Thursday, October 1, 2009

இப்போதைக்கு சினிமாதான் - விஜய் பேட்டி (Vijay Interview)

வரும்... ஆனா, வராது... என்னத்த கன்னையாவின் காமெடியை தோற்கடித்துவிட்டது நேற்றைய விஜய்யின் பேட்டி. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்தால் தள்ளிப்போன விஜய்யின் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பு, நேற்று வடபழனியில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் நடந்தது. அரசியல் பிரவேசம் பற்றி ஆணித்தரமாக ஏதாவது சொல்வார் என்று பார்த்தால் கிடைத்ததென்னவோ ஜவ்வு மிட்டாய் பதில்கள்.

"அரசியல் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெ‌ரியாது. தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் நல்லது நடக்க களத்தில் இறங்கி பாடுபடுவேன். தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல் கட்சியுடன் கைகோர்ப்பேன். ஆனால் அது எப்போது நடக்கும் என்று எனக்கு‌த் தெ‌ரியாது. யாரும் குழம்ப வேண்டாம், இப்போதைக்கு எனக்கு சினிமா மட்டும்தான்" தெ‌ளிவாக குழப்பிய விஜய்யின் இந்த முன்னுரைக்குப் பிறகு வளைத்து வளைத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும் மழுப்பலாகவே வந்தது பதில். அந்த தடாலடி கேள்விகளும், கொழ கொழ பதில்களும்...

காங்கிரஸில் சேர்வீர்களா?

இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ராகுல் காந்தியை ம‌ரியாதை நிமித்தமாக‌த்தான் சந்தித்தேன்.

அவர் அழைத்ததன் பே‌ரில் இந்த சந்திப்பு நடந்ததா?

என்னுடைய நண்பர், நலம் விரும்பி ஏற்பாட்டில் சந்தித்தேன்.

அந்த நண்பர் திரையுலகைச் சேர்ந்தவரா, அரசியல்வாதியா, தொழிலதிபரா?

நண்பர் அவ்வளவுதான்.

ராகுல் காந்தி உங்களிடம் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை விளக்கியதாக கூறியிருக்கிறார். காங்கிரஸின் கொள்கை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

காங்கிரஸ் சுதந்திரத்துக்காக போராடிய கட்சி. அதன் கொள்கை எல்லோருக்கும் பிடிக்கும், எனக்கும் பிடிக்கும்.

காங்கிரஸ் ஈழத் தமிழருக்கு எதிரான கட்சி என்ற பேச்சு நிலவுகிறதே?

அதுபற்றி எனக்கு‌த் தெ‌ரியாது. ஆனால் தமிழர்களுக்கு எதிராக எது நடந்தாலும் களத்தில் இறங்கி போராடுவேன்.

உங்கள் மக்கள் இயக்கம் தனிக் கட்சியாக மாறுமா?

மாறலாம்.

காங்கிரஸில் சேர்வீர்களா?

தெ‌ரியலை.

இளைஞர் காங்கிரஸில் நீங்கள் பதவி கேட்டதாக சொல்லப்படுகிறதே?

அது பற்றி பேசவே இல்லை.

தயாநிதி மாறனுடன் டெல்லி சென்று ஸ்டாம்ப் எல்லாம் வெளியிட்ட நீங்கள், இப்போது காங்கிரஸுக்கு ஆதரவாக பேசுகிறீர்களே?

கலைஞர் இந்த வயதிலும் இளைஞர் மாதி‌ரி துடிப்பா ஆட்சி செய்கிறார்.

ராகுல் காந்தியின் நதிநீர் இணைப்பு குறித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறதே?

நோ கமெண்ட்ஸ்.

ராகுல் காந்தியுடனான சந்திப்பில் விஜயகாந்த் பற்றி பேசினீர்களா?

இல்லை.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009