Saturday, August 1, 2009

குறைந்தது நயன், த்ரிஷா சம்பளம் - Salary Reduced for Trisha & Nayanthara

முன்பெல்லாம் கால்ஷீட் என்று போனாலே நயன்தாராவும், த்ரிஷாவும் "ஒற்றை விரலைக்" (ஒரு கோடி!) காட்டி தயாரிப்பாளர்களை ஓட ஓட விரட்டுவார்களாம். கூடவே இவர்களின் மேனேஜர்கள் வேறு ஏகப்பட்ட நிபந்தனைகளை, "க்ரெடிட் கார்டு டெர்ம்ஸ் அண்டு கண்டிஷன்ஸ்" ரேஞ்சுக்கு தருவார்களாம். ஆனால் இருவருக்குமே இப்போது மார்க்கெட் செம டல். த்ரிஷாவுக்கு அபியும் நானும், குருவி, சர்வம் என வரிசையாக அடி விழ, நயன்தாராவோ தொடர்ந்து நான்கு சூப்பர் ப்ளாப்புகள் கொடுத்து பீல்ட் அவுட் ஆனார்.

ஏதோ பிரபு தேவா காதல் விவகாரம் தந்த "ஹைப்"பில் இன்னமும் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. பையா படத்தில் ஒரு கோடிக்கு ஒரு பைசா குறைக்க மாட்டேன் என நயன் நின்றதும், அதற்கு மறுத்து, கொடுத்த அட்வான்ஸை வாங்க லிங்குசாமி நடையாய் நடந்ததும் தெரிந்த கதை. இப்போது நயன், த்ரிஷா இருவருக்குமே தமிழில் மார்க்கெட்டும் டல்... அதற்கேற்ப சம்பளமும் குறைக்கப்பட்டுவிட்டதாம். நயன்தாரா இப்போது ரூ.75 லட்சம் வரை கேட்கிறாராம். அதற்கு குறைவாக என்றாலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளத் தயாராகிவிட்டாராம். த்ரிஷா ரூ.50லிருந்து 60 லட்சத்துக்குள் செட்டிலாகிவிடுகிறாராம். ஆனால் தமன்னா கேட்கும் முன்னரே ரூ.50 லட்சம் வரை தூக்கிக் கொடுக்கவும் நம்மாட்கள் தயங்குவதில்லையாம். ஸ்ரேயா ஒரே பாடலுக்கு ரூ.50 லட்சம் வாங்கி அசத்தியவர். இப்போது அந்தத் தொகையை ஒரு படத்துக்குத் தந்தால் போதும் என ஓபன் ஆஃபர் வைத்தாவும், இவரது "சைஸ் ஜீரோ" ஸ்டைலைப் பார்த்து மிரண்டு போய் ஓடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009