Sunday, July 12, 2009

காய்கறி ரொட்டி - Vegetables Bread

காய்கறி ரொட்டி எல்லோராலும் விரும்பி உண்ண கூடியதும் சுவைவையானதும்,கல்சியம்,புரதம் காபோவைதரேட்டு,மினரல்,உயிர்சத்துகள் நிறைந்ததும் ஆன ஓரு உணவு(சிறுவர்களுக்கு மிகமிக நல்ல சத்தான் உணவு).

தேவையான பொருட்கள்
கோதுமைமா(மைதாமா) - 500 கிராம்
உப்பு - தேவையானளவு
பால் - 1 மேசைக்கரண்டி
பட்டர் - 1 மேசைக்கரண்டி
கொதிநீர்- (1- 2)கப்
எண்ணைய் -தேவையானளவு

பெரியவெங்காயம்(சிறிது சிறிதாக வெட்டியது) - 1
பச்சைமிளகாய்(சிறிய வட்டமாக வெட்டியது) - 3
கருவப்பிலை(சிறிதுசிறிதாகவெட்டியது)- சிறிதளவு
லீக்ஸ்(சிறியமெல்லியவட்டமாகவெட்டியது)-25கிராம்
கரட்(துருவியது)- 25கிராம்
பீன்ஸ்(சிறியமெல்லியவட்டமாகவெட்டியது)- 25கிராம்
முட்டைகோஸ்(சிறிது சிறிதாக வெட்டியது)- 15கிராம்
தக்காளிப்பழம்(சிறியது)(சிறிதுசிறிதாகவெட்டியது)-1
உருளைகிழங்கு(துருவியது) - 1

செய்முறை
(1)கோதுமைமா(மைதாமா),உப்பு,பால்,பட்டர்,வெங்காயம்,பச்சைமிளகாய்,
கருவப்பிலை,லீக்ஸ்,கரட்,பீன்ஸ்,முட்டைகோஸ்,தக்காளிப்பழம்
உருளைகிழங்குஆகியவற்றை போட்டு கலக்கவும்.
(2)அதன் பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும்.
(3)அதன் பின்பு குழைத்த மாவை சிறு உருண்டைகளக உருட்டவும்.
(4)அதன் பின்பு சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும்.
(5)அதன் பின்பு அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணைய் தடவவும்.
(6))அதன் பின்பு வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேகவிடவும்.
(7)அது வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.
(8)இருபக்கமும் வெந்ததும் சுவையான, மெதுமையான ரொட்டி தயராகிவிடும்.
(9) இதனைப்போல மற்றைய ரொட்டிகளையும் தயார் செய்து பரிமாறவும் .

குறிப்பு:
1)எச்சரிக்கை - இருதய, சக்கரை நோயாளிகள் வைத்தியரின் ஆலோசனைப்படி சாப்பிடவும். (2)மாற்று முறை -கொழுப்புபட்டருக்கு பதிலாக கொழுப்பு குறைந்த பட்டரோ அல்லது எண்ணைய் பாவிக்கலாம்,பால்க்கு பதிலாக தயிர் பாவிக்கலாம். விரும்பினால் முட்டை- 1ஜ சேர்க்கலாம்,காய்கறிகளில் விரும்பியதை பாவிக்கலாம். (3)கவனிக்க வேண்டிய விசயங்கள-ரொட்டி நன்றாக வெந்துவிட்டதா என்பதை கவனிக்கவும்,ஒரளவு மிதமான தீயில் வேகவிடவும் ,பால் பட்டர் ,முட்டை ஆகியவற்றை சேர்த்து செய்த ரொட்டி மெதுமையாக இருக்கும்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009