Saturday, July 25, 2009

வெடிகுண்டு முருகேசன் - Vedigundu Murugesan

மெல்லிசா ஒரு கதை, அதில் மிளகா தூவுன மாதி‌ரி கொஞ்சூண்டு சென்டிமெண்ட், குலுங்கிச் சி‌ரிக்க குறைவில்லாத காமெடி... ஏ.‌ஜி.மூர்த்தியின் ஃபார்முலாவுக்கு கைமேல் பலன். திரையரங்கில் கூத்தடிக்கிறது ஜனம்.

அம்மாஞ்சித்தனமும், அடாவடியும் கலந்த கேரக்டர் பசுபதிக்கு. அவ்வப்போது லாக்கப்புக்கு போகும் இவரை கண்டாலே லோக்கல் போலீஸ் ஜோதிர்மயிக்கு கோபம் கொந்தளிக்கும். அந்த கோபம் குற்றாலச்சாரலாக மாறும்போது தலைகாட்டுகிறது காதல்.

காரணம், தண்ணி, பொண்ணு என்று அலையும் பசுபதியின் ஈரமான இன்னொரு முகம். தன்னுடன் படித்த பெண் புத்திசுவாதீனம் இழந்துவிட்டார் என்பதை அறிந்து அவரை தன்னுடனே வைத்து காப்பாற்றுகிறார்.


காதலும், காமெடியுமாக செல்லும் வாழ்க்கையில் கிராஸாகிறது வில்லனின் எ‌ண்ட்‌ரி. கூடவே கொலைப் பழியும். வில்லனிடமிருந்து தப்பிக்க ஜெயிலுக்கு போனால் அங்கும் தொடர்கிறது தலைவலி. இந்த இடியாப்ப சிக்கலிலிருந்து பசுபதி எப்படி எஸ்ஸாகிறார் என்பது சுபமான கிளைமாக்ஸ்.

சீ‌ரியஸ் புத்தகம் படித்தாலும் குடி, கூத்து என வாழ்க்கையை ஓட்டும் டேக் இட் ஈஸி கேரக்டர் பசுபதி. டாஸ்மாக்கில் பில் கேடகும் போதும், மப்பு ஏத்திவிட்டு போலீஸ்காரர்களை ஓட்டும் இடத்திலும் நக்கலுடன் சமூக அக்கறையும் எட்டிப் பார்க்கிறது. மனநிலை ச‌ரியில்லாத தீபாவை இவர் காப்பாற்றும் சென்டிமெண்ட் செயற்கைத்தனம். உயி‌ரின் மதிப்பை வில்லன் வீட்டு பெருசிடம் விளக்குவதும், அது அவருக்கே பூமராங் ஆவதும் வெடிச்சி‌ரிப்பு.

படத்தை ஆக்ரமிக்கும் இன்னொருவர் அலார்ட் ஆறுமுகமாக வரும் வடிவேலு. ஹோட்டலில் சாப்பிட்டு‌வி‌ட்டு பில் கொடுக்காமல் எஸ்கேப்பாகும் போதும், இன்ஸ்பெக்டர் பாக்கெட்டில் கைவிட்டு எடுக்க முடியாமல் திணறும் போதும் பல் சுளுக்கும் அளவுக்கு சி‌ரிக்கிறது திரையரங்கம்.

ரசித்து நடித்திருக்கிறார் ஜோதிர்மயி. நான் வேலைக்கு போகமாட்டேன், கண்ட கண்ட ரவுடி பசங்களோட இருக்க வேண்டியிருக்கு என்று அவர் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவதும், ஒழுங்கா வேலைக்கு போ என அவரது அம்மா துரத்துவதும் ரசனையான காட்சி.

காமெடிப் படம் என்று முடிவானதால் வில்லனையும் விட்டு வைக்கவில்லை இயக்குனர். வில்லன்னா என்டர்டெயின்மெண்ட் இருக்கக் கூடாதா என நேயர் விருப்பம் கேட்கும் வில்லன் படு ஜோர். இந்த காமெடி ட்‌‌ரீட்மெண்ட் படத்தின் சீ‌ரியஸ் காட்சியையும் சி‌ரிப்பாக்கிவிடுவது மைனஸ்.

தினாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில்தான் சோதிக்கிறார். கதைக்கேற்ற ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்தின் பலம்.

வெடிகுண்டு முருகேசன் - கொடுத்த காசுக்கு சி‌ரித்துவிட்டு வரலாம்.

Read More...

Thursday, July 23, 2009

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…

முகம் பொலிவு பெற…

* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

* தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

* ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

* வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

* சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும். * தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

Read More...

ஆடி ஷாப்பிங் செய்ய ரெடியாகிவிட்டீர்களா?-Get ready to purchase in Aadi

ஆடி மாதம்; பெரும்பாலான கடைகளில் ஆடித் தள்ளுபடி விற்பனை துவக்கி விட்டனர். நீங்களும் ஆடி ஷாப்பிங் செய்ய ரெடியாகி விட்டீங்களா?

ஆடித் தள்ளுபடி எப்படி வந்தது என்று தெரியுமா உங்களுக்கு?

ஆடி மாதத்தில் திருமணம், புதுமனை குடிபுகல் உள்ளிட்ட சுபகாரியங்களை செய்வதை பலரும் தவிர்த்து விடுவர். அதனால், வர்த்தகக் கடைகளில் வியாபாரம் “டல்’லடித்து விடும். மேலும், தீபாவளி பண்டிகையின்போது அதிகமாக கொள்முதல் செய்த ஜவுளிகள், பொருட்கள் ஆகியவற்றை விற்று தீர்க்க வேண்டிய கட்டாயமும்
ஏற்படுகிறது. வியாபாரத்தை பெருக்கவும், பழைய சரக்குகளை விற்று தீர்க்கவும் வியாபாரிகள் கண்டுபிடித்த யுக்தி தான் ஆடித் தள்ளுபடி. இருந்தாலும், ஆடித்தள்ளுபடியில், உண்மையான சில சலுகைகள் கிடைப்பதையும் மறுக்க முடியாது. அந்த உண்மையான சலுகைகளை கண்டறிந்து வாங்குவது நம் புத்திசாலித்தனம்.

ஆடி ஷாப்பிங் செய்யும் முன், முதலில் வீட்டுக்கு உடனடியாக தேவைப்படும் பொருட்கள் என்னவென்று பட்டியல் எழுத வேண்டும். பின், கையிலிருக்கும் பணத்துக்கு ஏற்றவாறு, எந்தப் பொருட் களை எல்லாம் வாங்க முடியும் என்பதை குறித்து, பட்ஜெட் போட வேண்டும். கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், “ஏசி’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட்டில் வாங்க நினைக்கும் பொருட்களின் விலையை, ஆடித் தள்ளுபடி அறிவிப்புக்கு முன்பே அறிந்து கொள்ள வேண்டும்.

எந்த நிறுவனத்தின் பொருளை வாங்க வேண்டும் என்பதையும் முடிவு செய்வது அவசியம். அக்கம் பக்க வீட்டாரிடம் அந்த பொருளின் நிறைகுறை, அதை வாங்கிய கடையில் ஒழுங்காக சர்வீஸ் செய்து கொடுக்கின்றனரா என்பதை கேட்டு வைத்து கொள்வது புத்திசாலித்தனம். ஆடித் தள்ளுபடி துவங்கியதும், ஒவ்வொரு நாளும் எந்தெந்த கடைகளில் என்ன பொருட்கள், எந்தெந்த நிறுவனப் பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன என்பதை, தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில நாட்களாவது தள்ளுபடி விவரங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

குறைவான விலைக்கு பொருளை தரும், நம்பிக்கைக்கு உரிய கடையை தேர்ந்தெடுத்து, பொருளை வாங்க வேண்டும். கிரைண்டர், மிக்சி, வாஷிங் மெஷின், “ஏசி’ அயர்ன்பாக்ஸ் உள்ளிட்டவைகளில் ஒரு சில பொருட்களை இணைத்து, “காம்போ ஆபர்’ என்ற சலுகை விலையில் விற்பனை செய்வர். அந்த பொருட்களில் ஒரு சில மட்டும் நமக்கு தேவைப்படலாம். அப்படிப்பட்ட சூழலில் உறவினர், நண்பர்களோடு இணைந்து, “காம்போ ஆபரில்’ பொருட்களை வாங்கி பங்கிட்டு கொள்ளலாம். இதனால், எல்லாருக்கும் பயன் கிடைக்கும்.

ஜவுளியை பொறுத்தவரை, ஆடியில் தான் அதிகம் விற்பனையாகிறது. தள்ளுபடியில் கிடைக்கிறதே என்று, தரமற்ற ஜவுளிகளை வாங்கக் கூடாது. நான்கு கடைகளில் ஏறி இறங்கி, விலையை விசாரித்து, நல்ல ஜவுளிகளை தேர்ந்தெடுத்து சலுகை விலையில் வாங்க முயற்சிக்க வேண்டும். நகை வாங்குபவர்கள், அறிமுகமில்லாத கடைக்கு செல்வதை விட, நன்கு அறிமுகமான கடையில் வாங்குவது புத்திசாலித்தனம். அந்த நகைகளுக்கு “ஹால் மார்க்’ மற்றும் 916 தரமுத்திரை இருப்பதை உறுதி செய்து வாங்குவது நல்லது.

Read More...

கந்தசாமி ஆகஸ்ட் 15 ரிலீஸ்! - kandasamy to be Released in August 15

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விக்ரம் - ஸ்ரேயா நடிப்பில் உருவான கந்தசாமி ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கடந்த சில தினங்களாக, தி.நகரில் உள்ள தாணுவின் அலுவலகம் அல்லோலப்படுகிறது, விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் இடைவிடாத வருகை காரணமாக. படத்தை குறிப்பிட்ட தேதிக்குள் வெளியிட்டு விட வேண்டும் என்ற உறுதியில் அதன் சென்னை நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் உள்ளார். வித்தியாசமான முறையில் பிரமாண்ட விளம்பரங்களை தாணுவுடன் இணைந்து மேற்கொள்கிறார் ராமநாதன்.

இதற்கிடையே, படத்தின் புதிய ட்ரெயிலர் ஒன்றை இயக்குநர் சுசி கணேசன் தயார் செய்து அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் வழங்கியுள்ளார். கந்தசாமி நிச்சயம் ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸாகிவிடும். உலகம் முழுக்க 900 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது என அறிவித்துள்ளார் தாணு. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகள் ஏற்கெனவே சிலருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது. படம் பார்த்த அனைவரும் பிரமாதம் என தாணுவுக்கு கை கொடுத்துள்ளனர். அப்போ, கந்தசாமி தாணுவின் கஜானாவை நிரப்புவது உறுதி!

Read More...

முதல் ஐந்து படங்கள் - Top Five Movies

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது நாடோடிகள். இரண்டாவது இடம் ஜெய்யின் வாமனன்.

5. அச்சமுண்டு அச்சமுண்டு
அருண் வைத்தியநாதனின் இந்தப் படம் வெளியான முதல் மூன்று தினங்களில் சென்னையில் ஏறக்குறைய ஆறு லட்சங்கள் வசூலித்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வசூல் டல்லடிப்பதாக வருத்தப்படுகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

4. வெடிகுண்டு முருகேசன்
ஏ.‌ஜி.மூர்த்தியின் வெடிகுண்டு முருகேசனுக்கு தமிழகம் முழுவதும் பரவலான வரவேற்பு. சென்னையில் முதல் மூன்று நாட்களில் ஏறக்குறைய எட்டரை லட்சங்களை வசூலித்துள்ளது.


3. காதல் கதை
வேலுபிரபாகரனின் பிரச்சனைக்கு‌ரிய படத்தை இளைஞர்கள் ஆர்வமுடன் காண வருகிறார்கள். சென்னையில் மூன்று தினங்களில் ஏறக்குறைய பதிமூன்றேகால் லட்சங்களை வசூலித்துள்ளது.

2. வாமனன்
தொடர்ந்து இரண்டாவது இடத்தில் வாமனன். ஓபனிங் ஹீரோ என்று ஜெய்யை சொல்ல முடியாத அளவுக்கு குறைவான வசூல். சென்னையில் கடந்தவார இறுதியில் 14.3 லட்சங்களை வசூலித்திருக்கிறது. ஒருவாரத்தில் வாமனனின் மொத்த வசூல் 46 லட்சங்கள்.

1. நாடோடிகள்
மூன்று வாரம் முடிந்த பிறகும் நாடோடிகள் ஓடும் திரையரங்குகளில் திருவிழா கூட்டம். சென்ற வார இறுதி வசூல் 28.7 லட்சங்கள். மூன்று வார இறுதியில் சென்னையில் மட்டும் 2.21 கோடிகளை வசூலித்திருக்கிறது.

இந்த வாரம் ஐந்தாம் படை, மோதி விளையாடு, மலையன் படங்கள் வெளியாவதால் அடுத்தவார பாக்ஸ் ஆஃபிஸில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

Read More...

Wednesday, July 22, 2009

குடும்பங்களில் கலகத்தை உண்டாக்கும் தமிழ் தொலைக்காட்சி

இன்றைய சூழ்நிலையில் தொலைக்காட்சிகள் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டது...காலையில் 10மணிக்கு ஆரம்பிக்கும் நெடுந்தொடர்கள் இரவு 10மணி வரைக்கும் தொடர்ந்து பல குடும்பங்களில் கலகத்தை உண்டாக்க கூடியதாக மாறிவிட்டது... பெண்களின் சீரியல் ஆர்வத்தை பற்றி வரும் ஜோக்குகள் ஆரம்பத்தில் வெறும் நகைச்சுவையாக இருந்தாலும்....... கொஞ்ச நாளுக்கப்புறம் அதுதான் உண்மை என்ற நிலைமை..

நம்ம மேட்டருக்கு வருவோம்...சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சி வழக்கம் போல் காலையில் இருந்து இரவு வரைக்கும் முண்ணனி சேனலுக்கு போட்டியாக தொடர்களை ஆரம்பித்தது...


ஆரம்பத்தில் ஒரளவுக்கு போட்டியைக்கொடுத்த இந்த தொலைக்காட்சியின் தொடர்கள் ஒரு கட்டத்தில் போணியாகாமல் போக என்ன செய்வது என்று கையை பிசைந்த தொலைக்காட்சி நிறுவனம் ....தன்னுடைய நெடுந்தொடர்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டு அதற்கு பதில் நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது...தொடர்கள் எல்லாம் நிறுத்தப்பட்டதால் அந்த தொலைக்காட்சியை பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்தது....மண்டையை பிய்த்த அந்த தொலைக்காட்சி பிரைம் டைம் என சொல்லப்படும் முக்கிய நேரத்தில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டது...சென்ற ஆண்டு வெளி வந்த முக்கால் வாசி திரைப்படங்களின் உரிமையை பெற்றிருந்ததும் ஒரு காரணம்..........

இந்த புதிய திரைப்படங்கள் ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டதும் நம்ம தமிழ்நாட்டு குடும்பங்களில் கலகம் உண்டாக காரணமாக அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அதுவரைக்கும் புகைச்சலாய் இருந்த தங்கமணி--ரங்கமணிகள் சண்டை பற்றி எறிய ஆரம்பித்துள்ளதாக தங்கமணி உளவுத்துறை தலைவர் ஆதி ரகசிய அறிக்கை அளித்துள்ளார்... அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் புதிய திரைப்படங்களைத்தான் பார்க்க வேண்டும் என்று ரங்கமணிகள் சொல்ல வழக்கம் போல் தங்கமணிகள் சீரியல்தான் என்று சொல்லி முட்டி மோத அறிவிக்கப்படாத இந்திய-பாகிஸ்தான் போர் நடைபெற்றுவருவதாக ரகசிய தகவல்கள் கூறுகின்றன...

இதை அறியாத அந்த தொலைக்காட்சி ஒவ்வொரு வாரமும் புதிய மொக்கை திரைப்படங்களை அறிவித்து வருகிறது................. யாராவது இந்த மேட்டரை எடுத்து சொல்லுங்கப்பா......

Read More...

அச்சமுண்டு அச்சமுண்டு - Achchamundu Achchamundu

பேச்சில் மட்டுமே வெளிப்படும் இந்திய கலாச்சாரத்துக்குப் பயந்து சினிமாக்காரர்கள் விலகிச் செல்லும் பிரச்சனைகளில் ஒன்றை அலசுகிறது அறிமுக இயக்குனர் அருண் வைத்தியநாதனின் அச்சமுண்டு அச்சமுண்டு.

முழுக்க அமெ‌ரிக்காவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ஆவி பேய் கதையல்ல. குலை நடுங்க வைக்கும் க்ரைம் கதையுமல்ல. ஆனால், அச்சத்தில் பல நேரம் நம் முதுகு ஐஸ்கட்டியாக சில்லிடுகிறது.


பிரசன்னாவும், சினேகாவும் அமெ‌ரிக்காவில் தங்களது எட்டு வயது மகளுடன் தனியாக வசிக்கிறார்கள். பிரசன்னா சாஃப்ட்வேர் இன்‌‌ஜினியர். வெண்ணையாக வழுக்கிச் செல்லும் வாழ்க்கையில் வெங்காயத்தை நசுக்கிவிட்ட

மாதி‌ரி சில சம்பவங்கள் நடக்கின்றன.

தங்களது வீட்டை யாரோ கண்காணிப்பது போலவும், மகளை யாரோ கடத்த முயல்வது போலவும் சினேகாவுக்கு தோன்றுகிறது. முதலில், தனிமையின் பயம் என அதை ஒதுக்கும் பிரசன்னா, முகமூடி அணிந்த உருத்தைப் பார்த்ததும் சினேகாவின் பயத்தில் தானும் பங்கு போட்டுக் கொள்கிறார்.

அந்த மர்ம நபர் யார்? எதற்காக அவன் வீட்டை நோட்டம் போடுகிறான்? பிரசன்னா விடைகளை கண்டுபிடிக்கும் போது அவருடன் நாமும் அதிர்ந்து போகிறோம்.

உலகம் முழுவதும் உள்ள, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலை படமாக்கியிருப்பதற்காக இயக்குனருக்கு முதல் பாராட்டு. இளம் இந்திய தம்பதிகளின் வாழ்க்கையை, ரொமான்ஸை, அவர்களின் சின்னச் சின்ன உரசல்களை அவர்களுக்கே தெ‌ரியாமல் படம் பிடித்தது போன்ற மேக்கிங் படத்தின் ஆரோக்கியமான அம்சம்.

பிரசன்னாவும், சினேகாவும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயின் கெமிஸ்ட்‌ரி என்பார்களே, பிரசன்னா, சினேகா காட்சிகள் அதற்கு சிறந்த உதாரணம்.

பெயின்டராக வரும் ஜான் ஷா நல்ல தேர்வு. வீக்னஸை கட்டுப்படுத்த முடியாமல் அவர் காட்டுக் கூச்சல் போடுகையில் நமக்கு வியர்க்கிறது. பயத்தை மீட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது கார்த்திக் ராஜாவின் வயலின். அவர் இசைக்காமல் விட்ட மவுனங்களையும் ரசிக்க முடிகிறது.

ரெட் ஒன் கேமராவில் காட்சிகள் கண்ணை கவர்கின்றன. மெதுவாக நகரும் படத்தின் யதார்த்தமே பல நேரம் படத்துக்கு வில்லனாகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சொல்ல வந்த விஷயத்தில் மேலும் சுவாரஸியம் கூடியிருக்கும்.

சினிமா என்றால் இரண்டரை மணி நேரம் ஓட வேண்டும் என்பதையும் துணிச்சலாக உடைத்திருக்கிறார் இயக்குனர். ஒன்றரை மணி நேரப் படத்தில் பாடல்கள் இரண்டும் துருத்தி நிற்கின்றன. துணிந்து கத்தி‌ரி போட்டிருக்கலாம்.

அச்சமுண்டு அச்சமுண்டு - குறைகள் இருந்தாலும் குறைத்து மதிப்பிட முடியாத படம்.

Read More...

Global Warming: Do You Believe?

Global Warming.... do you believe?

Are you one of the "liberal left" who believe that the sky is falling, or perhaps one of the far right, one of the "global warming deniers" or greenhouse doubters, as they prefer being called?

According to a Newsweek article, "just last year, polls found that 64 percent of Americans thought there was "a lot" of scientific disagreement on

climate change; only one third thought planetary warming was "mainly caused by things people do." In contrast, majorities in Europe and Japan recognize a broad consensus among climate experts that greenhouse gases—mostly from the burning of coal, oil and natural gas to power the world's economies—are altering climate."

How many polar bears must drown before we wise up, jump off the political bandwagons, and START TAKING CARE OF OUR PLANET?

A new Newsweek Poll finds that the influence of the denial machine is running at full throttle—and continuing to shape both government policy and public opinion. Since the late 1980s, this well-coordinated, well-funded campaign by contrarian scientists, free-market think tanks and industry has created a paralyzing fog of doubt around climate change. Through advertisements, op-eds, lobbying and media attention, greenhouse doubters argued first that the world is not warming; measurements indicating otherwise are flawed, they said. Then they claimed that any warming is natural, not caused by human activities. Now they contend that the looming warming will be minuscule and harmless. "They patterned what they did after the tobacco industry," says former senator Tim Wirth, who spearheaded environmental issues as an under secretary of State in the Clinton administration. "Both figured, sow enough doubt, call the science uncertain and in dispute. That's had a huge impact on both the public and Congress."

And who is funding this campaign? Can you say ExxonMobile? (And why have conservative talk-show hosts jumped on this denial bandwagon? Is caring for the earth a socialist thing? Will destroying our plant ensure a fast forward trip to the End of Times?)

This undermining of science is nothing new. Polls taken in the late 1400s, for example, would have found that 99% of the population believed the earth to be flat. And polls taken today at the Wasilla Assembly of God Church in Alaska would likely find near 100% to believe the earth to be only 8000 years old.

According to the Union of Concerned Scientists, global warming is one of the most serious challenges facing us today. To protect the health and economic well-being of current and future generations, we must reduce our emissions of heat-trapping gases by using the technology, know-how, and practical solutions already at our disposal.

Read More...

Tuesday, July 21, 2009

கம்பீரமான மதுரை கோயில் கோபுரங்கள் - ஒரு பார்வை-Wonder of Tamilnadu

அடி பரிமாணத்தில் 25ஏக்கர் அளவில் இந்தக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் பனிரெண்டு கோபுரங்களும் கடவுள் மற்றம் புனித தேவதைகளின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நான்கு பெரிய கோபுரங்களும் திசைக்கொன்றாக வெளிச் சுவரில் இருக்கின்றன. தெற்கு வாசலில் உள்ள இந்தக்கோபுரம்தான் மற்றவைகளைவிட பெரியது. கீழிருந்து கிட்டத்தட்ட 50 மீட்டர் (160 அடி) உயரத்தில் இருக்கறது. இந்தக்கோபுரத்தின் மீது மட்டுமே நம்மால் ஏறிப்பார்க்கமுடியும். இந்தக்கோபுரத்தின் மீதிருந்து பார்த்தால் மற்ற அனைத்து கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் (சுவாமி சன்னதிக்கு மேலிருக்கும் கோபுரம்)மிகத் தெளிவாகப் பார்க்கமுடியும் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோயிலில்

சிவனுடன் ஒன்றிணைந்த அன்னை மீனாட்சி வீற்றுள்ளார். மீனாட்சிக்கு நான்கு, சொக்கநாதருக்கு நான்கு, சுற்றுச் சுவரில் நான்கு என இந்தக் கோயிலில் 12 கோபுரங்கள் இருக்கின்றன. வெளிச்சுற்றுச் சுவரில் இருக்கும் ஆச்சரியப்பட வைக்கும் கோபுரங்களே மதுரையின் சிறப்பு. வெளிச்சுவற்றில் உள்ள கோபுரங்களின் அமைப்பின் பரிமாணங்கள் கீழ் வருமாறு.கிழக்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 161'3". 1011 சிற்பங்கள் தெற்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 170'6". 1511 சிற்பங்கள் மேற்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 163'3". 1124 சிற்பங்கள் வடக்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 160'6". மற்ற கோபுரங்களை விட குறைவான சிற்பங்கள்இந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களை விடுத்து, மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் இந்த இரண்டு ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜகோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி) இதன் வேலை முடிக்கப்பட்டால் இந்தக் கோயில் இந்தியாவின் மிகச்சிறந்த கோயில்களுள் ஒன்றாகிவிடும். வருத்தத்தைத் தரும் வகையில் இது முடிவு பெறாமல் இருக்கிறது.

நீங்கள் இந்த ஐந்து வழிகளில் ஏதேனும் ஒன்று வழியாக உள்ளே வரலாம். பெரும்பாலும் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே இருக்கிற கிழக்கு வாசல்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. கோவிலின் மூலாதாரமான மீனாட்சி வீற்றிருக்கும் திசையை அதிகம் விரும்புவதில் ஏதும் வியப்பில்லையே. இந்த ஒரு வாயில் மட்டுமே கோபுரம் முடிவு பெறாமல் இருக்கிறது. இதன் பெரிய வடிவமும், பரிமாணங்களும் சிதம்பரம் கோயிலை ஒத்திருக்கிறது. இங்கு இன்னும் வெளியிடப்படாத சில கல்வெட்டுகள் இருக்கின்றன. இந்தக் கோபுரத்தின் கீழ் மதுரையின் காவல் தெய்வம் மதுரைவீரன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இவருக்கு அருகில் பதினெட்டாம் படி இருக்கின்றது. இங்கு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சத்தியப் பிரமாணம் பெறப்படுவதாகவும், இங்கு பொய்சொன்னால், அவருக்கு உடனடி தண்டனையாக மரணம் ஏற்படுவதாக கிராமத்து பேச்சு வழக்குகள் தெரிவிக்கின்றன.

பொற்றாமரைக்குளம்

அந்த மண்படத்தைக் கடந்து தற்போது புனித பொற்றாமரைக் குளத்தை அடைந்திருக்கிறோம். தெற்கு வாசல் பக்தர்களை நேரடியாக பொற்றாமரைக்குளத்திற்கு அழைத்து வருகிறது. அந்த நடைபாதையிலிருந்து படிகள் இறக்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அந்தப் படிகள் உதவுகின்றன. இந்தக் குளத்தைச் சுற்றிலும் தூண்கள் நிறைந்த நடைபாதை உள்ளது. பொற்றாமரைக்குளம், மதுரை கோயில் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது. எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது. 40x60 மீட்டர்கள் அளவில் அமைந்துள்ள இந்தக்குளம் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பது சரித்திரப் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது.இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சங்கப் புலவர்களின் புகலிடமாகவும் அவர்கள் ஆலோசனை செய்யும் தமிழ் கூடாரமாகவும் விளங்கியது. புலவர்கள் எழுதிய கவிதைகளை இந்தக் குளத்தில் மிதக்கவிட்டு, அதில் மிதந்து வரும் கவிதைகளே தரமான கவிதைகள் என்று ஏற்றதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் இறைவன் தமிழ் மீது மையல் கொண்டு புலவர்களுடன் வாதம் செய்த இடமாகவும் மீனாட்சி அம்மன் கோயிலையே குறிப்பிடுகின்றனர். இந்திரனின் பூலோக வருகையின் போது இந்தக் குளம் அவனுக்கு தாமரைகளைக் கொடுத்ததாக வரலாறு உள்ளது. தற்போது இந்தக் குளத்திற்குள் தாமரைகள் இல்லை. அதற்கும் ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் இந்தக் குளத்தின் அருகில் ஒரு கொக்கு தவம் புரிந்து வந்தது. அப்போது இக்குளத்தில் உள்ள மீன்கள் அதனிடம் குறும்பு செய்தன. அந்தக் கொக்கு அதனை சட்டை செய்யவில்லை. ஆனால் அது முக்தி அடையும்போது இறைவனிடம் "இந்தக்குளத்தில் எந்த உயிரினமும் இருக்கக் கூடாது " என்று வரம் வாங்கிவிட்டதாக அந்தக் கதை கூறுகிறது.இதனைச் சுற்றியுள்ள சுவர்களில் Fresco வகை மனதை மயக்கும் ஓவியங்கள் மீனாட்சியின் வாழ்க்கைச் சிறப்பபை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன. இந்தக் குளத்திலிருந்து கோபுரங்களின் காட்சி மிக அழகாக இருப்பதை உணர்கிறீர்கள். பிராமணர்கள் மாலை வேலைகளில் இந்தக் குளத்தில் மந்திரங்கள் ஓதுவதும், சமஸ்கிருத வகுப்பு நடப்பதையும் காணலாம். இந்தக் குளத்தில் மார்பிள் பதிக்கப்பட்டுள்ள ஒரு மாடம் உள்ளது. மதுரை பேரரசின் புகழ்பெற்ற அரசி மங்கம்மாள் கட்டியதாகக் கூறுகிறார்கள். ராணி மங்கம்மாள் நாயக்கர் குல ராணி ஆவார். குறிப்பிட்ட ஒரு விழாவின் போது இறைவனும் இறைவியும் இங்கு வருகிறார்கள்.

Read More...

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன்


எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், எம்.ஜி.ஆர். தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார்.

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் 135. இவற்றுள் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை 115.
எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோயுற்று இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட்டார். பின்னர் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.
எம்.ஜி.ஆர். ஆரம்ப நாட்களில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், நேதாஜி பக்தராகவும் இருந்தார். பின்னர் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கலைஞர் கருணாநிதியுடன் கொண்ட நட்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், முதலமைச்சராக பதவி ஏற்ற கலைஞர் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறினார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கினார். 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதல்வரானார். 1984ல் இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெற அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போதே தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். 1987ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருக்கும் போதே 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இன்றளவும் எம்.ஜி.ஆர். அவர்கள் தாம் நடித்த திரைப்படங்களுக்காக மட்டுமின்றி, தம் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய பல மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காகவும் மிகவும் போற்றப்படுகிறார். அவற்றுள் மிக முக்கியமானது பள்ளி மாணவர்களுக்காக அவர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் ஆகும். மேலும் ஈழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது இறுதிநாள் வரை பெரிதும் துணைநின்றார் எம்.ஜி.ஆர். அவர்கள்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும் இந்தியில் அதன் வாசகங்கள் இருந்ததால் ஏற்க மறுத்துவிட்டார்.1972 ஆம் ஆண்டு ரிக்ஷாகாரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது1987 ஆம் ஆண்டு மரணத்துக்கு பிந்தைய பாரத ரத்னா விருதுசென்னை பல்கலை மற்றும் அரிசோனா உலகப் பல்கலையின் டாக்டர் பட்டம்
எம்.ஜி.ஆர். நடித்துள்ள படங்கள்
முப்பதுகளில்
1. சதி லீலாவதி - 1936 - மனோரமா பிலிம்ஸ் - எல்லிஸ் ஆர். டங்கன்
2. இரு சகோதரர்கள் - 1936 - பரமேஸ்வரி சவுண்ட் பிக்சர்ஸ் - எல்லிஸ் ஆர். டங்கன்
3. தட்ச யக்ஞம் - 1938 - மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் - ராஜா சந்திரசேகர்
4. வீர ஜகதீஷ் - 1938 - வி.எஸ். டாக்கீஸ் - டி.பி.கைலாசம், ஆர் பிரகாஷ்
5. மாய மச்சேந்திரர் - 1939 - மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் - ராஜா சந்திரசேகர்
6. பிரஹலாதா - 1939 - சேலம் சங்கர் பிலிம்ஸ் - பி.என். ராவ்
நாற்பதுகளில்
7. அசோக்குமார் - 1941 - முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி - ராஜா சந்திரசேகர்
8. வேதவதி அல்லது சீதா ஜனனம் - 1941 - சியாமளா பிக்சர்ஸ் - டி.ஆர். ரகுநாத்
9. தமிழ் அறியும் பெருமாள் - 1942 - உமா பிக்சர்ஸ் - டி.ஆர். ரகுநாத்
10. தாசி பெண் அல்லது ஜோதி மலர் - 1943 - புவனேஸ்வரி பிக்சர்ஸ் - எல்லிஸ் ஆர். டங்கன்
11. அரிச்சந்திரா - 1943 - ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பிலிம் கம்பெனி - நாகபூஷணம்
12. மீரா - 1945 - சந்திரபிரபா சினிடோன் - எல்லிஸ் ஆர். டங்கன்
13. சாலிவாகனன் - 1945 - பாஸ்கர் பிக்சர்ஸ் - பி.என். ராவ்
14. ஸ்ரீ முருகன் - 1946 - ஜுபிடர் - எம். சோமசுந்தரம், வி.எஸ். நாராயண்
15. பைத்தியக்காரன் - 1947 - என்.எஸ்.கே. பிலிம்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
16. ராஜகுமாரி - 1947 - ஜுபிடர் - ஏ.எஸ்.ஏ. சாமி - 160 நாட்கள்
17. அபிமன்யூ - 1948 - ஜுபிடர் - ஏ.எஸ்.ஏ. சாமி
18. மோகினி - 1948 - ஜுபிடர் - லங்கா சத்யம் - 133 நாட்கள்
19. ராஜ முக்தி - 1948 - நரேந்திரா பிக்சர்ஸ் - ராஜா சந்திரசேகர்
20. ரத்னகுமார் - 1949 - முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி - கிருஷ்ணன்,
ஐம்பதுகளில்
21. மந்திரி குமாரி - 1950 - மாடர்ன் தியேட்டர்ஸ் - டி.ஆர். சுந்தரம், எல்லிஸ் ஆர். டங்கன் - 146 நாட்கள்
22. மருதநாட்டு இளவரசி - 1950 - ஜி.கோவிந்தன் அண்ட் கோ - 133 நாட்கள்
23. மர்ம யோகி - 1951 - ஜுபிடர் - கே. ராம்நாத் - 151 நாட்கள்
24. ஏக்தா ராஜா - 1951 - இந்தி (டப்பிங்)
25. சர்வாதிகாரி - 1951 - மாடர்ன் தியேட்டர்ஸ் - 141 நாட்கள்
26. சர்வாதிகாரி - 1951 - தெலுங்கு (டப்பிங்)
27. அந்தமான் கைதி - 1952 - ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் - வி. கிருஷ்ணன் - 133 நாட்கள்
28. என் தங்கை - 1952 - அசோகா பிக்சர்ஸ் - சி.எ. நாராயணமூர்த்தி - எம்.கே.ஆர். நம்பியார் - 181 நாட்கள்
29. குமாரி - 1952 - ஆர்.பத்மநாபன், ராஜேஸ்வரி - ஆர். பத்மநாபன் - 112 நாட்கள்
30. ஜெனோவா - 1953 - சந்திரா பிக்சர்ஸ் - எப். நாகூர் - 133 நாட்கள்
31. ஜெனோவா - 1953 - மலையாளம் (டப்பிங்)
32. நாம் - 1953 - ஜுபிடர், மேகலா - ஏ. காசிலிங்கம் - 84 நாட்கள்
33. பணக்காரி - 1953 - உமா பிக்சர்ஸ் - கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - 70 நாட்கள்
34. கூண்டுக்கிளி - 1954 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா - 77 நாட்கள்
35. மலைக்கள்ளன் - 1954 - பக்ஷிராஜா - எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு - 150 நாட்கள்
36. குலேபகாவலி - 1955 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா - 166 நாட்கள்
37. அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956 - மாடர்ன் தியேட்டர்ஸ் - டி.ஆர். சுந்தரம் - 168 நாட்கள்
38. மதுரை வீரன் - 1956 - கிருஷ்ணா பிக்சர்ஸ் - யோகானந்த் - 169 நாட்கள்
39. தாய்க்குப் பின் தாரம் - 1956 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 147 நாட்கள்
40. சக்கரவர்த்தி திருமகள் - 1957 - உமா பிக்சர்ஸ் - பி. நீலகண்டன் - 140 நாட்கள்
41. மகாதேவி - 1957 - ஸ்ரீ கணேஷ் மூவிடோன் - சுந்தர் ராவ் நட்கர்னி - 117 நாட்கள்
42. புதுமைப்பித்தன் - 1957 - சிவகாமி பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா - 112 நாட்கள்
43. ராஜராஜன் - 1957 - நீலா புரொடக்சன்ஸ் - டி.வி. சுந்தரம் - 77 நாட்கள்
44. நாடோடி மன்னன் - 1958 - எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் - எம்.ஜி.ஆர். - 161 நாட்கள்
45. தாய் மகளுக்கு கட்டிய தாலி - 1959 - கல்பனா கலா மந்திர் - ஆர். ஆர். சந்திரன் - 86
அறுபதுகளில்
46. பாக்தாத் திருடன் - 1960 - சதர்ன் மூவிஸ் - டி.பி. சுந்தரம் - 112 நாட்கள்
47. மன்னாதி மன்னன் - 1960 - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் - எம். நடேசன் - 93 நாட்கள்
48. ராஜா தேசிங்கு - 1960 - கிருஷ்ணா பிக்சர்ஸ் - டி.ஆர். ரகுநாத் - 77 நாட்கள்
49. அரசிளங்குமரி - 1961 - ஜுபிடர் - ஏ.எஸ்.ஏ. சாமி - 92 நாட்கள்
50. நல்லவன் வாழ்வான் - 1961 - அரசு பிக்சர்ஸ் - பி. நீலகண்டன் - 84 நாட்கள்
51. சபாஷ் மாப்பிள்ளை - 1961 - ராகவன் புரொடக்சன்ஸ் - எஸ். ராகவன் - 70 நாட்கள்
52. தாய் சொல்லைத் தட்டாதே - 1951 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 133 நாட்கள்
53. திருடாதே - 1961 - ஏ.எல்.எஸ். - பி. நீலகண்டன் - 161 நாட்கள்
54. குடும்பத் தலைவன் - 1962 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 108 நாட்கள்
55. மாடப்புறா - 1962 - பி.வி.என். புரொடக்சன்ஸ் - எஸ்.ஏ. சுப்புராமன் - 77 நாடகள்
அறுபதுகளில்
59. விக்கிரமாதித்தன் - 1962 - பாரத் புரொடக்சன்ஸ் - டி.ஆர். ரகுநாத், என்.எஸ். ராம்தாஸ் - 79 நாட்கள்
60. ஆனந்த ஜோதி - 1963 - ஹரிஹரன் பிலிம்ஸ் (பி.எஸ்.வி.) - வி.என். ரெட்டி
61. தர்மம் தலைக்காக்கும் - 1963 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 117 நாட்கள்
62. கலை அரசி - 1963 - சரோடி பிரதர்ஸ் - ஏ. காசிலிங்கம்
63. காஞ்சித் தலைவன் - 1963 - மேகலா பிக்சர்ஸ் - ஏ. காசிலிங்கம்
64. கொடுத்து வைத்தவள் - 1963 - ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் - பி. நீலகண்டன் - 91 நாட்கள்
65. நீதிக்குப் பின் பாசம் - 1963 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
66. பணத்தோட்டம் - 1963 - 84 நாட்கள்
67. பரிசு - 1963 - கௌரி பிக்சர்ஸ் - யோகானந்த்
68. பெரிய இடத்துப் பெண் - 1963 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
69. தெய்வத் தாய் - 1964 - சத்யா மூவிஸ் - பி. மாதவன்
70. என் கடமை - 1964 - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் - எம். நடேசன்
71. படகோட்டி - 1964 - சரவணா பிலிம்ஸ், டி. பிரகாஷ் ராவ்
72. பணக்கார குடும்பம் - 1964 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
73. தாயின் மடியில் - 1964 - அன்னை பிலிம்ஸ் - ஆடூர்தி சுப்பா ராவ்
74. தொழிலாளி - 1964 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
75. வேட்டைக்காரன் - 1964 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
76. ஆசை முகம் - 1964 - மோகன் புரொடக்சன்ஸ் - பி.புல்லையா
77. ஆயிரத்தில் ஒருவன் - 1965 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
78. எங்க வீட்டுப் பிள்ளை - 1965 - விஜயா கம்பைன்ஸ் புரொடக்சன்ஸ் - சாணக்யா - 236 நாட்கள்
79. கலங்கரை விளக்கம் - 1965 - சரவணா பிலிம்ஸ் - கே. சங்கர்
80. கன்னித் தாய் - 1965 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
81. பணம் படைத்தவன் - 1965 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
82. தாழம்பூ - 1965 - ஸ்ரீ பால முருகன் பிலிம்ஸ் - எஸ். ராமதாஸ்
83. அன்பே வா - 1966 - ஏ.வி.எம். - ஏ.சி. திரிலோகசந்தர்
84. நான் ஆணையிட்டால் - 1966 - சத்யா மூவிஸ் - சாணக்யா
85. முகராசி - 1966 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
86. நாடோடி - 1966 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
87. சந்திரோதயம் - 1966 - சரவணா பிலிம்ஸ் - கே. சங்கர்
88. பறக்கும் பாவை - 1966 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
89. பெற்றால் தான் பிள்ளையா? - 1966 - ஸ்ரீ முத்துகுமரன் பிக்சர்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
90. தாலி பாக்கியம் - 1966 - வரலக்ஷ்மி பிக்சர்ஸ் - கே.பி. நாகபூஷணம்
91. தனிப்பிறவி - 1966 - தேவர் பிலிம்ஸ் - என்.எஸ். வர்மா
92. அரச கட்டளை - 1967 - சத்யராஜா பிக்சர்ஸ் - எம்.ஜி. சக்ரபாணி
93. காவல்காரன் - 1967 - சத்யா மூவிஸ் - பி. நீலகண்டன்
94. தாய்க்கு தலைவணங்கு - 1967 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
95. விவசாயி - 1967 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
96. ரகசிய போலீஸ் 115 - 1967 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
97. தேர் திருவிழா - 1968 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
98. குடியிருந்த கோயில் - 1968 - சரவணா ஸ்கிரீன்ஸ் - கே. சங்கர்
99. கண்ணன் என் காதலன் - 1968 - சத்யா மூவிஸ் - பி. நீலகண்டன்
100. ஒளி விளக்கு - 1968 - ஜெமினி - சாணக்யா
101. கணவன் - 1968 - வள்ளி பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
102. புதிய பூமி - 1968 - ஜே.ஆர். மூவிஸ் - சாணக்யா
103. காதல் வாகனம் - 1968 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
104. அடிமைப் பெண் - 1969 - எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் - கே. சங்கர்
105. நம் நாடு - 1969 - விஜயா இண்டர்நேசனல் -
ஜம்பு
எழுபதுகளில்
106. மாட்டுக்காரன் வேலன் - 1970 - ஜெயந்தி பிலிம்ஸ் - பி. நீலகண்டன் - 156 நாட்கள்
107. என் அண்ணன் - 1970 - வீனஸ் பிக்சர்ஸ் - பி. நீலகண்டன்
108. தலைவன் - 1970 - தாமஸ் பிக்சர்ஸ் - பி.ஏ. தாமஸ்
109. தேடி வந்த மாப்பிள்ளை - 1970 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
110. எங்கள் தங்கம் - 1970 - மேகலா பிக்சர்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
111. குமரிக் கோட்டம் - 1971 - கே.சி. பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
112. ரிக்ஷாக்காரன் - 1971 - சத்யா மூவிஸ் - எம். கிருஷ்ணன் நாயர்
113. நீரும் நெருப்பும் - 1971 - நியூ மணி ஜே. சினி புரொடக்சன்ஸ் - பி. நீலகண்டன்
114. ஒரு தாய் மக்கள் - 1971 - நாஞ்சில் புரொடக்சன்ஸ் - பி. நீலகண்டன்
115. சங்கே முழங்கு - 1972 - வள்ளி பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
116. நல்ல நேரம் - 1972 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
117. ராமன் தேடிய சீதை - 1972 - ஜெயந்தி பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
118. அன்னமிட்ட கை - 1972 - ராமசந்திரா புரொடக்சன்ஸ் - எம். கிருஷ்ணன்
119. நான் ஏன் பிறந்தேன் - 1972 - காமாட்சி ஏஜன்சிஸ் - எம். கிருஷ்ணன்
120. இதய வீணை - 1972 - உதயம் புரொடக்சன்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
121. உலகம் சுற்றும் வாலிபன் - 1973 - எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் - எம்.ஜி.ஆர். - 203 நாட்கள்
122. பட்டிக்காட்டு பொன்னையா - 1973 - வசந்த் பிக்சர்ஸ் - பி.எஸ். ரங்கா
123. நேற்று இன்று நாளை - 1974 - அமல்ராஜ் பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
124. உரிமைக் குரல் - 1974 - சித்ரயுகா - சி.வி. ஸ்ரீதர்
125. சிரித்து வாழவேண்டும் - 1974 - உதயம் புரொடக்சன்ஸ் - எஸ்.எஸ். பாலன்
126. நினைத்ததை முடிப்பவன் - 1974 - ஓரியண்டல் பிக்சர்ஸ் - பி. நீலகண்டன்
127. நாளை நமதே - 1975 - கஜேந்திரா பிலிம்ஸ் - கே.எஸ். சேதுமாதவன்
128. பல்லாண்டு வாழ்க - 1975 - உதயம் புரொடக்சன்ஸ் - கே. சங்கர்
129. இதயக்கனி - 1975 - சத்யா மூவிஸ் - ஏ. ஜெகந்நாதன்
130. நீதிக்கு தலை வணங்கு - 1976 - ஸ்ரீ உமையாம்பிகை புரொடக்சன்ஸ் - பி. நீலகண்டன்
131. உழைக்கும் கரங்கள் - 1976 - கே.சி. பிலிம்ஸ் - கே. சங்கர்
132. ஊருக்கு உழைப்பவன் - 1976 - வீனஸ் பிக்சர்ஸ் - எம். கிருஷ்ணன்
133. இன்று போல என்றும் வாழ்க - 1977 - சுப்பு புரொடக்சன்ஸ் - கே. சங்கர்
134. நவரத்னம் - 1977 - சி.என்.வி. மூவிஸ் - ஏ.பி. நாகராஜன்
135. மீனவ நண்பன் - 1977 - முத்து எண்டர்பிரைசஸ் - சி.வி. ஸ்ரீதர்
136. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978 - சோலீஸ்வர் கம்பைன்ஸ் - பி. நீலகண்டன்





Read More...

ந‌ம்பவே முடிய‌வி‌‌ல்லை ‌: ப்‌ரியாம‌ணி! - I Can't Believe : Priyamani

உலக‌த்து இ‌ன்பமெ‌ல்லா‌ம் ‌ப்‌ரியாம‌ணிய‌ி‌ன் நெ‌ஞ்ச‌த்‌தி‌ல். பூ‌ச் செ‌‌ண்டுக‌ள், போ‌ன் அழை‌ப்புக‌ள் என பரபர‌ப்பாக இரு‌ந்தவ‌ர், தொலைபே‌சி‌யிலேயே பே‌ட்டியு‌ம் அ‌ளி‌க்‌கிறா‌ர். காரண‌ம் ‌ப்‌ரியாம‌ணி இரு‌ப்பது ஹைதராபா‌த்த‌ி‌ல். கே‌ள்‌வி‌க்கு இட‌மி‌ல்லாம‌ல் அவ‌ர் அ‌ளி‌த்த ச‌ந்தோஷ பே‌‌ட்டி‌‌யி‌லிரு‌ந்து...

தே‌சிய ‌விருது எ‌ன்பது நடிகையாக எ‌ன்னுடைய நெடுநாளைய கனவு. அ‌ந்த‌க் கனவு இ‌ப்போது ‌நிறைவே‌றி‌யிரு‌க்‌கிறது.

விருது ‌கிடை‌த்ததை அ‌ப்பாதா‌ன் முத‌லி‌ல் எ‌ன்‌னிட‌ம் சொ‌ன்னா‌ர். எ‌ன்னா‌ல் ந‌ம்பவே முடிய‌வி‌ல்லை.

விருது எனக‌்குதா‌ன் எ‌ன்பதை உறு‌தி‌ப்படு‌த்‌தி‌க் கொ‌‌ண்ட‌பி‌ன் தா‌‌ங்க முடியாத ச‌ந்தோஷ‌ம். வான‌த்‌தி‌ல் பற‌ப்பதுபோ‌ல் இரு‌ந்தது.

இ‌ந்த‌ வ‌ிருது‌க்கு அ‌மீ‌ர் தா‌ன் காரண‌ம். பரு‌த்‌தி‌வீர‌னி‌ல் அ‌வ‌ர் சொ‌ன்னதை செ‌ய்தே‌ன். அதேபோ‌ல் எ‌ன்னை அ‌றிமுக‌ப்படு‌த்த‌யி பார‌திராஜா, பாலுமகே‌ந்‌திராவு‌ம் என‌க்கு இ‌ந்த பெருமை ‌கிடை‌க்க காரணமானவ‌ர்க‌ள்.

பரு‌த்‌தி‌வீர‌ன் வெ‌ளிவ‌ந்த போதே ‌விருது ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்றா‌ர்க‌ள். அதுவே ச‌‌ந்தோஷமாக இரு‌ந்தது. ‌நிஜமாகவே ‌விருது ‌கிடை‌த்த ‌பிறகு ச‌ந்தோ‌ஷ‌த்‌தி‌ல் ‌திளை‌க்‌கிறே‌ன்.

‌‌விருது ‌கிடை‌த்‌திரு‌ப்பது எ‌ன்னுடைய பொறு‌ப்பை அ‌திக‌ரி‌த்‌திரு‌க்‌கிறது. வரு‌ம் நா‌ட்க‌ளி‌ல் இ‌ன்னு‌ம் எ‌ச்ச‌ரி‌க்கையாக பட‌ங்களை தே‌ர்வு செ‌ய்வே‌ன். ஒ‌வ்வொரு பட‌த்‌தி‌ன் வெ‌ற்‌றி‌க்கு‌ம் கடுமையாக உழை‌ப்பே‌ன்.

இ‌ந்த ‌விருது ‌விடை‌க்க காரணமாக இரு‌ந்த அனைவரு‌க்கு‌ம், மு‌க்‌கியமாக பரு‌த்‌தி‌வீர‌னி‌ல் எ‌ன்னுட‌ன் நடி‌த்தவ‌ர்களு‌க்கு‌ம், டெ‌க்‌னி‌ஷிய‌‌ன்களு‌க்கு‌ம் எ‌ன்னுடைய ந‌ன்‌றி!

Read More...

Monday, July 20, 2009

அனன்யாவின் தப்பாட்டம் - Nadodigal Ananya

சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் நாடோடிகள் அனன்யா செய்கிற வேலைகள் எல்லாம் பெ‌ரிது பெ‌ரிதாக இருக்கிறது. ஒப்பந்தத்தை உடைப்பதில் அரசியல் கட்சிகளையும் இவர் மிஞ்‌சி விடுவார்.

நாடோடிகளில் நடிக்கும்போதே பிரபுசாலமனின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அனன்யா. படம் வெளிவந்த பிறகு சத்தத்தையே காணோம். சைலண்டாக படத்திலிருந்து விலகிக்கொள்ள வேறு ஹீரோயின் தேடி வருகிறார் பிரபுசாலமன்.

ஆர்யாவின் த ஷோ பீப்பிள் நிறுவனத்தின் முதல் படமான படித்துறையிலும் அனன்யாதான் ஹீரோயின். இரண்டு வாரம் முன்பு திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணியில் படப்பிடிப்பை
தொடங்கினார் இயக்குனர் சுகா. அனன்யாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஆள் மிஸ்ஸிங்.

ஹீரோ அபிஷேக், ஹீரோயின் அனன்யா காம்பினேஷன் காட்சிகளை எடுக்க முடியாமல் ஹீரோவை மட்டும் ஆற்றில் குளிக்க வைத்து படப்பிடிப்பை தொடங்கினார் சுகா. அடுத்தடுத்த நாட்களும் தலையை காட்டவில்லை அனன்யா.

படிக்கப் போறேன் என்று ஒப்புக்கொண்ட படங்களுக்கு அல்வா கொடுப்பதால் படித்துறையிலிருந்து அவரை நீக்கியுள்ளனர்.

மிருகம் ஆதி நடிக்கும் அய்யனார் படத்துக்கும் அனன்யாவை ஒப்பந்தம் செயள்துள்ளனர். இப்போதே உஷாரானால் அனன்யா கொடுக்கும் அல்வாவிலிருந்து அய்யனார் தப்பிக்கலாம்.

Read More...

Sunday, July 19, 2009

தழும்புகள் மறைய....To remove scars & become beauty-Follow this tricks

முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் நறுக்கி, நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

அதேபோல், உடம்பில் தழும்புகள் இருந்தால் அவரை இலை சாறு பூசலாம். தழும்புகள் மறைந்துவிடும்.
தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க, இளம் கொத்துமல்லி இலைகளை எடுத்து சாறு பிழிந்து, அதில் கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவிப்பாருங்கள்.

சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி உலரவிட்டு பின் கழுவினால் முடி உரிர்ந்து விடும்
தூக்கமின்யால் சிலருக்கு அடிக்கடி கண் எரிச்சல் ஏற்படும். அவ்வாறு அடிக்கடி ஏற்பட்டால் நந்தியாவட்டை பூவால் கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனே சரியாகிவிடும்.

முடி மிருதுவாக இருக்க žத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி žயக்காயுடன் சேர்த்து அரைத்துத் தேய்த்து குளித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

பெண்களுக்குப் பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும். அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.

Read More...

த்ரிஷாவுடன் காதலா? சிம்பு பேட்டி - Trisha vs Simbhu

சிறுவயது முதல் த்ரிஷா எனக்கு தோழி மட்டும்தான். அவருடன் காதல் இல்லை என்றார் சிம்பு. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ள படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இப்பட ஷ¨ட்டிங்கின்போது சிம்பு, த்ரிஷா நெருங்கி பழகுவதாகவும் அவர்கள் காதலிப்பதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து சிம்பு கூறியதாவது: த்ரிஷாவை காதலிப்பதாக சொல்கிறார்கள். இதுபோன்ற வதந்தி எப்படி பரவுகிறது என புரியவில்லை. பள்ளியில் படிக்கும் போதே த்ரிஷாவை தெரியும்.


அப்போது முதல் அவர் எனக்கு தோழிதான். சினிமாவுக்கு வந்த பின்பும் எங்கள் நட்பு தொடர்ந்தது. இருவரும் சேர்ந்து அலை படத்தில் நடித்தோம். நீண்ட இடைவெளிக்கு பின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்கிறோம். எங்கள் நட்பு மேலும் வளர இப்படம் ஒரு காரணமாக உள்ளது.


மற்றபடி இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. எனது வேலையை மட்டுமே காதலிக்கிறேன். விண்ணைத்தாண்டி வருவாயா ஷ¨ட்டிங்கிற்காக மால்டா தீவுக்கு சென்று வந்தோம். அங்கு மன்மதன்& 2 மற்றும் வாலிபன் பட கதைகளை எழுதிவிட்டேன். எனது அடுத்த படம் பற்றி விரைவில் அறிப்பேன் என்றார்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009