Thursday, October 15, 2009

கமலுடன் முத்த காட்சியில் நடிக்க தமன்னா சம்மதம் ரூ.1? கோடி சம்பளம் கேட்கிறார்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகியுள்ளார் தமன்னா. “கல்லூரி” படத்துக்கு பின் பெரிய நடிகர்களுடன் ஜோடியாகி விட்டார். சூர்யாவுடன் நடித்த “அயன்” படம் வெற்றிகரமாக ஓடியதால் மார்க்கெட் மேலும் எகிறியது. சம்பளத்தையும் உயர்த்தி விட்டார்.

பரத்துடன் நடித்த “கண்டேன் காதலை” படம் இம்மாதம் இறுதியில் ரிலீசா கிறது. ஜெயம் ரவியுடன் “தில்லாலங்கடி” படத்திலும் நடித்து வருகிறார்.

கமல் படமொன்றில் நடிக்கவும் தமன்னாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. கே.எஸ். ரவிக்குமார் இப் படத்தை இயக்கப்போவதாக பெயர் அடிபடுகிறது. காமெடி படமாக இதை உருவாக்குகின்றனர்.

இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க தமன்னாவை அணுகியதாக செய்திகள் வந்துள்ளன. தமன்னாவும் நடிக்க சம்மதித்தாராம். ஆனால் சம்பளம் ரூ.1 கோடியே 25 லட்சம் கேட்டாராம். கமல் படங்களில் முத்தக்காட்சிகள் இருக்கும். அக்காட்சிகளில் நடிப்பேன். அதற்கு நான் கேட்டதை தர வேண்டும் என்று கூறி விட்டாராம். தமன்னாவை ஒப்பந்தம் செய்வதா? அல்லது கழற்றி விட்டு வேறு நடிகையை பார்ப்பதா என்று யோசனையில் தயாரிப்பு தரப்பினர் உள்ளனர்.

Read More...

நயன்தாராவை திருமணம் செய்யவில்லை -பிரபுதேவா

நயன்தாரா- பிரபுதேவா காதல் தீவிரமாகியுள்ளது. இருவரும் ரகசியமாக சந்திக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா தொழிலாளர்கள் விழாவுக்கு நயன்தாரா வந்த போது நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது பிரபுதேவா தனது குழந்தையை அழைத்து போய் நயன்தாராவை பார்த்தார்.

பிறகு குழந்தையுடன் நயன்தாரா ஷாப்பிங் போனதாக தகவல் வெளியானது. இந்த விஷயங்கள் பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு தெரிய ஆவேசமாகியுள்ளார். ஏற்கனவே நயன்தாராவும் பிரபுதேவாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. அதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் பிரபுதேவா இருந்தார். இப்போது முதல் தடவையாக வாய் திறந்துள்ளார் அவர் கூறியதாவது:-

எனக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கவில்லை. நயன்தாரா கையில் எனது பெயரை பச்சை குத்தி இருப்பது உண்மையா என்று என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த கேள்விக்கான பதில் ஒரு குழந்தைக்கே தெரியும். நானும் நயன்தாராவும் பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்பதற்கு பயப்படவில்லை.

ஸ்ரீதேவியும், பிரியாமணியும் எனக்கு பிடித்த நடிகைகள். அடுத்த படம் பற்றி இன்னும் முடிவு செய்யவல்லை. அரசியலுக்கு வரமாட்டேன். நடிப்பு, இயக்கம், நடனம் மூன்றில் நடனத்தைதான் ரொம்ப விரும்புகிறேன். சல்மான்கான், விஜய் இருவரில் விஜய்தான் சிறப்பாக நடனம் ஆடுகிறார். தமிழ் திரையுலகில் விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி நால்வரும் நன்றாக நடனம் ஆடக்கூடியவர்கள்.

இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

Read More...

Wednesday, October 14, 2009

முன்னோட்டம்: நான் அவனில்லை 2-ம் பாகம்; 5 கதாநாயகிகளை ஏமாற்றும் ஜீவன்

நான் அவனில்லை படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. ஜீவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை செல்வா இயக்குகிறார். ஐரோப்பிய நாடுகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, துபாய் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஜீவன் பாகதவர் ஸ்டைலில் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். வெளிநாடுகளில் ஐந்து கதாநாயகிகளை அவர் ஏமாற்றுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன.

ஏமாறும் கதாநாயகிகளாக சங்கீதா, லட்சுமி ராஜ், சுவேதா மேனன், ஹேமமாலினி, ரக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர். நேமிசந்த் நிறுவனம் சார்பில் இத்தேஷ் ஜபக் தயாரித்துள் ளார். அவரிடம் இருந்து இப்படத்தை வாங்கி வெளியிடுகிறார் ரஞ்சன். இவர் பிரபல விநியோகஸ்தர். சமீபத்தில் `மதுரை சம்பவம்', `ஈரம்' போன்ற படங்களை விநியோகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவு: பாலமுருகன், இசை: டி. இமான்.

Read More...

முன்னோட்டம்: வானம் பாத்த சீமையிலே

பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் லிட் நிறுவனத்துக்காக தெய்வானை மூவிஸ் சார்பில் அமுதா துரைராஜ், கே.சி.என். சந்திரசேகர், தயாரிக்கும் புதிய படம் வானம் பாத்த சீமையிலே. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜேப்பி அழகர். அசோக்குமார், கதாநாயகனாக நடிக்கிறார். வெயில் படத்தில் நடித்த பிரியங்கா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சரண்யா, கஞ்சாகருப்பு, விஜயகுமார், செவ்வாழை, குருஜி, கதிர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இயக்குநர் ஜேப்பி அழகர் சொல்கிறார்:-

இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகி போல் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது கருப்பணசாமி கோயில். இந்தக்கோயில் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ஐந்தரை அடி உயரத்தில் உண்மையான கருப்பண்ணசாமி சிலையை ஐதீக முறைப்படி உருவாக்கினார். கிராம மக்களின் ஒத்துழைப்புடன் அந்த சிலை புதிய கருப்பணசாமி கோயிலாக நிர்மாணிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் வரும் ஒரு திருவிழா பாடலுக்கு 500-க்கும் மேற்பட்ட முளைப்பாரி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. கதாநாயகன் அசோக்குமார் உண்மையிலேயே தீவிர கடவுள் பக்தி உள்ளவர். படத்தில் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுப்பது போன்ற காட்சியில் நடிக்கும் போது உண்மையிலேயே சாமி அருள் வந்து மயங்கி விட்டார்.

ஒளிப்பதிவு: செந்தில் பரமேஷ், இசை: ஸ்ரீகாந்த்தேவா, பாடல்கள்: பழனி பாரதி, நந்தலாலா, ஜேப்பி அழகர், படத்தொகுப்பு: வி.டி.விஜயன், சண்டைப் பயிற்சி: சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம்: பி.வி

Read More...

Tuesday, October 13, 2009

சூர்யா படத்துக்கு சி‌க்கல் (Trouble for Surya film)

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரக்த ச‌ரித்ரா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரக்த ச‌ரித்ரா படம், ஆந்திராவில் பிரபல ரவுடியாக இருந்து பின் அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ. ஆன பிரபல ரவுடி ப‌ரி‌ட்டால ரவியை பற்றியது. இதில் ப‌ரி‌ட்டால ரவியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். ரவியின் வலதுகரமாக இருந்து, பிறகு அவனது சாவுக்கு காரணமாக அமைந்த அவரது கூட்டாளி சூ‌ரியாக சூர்யா நடிக்கிறார்.

ரக்த ச‌ரித்திராவின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் அனந்தபூ‌ரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரவியின் மனைவியும் அவரது ஆதரவாளர்களும் வர்மா படப்பிடிப்பை நடத்தக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனந்தபூ‌ரிலிருந்துதான் ப‌ரி‌ட்டால ரவி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டா‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப‌ரி‌ட்டால ரவி ஒரு ஹீரோ, அவரை ரவுடியாகவர்மா சித்த‌ரிக்கிறார் என்பது ரவி மனைவியின் குற்றச்சாட்டு. வர்மா இதற்கு விளக்கமளித்தப் பிறகும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக இல்லை. இதன் காரணமாக படப்பிடிப்புக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வர்மாவின் பூர்வீகம் ஆந்திரா. அவரது முதல் படம் சிவா. தமிழில் உதயம் என்ற பெய‌ரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் அவருக்கு ச‌ரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் கோபித்துக் கொண்டு இந்திக்கு சென்றார்.

அதன் பிறகு பல வருடங்கள் அவர் தெலுங்கில் படம் இயக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு தெலுங்குக்கு திரும்பி வந்திருக்கிறார். இப்போதும் பிரச்சனை. என்ன செய்யப் போகிறார் வர்மா?

Read More...

சசிகுமா‌ரின் நகரம் (Sasikumar ready to start Nagaram)

அடுத்தப்பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் சசிகுமார். இந்தமுறை நகரத்து கதையுடன் களம் இறங்குகிறார். படத்தின் பெயர், நகரம்.

நகரத்தை விக்ரம் தயா‌ரிப்பதும், 52 வயது நபரே இந்தப் படத்தின் கதாநாயகன் என்பதும் ஏற்கனவே தெ‌ரிந்த விஷயங்கள். சசிகுமா‌ரின் முதல் படத்தில் நடித்த சமுத்திரக்கனி இந்தப் படத்திலும் நடிக்கிறார். கேரக்டருக்காக சற்று குண்டாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் உடல் எடையை அதிக‌ரிக்கும் முயற்சியில் இருக்கிறார்.

ஹீரோ, சமுத்திரக்கனி கதாபாத்திரங்கள் தவிர்த்து ஏறக்குறைய பத்து முக்கியமான கதாபாத்திரங்கள் படத்தில் உள்ளனவாம். இந்த கதாபாத்திரங்களில் அதிகமும் புதுமுகங்களையே நடிக்க வைக்க சசிகுமார் திட்டமிட்டிருக்கிறார்.

நகரத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். ஹீரோயினாக அபிநயா நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Read More...

Wednesday, October 7, 2009

பி.டி.உஷா கண்ணீர் விசாரணைக்கு உத்தரவு

போபால்: போபாலில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில், உரிய வசதிகள் வழங்கப்படாமல் தன்னை அவமானப்படுத்தியதாக தடகள வீராங்கனை பி.டி.உஷா கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 1986 ம் ஆண்டு சியோலில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கம் வென்று அசத்தியவர் தடகள வீராங்கனை பி.டி.உஷா. ஓய்வுக்கு பின் பயிற்சியாளராக உள்ளார். இவர், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடக்கும் 49 வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு அணியின் பயிற்சியாளராக சென்றார். இவருக்கு இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தனி அறை அளிக்கப்படவில்லை. பலருடன் சேர்ந்து தங்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர், அதிகாரிகளிடம் தெரிவித்த போதும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை.


இதனால் வெறுப்படைந்த பி.டி.உஷா, நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய அளவிலான போட்டிகளின் போது, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படுவது இல்லை. அவமானப்படுத்தும் விதமாக நிர்வாகிகள் நடந்து கொள்கின்றனர். போபாலில் எனக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதுகிறேன். எனக்கே இப்படி நடக்கிறது என்றால், மற்றவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். இவ்வாறு நடப்பதால் தான், சர்வதேச அளவில் இந்தியா பதக்கங்களை அள்ளிக் குவிக்க முடியவில்லை. தவிர, இதனடிப்படையில் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு உணர்வை ஏற்படுத்த மறுக்கின்றனர். இவ்வாறு பி.டி.உஷா தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திர பிரதேச தடகள சங்கம், இப்பிரச்னை குறித்து விசாரிக்க, விளையாட்டு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

மன்னிப்பு :
இது குறித்து இந்திய தடகள கூட்டமைப்பின் பொது செயலாளர் லலித் பனோட் கூறுகையில்,"" போட்டி அமைப்பாளர்களுக்கும், பி.டி.உஷாவுக்கும் சரியான முறையில் தகவல் தொடர்பின்மை இல்லை. இதனால் அவருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க காலதாமதமாகி விட்டது. நடந்த சம்பவத்துக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். அவர் தற்போது ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளார்,'' என்றார்.

Read More...

Monday, October 5, 2009

ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி: தீபாவளிக்கு 3 படங்கள் “ரிலீஸ்” சிறுபட்ஜெட் படங்கள் தள்ளிவைப்பு

புதுப்படங்கள் ரிலீசுக்கு தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களை வெளியிடலாம் என்றும் இந்த முறை அமலுக்கு வருகிறது.

இதனால் ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி ஆகிய மூன்றும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களை வாரத்துக்கு இரண்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையில் இருந்து பெரிய படங்கள் மட்டும் தீபாவளிக்கு வருகின்றன. சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

“ஆதவன்” படத்தில் சூர்யா, நயன்தாரா முதல் முறையாக ஜோடியாக நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.



தமிழ்நாடு முழுவதும் 250 முதல் 300 தியேட்டர்களில் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் வரும் “ஹசிலி பிலிலி” பாடல் ஹிட்டாகியுள்ளது. செல்போன்களில் ரிங்டோன் ஆகுவும், இப்பாட்டு ஒலிக்கிறது.

ஆக்ஷன், காமெடி கலந்த குடும்ப பாங்கான படமாக தயாராகியுள்ளது. எல்லா ஏரியாக்களிலும் அதிக தொகைக்கு இப்படம் விலை போய்உள்ளது.

பேராண்மை ஜெயம் ரவியின் மெகா பட்ஜெட் படம். இதில் ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார். “ஹாலிவுட்” ராம்போ பட பாணியில் காட்சிகளை எடுத்துள்ளனர். கேரள காடுகளில் எந்திர துப்பாக்கியுடன் உயரமான மரங்களில் ஜெயம் ரவி ஏறி இறங்கும் காட்சிகள் ஆங்கில நடிகர்களுக்கு இணையாக படமாக்கப்பட்டு உள்ளது.

இதில் தன்சிகா, மகா, வியாஸ்ரீ, சரண்யா, வசுந்தரா என 5 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்கள் என்.சி.சி. மாணவிகள் கேரக்டரில் வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேடத்தில் ஜெயம்ரவி நடிக்கிறார்.

ரோலன்ட் சிக்கிங்கார் என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கிறார். எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். இவர் “இயற்கை” “ஈ” படங்களை டைரக்டு செய்தவர். வித்யாசாகர் இசையமைக்கிறார்.

ஜகன்மோகினி நமீதா, நடித்துள்ள படம். பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் இயக்கியுள்ளார். ஏற்கனவே “ஜெயமாலினி” நடித்து வெற்றிகரமாக ஓடிய பழைய ஜகன்மோகினியின் ரீமேக்கே இப்படம். நவீன தொழில் நுட்பத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைத்திருப்பது இதன் சிறப்பு அம்சம். இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் அனுஷ்கா நடித்த அருந்ததி படம் தமிழகமெங்கும் வசூலை வாரிகுவித்தது. இதே போல் இந்த பேய் படமும் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கின்றனர்.

Read More...

நயன்தாரா.... -புலிவால் பிடித்த சேச்சி?

சரியாக பனிரெண்டு மாதங்களுக்கு முன்...

எம்எம்டிஏ காலனியில் மழை வெள்ளம் சூழ்ந்து, வீட்டை விட்டு மக்கள் வெளியேற முடியாத சூழ்நிலை. ஒரு குடும்ப தலைவி தனது குழந்தைகளுடன், முதல் மாடியிலேயே கொட்ட கொட்ட விழித்திருக்க, அவரது வீட்டுக்கு கிட்டதட்ட நீந்தியே வந்தார்கள் சிலர். எங்கோ வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நயன்தாரா தங்களுக்கு உத்தரவிட்டதாக கூறி அவர்கள் கொடுத்த அன்பளிப்பில் ஒரு மாதம் வாழ்வதற்கான அத்தனை பொருட்களும் இருந்தன. சம்பந்தப்பட்ட பெண்மணி நயன்தாராவுடைய ஒப்பனையாளரின் மனைவி. எங்கோ இருக்கிற ஒரு குடும்பத் தலைவிக்காக உலகின் எங்கேயோ ஒரு மூலையில் இருந்தபடி கவலைப்பட்ட நயன்தாரா, இன்னொரு குடும்ப தலைவியை கண்கலங்க விட்டிருக்கிறாரே, என்னவொரு கசப்பான முரண்பாடு?



உதிர்ந்த ரோமம், வானளாவிய அதிகாரம் போன்ற சொற்களுக்கு இணையாக இன்று மக்களால் அதிகம் விவாதிக்கப்படுகிற வார்த்தையாகி இருக்கிறது 'அருகதை இல்லை'



ரமலத்தை பார்த்து நயன்தாரா சொன்ன வார்த்தைதான் இது. பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று செய்திகள் வந்தபோதெல்லாம் அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த ரமலத், இரண்டாவது முறையாக வாய் திறந்தபோதுதான் நிலவரம் கலவரமாகிப் போனது. அந்த பேட்டியில் "இனிமேல் என் கணவருடன் நயன்தாராவை சேர்ந்து பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன்" என்று கூறியிருந்தார் ரமலத். அதுமட்டுமல்ல, "எதற்காக இங்கு வந்தாரோ, அந்த வேலையை மட்டும் பார்க்கட்டும்" என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த நயன்தாரா சொன்ன வார்த்தைதான் "எனக்கு அட்வைஸ் பண்ண ரமலத்துக்கு அருகதை இல்லை" என்பது!


அதன்பின் இருவரும் மாற்றி மாற்றி மீடியாக்களில் குமுறிக் கொண்டார்கள். இறுதியாக நடக்கப்போவது என்ன? கோடம்பாக்கத்தில் மிக முக்கியமான சிலரை தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டினோம். கிடைத்தவை எல்லாமே அதிர்ச்சி ரகம். இன்னும் சில நாட்களுக்குள்ளாகவோ, அல்லது இந்த கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போதோ, நயன்தாராவிடமிருந்து ஒரு அறிக்கை வந்திருக்கக் கூடும். என்னவென்று? "எனக்கும் பிரபுதேவாவுக்கும் இருந்த காதலை, நானே முன் வந்து தியாகம் செய்கிறேன்" என்று. "ஒரு குடும்பத்தை பிரித்த பாவம் எனக்கு வேண்டாம்" என்று அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப் போகிறாராம் நயன்.


"ஆறு மணிக்கு மேலே நான் என்ன செய்யுறேன்னு வேவு பார்க்கிற உரிமை எவனுக்கும் இல்லே" என்று இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த சிலரிடம் நெருப்பை உமிழ்ந்த நயன்தாரா, இப்படி ஒரு திடீர் முடிவெடுத்ததற்கு காரணம்? மிக முக்கியமானவர்கள் அவருக்கு செய்த அட்வைஸ்தானாம். யார் சொல்லியும் கேட்காத நயன், இந்த விவகாரத்தில் இருக்கும் சாதக பாதகங்களை அலசி ஆராய்கிற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். அதன் விளைவுதான் இப்படி ஒரு அறிக்கையை தர முன் வந்ததும்!


அடிப்படையில் நயன்தாரா எப்படி? அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலேயே பேச ஆரம்பித்தோம். வந்து விழுந்த தகவல்கள் அதிர்ச்சியோ அதிர்ச்சி. கலகலப்பானவர். அவரது ஆசை நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். சரியாக சொல்லப் போனால் குடும்ப வாழ்வுக்காக ஏங்குகிறார் நயன்தாரா. சிம்புவுடனான இவரது காதல் நிஜம். அதன் பின் விஷாலுடன் ஏற்பட்ட தீவிர காதலும், முளையிலேயே கருகிப்போனது. தன் முயற்சியில் சற்றும் தளராத இந்த விக்கிரமாதித்தி, வில்லு பட நேரத்தில் விஜயையும் காதலித்தார் என்பதுதான் ஷாக்கான செய்தி. ஆனால், அவரோ இந்த விஷயத்தில் கடுமையான மவுன விரதம் இருக்க, தாங்க முடியாத ஈகோவால்தான் பிரபுதேவாவை காதலிக்க துவங்கினாராம். விஜயை வெறுப்பேற்ற என்று எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை. அதுதான் இப்போது புலிவால் பிடித்த சேச்சியாக்கிவிட்டது நயன்தாராவை என்று சொன்ன அவர்கள், தொடர்ந்து சொல்லும் தகவல்கள்தான் படுபயங்கர ஷாக். "இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் இந்த நேரத்தில் கூட அவர் தெலுங்கு ஹீரோக்களான ரவிதேஜா, ஜுனியர் என்டிஆர் போன்ற ஹீரோக்களுடன் ஊர் சுற்றுவதையும் நள்ளிரவு பார்ட்டிகளையும் நிறுத்தவில்லை" என்கிறார்கள்.


காதல் வேறு, கல்யாணம் வேறு, கலகலப்பு வேறு என்பதுதான் அவரது பாலிஸி. இப்படிப்பட்ட ஒருவர், வெறித்தனமாக காதலிப்பதும், அதே வேகத்தில் அந்த காதலை இழக்க துணிவதும் பெரிய விஷயமில்லை. இந்த விஷயத்தை வெகு சீக்கிரம் பிரபுதேவாவே புரிந்து கொள்வார் என்றார்கள்.


தனது காதல் சுலபத்தில் நிறைவேறும் என்ற நயன்தாராவின் எண்ணத்தையும் சமீப நாட்களில் பொசுக்கி விட்டார் ரமலத். தனது ஒவ்வொரு பேட்டியிலும் மாதர் சங்கங்கள் பார்த்துக் கொள்ளும் என்று அவர் சொன்னது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். அவரது அறிக்கைக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. பல்வேறு மாதர் சங்க பிரதிநிதிகள் ரமலத்தை சந்தித்திருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே நயன்தாராவுக்கு எதிரான தங்கள் வியூகங்களை தெளிவுபடுத்தினார்களாம் ரமலத்திடம். இதுவும் நயன்தாராவின் பின்வாங்கலுக்கு காரணமாக அமையக்கூடும்.


சட்டப்படி தங்கள் திருமணத்தை ரிஜிஸ்தர் செய்யாவிட்டாலும், இந்துமத சட்டப்படி மாலை மாற்றிக் கொண்டாலே கணவன் மனைவியாகவே கருதப்படுவார்கள் என்பதால் ரமலத் சம்மதிக்காமல் பிரபுதேவா நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவே முடியாது. அதனாலும் நயன்தாரா விலகி கொள்ளலாம்.


ஆக ரமலத்தின் வாழ்வில் சனிப்பெயர்ச்சி மட்டுமல்ல, நயன்தாரா பெயர்ச்சியும் மிக முக்கியமானதே!

Read More...

அஜீத் கட்டும் புதிய ஏரோ-டிராம்! - Thala

மதுராந்தகத்திற்கு பக்கத்திலிருக்கிறது மின்னல் சித்தாமூர். கொஞ்ச நாட்களாகவே இங்கே அடிக்கடி மின்னல் அடிக்கிறது. அந்த மின்னல்...? அஜீத்! சென்னையிலிருந்து காரில் பயணித்தால் ஒன்றரை மணிநேர பயணம். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் இங்குள்ள பெரிய மைதானத்திற்கு வந்துவிடுகிறார். ஏன்?



தனது செலவில் இங்கே ஒரு மினி ஏரோ டிராம் கட்டி வருகிறார் தல. (இது அவரது நண்பருக்கு சொந்தமான இடமாம்) கொஞ்சம் பிசகியிருந்தால் பைலட் ஆகியிருப்பார் அஜீத். அந்தளவுக்கு குட்டி விமானங்களை இயக்குவதில் அலாதி பிரியம் அவருக்கு. வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த குட்டி விமானத்தில் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள பீச்சில் விமானம் ஓட்டுவது அவரது பொழுது போக்கு. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விமானத்தை தனித்தனியாக பிரித்து வைத்துவிடுவாராம். அதை மீண்டும் பொறுத்த சுமார் இரண்டு மணி நேரம் பிடிக்கும். பொறுமையாக இதை உருவாக்கி ஓட்டுகிற வரைக்கும் கண்கொட்டாமல் வேடிக்கை பார்க்கவென்றே அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்குமாம்.


தனது விமான ஆசையை ஒருத்தருக்கும் தொல்லை கொடுக்காமல் அனுபவிக்கதான் இந்த மினி ஏரோ டிராம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவரது வீட்டில் இருந்த ஒரே ஒரு விமானம் இப்போது இரண்டாகியிருக்கிறது. (குட்டி போட்டுருச்சா...?) இரண்டு விமானங்களை இரண்டு ரிமோட் உதவியுடன் ஒரே நேரத்தில் இயக்குவதுதான் தலயின் இப்போதைய தலையாய கடமை!

தேவைக்கு அதிகமா பணம் இருந்தா இப்படியெல்லாம்தான் யோசிக்க சொல்லும்...

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009