Wednesday, July 22, 2009

குடும்பங்களில் கலகத்தை உண்டாக்கும் தமிழ் தொலைக்காட்சி

இன்றைய சூழ்நிலையில் தொலைக்காட்சிகள் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டது...காலையில் 10மணிக்கு ஆரம்பிக்கும் நெடுந்தொடர்கள் இரவு 10மணி வரைக்கும் தொடர்ந்து பல குடும்பங்களில் கலகத்தை உண்டாக்க கூடியதாக மாறிவிட்டது... பெண்களின் சீரியல் ஆர்வத்தை பற்றி வரும் ஜோக்குகள் ஆரம்பத்தில் வெறும் நகைச்சுவையாக இருந்தாலும்....... கொஞ்ச நாளுக்கப்புறம் அதுதான் உண்மை என்ற நிலைமை..

நம்ம மேட்டருக்கு வருவோம்...சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சி வழக்கம் போல் காலையில் இருந்து இரவு வரைக்கும் முண்ணனி சேனலுக்கு போட்டியாக தொடர்களை ஆரம்பித்தது...


ஆரம்பத்தில் ஒரளவுக்கு போட்டியைக்கொடுத்த இந்த தொலைக்காட்சியின் தொடர்கள் ஒரு கட்டத்தில் போணியாகாமல் போக என்ன செய்வது என்று கையை பிசைந்த தொலைக்காட்சி நிறுவனம் ....தன்னுடைய நெடுந்தொடர்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டு அதற்கு பதில் நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது...தொடர்கள் எல்லாம் நிறுத்தப்பட்டதால் அந்த தொலைக்காட்சியை பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்தது....மண்டையை பிய்த்த அந்த தொலைக்காட்சி பிரைம் டைம் என சொல்லப்படும் முக்கிய நேரத்தில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டது...சென்ற ஆண்டு வெளி வந்த முக்கால் வாசி திரைப்படங்களின் உரிமையை பெற்றிருந்ததும் ஒரு காரணம்..........

இந்த புதிய திரைப்படங்கள் ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டதும் நம்ம தமிழ்நாட்டு குடும்பங்களில் கலகம் உண்டாக காரணமாக அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அதுவரைக்கும் புகைச்சலாய் இருந்த தங்கமணி--ரங்கமணிகள் சண்டை பற்றி எறிய ஆரம்பித்துள்ளதாக தங்கமணி உளவுத்துறை தலைவர் ஆதி ரகசிய அறிக்கை அளித்துள்ளார்... அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் புதிய திரைப்படங்களைத்தான் பார்க்க வேண்டும் என்று ரங்கமணிகள் சொல்ல வழக்கம் போல் தங்கமணிகள் சீரியல்தான் என்று சொல்லி முட்டி மோத அறிவிக்கப்படாத இந்திய-பாகிஸ்தான் போர் நடைபெற்றுவருவதாக ரகசிய தகவல்கள் கூறுகின்றன...

இதை அறியாத அந்த தொலைக்காட்சி ஒவ்வொரு வாரமும் புதிய மொக்கை திரைப்படங்களை அறிவித்து வருகிறது................. யாராவது இந்த மேட்டரை எடுத்து சொல்லுங்கப்பா......

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009