Sunday, July 12, 2009

ஃபிரைட் ரைஸ் - Fried Rice

தேவையான பொருட்கள்
பாஸுமதி அரிசி - 3 கப்
தண்ணீர் - 4 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை பட்டானி - 50 கிராம்
பட்டர் - 75 கிராம்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
உப்பு தேவையான அளவு

செய்முறை
முதலில் அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்,
பிறகு வெங்காயத்தை நீளவாகில் நருக்கவும்.

பிறகு ஒரு வாயகன்ற நான்ஸ்டிக் பாத்திரத்தில் 25 கிராம் பட்டரை போட்டு அதில் அரிசியின் நீரை வடிகட்டி அதில் போட்டு விடாமல் கிளறவும் சிவக்காமல் வருத்து எடுத்துக்கொள்ளவும்,பின்பு 3கப் சோறு ஆக்கக்கூடிய அளவு பாத்திரத்தில் மீதமுள்ள பட்டரைபோட்டு அதில் பட்டை கிராம்பு போட்டு வெந் த்ததும் நருக்கிய வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக சிவக்கும் வரை வருக்கவும் வெங்காயம் சிவந்தபின்பு பச்சை பட்டானி போட்டு வதக்கியபின்பு வறுத்துவைத்த அரிசியை போட்டு ஒருநிமிடம் கிளறி பிறகு அளந்துவைத்துள்ள தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து மேலே மூடிபோட்டு வைக்கவும் தண்ணீர் சுன்டி வரும் தருவாயில் தீயை குறைத்து புழுங்கவிடவும்,பிறகு சோறு வெந்ததை உறுதி செய்தபின்பு இறக்கவும்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009