சிறுவயது முதல் த்ரிஷா எனக்கு தோழி மட்டும்தான். அவருடன் காதல் இல்லை என்றார் சிம்பு. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ள படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
இப்பட ஷ¨ட்டிங்கின்போது சிம்பு, த்ரிஷா நெருங்கி பழகுவதாகவும் அவர்கள் காதலிப்பதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து சிம்பு கூறியதாவது: த்ரிஷாவை காதலிப்பதாக சொல்கிறார்கள். இதுபோன்ற வதந்தி எப்படி பரவுகிறது என புரியவில்லை. பள்ளியில் படிக்கும் போதே த்ரிஷாவை தெரியும்.
அப்போது முதல் அவர் எனக்கு தோழிதான். சினிமாவுக்கு வந்த பின்பும் எங்கள் நட்பு தொடர்ந்தது. இருவரும் சேர்ந்து அலை படத்தில் நடித்தோம். நீண்ட இடைவெளிக்கு பின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்கிறோம். எங்கள் நட்பு மேலும் வளர இப்படம் ஒரு காரணமாக உள்ளது.


0 comments:
Post a Comment