Tuesday, September 1, 2009

இந்தியா மீண்டும் சாம்பியன்

புதுடில்லி : நேரு கோப்பை கால்பந்து தொடரின் பரபரப்பான பைனலில் இந்திய அணி, "பெனால்டி ஷூட்-அவுட்' (5-4) முறையில் சிரியாவை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றது.

டில்லியில் 14 வது நேரு கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, லெபனான், சிரியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட ஐந்து அணிகள் "ரவுண்டு ராபின்' முறையில் லீக் போட்டியில் மோதின. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த முறையே சிரியா (12 புள்ளி), இந்தியா (6 புள்ளி) அணிகள் பைனலுக்கு முன்னேறின. இதன் பைனல் டில்லியில் உள்ள அம்பேத்கார் மைதானத்தில் நேற்று நடந்தது.விறுவிறுப்பான பைனலின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோலடிக்க முடியாமல் திணறினர். கிடைத்த "கார்னர் ஷாட்' வாய்ப்பை வீணடித்த இரு அணியினரும், 2வது பாதியிலும் கோலடிக்க முடியாமல் ஏமாற்றம் அளித்தனர்.இதனால் இரு அணியினருக்கும் கூடுதலாக தலா 15 நிமிடம் கொடுக்கப்பட்டது.

பரபரப்பான முதல் 15 நிமிடத்தில் இரு அணியினரும் பலமுறை கோலடிக்கும் வாய்ப்பை வீணடித்தனர். இரண்டாவது 15 நிமிடத்தில் அபாரமாக ஆடியஇந்திய அணிக்கு 114 வதுநிமிடத்தில் கிடைத்த "ப்ரி ஹிக்' வாய்ப்பை ரெனிடி சிங் கோலடித்து 1-0 என முன்னிலை தந்தார். தொடர்ந்துபோராடிய சிரியா அணிக்கு, அல்டோனியின் ஆட்டம் கைகொடுத்தது. கடைசிநிமிடத்தில் இவர் தலையால் முட்டி சூப்பர் கோலடிக்க, ஆட்டம் 1-1 கணக்கில் சமநிலையை எட்டியது. இதனால் போட்டி "பெனால்டி ஷூட்-அவுட்' முறைக்கு சென்றது. இதில் இந்தியா சார்பில் கிளிமாக்ஸ், ஷேத்ரி, ஸ்டீவன் டயாஸ், அன்வர் ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாக மாற்றினர்.

ரெனிடே, வாது தங்கள் வாய்ப்பை வீணடித்தனர். இந்திய கோல் கீப்பர் சுப்ரதா பவுல், சிரியாவின் மூன்று வாய்ப்பை தடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதனால் இந்திய அணி 5-4 என்ற கணக்கில் நேரு கோப்பை கால்பந்து தொடரை 2வது முறையாக கைப்பற்றி அசத்தியது. முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு நடந்த இத்தொடரின் பைனலில் இந்திய அணி, சிரியாவை வீழ்த்தியிருந்தது.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009