Thursday, August 27, 2009

கந்தசாமிக்கு முதலிடம் - Chennai Box Office Kandhasamy

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் விக்ரமின் கந்தசாமி முதலிடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில் பிரமாண்டமான ஓபனிங் இந்தப் படத்திற்கே என்பது முக்கியமானது.

5. மலை மலை
மூன்று வாரங்கள் முடிவில் 42 லட்சங்கள் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது ஏ.வெங்கடேஷின் மலை மலை. இதன் சென்ற வார இறுதி வசூல், ஏறக்குறைய 1.7 லட்சங்கள்.

4. நாடோடிகள்
சமுத்திரக்கனியின் படம் நூறாவது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. எட்டு வாரங்கள் முடிவில் சென்னை வசூல் மட்டும் ஏறக்குறைய 3.53 கோடிகள். சென்றவார இறுதி வசூல் 1.9லட்சங்கள்.

3. அழகர்மலை
ஆர்கே-யை ஹீரோவாக நிலை நிறுத்தியிருக்கிறது அழகர்மலை. வடிவேலு ஆர்கே காம்பினேஷன் வொர்க் அவுட்டானது படத்தின் பலம். சென்றவார வசூல், 2.8 லட்சங்கள். இதுவரையான மொத்த சென்னை வசூல் 27 லட்சங்கள்.

2. பொக்கிஷம்
இரண்டாவது இடத்தில் பொக்கிஷம். முதல் மூன்று நாளில் ஏறக்குறைய 38 லட்சங்கள் வசூலித்த இந்தப் படம், சென்றவார இறுதியில் 10.7 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் 83 லட்சங்கள்.

1. கந்தசாமி
விக்ரமின் கந்தசாமி இந்த வருடத்தின் பிரமாண்ட ஓபனிங்கை பெற்றுள்ளது. நவீன ராபின்ஹுட் கதையான இதன் கமர்ஷியல் அம்சங்கள் படத்தை காப்பாற்றும் என நம்பலாம். முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய 93 லட்சங்களை இப்படம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009