நடிகர்கள் - விஜித், ராதிகா மல்ஹோத்ரா, ரமேஷ், மனோஜ் கே.ஜெயன், சிங்கமுத்து, மயில்சாமி
இசை - கங்கை அமரன்
இயக்குனர் - பரந்தாமன்
தயாரிப்பு - எம். செல்வராஜ்
நாகரீகம் என்ற பெயரில் கலாச்சார சிரழிவை ஏற்படுத்தும் ஐ.டி. துறை ஊழியர்களை சகட்டு மேனிக்கு போட்டுத் தள்ளும் இளைஞனின் கதை.
தந்தையின் ஆசையை நிறைவேற்ற கிராமத்திலிருந்து மேல்படிப்புக்காக சென்னை வருகிறார் விஜித். வந்த இடத்தில் வீண் வம்புகளில் சிக்குகிறார். ஒரு கட்டத்தில் கொலைப்பழிக்கு ஆளாகிறார்.
தப்பித்து அப்பாவின் கனவை நிறைவேற்றினாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
இதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் செல்வராகவனின் சிஷ்யரான பரந்தாமன். குருவின் மீதுள்ள பக்தி காரணமாகவோ என்னவோ படத்தின் பெயரையே ''ராகவன்'' என்று வைத்திருக்கிறார்.
சஸ்பென்ஸ், காதல், பாடல் என்று விறுவிறுப்பாக செல்கிறது படம்.
அறிமுக நாயகன் என்று சொல்ல முடியாதளவுக்கு நடிப்பில் முதிர்ச்சி காட்டும் விஜித் நல்ல வரவு. பார்க்க பாவமாக தெரிந்தாலும் படு சாமர்த்தியமாக பல கொலைகளை செய்து நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
ஹ“ரோயின் ராதிகா மல்ஹோத்ராவிற்கு நடிப்பு உதவவில்லையென்றாலும் கவர்ச்சி உதவுகிறது. குறிப்பாக பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் மனோஜ் கே.ஜெயனின் அதிரடி நடவடிக்கைகளும், விசாரணைகளும் படத்தின் விறுவிறுப்புக்கு கை கொடுத்துள்ளன. சிங்கமுத்து, மயில்சாமியின் காமெடி கலாட்டாக்களும் ரசிக்க முடிகிறது. போட்டோகிராபர் சஷ’, ஹ“ரோவின் அப்பா மூணார் ரமேஷ் ஆகியோர் கேரக்டருக்கு ஏற்ப அடக்கி வாசித்திருக்கிறார்கள்.
அலட்டல் இல்லாத கவின் சுரேஷ’ன் ஒளிப்பதிவும், கங்கை அமரனின் அசத்தலான இசையும் படத்துக்கு கூடுதல் பலம். குறிப்பாக அவரது இசையில் அமைந்துள்ள ''சித்தன் வாசல்....'' பாடல் முணுமுணுக்க வைக்கிறது.
பரபரப்பாக செல்லும் திரைக்கதையில் பெரிய ஃப்ளாஷ் பேக் காட்சி வருகிறது. அதன் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். எடிட்டர் என்னதான் செய்துகொண்டிருந்தார்?
இயக்குனர் ஆபாசத்தின் எல்லையை அநாயசமாகத் தாண்டியிருக்கிறார். எல்லா துறைகளிலும் நல்லதும், கெட்டதும் உண்டு. அது ஐ.டி.யிலும் நடக்கிறது அவ்வளவுதான். அதற்காக ஐ.டி.என்றாலே ஏதோ விபச்சார விடுதி போல ஒரு தோற்றத்தை நமக்கு அளிக்க முன்வருகிற இயக்குனருக்கு, வெறும் ஏடுகளில் வந்த செய்திகள் மட்டுமே பார்வையில் தென்பட்டிருக்கின்றன.
பொருளாதார நெருக்கடியால் இரவு முழுக்க கண் விழித்தும், கடுமையான வேலைப்பளுவோடு அவர்கள் படும் கஷ்டமும், நெருக்கடிகளும் கொஞ்ச நஞ்சமல்ல! இதையெல்லாம் விட்டுவிட்டு தான் சார்ந்திருக்கும் சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கும், தன்னை தூக்கி விட்ட கிராமத்து கலாச்சாரத்திற்கும் வக்காலத்து வாங்கும் இயக்குனர் பரந்தாமன், கதையில் காட்டிய புதுமையை வசனங்களிலும், காட்சியமைப்பிலும் காட்டாமல் இருப்பது ஏனோ? இதையெல்லாம் விரிவாக அலசி ஆராய்ந்திருந்தால் படம் வெற்றி பெற்றிருந்தாலும் பெற்றிருக்கும்.


0 comments:
Post a Comment