Tuesday, September 1, 2009

ரசிகர்களுக்கு இம்மாதம் கொண்டாட்டம் 20 புதுப்படங்கள் “ரிலீஸ்”

ரசிகர்களுக்கு இம்மாதம் கொண்டாட்டமாக அமைய போகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மாதத்தில் 20 புதுப்படங்கள் ரிலீசாகின்றன. அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி தீபாவளி வருகிறது. அதுவரை புதுப்படங்கள் தொடர்ச்சியாக திரையரங்குகளை கலக்க உள்ளன.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்டு 31-ந்தேதி வரை 81 படங்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 150 ஆக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இம்மாதம் ரிலீசாகும் படங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த மாதத்திலேயே திரைக்கு வர உள்ள சில சிறு படங்களின் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்படவில்லை. தியேட்டர்கள் கிடைப்பதை பொறுத்து அவற்றை ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர்.
வருகிற 4-ந்தேதி நினைத்தாலே இனிக்கும், மதுரை சம்பவம் ஆகியவை ரிலீசாகின்றன. நினைத்தாலே இனிக்கும் படம் மலையாளத்தில் ஹிட்டான “கிளாஸ்மெட்” படத்தின் “ரீமேக்”. ஜி.என்ஆர். குமரவேலன் இயக்கி உள்ளார். இதில் பிருதிவிராஜ், ஷக்தி, கார்த்திக்குமார், பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

மதுரை சம்பவம் படத்தில் டான்ஸ்மாஸ்டர் ஹரிகுமார் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகி கார்த்திகா. ஏற்கனவே இந்த ஜோடி “தூத்துக்குடி” என்ற ஹிட் படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநாளில் பயங்கர ராட்சஷ ஆடுகள் என்ற ஆங்கில டப்பிங் படமும் வெளியாகிறது.

வருகிற 11-ந்தேதி பரத்-தமன்னா ஜோடியாக நடித்த “கண்டேன் காதலை” படம் வெளியாகிறது. இது இந்தியில் வெற்றிகரமாக ஓடிய “ஜெப்விமெட்” என்ற படத்தின் ரீமேக். ஜெயம் கொண்டான் பட டைரக்டர் கண்ணன் இயக்கியுள்ளார். சுஷ்மிதாசென் நடித்த இந்திப் படமொன்று “பெயர் சந்தியா தொழில் தாசி” என்ற பெயரில் அதே நாளில் தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

12-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள் மேலும் 12 படங்கள் ரிலீசாகின்றன. அவற்றி¢ல் கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன், அஜ்மல் நடித்த திருதிரு துறுதுறு, ஷங்கர் தயாரித்துள்ள ஈரம், ஜெய் நடித்துள்ள அதேநேரம் அதே இடம், வைதேகி, மதுரை தேனி வழி ஆண்டிப்பட்டி போன்ற படங்கள் முக்கிய மானவையாகும்.
தீபாவளிக்கு சூர்யா நடித்த ஆதவன், விஜய்யின் வேட்டைக்காரன், தனுசின் குட்டி படங்கள் மோதுகின்றன.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009