கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விக்ரம் - ஸ்ரேயா நடிப்பில் உருவான கந்தசாமி ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கடந்த சில தினங்களாக, தி.நகரில் உள்ள தாணுவின் அலுவலகம் அல்லோலப்படுகிறது, விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் இடைவிடாத வருகை காரணமாக. படத்தை குறிப்பிட்ட தேதிக்குள் வெளியிட்டு விட வேண்டும் என்ற உறுதியில் அதன் சென்னை நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் உள்ளார். வித்தியாசமான முறையில் பிரமாண்ட விளம்பரங்களை தாணுவுடன் இணைந்து மேற்கொள்கிறார் ராமநாதன்.
இதற்கிடையே, படத்தின் புதிய ட்ரெயிலர் ஒன்றை இயக்குநர் சுசி கணேசன் தயார் செய்து அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் வழங்கியுள்ளார். கந்தசாமி நிச்சயம் ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸாகிவிடும். உலகம் முழுக்க 900 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது என அறிவித்துள்ளார் தாணு. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகள் ஏற்கெனவே சிலருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது. படம் பார்த்த அனைவரும் பிரமாதம் என தாணுவுக்கு கை கொடுத்துள்ளனர். அப்போ, கந்தசாமி தாணுவின் கஜானாவை நிரப்புவது உறுதி!


0 comments:
Post a Comment