலில் விழுவதை விட, ஓட்டுக்கு துட்டு வாங்கும் வாக்காளர் காலில் விழலாம் என்று முடிவெடுத்து, களம் இறங்கினார் சாஸ்திரி. அவரது அகிம்சை வழி பிடித்துப்போன பட்டதாரி இளைஞர்கள் பலரும், அவருக்கு ஆதரவாக கை கோர்த்தனர்; காலில் விழுந்தனர். இப்போது, இவரது அமைப்பில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இதுவரை இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குச் சென்று, 17 லட்சம் பேர் காலில் விழுந்திருப்பது இந்த இளைஞர்களின் அசாத்தியமான சத்தியாகிரக சாதனை. வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மத்திய சிறைகளுக்குச் சென்று அங்குள்ள கைதிகளின் காலில் விழுந்த போது, சில கைதிகள் பதறிப் போய், "எங்க கால்ல நீங்க விழுற அளவுக்கு நாங்க நல்லவங்க இல்லை... இனிமே நாங்க தப்பு பண்ண மாட்டோம்' என்று உறுதி கூறி மெய் சிலிர்க்க வைத்துள்ளனர்.

கடந்த லோக்சபா தேர்தலின் போது, சென்னையில் இவர்கள் நடத்திய "காலில் விழும் சத்தியாகிரகம்' பலரது மனசைக் கரைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த இடைத்தேர்தலிலும் "காலில் விழும் பிரசாரத்தை' இவர்கள் துவக்கியுள்ளனர். முதல் கட்டமாக, தொண்டாமுத்தூரில் இந்தசத்தியாகிரக பிரசாரத்தை நேற்று துவக்கினர். நேற்று கணபதி பஸ் ஸ்டாண்டில் துவங்கிய இவர்களது பயணம், இன்று கிராமங்களை நோக்கிச்
செல்கிறது.ராமகிருஷ்ண சாஸ்திரியுடன் கோவை வந்துள்ள இளைஞர்களில் குரானா ஞானமூர்த்தி(28) எம்.ஏ.,(மானுடவியல்) படித்தவர். சென்னையைச் சேர்ந்த பிரபு(27)எம்.ஏ., பட்டதாரி; சுரேஷ்(34) எம்.பி.ஏ., படிப்பவர். காதலில் விழும் வயதில், தேசத்துக்காக பிறர் காலில் விழும் இந்த இளைஞர்களைப் பார்த்தால், சிரம் தாழ்த்தி கரம் குவிக்கத் தோன்றுகிறது. சாஸ்திரி கூறுகையில், ""நாங்கள் காலில் விழும் மாத்திரத்திலேயே பலர், "நாங்க ஓட்டுக்கு காசு வாங்க மாட்டோம்' என்று சத்தியம் அடித்துச் சொல்கின்றனர். லட்சம் பேர் காலில் விழுவதில் ஆயிரம் பேர் திருந்தினாலும் எங்களுக்கு அது வெற்றி தான்,'' என்றார். இணையற்ற இந்தியர்கள் மட்டுமில்லை; மகத்தான மனிதர்களும் கூட!

Read More...

கந்தசாமி ஏற்படுத்திய கலக்கம் - Kandhasamy Dhanus Advertisements

இந்த மாதம் திரைக்கு வருகிறது கந்தசாமி. மெகா பட்ஜெட் படம் என்பதைத் தாண்டி, படத்தை தயா‌ரித்திருப்பவர் தாணு என்பதற்காகவே பயப்படுகிறார்கள் இன்டஸ்ட்‌ரியில்.

விளம்பர விஷயத்தில் தாணு ஒரு டைனசர். சுற்றியுள்ள அனைத்தையும் துவ‌ம்சம் செய்துவிடுவார். கந்தசாமியோ அவர் தயா‌ரித்த படங்களில் மிகப் பிரமாண்டமானது. விளம்பரத்தில் அவர் ஆடப்போகும் சிவதாண்டவத்தை கற்பனை செய்தே கதிகலங்கிப் போயிருக்கிறது கோடம்பாக்கம்.

பிரதான விஷயம் வேறு. கந்தசாமிக்கு ஏறக்குறைய 1000 பி‌ரிண்டுகள் போடுகிறார்கள். இதில் தமிழுக்கு மட்டும் 600க்கும் மேல் என்கின்றன தகவல்கள். இம்மாதம் வெளியாகும் படத்துக்காக தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த திரையரங்குகள் அனைத்திற்கும் அட்வான்ஸ் கொடுத்திருப்பதாக கேள்வி. அதுவும் எத்தனை நாட்களுக்கு? ஏறக்குறைய ஐம்பது நாட்களுக்கு.

ஆயிரத்தில் ஒருவனோ, உன்னைப்போல் ஒருவனோ... எந்தப் படமாக இருந்தாலும் சில வாரங்களுக்கு சுமாரான திரையரங்கைக்கூட கற்பனை செய்ய முடியாது. கந்தசாமி ஓடி தேய்ந்தால்தான் வேறு எந்தப் படத்துக்கும் வெள்ளித்திரையே கிடைக்கும். கமல் படத்துக்கே இந்த நிலை என்றால் மற்ற படங்கள் பற்றி கற்பனை செய்து பாருங்கள்.

ஆடிப் பெருக்குக்கு திறந்துவிட்ட அணை மாதி‌ரி படங்கள் ஜூலை மாதம் மதகு உடைத்து ‌ரிலீஸானதுக்கு இதுவும் ஒரு காரணமாம். கந்தசாமி வெளிவந்தால்தான் பல படங்களுக்கு ‌ரிலீஸ் தேதியே முடிவு செய்யப்படும். சாமின்னாலே பிரச்சனைதான்.

Read More...

Tuesday, August 4, 2009

அசினுக்கு பதில் ஹன்ஷிகா - Hansika Replaced Asin

முன்னணி நடிகர்களின் பாடுதான் திண்டாட்டம். புதுமுகங்களுடன் நடிக்க முடியாது, பீல்டு அவுட்டானவர்களையும் ஜோடி சேர்க்க முடியாது. முதல் வ‌ரிசை அசின், த்‌ரிஷா போன்றவர்களோ இந்தியில் பிஸி.

இருப்பது தமன்னாவும், அனுஷ்காவும், நயன்தாராவும், இந்த மூன்று பேருடன் எத்தனை படங்களில்தான் ஜோடி சேருவது?

தனுஷ் நடிக்கும் மாப்பிள்ளை ‌‌ரீமேக்கில் அமலா நடித்த வேடத்தில் அசின் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது இயக்குனர் சுரா‌ஜின் எண்ணம்.எண்ணத்தை உடனே செயல்படுத்தும் விதமாக அசினை தொடர்பு கொண்டு கேட்டதற்கு கிடைத்த பதில், நோ கால்ஷீட். அம்மணி இந்தியில் பிஸியாம்.

தமன்னாவுடன் படிக்காதவன் படத்தில் இப்போதுதான் தனுஷ் நடித்தார். ஸ்ரேயாவுடன் குட்டி படத்தில் நடிக்கிறார். த்‌ரிஷாவுடன் ஆடுகளம் இருக்கிறது. ச‌ரி, இலியானாவை கேட்கலாம் என்றால் அவர் படத்தின் பட்ஜெட்டில் 70 சதவீதத்தை சம்பளமாக கேட்டு திணறடித்திருக்கிறார்.

இறுதியில் ஹன்ஷிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். மணிசர்மா படத்துக்கு இசையமைக்கிறார். கேமரா வெங்கடேஷ். இத்தேஷ்ஜெபக் படத்தை தயா‌ரிக்கிறார்.

Read More...

எந்திரனுக்கு பிறகு ரஜினிகா‌ந்‌த் அரசியல் பிரவேசம்: ச‌த்யநாராயண ரா‌வ்

''ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து 'எந்திரன்' படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்'' என அவரது சகோதர‌ர் சத்யநாராயண ராவ் கூ‌றினா‌ர்.

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்த அவர் கூறுகை‌யி‌ல், எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து 'எந்திரன்' படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 'எந்திரன்' படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்று ச‌த்யநாராயணரா‌வ் கூ‌றினா‌ர்.

Read More...

Sunday, August 2, 2009

கந்தசாமி ஆகஸ்ட் 22 ரிலீஸ்!!!!!!!!!!!!!!!1

கந்தசாமி படத்துக்கு முதல் பாதிக்காக டப்பிங் பேசி முடித்து விட்டார் விக்ரம். இரண்டாம் பாதியை நேற்று தொடங்கிவிட்டார். சாலக்குடியில் ராவண் ஷ•ட்டிங்கில் இருந்தவர், இதற்காக நேற்று சென்னைக்கு வந்தார். தொடர்ந்து இரு நாட்கள் டப்பிங் பேசி முடிக்கிறார். அதைத் தொடர்ந்து ஊட்டியில் மீண்டும் ராவண் ஷ•ட்டிங் நாளை முதல் தொடங்குகிறது. காட்டுப்பகுதிகளில் நடக்கும் இதன் ஷ•ட்டிங்கில் பங்கேற்க ஊட்டி செல்கிறார் விக்ரம்.
டப்பிங், சவுண்ட் மிக்ஸ’ங் பணிகள் நடப்பதால் கந்தசாமி ஆகஸ்ட் 15-க்கு பதிலாக 22-ம் தேதி ரிலீசாகிறது. சொன்னபடி இந்த தேதியிலாவது ரிலீசாகுமா?

Read More...

கோவா - திரைமுன்னோட்டம்

"ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், ஆக்கர் ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களுக்கு கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் வேலைகளை ஆக்கர் ஸ்டூடியோ செய்து வருகிறது. இந்த ஸ்டூடியோ சார்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 'சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் படத்தையும் சவுந்தர்யா ரஜினிகாந்த் டைரக்டு செய்து வருகிறார். இதையடுத்து அவர், ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் சார்பில் முதல் தயாரிப்பாக, 'கோவா' என்ற படத்தை தயாரிக்கிறார். சென்னை-28, சரோஜா ஆகிய படங்களை டைரக்டு செய்த வெங்கட் பிரபு, கதை-திரைக்கதை-வசனம் எழுதி, டைரக்டு செய்கிறார். வாழ்க்கையில் நாம் ஒன்றை நினைத்து செயல்பட்டுக் கொண்டிருப்போம்.

ஆனால் வாழ்க்கை வேறுவிதமாக அமைந்துவிடும் என்ற கருவை அடிப்படையாக கொண்ட படம் இது. ஜெய், பிரேம்ஜி, வைபவ், சம்பத், அரவிந்த் ஆகாஷ் ஆகியோருடன் இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் சினேகா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக, அமெரிக்க நடிகை ஒருவர் நடிக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி தேனி, பண்ணைபுரம் பகுதிகளில் நடைபெறுகிறது. "

Read More...

மாளவிகாவுக்குப் பதில் தேஜாஸ்ரீ !!!!!!!!!!!!!!!!!!!!!


குடும்ப குத்து விளக்காகிவிட்டார் மாளவிகா. ஹீரோயினா? ஒத்தப் பாடலுக்கு குத்தா? எதுக்கும் ரெடி என்று வ‌ரிந்துகட்டிய மாளவிகா அல்ல இப்போது. குழந்தையை பார்த்துக்கணும் என்று வருகிற ஹீரோயின் வாய்ப்பையே வாசலோடு வழியனுப்பி ஆச்ச‌ரியப்படுத்துகிறார்.

சமீபத்தில் அவரை சந்தித்தவர் இயக்குனர் அ‌ரிராஜன். இவரது மன்மதலீலை படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோயின்கள். ஐந்தில் ஒருவராக நடிக்க மாளவிகாவை அணுகியிருக்கிறார்.

ஆனால் ‌ரிசல்ட் நெகடிவ். குழந்தை இன்னும் வளரவில்லை. அவனை பக்கத்தில் இருந்து பார்த்துக்கணும் என வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

தற்போது மாளவிகாவுக்குப் பதில் தேஜாஸ்ரீயை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ம்... தாய்மை ஒரு பெண்ணை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது.

Read More...

சர்ச்சையில் பொக்கிஷம் - Cheran movie in trouble

ஒரே கதையை இரண்டு இயக்குனர்கள் படமாக்குவது தமிழ் சினிமாவில் புதிதல்ல. இந்த மாதம் வெளிவரும் கந்தசாமியும், ‌ஜீவனின் கிருஷ்ணலீலையும் ஏறக்குறைய ஒரே கதை என ஏற்கனவே கூறியிருந்தோம். இதே சர்ச்சையில் சிக்கியிருக்கிறது சேரனின் பொக்கிஷம்
காதல் கடிதங்களின் பின்னணியில் சொல்லப்படும் காதல் கதை பொக்கிஷம். அறிமுக இயக்குனர் மீரா கதிரவன் இயக்கும் அவள் பெயர் தமிழரசி படத்தின் கதையும் ஏறக்குறைய பொக்கிஷம் கதையை போன்றதுதான் என்பது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.


இதுபோன்று ஒரே கதையில் தயாராகும் படங்களில் எந்தப் படம் முதலில் வெளிவருகிறதோ அந்தப் படத்துக்கே வெற்றி பெறுவதற்கான சதவீதம் அதிகம். அந்த வகையில் பொக்கிஷமே ‌ரிலீஸில் முந்துகிறது.

இது ஒருபுறமிருக்க, கொ‌ரிய படமான கிளாஸிக்கை தழுவி பொக்கிஷம் படத்தை சேரன் எடுத்திருப்பதாகவும் தகவல் கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

சொந்த கற்பனையை மட்டுமே நம்பி படம் எடுப்பவர் சேரன். அவரது படம் குறித்துவரும் இந்த செய்திகளை பொக்கிஷம் பொசுக்கும் என்று நம்புவோம்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009