ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் செய்ய மாட்டார்கள்.
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சர்க்கரையை தவிர்த்துவிடுவதுதான் நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். சர்க்கரைக்கு பதிலாக குறைந்த கலோரிகள் கொண்ட மாற்று சர்க்கரையை பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
சுக்ரோஸ் போன்ற மாற்று சர்க்கரைப் பொருட்கள் சர்க்கரையைவிட பல மடங்கு இனிப்பு கொண்டவையாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக கலோரியை கொடுக்காது.
இந்த கலோரிகள்தான் உடல் எடைக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இந்திய ஊட்டச்சத்து நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின்படி இந்திய ஆண்களில் 32 சதவீதம் பேரும், பெண்களில் 50 சதவீதம் பேரும் அதிக எடையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரையை முடிந்தவரை தவிர்ப்பதன் மூலம் உடல் பருமனை குறைக்கலாம் என்று அறிவுரை கூறியுள்ள இந்திய ஊட்டச்சத்து நிறுவனம், அந்த உடல் பருமன் காரணமாக ஏற்படும் நீரிழிவுநோய், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.


0 comments:
Post a Comment