Thursday, July 16, 2009

கத்துக்கிட்ட விஷயங்கள் நிறைய - அனுஷ்கா: Learned Things are more - Anushka

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ''அருந்ததீ.'' தெலுங்கில் இதே பெயரில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் இந்த படம், தமிழில் டப்பிங் ஆகி இங்கும் மக்களின் பேராதரவை பெற்றிருக்கிறது. இத்தனைக்கும் ஹ“ரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். தமிழில் மாதவனுடன் ''ரெண்டு'' படத்தில் நடித்த அனுஷ்காதான் இதில் கதாநாயகி. அவரிடம் இனி....

''அருந்ததீ'' இவ்வளவு பெரிய ஹ’ட் ஆகும் என்று நினைத்தீர்களா?

''உண்மையிலேயே நினைக்கலை. படம் ரிலீஸ் ஆகி பெரிய ஹ’ட் ஆனதாக எனக்கு தகவல் கிடைத்தது. அப்போ நான் தெலுங்கு ''பில்லா'' படத்துக்காக மலேசியா போயிருந்தேன். எனக்கு ரொம்ப சந்தோஷம். ஹைதராபாத் திரும்பியதும் ரசிகர்களோட அமர்ந்து படத்தைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதே மாதிரி, ரெண்டு தடவை அவர்களோடு அமர்ந்து பார்த்து ரசித்தேன்.

ரசிகர்கள் என்ன சொன்னார்கள்?

நான் படம் பார்ப்பது முதலில் ரசிகர்களுக்கு தெரியாது. முதல் தடவை பார்க்கும்போது எடிட்டிங், பின்னணி இசை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், டைரக்ஷன் மற்றும் டெக்னிக்கல் விஷயங்களை கூர்ந்து கவனிச்சு ரசிச்சேன். ரெண்டாவது தடவை பார்க்கும்போதுதான் ரசிகர்களோட ரியாக்ஷனை கவனிச்சேன். குண்டு ஊசி விழுந்தால்கூட பெரிய சத்தம் கேட்கும். அந்த அளவுக்கு தியேட்டர்ல அமைதி. அவங்களை žட்டோட கட்டிப் போட்டுவிட்டது படம். எண்ட் கார்ட் போட்ட பிறகும், எழுந்து போக மனமில்லாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தாங்க.

என்னைப் பார்த்தவங்க அருந்ததி, அருந்ததின்னு என் கையைப் பிடிச்சிகிட்டாங்க. அந்த கேரக்டர் மேல அவங்க வச்சிருந்த மரியாதையை அதில் புரிஞ்சிக்க முடிஞ்சது. ரசிகர்களுக்கு என் நிஜப் பெயரே ஞாபகத்துக்கு வரலை. அந்த அளவுக்கு என் பெயரையே மறக்கடிச்சிடிச்சி அருந்ததி கேரக்டர்.

உங்களுக்கு இந்த படத்துல பிடிச்ச காட்சி எது?

எல்லாக் காட்சிகளையும் பிடிக்கும். ரொம்பப் பிடிச்சதுன்னா, கோட்டைக்குள் ராகுலை தேடிப் போகிற žன். அப்புறம் ஷாயாஜி ஷ’ண்டே கத்தியை தூக்கி வீசுகிற போது பிடிக்கிற ஸ“ன். இந்த ரெண்டையும் என்னால் மறக்க முடியலை.

பதினைந்து கிலோ நகை அணிந்து நடித்தீர்களாமே?

நகைகள் போடுறதே எனக்கு பிடிக்காது. ஆனா இவ்வளவு நகைகளை மாட்டிக்கொண்டு நடிச்சதை நினைச்சாலே, எனக்கு இன்னும் சிரிப்பா இருக்கு. அதை அணிந்தபோது உடம்புல கீறியது; காயம் ஏற்பட்டது. அந்த காயம் எல்லாம் படத்தை பார்க்கிறபோது ஓடி மறைஞ்சிடுச்சி. இப்போ அது எனக்கு சுகமான அனுபவமாகத்தான் தெரிகிறது.

எனக்கு அந்த நகைகளைப் போட்டு முதல்ல ஃபோட்டோ செஷன் பண்ணினாங்க. என் அம்மாவிடம் காட்டியபோது, அவங்க அதை பார்த்துட்டு சிரிச்சாங்க. ஏன்னா, எங்க அம்மா சொன்னபோதெல்லாம் நான் எந்த நகையையும் போட்டுக்கிட்டது இல்லை. ஆனா அவங்க என்னை அப்படிப் பார்க்க ஆசைப்பட்டதை டைரக்டர் செய்ய வச்சிட்டார்.

எந்த காட்சியில் நடித்தபோது கஷ்டமாக இருந்தது?

கஷ்டம்னு சொல்றதை விட நிறைய žன்ல நடிக்கும்போது சவாலாக இருந்தது. தினமும் நாலு மணிக்கெல்லாம் எழுந்து குதிரை ஏற்றம் கத்துக்கிட்டேன். இப்போ என்னால தனியாவே குதிரை சவாரி செய்ய முடியும். அது மாதிரி கிளாசிகல் ஆட கஷ்டமாக இருந்தது. அதுக்கு சிவசங்கர் மாஸ்டர் உதவியா இருந்தார். ட்ரம்ஸ் டான்ஸ் பண்ணும்போது எனக்கு நம்பிக்கையே இல்லை. பிறகு, மூணு நாள் போன பிறகு அதோட ஒன்றிப்போனேன். அதனால ''அருந்ததீ''யில கஷ்டம்ங்றதை விட நான் கத்துக்கிட்ட விஷயங்கள் தான் நிறைய!

இந்த படத்தின் இரண்டாவது பாகம் எடுத்தால் நடிப்பீர்களா?

கண்டிப்பா! இந்த டீமே வேற படம் பண்ணினாலும் நான் நடிப்பேன். படத்துல எனக்கு கிடைத்த மரியாதை, என் வளர்ச்சிக்கு பெரிய உதவியா இருக்கு. இன்னைக்கு சின்ன டவுன்லகூட நூறாவது நாளை நோக்கி படம் ஓடிகிட்டு இருக்கு. அதுவும் நல்லதுக்குத்தான்!

படத்தை பார்த்துவிட்டு முதலில் பாராட்டியது யார்? மறக்க முடியாத பாராட்டு எது?

எங்க அப்பாதான். அவர் படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே என்னை கட்டிப் பிடிச்சிகிட்டார். அவருக்கு பேச வார்த்தையே வரலை. அவர் பார்வையில் பாராட்டும், மகிழ்ச்சியும் எவ்வளவு அழுத்தமா இருந்தது தெரியுமா? அதுமாதிரி தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் ரெட்டி. எனக்கு தெரிஞ்சி அவர் சிரிச்சி நான் பார்த்ததே இல்லை. ஆனால் படம் பார்த்துட்டு ஃபோன்ல மனம்விட்டு சிரிச்சி பேசினார். அதை நான் பெரிய விஷயமா நினைக்கிறேன்.

''வேட்டைக்காரன்'' படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?

அதை இப்போதைக்கு சொல்லக் கூடாது. இப்போ ரெண்டு நாளாதான் நான் அந்த படத்தில் நடிக்கிறேன். விஜய்கூட இது எனக்கு முதல் படம். படம் முடிகிற நேரத்துல, அதில் நடித்த அனுபவத்தை சொன்னால்தான் நல்லா இருக்கும்.

உங்கள் அழகின் ரகசியம் என்ன?

நிறைய தண்­ர் குடிப்பேன். இரவு எட்டு மணிக்கு மேல சாப்பிட மாட்டேன். பெரும்பாலும் பாசிட்டிவ்வான எண்ணங்கள்தான் மைண்ட்ல இருக்கும். தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பேன் என்றார்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009