தேவையான பொருட்கள்
1. துவரம் பருப்பு - 1/2 கப்
2. வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
4. பச்சை மிளகாய் - 1 (கீரி வைக்கவும்)
5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
6. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. உப்பு
9. எண்ணெய் - 2 தேக்கரண்டி
10. கடுகு, சீரகம் - 1 தேக்கரண்டி
11. உளுந்து, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
12. பெருங்காயம் - சிறிது
13. கொத்தமல்லி, கருவேப்பிலை
14. கத்திரிக்காய் - 2 நறுக்கியது (அ) கேரட், பீன்ஸ் - நறுக்கியது 1 கப்
செய்முறை
•பருப்பு, வெங்காயம், தக்காளி, காய், பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விஸில் வைத்து சிறுந்தீயில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
•பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலை பருப்பு, உளுந்து, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
•பின் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, குக்கரில் வைத்த சாம்பார், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
குறிப்பு:
பருப்பு குழைய வேக வேண்டும். இது இட்லி, பொங்கல், தோசை'க்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். காய் சேர்க்காமல் இதே போல் துவரம் பருப்பு அல்லது சிறுபருப்பிலும் செய்யலாம்.


0 comments:
Post a Comment