“இனி ரஜினி சாரின் படத்தலைப்பை என்னுடைய படங்களுக்கு வைக்க மாட்டேன். ஒரேயொரு தலைப்பை தவிர.” தனுஷ் இப்படி சஸ்பென்ஸோடு சொன்ன பெயர் ரஜினி நடித்த மாப்பிள்ளை.
சூப்பர் ஸ்டார் வீட்டு மாப்பிள்ளை என்பதாலா தெரியவில்லை, ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் பெயர் மீது தனுஷுக்கு அப்படியொரு மோகம்.
படத்தின் பெயர் மட்டுமா...? படத்தின் கதையும் நன்றாகத்தானே இருக்கிறது என மாப்பிள்ளை படத்தை ரீமேக் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் இதேஷ் ஜெபக்.
மருமகன், மாமியார் மோதலுக்கு இன்றும் மவுசு இருப்பதால் படம் ஹிட்டாகும் என்பது அவரது கணிப்பு.
ரஜினி நடித்த வேடத்தில் தனுஷை நடிக்க வைத்து, சுராஜை இயக்குனராக்கினால் இன்னொரு சூப்பர் ஹிட் படம் தயார் என்ற கணக்கில் காய் நகர்த்தி வருகிறார் இதேஷ் ஜெபக்.
சம்பந்தபட்ட இருவரில் தனுஷ் மாப்பிள்ளை ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், சுராஜ் தரப்பிலிருந்து இன்னும் க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
விரைவில் மாப்பிள்ளை அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.


0 comments:
Post a Comment