Wednesday, July 1, 2009

மாசிலாமணி


அடித்தட்டு ஹீரோ அப்பர் கிளாஸ் ஹீரோயினை சவால்விட்டு காதலிக்கிறார். இரண்டரை மணிநேர படம் முடிவதற்குள் பல படங்கள் மலரும் நினைவுகளாக மனதில் வந்து போகிறது. முக்கியமாக மாசிலாமணியை பார்க்கையில் துள்ளாத மனமும் துள்ளுகிறது.

ராணி அண்ணாநக‌ரின் ராஜா நகுல். அவருக்கு நடனாலயா ஆசி‌ரியர் சுனேனா மீது காதல். அநியாயம் கண்டால் அடித்து வெளுக்கும் நகுலின் கேரக்டரால் சுனேனாவிடம் டேமேஜாகிறது அவரது இமே‌ஜ். நீதான் என் பொண்டாட்டி என சுனேனாவிடம் சவால் விடும் நகுல், சபதத்தில் ஜெயிக்க நடத்தும் ஆள் மாறாட்ட சடுகுடு படத்தின் பிரதான அம்சம். கிளைமாக்ஸ், படம் தொடங்கும்போதே நாம் யூகித்த மாதி‌ரி சுபம்.தீமையை கண்டால் தினவெடுக்கும் ஹீரோ, முதலில் மறுத்து இறுதியில் ஹீரோவிடம் மயங்கும் அதே பழைய ஹீரோயின் என கேரக்டர்களில் புராதன வாசம். மாசியாக வரும் நகுலும் ஆள் மாறாட்ட நகுலான மணியும் ஒருவர்தான் என்பதை நிரூபிக்க தலைகீழாக நிற்கும் பவனின் போலீஸ் அதிகா‌‌ரி வேடத்திலும் அதே புளிப்பு வாசனை. நகுலின் அக்காள் மகள் மீது ‌ஜீப்பை மோதவிடுவதெல்லாலம் டூ மச்.திரைக்கதைக்கு வந்தால் அங்கும் இதே பழமை பிரச்சனை. நல்லது செய்யும் நகுல் சுனேனா பார்வையில் ரவுடியாக தெ‌ரிவதற்கு தேர்ந்தெடுத்திருக்கும் காட்சிகள் அரதபழசு. கழிவு நீர் தேங்கியதற்காக எம்.எல்.ஏ.வை துரத்தி துரத்தி அடிக்கிறார், திருடனை பிடிக்கிறார்... சுனேனாவின் வீட்டில் நுழைய அவரது நாயை கடத்தி அவரே மீட்டதுபோல் நாடகமாடுகிறார்... புதுசா யோசித்திருக்கலாமே? பவன் நகுலை லாக்கப்பில் அடைத்து, இப்போ மணியை கூப்பிடு என்று கூறும் காட்சியில் மட்டும் பளிச்சிடுகிறது இயக்குன‌ரின் புத்திசாலித்தனம்.ஒரு ஊரே நகுலனுக்காக ட்ராமா ஆடுகிறது. பார்க்கிற நம் காதுகளில் ஆடுவதோ தொங்கும் தோட்டம். படத்தை காப்பாற்றுவது காமெடி. ஒரு பக்கம் சந்தானம், ஸ்ரீநாத், இன்னொரு பக்கம் கெட்டப் எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ். கருணாஸ் எம்.எஸ்.பாஸ்கரை உசுப்பேற்றுவதும், அதற்கேற்ப அவர் கெட்டப் மாறுவதும் நகைச்சுவை உற்சவம்.டோரா பாடல் மட்டும் தேறுகிறது. வெற்றியின் கேமரா படத்தின் மைனஸ்களை குறைக்க பாடுபட்டிருக்கிறது. ஆட்டம் பாட்டம் என்று அசத்தும் நகுலுக்கு வில்லன் வடநாட்டு முகம். மாசிலாமணி... கதை, திரைக்கதை என அனைத்திலும் பழமையின் மாசுகள் நிறைந்த மணி.

1 comments:

Anonymous said...

hi to all

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009