நெருப்பு இல்லாமல் பருப்பு வேக வைப்பதில் கோடம்பாக்கக்காரர்கள் கெட்டிக்காரர்கள். அவர்களின் அசந்த வாய்க்கு அவல் மாதிரி லீட் ஒன்றை சமீபத்தில் எடுத்துக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார். அதை வைத்துதான் இப்போது படமே காட்டுகிறார்கள்.
ஈரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்த ரஜினி, எந்திரன் படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிவித்தார். இது போதாதா நம்மவர்களுக்கு?
எந்திரன் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. எந்திரன் வெளியாகும் அதே நாள் தனுஷ் நடிக்கும் குட்டியும் வெளியாகிறது.
இந்த தீபாவளிக்கு மாமனாருக்கும், மருமகனுக்கும்தான் போட்டி என்று இமைக்கும் நேரத்தில் இறைத்து தள்ளுகிறார்கள். ஆனால் உண்மை வேறு.
ஏந்திரனின் டாக்கி போர்ஷன்தான் 80 சதவீதம் முடிந்திருக்கிறது. இன்னும் சில வாரங்களில் முழு டாக்கி போர்ஷனும் முடிந்தாலும், படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலை மட்டுமே தனியாக ஒரு வருடத்துக்கு இருக்கிறது. ரோபோ ரஜினி சம்பந்தப்பட்ட கிராஃபிக்ஸ் வேலைகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கூட்டிக் கழித்தால் அடுத்த தீபாவளிக்குதான் படம் திரைக்கு வரும் சாத்தியம் உள்ளது. ரஜினி ரசிகர்கள் ஏமாறாமல் இருப்பது நல்லது.
0 comments:
Post a Comment