அளவுக்கதிகமான விளம்பரங்கள் இல்லை, ஸ்டார் வேல்யூ இல்லை... இருந்தும் சேரனின் பெயருக்காகவே திரையரங்கில் அம்முகிறது கூட்டம். சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் நாடோடிகளை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை கைப்பற்றியிருக்கிறது சேரனின் பொக்கிஷம்.
1. பொக்கிஷம்
சென்ற வாரம் முதலிடம் சேரனின் பொக்கிஷத்துக்கு. வெளியான முதல் மூன்று தினங்களில் 38.5 லட்சங்களை வசூலித்துள்ளது ஒரு சாதனை. மாஸ் ஹீரோக்களின் ஓபனிங் வசூலுக்கு நிகரான வசூல் இது. ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் இந்த வசூலை பொக்கிஷம் தக்க வைத்துக் கொள்ளுமா?
2. நாடோடிகள்
ஏழு வாரங்களுக்குப் பிறகும் பாக்ஸ் ஆஃபிஸில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது, சமுத்திரக்கனியின் நாடோடிகள். ஏழு வார இறுதியில் 3.45 கோடிகளை சென்னையில் மட்டும் இப்படம் வசூலித்துள்ளது. சென்றவார இறுதி வசூல், 5.7 லட்சங்கள்.
3.மலை மலை
அருண் விஜய்க்கு பிரேக் கொடுத்திருக்கிறது மலை மலை. ஏ.வெங்கடேஷின் கமர்ஷியல் ஃபார்முலா இந்தமுறை வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு வார இறுதியில் ஏறக்குறைய 35 லட்சங்கள் வசூலாகியுள்ளது. சென்றவார இறுதி வசூல் 5.7 லட்சங்கள்.
4. அழகர் மலை
ஆர்கே-யை ஹீரோவாக நிலைநிறுத்தியிருக்கும் படம். ஆர்கே, வடிவேலு காமெடிக்காக திரைங்குக்கு வருகிறவர்கள்தான் அதிகம். சென்றவார இறுதியில் ஏறக்குறைய நான்கு லட்சத்து எண்பதாயிரம் ரூபாயை வசூலித்துள்ளது. சென்னையில் இதுவரை மொத்த வசூல், பத்தொன்பது லட்சங்கள்.
5. அச்சமுண்டு அச்சமுண்டு
இந்த கிரைம் த்ரில்லருக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கவே செய்கிறது. நான்கு வார இறுதியில் இதன் மொத்த வசூல், 31 லட்சங்கள். சென்ற வார இறுதி வசூல் ஒரு லட்சத்து இருபத்தைந்து லட்சம்.
இந்த வாரம் கந்தசாமி வெளியாவதால் முதலிடத்துக்கான போட்டி இந்த வாரம் கடுமையாக இருக்கும் என்று உறுதியாக கூறலாம்.
0 comments:
Post a Comment