Monday, July 6, 2009

பாலக் சிக்கன் கறி

தேவையான பொருட்கள்:
சிக்கன் - (கால்பகுதி) 10
பாலக்கீரை - 1 கட்டு
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 3 (காரம் தேவைப்பட்டால் கூட போடலாம்)
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
மஞ்சள்த்தூள் 1/2 டீஸ் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 1/2 கோப்பை (நறுக்கியது)
ஏலக்காய் - 2
பட்டை - சிறிய துண்டு
நல்லமிளகு - 5
சீரகம் - 3/4 டீஸ் ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சிக்கன் கால்பகுதியாக இருந்தால் நன்றாக இருக்கும் துண்டுகளும் பயன் படுத்தலாம் சுத்தம் செய்து வைக்கவும், பாலக்கீரையை கழுவி பொடியாகநறுக்கிவக்கவும்,

இஞ்சி மற்றும் பூண்டுகளை நறுக்கிக்கொள்ளவும் பச்சைமிளகாயை 2 ஆக கீறி வைக்கவும்.


அடுப்பில் குக்கரைவைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், நல்லமிளகு ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை போட்டு வதக்கவும்.


அடுத்து பாலக்கீரையைப்போட்டு கிளறிவிடவும், பாலக்கீரை வதங்கியதும் சிக்கன் துண்டுகளைப்போடவும் போட்டு நன்றாக கிளறி விடவும்
5 நிமிடம் கிளறி விட்டு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் தூவி மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும்.2 கப் தண்ணீர் விட்டு மூடிப்போட்டு வேகவைக்கவும் விசில் போடவேண்டாம்


10 நிமிடம் கழித்தப்பின்னர் மறுபடியும் மூடியைதிறந்து தேவையான அளவு உப்பு போட்டு சிக்கன் வேகும் வரை வேகவைத்து இறக்கவும். இறக்குமுன் கொத்தமல்லித்தழைத்தூவவும்.

பரிமாறும் அளவு - 4 பேர்
ஆயத்த நேரம் - 10 Min
சமைக்கும் நேரம் - 30 Min

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009