Sunday, July 5, 2009

உடல் நலக் குறிப்புகள்

இவை எ‌ல்லா‌ம் உ‌ங்களு‌க்கு ஏ‌ற்கனவே தெ‌ரி‌ந்ததுதா‌ன். ஆனாலு‌ம் ஒரு முறை ஞாபக‌ப்படு‌த்‌து‌‌கிறோ‌ம்.

  1. தினமும் குடிக்கும் டீயின் அளவை கட்டுப்பாட்டில் வையுங்கள்.காலையில் அதிகமான நீரை பருகுங்கள். இரவில் குறைவாக அருந்துங்கள்.தினமும் இரண்டு வேலை காபி குடிப்பதை தவிருங்கள்.
  2. இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்குள் எழுவதே சிறந்தது.
  3. மாலை 5 மணிக்குப் பிறகு அளவுக்கு அதிகமான உணவை உண்ணாதீர்கள்.
  4. மாத்திரைகளை குளிர்ந்த நீருடன் பருக வேண்டாம்.மாத்திரை சாப்பிட்டதும் உடனடியாக படுக்கச் செல்ல வேண்டாம்.சரியான தூங்கும் பழக்கம் இருப்பவர்களை முதுமை அண்டாது.
  5. காலையில் நடை செல்ல முடியாதவர்களுக்கு மாலை 5 மணில் இருந்து 8 மணி வரை நடை செல்வதற்கு சிறந்த நேரமாகும்.
  6. மின்னூட்டம் போட்டிருக்கும் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம்.பொதுவாக செல்பேசியில் பேசுவதற்கு இடது பக்க காதைப் பயன்படுத்துங்கள்.செல்பேசி காதுக் கருவியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஓய்வு கொடுங்கள்.
  7. உட்கார்ந்தே செய்யும் வேலையாக இருந்தாலும் அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடந்து வாருங்கள்.
  8. தொடர்ந்து கணினித் திரையை பார்த்தபடி இருப்பதும் கண்களின் தன்மையை பாதிக்கும். எனவே 20 நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையை மாற்றுங்கள்.
  9. உண்ணாமல் இருப்பதையும், அதிகமாக உண்ணுவதையும் தவிருங்கள்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009