தேவையான பொருட்கள்
கேரட் -1
உருளை -1
பீன்ஸ் -10
காலிஃபிளவர் -சிறிது
வெங்காயம் -1
தக்காளி -1
இன்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
கறிமசால்பொடி -2ஸ்பூன்
மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லி,புதினா -1கைப்பிடி அளவு
அரைக்க:
தேங்காய்துறுவல் -1/4கப்
பொட்டுகடலை -2ஸ்பூன்
முந்திரி -5
சோம்பு -1/4ஸ்பூன்
தாளிக்க:
எண்ணை -2ஸ்பூன்
பிரியாணி இலை -1
பட்டை,கிராம்பு,ஏலம் -2
செய்முறை
•காய்களை வேண்டிய அளவில் நறுக்கி வேகவைக்கவும்.
•அரைக்க குடுத்தவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
•கொத்தமல்லி,புதினா பொடியாக நறுக்கவும்.
•வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.
•வாணலியில் எண்ணை ஊற்றி தாளிப்பதை போட்டு வெங்காயம் போட்டு நன்குவதக்கவும்.
•இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி தக்காளி சேர்க்கவும்.தக்காளி வதங்கியவுடன் கறிமசால்பொடி.மஞ்சள்பொடி,கொத்தமல்லி,புதினா போட்டு நன்கு வதக்கி வேகவைத்த காய்களை போடவும்.
•உப்பு போட்டு நன்கு பிரட்டிவிட்டு அரைத்ததை ஊற்றி நன்கு கலந்துவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி முடிவைத்து வேகவிடவும்.குருமா திக்கானவுடன் உப்பு சரிபார்த்து இறக்கவும்.


0 comments:
Post a Comment