Monday, June 29, 2009

தோரணை

காதல், காமெடி, சென்டிமெண்ட், ஆ‌க்சன் அனைத்தும் கலந்து வெளிவந்திருக்கிறது, தோரணை. இயக்குனர் சபா ஐயப்பனின் முதல் படம். சொந்த ஊ‌ரில் சுகமாக பொழுதை கழிக்கும் இளந்தா‌ரி விஷால். இவரது அம்மா கீதா. அவருக்கு ஒரு சோகம். இருபத்தைந்து வருடங்களுக்குமுன் வீட்டைவிட்டு ஓடிய மூத்த மகனை மீண்டும் எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும். அம்மாவின் கண்ணீருக்கு விடைதேடி சென்னைக்கு கிளம்புகிறார் விஷால். சென்னை மாநகரமோ இரண்டு தாதாக்களின் பிடியில் சிக்கி தவிக்கிறது. அண்ணனைத் தேடி சென்னை வரும் விஷால் சென்னையில் கால் பதித்த அந்த நொடியே ஒரு கொலைக்கு சாட்சியாகி இந்த இரு வில்லன்களுக்கிடையே மாட்டிக் கொள்கிறார். சாட்சி சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் ஒரு தாதா. சொல்லாவிட்டால் கொன்று விடுவதாக உறுமுகிறார் மற்றொருவர். எப்படியும் சாவு உறுதி என்ற சூழலில், விஷால் ரோட்டில் சந்திக்கும் ஸ்ரேயாவிடம் மனதை பறி கொடுக்கிறார். டூயட் பாடுகிறார். காதல் பு‌ரிகிறார்.நடுவில் தாதாக்களில் ஒருவர்தான் தனது அண்ணன் என்பதை கண்டு பிடிக்கிறார். அண்ணனின் உயிரை பறிக்க முயலும் இன்னொரு தாதாவை துவ‌ம்சம் செய்து இறுதியில் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுகிறார்.ரயிலில் தண்ணீர் பிடிக்க இறங்கும் அண்ணன் தண்ணீர் பிடித்து வருவதற்குள் ரயில் கிளம்பிவிட தம்பியை பி‌ரிவதாக‌தான் தமிழ் சினிமாவில் கதை வந்திருக்கிறது. இதில் சின்ன வித்தியாசம். பால்குடி மாறாத பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக் கொள்கிறான். இது பிரச்சனையாக அம்மா கீதா மகனின் பச்சைக் குத்திய நெஞ்சில் சூடு போடுகிறார். பையன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு போய்விடுகிறான். இயக்குன‌ரின் மெச்சூரிட்டிக்கு இது ஒரு துணுக்கு சான்று.தாதாக்கள் பிடியில் சிக்கியிருக்கும் சென்னைக்கு விஷால் வரும்போதே, தாதாக்களை விஷால் துவ‌ம்சம் செய்யும் அடுத்தடுத்த காட்சிகளுக்கு தயாராகி விடுகிறோம். சண்டக்கோழி, திமிரு, மலைக்கோட்டை படங்களில் இதைத்தானே செய்தார் விஷால். சென்னை வரும் ஹீரோவுக்கு தங்க இடம் கொடுப்பதற்காகவே ஒரு காமெடி நண்பர் இருப்பார். இதில் சந்தானம். படத்தின் ஒரே சுவாரஸிய அம்சமும் இவர்தான்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009