சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் நாடோடிகள் அனன்யா செய்கிற வேலைகள் எல்லாம் பெரிது பெரிதாக இருக்கிறது. ஒப்பந்தத்தை உடைப்பதில் அரசியல் கட்சிகளையும் இவர் மிஞ்சி விடுவார்.
நாடோடிகளில் நடிக்கும்போதே பிரபுசாலமனின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அனன்யா. படம் வெளிவந்த பிறகு சத்தத்தையே காணோம். சைலண்டாக படத்திலிருந்து விலகிக்கொள்ள வேறு ஹீரோயின் தேடி வருகிறார் பிரபுசாலமன்.
ஆர்யாவின் த ஷோ பீப்பிள் நிறுவனத்தின் முதல் படமான படித்துறையிலும் அனன்யாதான் ஹீரோயின். இரண்டு வாரம் முன்பு திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணியில் படப்பிடிப்பை
தொடங்கினார் இயக்குனர் சுகா. அனன்யாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஆள் மிஸ்ஸிங்.
ஹீரோ அபிஷேக், ஹீரோயின் அனன்யா காம்பினேஷன் காட்சிகளை எடுக்க முடியாமல் ஹீரோவை மட்டும் ஆற்றில் குளிக்க வைத்து படப்பிடிப்பை தொடங்கினார் சுகா. அடுத்தடுத்த நாட்களும் தலையை காட்டவில்லை அனன்யா.
படிக்கப் போறேன் என்று ஒப்புக்கொண்ட படங்களுக்கு அல்வா கொடுப்பதால் படித்துறையிலிருந்து அவரை நீக்கியுள்ளனர்.
மிருகம் ஆதி நடிக்கும் அய்யனார் படத்துக்கும் அனன்யாவை ஒப்பந்தம் செயள்துள்ளனர். இப்போதே உஷாரானால் அனன்யா கொடுக்கும் அல்வாவிலிருந்து அய்யனார் தப்பிக்கலாம்.


0 comments:
Post a Comment