Saturday, August 8, 2009

ஜ“வா - திவ்யா இணையும் சிங்கம் புலி

குத்து, கிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்த ரம்யா, இடையில் கன்னட சினிமாவுக்கு சென்றுவிட்டார். பொல்லாதவன் படம் மூலம் திவ்யாவாகி ரீ என்ட்ரி அடித்தவர், இப்போது கோலிவுட்டிலும் பிசி. ஐபிஎல் கிரிக்கெட் டீமை வாங்கியிருக்கிறார், அரசியலுக்கு வருகிறார் என பல பரபரப்புகளுக்கிடையே அவரை சந்தித்தபோது, அவர் அளித்த பேட்டி: என்னைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் அதை சாதாரணமா எடுத்துக் கொள்ளமாட்டேன். நிஜமான விஷயங்கள் வரும்போது அதை ஒப்புக்கொள்வேன். பொய்யான தகவல் பரவும்போது அதற்கு பதில் சொல்றது என் கடமை என பொறுப்பாக பேசுகிறார் திவ்யா. எம்.பி. சீட்டுக்கு போட்டியிட ஒரு கட்சியிலயிருந்து கேட்டாங்களாமே? என் குடும்பத்துக்காரங்க, சிலபேர் கர்நாடக அரசியல்ல இருக்கிறாங்க. அதனால கேட்டிருக்கலாம்.

ஆனா, எனக்கு அரசியல் ஞானம் கிடையாது. 25 வயசுதான் ஆகுது. எதை வச்சு என்னைப்போய் தேர்தல்ல போட்டியிட கேட்டாங்கன்னு யோசிக்கிறேன். ஐபிஎல் கிரிக்கெட் டீமை வாங்கிவிட்டதா பேச்சு அடிபட்டதே? புரளிதான். அது பத்தி பேசினது உண்மை. ஆனா அதுக்குன்னு நேரம் ஒதுக்கி, டீம் வளர்ச்சியில கவனம் செலுத்த நம்மால முடியாது. தமிழ்ல சிங்கம் புலி, காதல் டூ கல்யாணம் படங்கள் இருக்கு. கன்னடத்துல ரெண்டு படம் இருக்கு. வெற்றிமாறன் இயக்கத்துல இன்னொரு தமிழ் படத்துலேயும் நடிக்கப்போறேன். கன்னட டீம், ஐபிஎல்ல ஆடினா, அதை ஊக்குவிக்க போவேன். அக்டோபர்ல சாம்பியன் கோப்பை நடக்குது. அதுல பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் டீமோட விளம்பர அம்பாசிடரா என்னை தேர்வு பண்ணியிருக்காங்க. தமிழை விட கன்னட சினிமாவுக்கு முக்கியத்துவம் தர்றதா சொல்றாங்க? போன வருஷம் என்னோட ஒரு கன்னட படம் ரிலீசாச்சு. தமிழ்ல ரெண்டு படம். இப்போ தமிழ்ல மூணு படம் பண்றேன். கன்னடத்துல ரெண்டு படம்தான். என்னைப் பொறுத்தவரை மொழியை பார்க்கிறது கிடையாது. நல்ல ரோலுக்கு மட்டும் முக்கியத்துவம் தர்றேன். பெங்களூர்ல பிறந்தாலும் சென்னைல 16 வருஷம் இருந்திருக்கேன். என்னோட சிறுவயதை கழிச்ச இடம் இது. இதை மறக்கமாட்டேன். துரோகில நடிக்க மறுத்துட்டீங்களாமே? அது ரெண்டு ஹ“ரோயின் கதை. கதைப்படி அம்மா, பொண்ணுன்னு ரோல் இருக்கு. அது எனக்கு ஒத்துவராதுன்னு மறுத்துட்டேன்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009