Monday, July 6, 2009

சிக்கன் சில்லி ஃப்ரை

தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
மஞ்சல் தூள் - அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 2
வினிகர் - 1 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
எண்ணெய் - 100 -150 மில்லி
மல்லி இலை - சிறிது.

செய்முறை:
சிக்கனை நன்கு சுத்தம் செய்து மஞ்சல்,உப்பு போட்டு கழுவி நீர் வடி கட்டவும்.
வடிகட்டிய சிக்கனோடு இஞ்சி பூண்டு பேஸ்ட்,வினிகர்,உப்பு,சில்லிபவுடர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த சிக்கனை சிவர பொரித்தெடுக்கவும்.
ஒரு சாலோ ஃப்ரை பேனில் சிறிது எண்ணெய் விட்டு மெல்லியதாக கட் செய்த வெங்காயம் போட்டு ப்ரவுனாக வதக்கவும்,பின்பு நைஸாக அரிந்த தக்காளி சேர்த்து சிக்கன் துண்டுகலை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.
மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான சிக்கன் சில்லி ஃப்ரை ரெடி.

பரிமாறும் அளவு - இது நாண் ,ஃப்ரைட் ரைஸ் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
ஆயத்த நேரம் - 1 மணி நேரம்
சமைக்கும் நேரம் - 20 நிமிடம்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009