கந்தசாமிக்காக உழைத்துவிட்டு அடுத்ததாக ராவணா உழைப்பை பற்றி சிலாகிக்க ஆரம்பித்துவிட்டார் விக்ரம். ஒவ்வொரு காட்சியும் வழக்கமான ஒன்றாக இல்லாம இருக்கணும். இதுதான் மணிரத்னம் ஸ்டைல். ஒரு கேரக்டர் புடிச்சதுன்னா அதுக்குள்ளே புகுந்து போய் உட்கார்ந்துக்கறது என்னோட பாணி. வெறித்தனமா உழைக்கிற ரெண்டு பேரு சேர்ந்தா எப்படியிருக்கும்? படம் வந்ததும் பாருங்க, மைண்ட் புளோயிங் என்கிறார் விக்ரம்.
மணி சார் ஈடுபாட்டை அவ்வளவு சுலபமா சொல்லிவிட முடியாது. திடீர்னு பொங்கிக்கிட்டு வர்ற தண்ணீருக்கு நடுவிலே நிக்க சொல்லிடுவாரு. நாம தத்தளிச்சாலும், தவிச்சாலும் அது பற்றி இரக்கமே பட மாட்டாரு. நான் சொல்றபடி செய். இதுதான் அவரோட ஒரே வார்த்தையா இருக்கும். நம்ம பயத்திலே முழிச்சா கூட, இந்த இடத்திலே அப்படி முழிக்க கூடாது. இப்படி முழிக்கணும்ன்னு சொல்ற ஆள் அவர். எடுக்க நினைச்சது வர்ற வரைக்கும் விடவே மாட்டார்.
இந்த படத்திலே எனக்கு கிடைச்ச அருமையான இன்னொன்னு அபிஷேக் பச்சனோட பிரண்ட்ஷிப். என்னோட ஷாட் எடுத்திட்டு இருந்தா கூட நின்னு கவனிப்பார். பாறை மேலே ஏற சொல்லுவாரு மணி சார். பக்கத்திலேயே நின்னுகிட்டு, கவனமா ஏறுங்க. அங்கே போகாதீங்க. வழுக்கும்னு சொல்லி கொடுப்பார் அபிஷேக். ரொம்ப கலகலப்பான நபர். அவரு செட்டுக்குள்ளே வந்திட்டா அந்த இடமே ரொம்ப சந்தோஷமா மாறிடும் என்றார் விக்ரம்.
அபிஷேக் கூட இவ்வளவு நெருக்கமா பழகினாலும், ஐஸ்வர்யா ராய் பக்கத்திலே வந்தா உதறுதுங்க என்ற விக்ரமின் வார்த்தைகளை நம்பதான் வேண்டியிருக்கு. வேறென்ன செய்வது?
0 comments:
Post a Comment