நடிகை சினேகாவுக்கு காதல் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி இம்சைபடுத்திய ரியல் எஸ்டேட் அதிபர் ராகவேந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சினேகா புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஏற்கனவே அவனிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். சினேகாவிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு ஒரு வாரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராகவேந்திரா செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். சினேகாவுக்கு காதல் மற்றும் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பியதற்கான ஆதாரங்கள் செல்போனில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. அவற்றையும் கோர்ட்டில் ஒப்படைக்கிறார்கள்.
இதற்கிடையில் ராகவேந்திரா மீது மேலும் சிலர் மோசடி புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி விட்டு ரூ.8 ஆயிரம் வாடகை கொடுக்காமல் கம்பி நீட்டியதாக புகார் வந்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலிலும் இதே போல் ரூ.12 ஆயிரம் பாக்கி வைத்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சினேகாவுக்காக ரூ.85 லட்சம் வரை செலவு செய்து இருப்பதாக ராகவேந்திரா கூறி வருகிறார். சினேகாவை அடிக்கடி சந்தித்து பேசியுள்ளேன். அவரை மானசீகமாக காதலித்தேன். என் காதலை எப்போதோவது அவர் புரிந்து கொள்வார். அதுவரை நான் காத்திருப்பேன். ஜெயிலில் இருந்து வந்ததும் மீண்டும் சினேகாவை காதலிக்க நிர்ப்பந்திப்பேன். அவர்தான் என் மனைவி எனக்கு அவர் கிடைக்காவிட்டால் யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் என்றெல்லாம் கூறி இருக்கிறார்.
இது பற்றி சினேகாவிடம் கேட்ட போது ஆவேசப்பட்டார். நடிகைகள் பொதுசொத்து இல்லை. அவர்களைப் பற்றியார் வேண்டுமானாலும், எப்படியும் பேசலாம் என்ற நிலைமை இருப்பது வேதனை அளிக்கிறது. எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது.
ராகவேந்திராவால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளானேன். அடிக்கடி எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி இம்சித்தான். அதற்காகவே அடிக்கடி மொபைல்போனை சுவிட்ச் ஆப் செய்தேன். பழைய நம்பரையும் மாற்றினேன். ஆனாலும் புது நம்பரை எப்படியோ கண்டு பிடித்து லைனில் வந்து விடுவான். படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கும் வர ஆரம்பித்தான். நான் எந்த சூட்டிங்குக்கு போகிறேன் என்பதை முன் கூட்டியே கண்டு பிடித்து அங்கு வந்து நிற்பான். ஒரு கட்டத்தில் மிரட்ட ஆரம்பித்தான். என் பாதுகாப்பு பற்றியும் எனது குடும்பத்தினர் பாதுகாப்பு பற்றியும் பயப்பட ஆரம்பித்தேன்.
அவன் தொல்லைகள் எல்லை மீறியதால் போலீசுக்கு போனேன். உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சத்தியமூர்த்தி, சுதாகர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ராகவேந்திரா தொடர்ந்து என்மேல் அவதூறு பரப்புகிறான். நடிகை என்பதால் சேரைவாரி இறைக்க பார்க்கிறான். இதனால் ரொம்ப மனவேதனைக்கு ஆளாகி உள்ளேன்.
ராகவேந்திரா மோசடி பேர் வழி, ஜெயிலுக்கு போய் இருக்கிறான். ஓட்டல்களில் தங்கி வாடகை கொடுக்காமல் ஓடி இருக்கிறான் என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. செக் மோசடியும் செய்து இருக்கிறான். நிறைய பேர் என்னிடம் தொடர்பு கொண்டு அவனது மோசடிகளை சொல்லி வருகிறார்கள். கோர்ட்டில் நியாயம் கிடைக்கும்.
இவ்வாறு சினேகா கூறினார்.
0 comments:
Post a Comment