Tuesday, July 21, 2009

கம்பீரமான மதுரை கோயில் கோபுரங்கள் - ஒரு பார்வை-Wonder of Tamilnadu

அடி பரிமாணத்தில் 25ஏக்கர் அளவில் இந்தக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் பனிரெண்டு கோபுரங்களும் கடவுள் மற்றம் புனித தேவதைகளின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நான்கு பெரிய கோபுரங்களும் திசைக்கொன்றாக வெளிச் சுவரில் இருக்கின்றன. தெற்கு வாசலில் உள்ள இந்தக்கோபுரம்தான் மற்றவைகளைவிட பெரியது. கீழிருந்து கிட்டத்தட்ட 50 மீட்டர் (160 அடி) உயரத்தில் இருக்கறது. இந்தக்கோபுரத்தின் மீது மட்டுமே நம்மால் ஏறிப்பார்க்கமுடியும். இந்தக்கோபுரத்தின் மீதிருந்து பார்த்தால் மற்ற அனைத்து கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் (சுவாமி சன்னதிக்கு மேலிருக்கும் கோபுரம்)மிகத் தெளிவாகப் பார்க்கமுடியும் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோயிலில்

சிவனுடன் ஒன்றிணைந்த அன்னை மீனாட்சி வீற்றுள்ளார். மீனாட்சிக்கு நான்கு, சொக்கநாதருக்கு நான்கு, சுற்றுச் சுவரில் நான்கு என இந்தக் கோயிலில் 12 கோபுரங்கள் இருக்கின்றன. வெளிச்சுற்றுச் சுவரில் இருக்கும் ஆச்சரியப்பட வைக்கும் கோபுரங்களே மதுரையின் சிறப்பு. வெளிச்சுவற்றில் உள்ள கோபுரங்களின் அமைப்பின் பரிமாணங்கள் கீழ் வருமாறு.கிழக்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 161'3". 1011 சிற்பங்கள் தெற்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 170'6". 1511 சிற்பங்கள் மேற்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 163'3". 1124 சிற்பங்கள் வடக்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 160'6". மற்ற கோபுரங்களை விட குறைவான சிற்பங்கள்இந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களை விடுத்து, மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் இந்த இரண்டு ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜகோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி) இதன் வேலை முடிக்கப்பட்டால் இந்தக் கோயில் இந்தியாவின் மிகச்சிறந்த கோயில்களுள் ஒன்றாகிவிடும். வருத்தத்தைத் தரும் வகையில் இது முடிவு பெறாமல் இருக்கிறது.

நீங்கள் இந்த ஐந்து வழிகளில் ஏதேனும் ஒன்று வழியாக உள்ளே வரலாம். பெரும்பாலும் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே இருக்கிற கிழக்கு வாசல்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. கோவிலின் மூலாதாரமான மீனாட்சி வீற்றிருக்கும் திசையை அதிகம் விரும்புவதில் ஏதும் வியப்பில்லையே. இந்த ஒரு வாயில் மட்டுமே கோபுரம் முடிவு பெறாமல் இருக்கிறது. இதன் பெரிய வடிவமும், பரிமாணங்களும் சிதம்பரம் கோயிலை ஒத்திருக்கிறது. இங்கு இன்னும் வெளியிடப்படாத சில கல்வெட்டுகள் இருக்கின்றன. இந்தக் கோபுரத்தின் கீழ் மதுரையின் காவல் தெய்வம் மதுரைவீரன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இவருக்கு அருகில் பதினெட்டாம் படி இருக்கின்றது. இங்கு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சத்தியப் பிரமாணம் பெறப்படுவதாகவும், இங்கு பொய்சொன்னால், அவருக்கு உடனடி தண்டனையாக மரணம் ஏற்படுவதாக கிராமத்து பேச்சு வழக்குகள் தெரிவிக்கின்றன.

பொற்றாமரைக்குளம்

அந்த மண்படத்தைக் கடந்து தற்போது புனித பொற்றாமரைக் குளத்தை அடைந்திருக்கிறோம். தெற்கு வாசல் பக்தர்களை நேரடியாக பொற்றாமரைக்குளத்திற்கு அழைத்து வருகிறது. அந்த நடைபாதையிலிருந்து படிகள் இறக்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அந்தப் படிகள் உதவுகின்றன. இந்தக் குளத்தைச் சுற்றிலும் தூண்கள் நிறைந்த நடைபாதை உள்ளது. பொற்றாமரைக்குளம், மதுரை கோயில் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது. எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது. 40x60 மீட்டர்கள் அளவில் அமைந்துள்ள இந்தக்குளம் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பது சரித்திரப் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது.இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சங்கப் புலவர்களின் புகலிடமாகவும் அவர்கள் ஆலோசனை செய்யும் தமிழ் கூடாரமாகவும் விளங்கியது. புலவர்கள் எழுதிய கவிதைகளை இந்தக் குளத்தில் மிதக்கவிட்டு, அதில் மிதந்து வரும் கவிதைகளே தரமான கவிதைகள் என்று ஏற்றதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் இறைவன் தமிழ் மீது மையல் கொண்டு புலவர்களுடன் வாதம் செய்த இடமாகவும் மீனாட்சி அம்மன் கோயிலையே குறிப்பிடுகின்றனர். இந்திரனின் பூலோக வருகையின் போது இந்தக் குளம் அவனுக்கு தாமரைகளைக் கொடுத்ததாக வரலாறு உள்ளது. தற்போது இந்தக் குளத்திற்குள் தாமரைகள் இல்லை. அதற்கும் ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் இந்தக் குளத்தின் அருகில் ஒரு கொக்கு தவம் புரிந்து வந்தது. அப்போது இக்குளத்தில் உள்ள மீன்கள் அதனிடம் குறும்பு செய்தன. அந்தக் கொக்கு அதனை சட்டை செய்யவில்லை. ஆனால் அது முக்தி அடையும்போது இறைவனிடம் "இந்தக்குளத்தில் எந்த உயிரினமும் இருக்கக் கூடாது " என்று வரம் வாங்கிவிட்டதாக அந்தக் கதை கூறுகிறது.இதனைச் சுற்றியுள்ள சுவர்களில் Fresco வகை மனதை மயக்கும் ஓவியங்கள் மீனாட்சியின் வாழ்க்கைச் சிறப்பபை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன. இந்தக் குளத்திலிருந்து கோபுரங்களின் காட்சி மிக அழகாக இருப்பதை உணர்கிறீர்கள். பிராமணர்கள் மாலை வேலைகளில் இந்தக் குளத்தில் மந்திரங்கள் ஓதுவதும், சமஸ்கிருத வகுப்பு நடப்பதையும் காணலாம். இந்தக் குளத்தில் மார்பிள் பதிக்கப்பட்டுள்ள ஒரு மாடம் உள்ளது. மதுரை பேரரசின் புகழ்பெற்ற அரசி மங்கம்மாள் கட்டியதாகக் கூறுகிறார்கள். ராணி மங்கம்மாள் நாயக்கர் குல ராணி ஆவார். குறிப்பிட்ட ஒரு விழாவின் போது இறைவனும் இறைவியும் இங்கு வருகிறார்கள்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009