டெஸ்ட் கிரிக்கெட்டை அழியாமல் தடுக்க, இளைய சமுயாதத்தினருக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது ஈர்ப்பு ஏற்பட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் போது பள்ளிச் சிறுவர்களுக்கு இலவச அனுமதி அளிக்கவேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற புத்தக அறிமுகக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சச்சின் டெண்டுல்கர், "நான் 5 வயதில் கிரிக்கெட் விளையாடத் துவங்கினேன், 10-வது வயதில் மைதானத்திற்குச் சென்று டெஸ்ட் கிரிக்கெட் பார்த்தேன், மேற்கிந்திய தீவுகளுடன் இந்தியா விளையாடியது.
அது என் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது. எந்த ஒருவரும் சிறுபிராயத்தில் ஏற்படும் இந்த அனுபவங்களை மறக்க முடியாது. நாம் எவ்வளவுக்கெவ்வளவு குழந்தைகளை வரவேற்கிறோமோ அந்த அளவிற்கு அந்த விளையாட்டும் வளர்ச்சியடையும்". என்றார் சச்சின்.
ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் போதும் வார இறுதியில் சிற்வர்களுக்கென்று ஸ்டேடியத்தில் ஒரு பகுதியை நாம் காலியாக வைத்திருப்பது அவசியம் என்று வலியுறுத்தியிஅ சச்சின் டெண்டுல்கர் அவர்களில் 10% கிரிக்கெட் ரசிகர்களானாலே கிரிக்கெட் ஆட்டத்திற்கு அது ஒரு பெரிய உற்சாகத்தை அளிக்கும் என்று கூறினார்.
0 comments:
Post a Comment