Saturday, August 8, 2009

சுற்றுலா செல்ல இருக்கீங்களா...?

சுற்றுலா செல்வதென்றால் எல்லாருக்கும் குஷ’ தான். ஆனால், உள்ளூரில் இருக்கும் போது எடுக்கும் முன்னெச்சரிக்கையை விட, சுற்றுலாவின் போது நாம் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற குறிப்பிட்ட கோளாறை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை, மருந்து சாப்பிடுவது என்பது முக்கியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பொதுவாக பாதிக்கக்கூடிய கோளாறு, "டிராவில் டயேரியா'' தான். போகிற இடங்களில் சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருந்தாலோ, சரியான சுற்றுச்சூழல் சுகாதாரம் இல்லாமல் இருந்தாலோ இந்த கோளாறு யாருக்கும் வரும். அதிலும், குழந்தைகளுக்கு சுலபமாக வரும்.

சாதாரண மலச்சிக்கலில் இருந்து ஆரம்பிக்கும் இந்த பாதிப்பு, ஒரு வாரம் வரை விடாது. காய்ச்சல், வயிற்று வலி என்று பாடாய்ப்படுத்தி விடும். இன்னொரு பொதுவான சுற்றுலா பயணத்தில் வரும் கோளாறு கிறுகிறுப்பு.

"தலைசுற்றலில் ஆரம்பித்து வாந்தி, பேதியில் முடியும். அதனால், உடலில் தண்­ர் வற்றிப்போய், வேறு கோளாறில் விட்டுவிடும்; சிறுநீர் போவதில் பிரச்னை ஏற்படும்; இதனால், சுற்றுலா போகும் ஆசையே விட்டுவிடும் நிலை ஏற்படும்'' என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிபுணர் சுப்ரமணியன் கூறினார்.

இதனால், சுற்றுலா போகும் போது முதலுதவி பெட்டியில், அயோடின், பேன்டேஜ், டேப், கொசுவர்த்தி, எலக்ட்ரோலைட்ஸ், ஆன்டாசிட்ஸ், ஆன்டிபயோடிக் ஆயின்ட்மென்ட்ஸ், டயேரியா தடுப்பு மருந்து, காய்ச்சல், வலி நிவாரணி ஆகியவை வைத்திருக்க வேண்டும்.

சுற்றுலா போகும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பில் வாந்தி, பேதி ஏற்படும் போது, எலக்ட்ரோலைட்ஸ் மிக முக்கியம். அதை தண்­ரில் கலக்கி குடித்தாலே போதுமானது; பாதிப்பை தவிர்க்கலாம். மூக்கை உறிஞ்சுவது, இருமல் போன்ற பாதிப்புபோக, "ஆன்டிஹ’ஸ்டாமின்'' மாத்திரை பலனளிக்கும்.

தலை சுற்றல் இருப்பவர்கள் எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்க்கலாம். தலைவலி தைலங்களையும் எடுத்துச் செல்லலாம்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009