சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது நாடோடிகள். இரண்டாவது இடம் ஜெய்யின் வாமனன்.
5. அச்சமுண்டு அச்சமுண்டு
அருண் வைத்தியநாதனின் இந்தப் படம் வெளியான முதல் மூன்று தினங்களில் சென்னையில் ஏறக்குறைய ஆறு லட்சங்கள் வசூலித்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வசூல் டல்லடிப்பதாக வருத்தப்படுகிறார்கள் விநியோகஸ்தர்கள்.
4. வெடிகுண்டு முருகேசன்
ஏ.ஜி.மூர்த்தியின் வெடிகுண்டு முருகேசனுக்கு தமிழகம் முழுவதும் பரவலான வரவேற்பு. சென்னையில் முதல் மூன்று நாட்களில் ஏறக்குறைய எட்டரை லட்சங்களை வசூலித்துள்ளது.
3. காதல் கதை
வேலுபிரபாகரனின் பிரச்சனைக்குரிய படத்தை இளைஞர்கள் ஆர்வமுடன் காண வருகிறார்கள். சென்னையில் மூன்று தினங்களில் ஏறக்குறைய பதிமூன்றேகால் லட்சங்களை வசூலித்துள்ளது.
2. வாமனன்
தொடர்ந்து இரண்டாவது இடத்தில் வாமனன். ஓபனிங் ஹீரோ என்று ஜெய்யை சொல்ல முடியாத அளவுக்கு குறைவான வசூல். சென்னையில் கடந்தவார இறுதியில் 14.3 லட்சங்களை வசூலித்திருக்கிறது. ஒருவாரத்தில் வாமனனின் மொத்த வசூல் 46 லட்சங்கள்.
1. நாடோடிகள்
மூன்று வாரம் முடிந்த பிறகும் நாடோடிகள் ஓடும் திரையரங்குகளில் திருவிழா கூட்டம். சென்ற வார இறுதி வசூல் 28.7 லட்சங்கள். மூன்று வார இறுதியில் சென்னையில் மட்டும் 2.21 கோடிகளை வசூலித்திருக்கிறது.
இந்த வாரம் ஐந்தாம் படை, மோதி விளையாடு, மலையன் படங்கள் வெளியாவதால் அடுத்தவார பாக்ஸ் ஆஃபிஸில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.


0 comments:
Post a Comment