இயக்குனர்களின் நடிகர் மாதிரி, கீர்த்தி சாவ்லா இயக்குனர்களின் நடிகை. எப்படி? முதல் முறையாக ஹீரோவாகும் இரு இயக்குனர்களுக்கு ஜோடி கிடைக்காத குறையை இவர்தான் தீர்த்து வைத்திருக்கிறார். அந்த வகையில் நடிகைகளில் பெரிய மனசுக்காரர் இவர்.
பில்லாவில் நயன்தாரா தொடங்கி வைத்த பிகினி கலாச்சாரத்தை ப்ரியாமணிக்குப் பிறகு இவர்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார். படம் ஸ்வேதா வெலிங்டன் ரோடு.
“ஸ்வேதா வெலிங்டன் ரோடு படத்தில் நீச்சல் உடையில் நடித்ததைப் பற்றிதான் எல்லோரும் கேட்கிறாங்க. அந்தப் படத்தில் நான் அல்ட்ரா மாடர்ன் பெண்ணா வர்றேன். அறிமுக காட்சியிலேயே என்னோட கேரக்டர் அழுத்தமா வெளிப்படணும்ங்கிறதுக்காக
நீச்சல் உடையில் நடிச்சேன். வேணும்னே யாராவது அப்படியொரு காட்சியில் நடிப்பாங்களா?.”
இயக்குனர் ஸெல்வன் நாயகனாக அறிமுகமாகும் மாக்கான் படத்தில் கீர்த்தி சாவ்லாதான் நாயகி. பலரும் இந்தப் படத்தில் நடிக்க மறுத்து இறுதியில் ஒப்பந்தமானவர் கீர்த்தி.
“என்னைப் பொறுத்தவரை யாருடன் நடிக்கிறேன்ங்கிறது முக்கியமில்லை. கதையும், என்னோட கேரக்டரும்தான் முக்கியம். மாக்கான் படத்தோட கதையை முரளிசாமி சொன்ன போது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. படத்தில் நடிக்க ஓகே சொன்ன பிறகுதான் ஸெல்வன் சார் ஹீரோவாக நடிக்கிறது தெரியும்.”
தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் இயக்கி நடிக்கும் திருமதி தமிழிலும் கீர்த்தி சாவ்லாதான் நாயகி. இதுவரை அவர் ஏற்காத ஹோம்லி கேரக்டர் என இன்டஸ்ட்ரியில் பேச்சு.
“திருமதி தமிழில் ராஜகுமாரன் சாரின் மனைவியா வர்றேன். அன்பான, அடக்கமான ஹோம்லி கேரக்டர். அதுக்கு நேர் எதிரா அழகு நாச்சிங்கிற துடுக்கு பொண்ணா மாக்கான்ல நடிக்கிறேன். இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டது ஸ்வேதா படத்தின் கேரக்டர்.”
இயக்குனர்களின் நடிகையாக இருக்கும் கீர்த்தி, அகராதி படத்திலும் நடிக்கிறார். இதில் அவர் ஹீரோயின் அல்ல. கெஸ்ட் ரோலாம்.
“அகராதியில் என்னுடையது பவர்ஃபுல் கேரக்டர். கெஸ்ட் ரோல்னாலும் எனக்கு பாடல் காட்சி இருக்கு. சமீபத்தில் பாரீஸில் அந்தப் பாடலை படமாக்கினாங்க. மறக்க முடியாத அனுபவம் அது.”
ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடித்தால் தொடர்ந்து நடிக்கச் சொல்லி கேட்பது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பழக்கம். கீர்த்தி தொடர்ந்து பிகினி அணிவாரா?
“ஸ்வேதா படத்தில் நான் நீச்சல் உடையில் நடிக்க வேண்டிய தேவை இருந்தது, நடிச்சேன். ஆனால் இனி கதைக்கு தேவைப்பட்டாலும் நீச்சல் உடைக்கு நோதான்.”


0 comments:
Post a Comment