திருமணம் செய்து கொள்ளும்படி நேரிலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் சினேகாவுக்கு டார்ச்சர் கொடுத்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். சினேகா கொடுத்த புகாரின் போpல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம் நடிகை சினேகா ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த ஆறு மாத காலமாக தன்னை ஒருவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளும்படி டார்ச்சர் செய்வதாகவும், தினமும் ஐம்பதுக்கும் மேல் எஸ்எம்எஸ் அனுப்புவதாகவும், வேறு யரையாவது திருமணம் செய்தால், அவரை கொன்றுவிட்டு தன்னை விதவையாக்கிவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாகவும் சினேகா தெரிவித்திருந்தார்.
அந்த மர்ம நபர் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கும் நேரில் வந்து சினேகாவுக்கு தொந்தரவு கொடுத்திருக்கிறான். இந்த புகாரைத் தொடர்ந்து சைபர் கிரைம் உதவி ஆணையர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணையில் எஸ்எம்எஸ் அனுப்பிய நபர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து ஹோட்டலில் தங்கியிருந்த பெங்களூருவைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். சினேகா மீதுள்ள கண்மூடித்தனமான காதலால் இவ்வாறு செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ராகவேந்திரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதி உத்தரவுப்படி அவரை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட ராகவேந்திரா பெங்களூருவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment