Monday, July 6, 2009

கூ‌ந்த‌ல் கறுமையாக வளர

உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கறுமையாகவும் இருக்க உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.

உங்கள் முடி சுருட்டையானதாக இருந்தால் சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். சீப்பு உபயோகித்தால் நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடு‌த்த முடியாது.

தலை முடியை ஷாம்பு போட்டு கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு மக் நீரில் கலக்கி அதைக் கொண்டு தலையை ஒரு முறை கழுவுங்கள், உங்கள் தலை முடி மிருதுவாகவும், பட்டுப் போன்றும், பளபளப்பாகவும் இருக்கும்.

குளிப்பதற்கு முன்பு கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்.

அதிக அளவில் ஷாம்பூ உபயோகிப்பதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால் தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். ஷாம்பூ தடவிய முடியை நன்றாக அலசவும்.

ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது மிகவும் அவசியமாகும். கண்டிஷரை முடியின் வேர்களைவிட நு‌னிப் பாகத்தில் தடவுவது நல்லது.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009