Sunday, July 12, 2009

மீன் குருமா - Fish Kuruma

தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 5,
இஞ்சி - சிறிது,
பூண்டு -6 பல்,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
தேங்காய்ப்பால் - 2 கப்,
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை
மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
மீன் துண்டுகள் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
மீன் முக்கால் பதம் வெந்ததும், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தேங்காய்ப்பால் ஊற்றி அதிகம் கொதிக்கக் கூடாது.

குறிப்பு:ஆப்பம், இடியாப்பம், தோசைக்கு நன்றாக இருக்கும்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009