வெயில் படத்துக்குப் பிறகு எங்கேயோ போயிருக்க வேண்டியவர். படமே இல்லாமல் கேரளா பக்கம் ஒதுங்கியது சோகம். நடிகை பிரியங்கா பற்றிதான் சொல்கிறோம்.
தமிழில் படங்கள் இல்லையென்றாலும் பிரியங்காவிடம் உற்சாகத்துக்கு குறைவில்லை. சமீபத்தில் கிடைத்த கேரள அரசின் சிறந்த நடிகை விருதுதான் இதற்கு காரணம்.
டி.வி.சந்திரனின் விலாபங்களுக்கு அப்புறம் படத்துக்காக இந்த விருது பிரியங்காவுக்கு கிடைத்தது. தற்போது ரோஷன் ஆன்ட்ரூவின் படத்தில் நடித்து வரும் இவர், வானம் பார்த்தசீமையிலே படத்தை ரொம்பவே நம்பியிருக்கிறார்.
பிரமிட் சாய்மீரா உதவித் தொகை அளித்து பத்து படங்களை தயாரிப்பதாக அறிவித்ததே, அந்த பத்தில் ஒன்றுதான் வானம் பார்த்த சீமையிலே. படத்தின் பெயருக்கு தகுந்த மாதிரி ராமநாதபுரம் மாவட்டத்தின் கிராமங்களில் மொத்த படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.
வேலம்மா என்ற வெயிட்டான கிராமத்து வேடம் பிரியங்காவுக்கு. அவருக்கு ஜோடி அசோக். இந்தப் படம் வெளிவந்தால் மீண்டும் தமிழில் பிஸியாவேன் என்கிறார் பிரியங்கா நம்பிக்கையுடன்.
படம் வெளியானால்... பிரமிட் சாய்மீரா இருக்கிற நிலைமையில் அதுதான் சந்தேகமாக இருக்கிறது.


0 comments:
Post a Comment