Saturday, August 22, 2009

கந்தசாமி விமர்சனம்‎ - Kandaswamy movie review

கறுப்பு பணத்தை கொள்ளையிட்டு ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கும் சி.பி.ஐ. அதிகாரி கதை.

முருகன் கோவில் மரத்தில் ஏழைகள், பணக்கஷ்டங்களை தீர்க்க வேண்டி துண்டு சீட்டுகள் எழுதி கட்டிச்செல்கின்றனர். மறுநாள் அவர்கள் வீட்டு வாசல்களில் கடவுள் கந்தசாமி பெயரில் பணப்பைகள் கிடக்கின்றன.

இந்த செய்தி நாடெங்கும் பரவி மக்கள் கூட்டம் கோவிலில் அலைமோதுகிறது. போலீசார் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். டி.ஐ.ஜி. பிரபு உண்மையை கண்டு பிடிக்க வருகிறார்.

இன்னொரு புறம் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு சி.பி.ஐ. அதிகாரி விக்ரம் கறுப்பு பண முதலைகளை வேட்டையாடி கோடி கோடியாய் பணத்தை மீட்கிறார். பாங்கியில் ஆயிரம் கோடி மோசடி செய்து பதுக்கிய ஆஷிஷ் வித்யார்த்தி வீட்டிலும் சோதனை நடத்தி கட்டுகட்டாய் பணம் எடுக்கிறார். இதனால் ஆத்திரமாகும் ஆஷிஸ் மகள் ஸ்ரேயா விக்ரமை பழி வாங்க துடிக்கிறார்.

கறுப்பு பணத்துடன் சொகுசு பஸ்சில் சுற்றும் ராஜ்மோகனையும் விக்ரம் சிக்கவைத்து ஒரு கிராமத்தை தத்தெடுக்க செய்கிறார்.

விக்ரமால் பாத்திக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தந்திரமாக தங்கள் வலையில் விழவைக்கின்றனர். அப்போது கறுப்பு பணத்தை கொள்ளையிட்டு கந்தசாமி கடவுள் பெயரில் ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுக்கும் நபர் விக்ரம் என்ற அதிர்ச்சி தகவல் தெரிகிறது. போலீசில் காட்டி கொடுக்காமல் இருக்க தங்களிடம் இருந்து பறித்த பணத்தை திருப்பி தரவேண்டும் என கெடு வைக்கின்றனர். விக்ரம் அதை ஏற்பது போல் நடிக்கிறார். அவர்கள் கூட்டாளிகளுடன் கை கோர்த்து செயல்படுகிறார். அப்போது வெளிநாட்டு பாங்கிகளில் இந்தியர்கள் மேலும் ஆயிரக்கணக்கான கோடி கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பது தெரிய வருகிறது. அவர்களை பிடிக்க காய்நகர்த்துகிறார். அந்த கூட்டத்தின் முக்கிய புள்ளி அலெக்சை கைது செய்து ஆதாரங்களுடன் நிருபிக்க முயற்சிக்கிறார். அப்போது கறுப்பு பண கும்பல் அலெக்சை கொல்கிறது. டி.ஐ.ஜி. பிரபுவும் விக்ரமை அடையாளம் கண்டு கைது செய்ய நெருங்குகிறார். கறுப்பு பண முதலைகளை மக்கள் மன்றத்தில் தோலுரிப்பதும் சட்டத்தின் பிடியில் இருந்து எப்படி தப்புகிறார் என்பதும் கிளைமாக்ஸ்...

ஹாலிவுட் ஸ்டைலை பிரதிபலிக்கும் அதிரடி சண்டை சாகச படம். விதவிதமான கெட்டப்புகளில் அசத்துகிறார் விக்ரம்.

ஏழை பெண் கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு கொடுத்த பணத்தை அபகரிக்கும் மன்சூர் அலிகானை சேவல் கோழி வேஷத்தில் கொக்கரக்கோ என கூவியும் கோழி போல் நடந்தும் அந்தரத்தில் தாவியும் பறந்து துவம்சம் செய்யும் ஆரம்பமே சூப்பர்மேன் ஸ்டைல்.

சோளக்கொல்லையில் அதே ரூபத்தில் கத்தி ஈட்டிகளுடன் பாயும் ரவுடிகளை அந்தரத்தில் பறந்து தாக்கி அழிப்பது “சீட்” நுனியில் உட்கார வைக்கும் சண்டை. அது படமாக்கப்பட்டுள்ள விதம் ஆங்கில படங்களுக்கு சவால் விடுகிறது.

ஐஸ்வர்யாராய் போல் அழகி வேண்டி கோவில் மரத்தில் துண்டு சீட்டு கட்டும் சார்லி கோஷ்டிக்கு பாடம் புகட்ட பெண் வேடமிட்டு நடனமாடி நையபுடைக்கும் சீன்கள் கலகலப்பானவை.

சி.பி.ஐ. அதிகாரி கெட்டப்பில் மிடுக்கு காட்டுகிறார். மெக்சிகோவில் கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் வில்லன்களுடன் மோதி அழிக்கும் சண்டைக் காட்சி பிரமிப்பு. ஆக்ஷனில் இன்னொரு சிகரம் தொட்டுள்ளார் விக்ரம்.

ஸ்ரேயா வில்லி காதலி, கவர்ச்சியில் தாராள மயம்... ஆடையிலும் மேக்கப்பிலும் அன்னியமாய் தெரிகிறார்.

பிரபு அமைதியான போலீஸ் அதிகாரியாக பளிச்சிடுகிறார். தேங்காய் கடை தேனப்பனாக வரும் வடிவேலு காமெடி பெரிய பலம். பக்தர்களிடம் பணம் வசூலிக்க கந்தசாமி போல் வேடமிட்டு மன்சூர்அலிகானிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகளும் போலீசை வைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பிரபு விசாரணை நடத்தும் போது குளித்து துணி துவைக்கும் சீன்களும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. கிருஷ்ணா, ஆஷிஸ் வித்யார்த்தி, அலெக்ஸ் வில்லத்தனங்கள் மிரட்டல்...

வில்லன் கிருஷ்ணாவின் சொகுசு பஸ் ஸ்ரேயாவின் ஆடம்பர படுக்கை அறை பிரமிக்க வைக்கின்றன.

“ஹைடெக்” தரத்தில் ஹாலிவுட்டுக்கு இணையான ஆக்ஷன் படம் கொடுத்துள்ளார் இயக்குனர் சுசிகணேசன். கந்தசாமியாக விக்ரம் செய்யும் தர்மகாரியங்களுக்கு உதவும் சக கூட்டாளிகளின் நெட்வொர்க் வலுவானவை. “கறுப்பு பணம்” என்பது பழைய கருவாக இருந்தாலும் காட்சிகளின் புதுமை விறுவிறுப்பு ஏற்றுகிறது.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. “எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி” பாடல் முணு முணுக்க வைக்கிறது. என்கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

Read More...

வைர மோதிரத்துடன் நடிகை அசினுக்கு காதல் கடிதம் - Love letter for Asin with diamond ring

சமீபத்தில் ஒரு ரசிகர் நூதனமான முறையில் வைர மோதிரத்துடன் காதல் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பி அதிர்ச்சியூட்டியுள்ளார். அந்த மோதிரம் மிகவும் விலை உயர்ந்ததாம்.

கடிதத்தில் உங்களை நான் காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் இல்லாமல் எனக்கு வாழ்வே இல்லை. எனது காதலை ஏற்றுக்கொள்ளுங்கள். தினமும் உங்கள் நினைவாகவே என் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. நான் பெரிய கோடீஸ்வரன். ராணி மாதிரி வைத்துக் கொள்வேன். எனது காதலை ஏற்றுக்கொள்ளுங்கள். திருமணத்துக்கு சம்மதம் சொல்லுங்கள் என்றெல்லாம் எழுதி இருக்கிறாராம்.


திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டியும் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. கடிதத்தை படித்த அசின் அதிர்ச்சியாகி உள்ளார். இதுவரை எந்த ரசிகரும் இதுபோல் விலை உயர்ந்த வைர மோதிரத்துடன் காதல் கடிதம் அனுப்பியதில்லை. தன் மீது வெறிப்பிடித்த காதலுடன் இருக்கும் ரசிகரின் நடவடிக்கை அசினுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடிதம் பற்றி அசினிடம் கேட்டபோது, அதை உறுதிப்படுத்தினார். ஆனால் மேற்கொண்டு எதையும் பேச மறுத்து விட்டார். அது ஒரு ரசிகனுக்கும் எனக்கும் இடையே உள்ள தனிப்பட்ட விஷயம். அதற்கு கருத்து சொல்ல நான் விரும்பவில்லை என்று கூறி விட்டார்.

Read More...

யோகா, தியானம் கற்க ஆசிரமத்தில் இருப்பேன் -ஸ்ரேயா - Shreya learning meditation!!!!!!!!!!1

கோயம்புத்தூரில் உள்ள ஆசிரமத்தில் தங்கி தியானம், யோகாவும் கற்று வருகிறார்.

இதுபற்றி அவர் சொல்கிறார்.

நான் தற்போது கோவை ஆசிரமத்தில் இருக்கிறேன். அங்கு தியானம், யோகா போன்றவற்றை கற்கிறேன். எனக்கு பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவது உண்டு. யோகா, தியானம் கற்ற பிறகு அது இல்லை. மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசிரமத்தில் தொடர்ந்து இருப்பேன்.

நான் நடித்த கந்தசாமி படம் இன்று ரிலீசாகிறது. அப்படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். படத்தை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. ரசிகர்கள் போலவே நானும் படத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சுப்புலட்சுமி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். வித்தியாசமான வேடம். பணக்கார பெண்ணாக வருகிறேன். காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும். கனவுலகத்தை அதில் காணலாம். இடைவேளைக்கு பின் யதார்த்த நிலைக்கு கதை திரும்பும்.


ரசிகர்கள் போலவே நானும் படத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சுப்புலட்சுமி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். வித்தியாசமான வேடம். பணக்கார பெண்ணாக வருகிறேன். காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும். கனவுலகத்தை அதில் காணலாம். இடைவேளைக்கு பின் யதார்த்த நிலைக்கு கதை திரும்பும்.

தனுசுடன் நடிக்கும் குட்டி படமும் எனக்கு நிறைவு தந்துள்ளது. கீதா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அழகான காதல் கதை. இரு படங்களும் எனக்கு பெயர் வாங்கி தரும்.

Read More...

பொக்கிஷம் - Pokkisham Film Review

உணர்ச்சிகளை அழுத்தமாக கொடுப்பவர் சேரன். ரசிக்கிற மாதி‌ரி இருக்கும் அந்த அழுத்தம் பொக்கிஷத்தில் வலிக்கிற மாதி‌ரி இருப்பது நெருடல்.

கொல்கத்தாவில் மரைன் இன்‌ஜினியராக பணிபு‌ரிகிறவர் சேரன். நோயாளியான அப்பாவைப் பார்க்க சென்னை வருகிறார். வந்த இடத்தில் மருத்துவமனையில் பக்கத்து கட்டிலில் அம்மாவுக்கு துணையாக இருக்கும் பத்மப்‌ரியாவை சந்திக்கிறார்.

மருத்துவமனையில் இருக்கும் சில நாட்களில் பத்மப்‌ரியாவின் இலக்கிய ஆர்வமும், புத்திசாலித்தனமும் சேரனுக்கும், சேரனின் நல்ல மனசு பத்மப்‌ரியாவுக்கும் பிடித்துப் போக அவரவர் ஊருக்கு திரும்பிய பிறகும் கடிதம் மூலமாக வளர்கிறது நட்பு. நாளடைவில் இந்த கடித நட்பு காதலாக மாற்றமடைய, காதலர்களைப் போலவே நமக்கும் பதற்றம்.

இந்துவான சேரனும் முஸ்லிமான பத்மப்‌ரியாவும் ஒன்றிணைய இந்த சமூகம் அனுமதிக்குமா? அதுவும் சாதியும், மதமும் தலைதூக்கியிருந்த எழுபதுகளில்?

ஆச்ச‌ரியமாக, பெண் கேட்டுவரும் சேரனையும், அவரது அப்பா விஜயகுமாரையும் உட்கார வைத்து சோறு போடுகிறது பத்மப்‌ரியாவின் குடும்பம். மதத்தைவிட மனுஷனை நேசிக்கிறவன் நான் என்று இருவ‌ரின் திருமணத்துக்கு சம்மதிக்கிறார் பத்மப்‌ரியாவின் அப்பா.

ஆனால், மூன்றே மாதத்தில் பத்மப்‌ரியாவிடமிருந்து வரும் கடிதம் நின்று போகிறது. சின்ன தடயம்கூட இல்லாமல் அந்த குடும்பமே காணாமல்போக, சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் சேரன் தேடுகிறார்... தேடுகிறார்... தனது இறுதி மூச்சுவரை தேடுகிறார். தனது காணாமல் போன காதலிக்கு அவர் எழுதிய முகவ‌ரி இல்லாத கடிதங்கள் உ‌ரியவரை சென்றடைந்ததா என்பது கிளைமாக்ஸ்.

சேரனின் மகன் அவரது காதல் கடிதங்களை படிப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. கடிதங்கள் வாயிலாக கதை சொல்வது சுவாரஸியமாக இருந்தாலும், சேரன், பத்மப்‌ரியா குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும்போது, ச‌ரி, போதும் நிறுத்துங்கப்பா என்று சொல்லத் தோன்றுகிறது.

மிடில் கிளாஸ் இளைஞனாக சேரன் கச்சிதம். சி‌ரிக்கும்போதும், சோகமாக இருக்கும்போதும் தாடையை சுருக்கி அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சொல்ல மறந்த கதை தொடங்கி மாயக்கண்ணாடி வரையான சேரன்களை நினைவுப்படுத்துகிறது.

முக்காடு போட்ட அரைவாசி முகத்திலேயே அத்தனை உணர்வுகளையும் கொண்டு வருகிறார் பத்மப்‌ரியா. போனில் சேரனின் குரலை கேட்டதும், பேச முடியாமல், உங்களை பார்க்கணும்போல இருக்கு என்கிறாரே, சபாஷ் போட வைக்கும் நடிப்பு. நதீரா என்ற நாகூர் முஸ்லிம் பெண்ணாகவே மாறியிருக்கிறார்.

பத்மப்‌ரியாவின் அப்பா அவரை வீட்டிற்குள் சிறை வைத்தாலும், சேரனுடன் தொடர்பு கொள்ள அவர் ஏன் முயற்சிக்கவில்லை? அவருக்கு திருமணமாயிற்றா? இந்த கேள்விகளுக்கு அவர் இறுதி காட்சியில் விளக்கம் தரும்போது, பாதி திரையரங்கு காலியாகி விடுகிறது. கிளைமாக்ஸில் கத்தி‌ரி போடாததால் வந்த குழப்பம்.

சின்ன வேடம் என்றாலும் அசத்தியிருக்கிறார்கள் விஜயகுமாரும், சேரனின் நண்பராக வரும் இளவரசுவும். இருவரும் கம்யூனிஸ்டாக வருவதாலா தெ‌ரியவில்லை, இருவர் நடிப்பும் படு யதார்த்தம்.

படத்தின் இரண்டு ஹீரோக்கள் கலை இயக்குனர் வைரபாலனும், ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவும். எழுபதுகளின் கொல்கத்தாவை இருவரும் சேர்ந்து கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். நிலா.. நீ வானம், காற்று, மழை பாடலின் விஷுவல, பார்க்கப் பார்க்கப் பரவசம். சபேஷ் முரளி இசையில் இந்தப் பாடல்தான் டாப்.

சேரன் கம்யூனிஸ்ட், பத்மப்‌ரியா இலக்கிய ஆர்வம் உள்ளவர். இந்த அடையாளங்கள் கதாபாத்திரத்தின் தன்மையில் எந்த தனித்தன்மையையும் பிரதிபலிக்கவில்லை. துர்காவை வணங்கியதும் சேரனுக்கு பத்மப்‌ரியாவிடமிருந்து கடிதம் வருகிறது. அடுத்த கணமே கம்யூனிஸ்ட் ஆன்மிகவாதியாகிறான். எதற்கு இந்த திணிப்பு? சேரனை போலவே எல்லா கதாபாத்திரங்களும் சோகம் வந்தால் கண்ணை மூடி வானத்தைப் பார்க்கிறார்கள்.

சேரனுக்கும், பத்மப்‌ரியாவுக்குமான நட்பு துளிர்விடும் ஆரம்பக் காட்சிகள் ரம்யமானவை. தமிழ் சினிமாவின் குத்துப் பாட்டு, ஆ‌க்சன் காட்சி, திடீர் திருப்பம் எதுவுமில்லாமல் நேர்மையான ஒரு படத்தை தர சேரன் முயன்றிருக்கிறார். அதில் அவர் முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறாரா என்பது இரண்டாம்பட்சம்... அந்த நேர்மை, அதுதான் இந்தப் படத்தின் பொக்கிஷம்.

Read More...

தீபாவளிக்கு எந்திரன் - Enthiran Deepavali Release?

நெருப்பு இல்லாமல் பருப்பு வேக வைப்பதில் கோடம்பாக்கக்காரர்கள் கெட்டிக்காரர்கள். அவர்களின் அசந்த வாய்க்கு அவல் மாதி‌ரி லீட் ஒன்றை சமீபத்தில் எடுத்துக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார். அதை வைத்துதான் இப்போது படமே காட்டுகிறார்கள்.

ஈரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்த ர‌ஜினி, எந்திரன் படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெ‌ரிவித்தார். இது போதாதா நம்மவர்களுக்கு?

எந்திரன் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. எந்திரன் வெளியாகும் அதே நாள் தனுஷ் நடிக்கும் குட்டியும் வெளியாகிறது.

இந்த தீபாவளிக்கு மாமனாருக்கும், மருமகனுக்கும்தான் போட்டி என்று இமைக்கும் நேரத்தில் இறைத்து தள்ளுகிறார்கள். ஆனால் உண்மை வேறு.

ஏந்திரனின் டாக்கி போர்ஷன்தான் 80 சதவீதம் முடிந்திருக்கிறது. இன்னும் சில வாரங்களில் முழு டாக்கி போர்ஷனும் முடிந்தாலும், படத்தின் போஸ்ட் புரொட‌க்சன் வேலை மட்டுமே தனியாக ஒரு வருடத்துக்கு இருக்கிறது. ரோபோ ர‌ஜினி சம்பந்தப்பட்ட கிராஃபிக்ஸ் வேலைகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கூட்டிக் கழித்தால் அடுத்த தீபாவளிக்குதான் படம் திரைக்கு வரும் சாத்தியம் உள்ளது. ர‌ஜினி ரசிகர்கள் ஏமாறாமல் இருப்பது நல்லது.


Read More...

Thursday, August 20, 2009

முதலிடத்தில் பொக்கிஷம் - சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

அளவுக்கதிகமான விளம்பரங்கள் இல்லை, ஸ்டார் வேல்யூ இல்லை... இருந்தும் சேரனின் பெயருக்காகவே திரையரங்கில் அம்முகிறது கூட்டம். சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் நாடோடிகளை பின்னுக்கு‌த் தள்ளி முதலிடத்தை கைப்பற்றியிருக்கிறது சேரனின் பொக்கிஷம்.

1. பொக்கிஷம்
சென்ற வாரம் முதலிடம் சேரனின் பொக்கிஷத்துக்கு. வெளியான முதல் மூன்று தினங்களில் 38.5 லட்சங்களை வசூலித்துள்ளது ஒரு சாதனை. மாஸ் ஹீரோக்களின் ஓபனிங் வசூலுக்கு நிகரான வசூல் இது. ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் இந்த வசூலை பொக்கிஷம் தக்க வைத்துக் கொள்ளுமா?

2. நாடோடிகள்
ஏழு வாரங்களுக்குப் பிறகும் பாக்ஸ் ஆஃபிஸில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது, சமுத்திரக்கனியின் நாடோடிகள். ஏழு வார இறுதியில் 3.45 கோடிகளை சென்னையில் மட்டும் இப்படம் வசூலித்துள்ளது. சென்றவார இறுதி வசூல், 5.7 லட்சங்கள்.

3.மலை மலை
அருண் விஜய்க்கு பிரேக் கொடுத்திருக்கிறது மலை மலை. ஏ.வெங்கடேஷின் கமர்ஷியல் ஃபார்முலா இந்தமுறை வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு வார இறுதியில் ஏறக்குறைய 35 லட்சங்கள் வசூலாகியுள்ளது. சென்றவார இறுதி வசூல் 5.7 லட்சங்கள்.

4. அழகர் மலை
ஆர்கே-யை ஹீரோவாக நிலைநிறுத்தியிருக்கும் படம். ஆர்கே, வடிவேலு காமெடிக்காக திரைங்குக்கு வருகிறவர்கள்தான் அதிகம். சென்றவார இறுதியில் ஏறக்குறைய நான்கு லட்சத்து எண்பதாயிரம் ரூபாயை வசூலித்துள்ளது. சென்னையில் இதுவரை மொத்த வசூல், பத்தொன்பது லட்சங்கள்.

5. அச்சமுண்டு அச்சமுண்டு
இந்த கிரைம் த்‌ரில்லருக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கவே செய்கிறது. நான்கு வார இறுதியில் இதன் மொத்த வசூல், 31 லட்சங்கள். சென்ற வார இறுதி வசூல் ஒரு லட்சத்து இருபத்தைந்து லட்சம்.

இந்த வாரம் கந்தசாமி வெளியாவதால் முதலிடத்துக்கான போட்டி இந்த வாரம் கடுமையாக இருக்கும் என்று உறுதியாக கூறலாம்.

Read More...

Aadhavan Tamil Movie Audio Mp3 Songs Download - ஆதவன் Mp3 பாடல்கள் டவுன்லோட்

ஆதவன் Mp3 பாடல்கள் டவுன்லோட்

Cast: Surya Sivakumar, Nayantara, Vadivelu, Ramesh Khanna
Director: K.S. Ravikumar
Music Director: Harris Jayaraj
Producer: Udhayanidhi Stalin

01 – Yeno Yeno Panithuli – Thamarai.
ஏனோ ஏனோ பனித்துளி - தாமரை

02 – Dekho Dekho – Vaalee – Choreographed by Gayathri Raghuram.
தேகோ தேகோ - வாலி

03 – Varayo Varayo – Pa. Vijay – Singers: Dr Burn, Karthik and Harini.
வாராயோ வாராயோ - Dr.பர்ன், கார்த்திக், ஹரிணி - பா.விஜய்

04 – Masi Masi – Kabilan.
மாசி மாசி - கபிலன்

05 – Aadhavan – Muthukumar - Choreographed by Shobi.
ஆதவன் - முத்துக்குமார்

06 – Vaada – Muthukumar
வாடா - முத்துக்குமார்

Rapidshare Download link
rapidshare.com/files/269299387/_MP3__Aadhavan_ACD-Rip_320kbps.rar

http://rapidshare.com/files/269208089/Aadhavan.rar.html

http://downloads.ziddu.com/downloadfile/6122666/aadhavanmp3.rar.html

Read More...

ஸ்ருதியை அழைக்கிறார் சிம்பு! - Simbhu calling Shruthi!!!!!!!!!!!!!!!!!

மன்மதன், வல்லவன் படங்களில் தனது நடிப்பை தாண்டிய அடையாளத்தையும் பதிவு செய்த சிம்பு, அடுத்ததாக ஏறப்போகிற குதிரை வாலிபன். இந்த படத்தை டிராப் செய்து விட்டார்கள் என்று முதலில் கிசுகிசுக்கப்பட்டது. பிறகு இல்லை. இதுதான் அவரது அடுத்த படம் என்று பேசப்பட்டது. சிம்புவின் விளக்கம் என்ன? போடா போடியும் வரும். வாலிபனும் வரும் என்கிறார். இதில் முதலில் வருவது எது என்ற பஞ்சாயத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம்.



வாலிபன் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கிறாராம். முதலில் இவரிடம் கதை சொன்னவர் விக்னேஷ்ராஜா என்ற உதவி இயக்குனர். இவரை சிம்புவிடம் கதை சொல்ல அனுப்பினாராம் சக்கரவர்த்தி. அங்கே மாறியது விக்னேஷின் தலையெழுத்து. படத்தை நானே இயக்குகிறேன் என்று கூறிவிட்ட சிம்பு, கதை திரைக்கதை வசனம் என்று தனது பெயரையே முன்னிறுத்த, அப்ப நானு? என்று அப்பாவியாக கேட்டாராம் விக்னேஷ். கதையை கொடுத்திட்டு காசு வாங்கிட்டு போங்க என்று பதில் சொல்லப்பட்டதாம். வேணும்னா படத்திலே இணை இயக்குனராக பணியாற்றலாம் என்ற சலுகையை(?) கொடுத்தாராம் சிம்பு.


என்ன செய்வது என்று முழித்த விக்னேஷ், கதை என்னுடையதாக இருக்கட்டும். திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்பை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல சரி என்ற முடிவுக்கு வந்தார்களாம் அத்தனை பேரும். விக்னேஷ் இயக்கப் போகும் அடுத்த படத்திற்கு கால்ஷீட் தருவதாக இப்போதைக்கு கூறியிருக்கிறாராம் சிம்பு.

இதற்கிடையில் போடா போடியில் நடிக்க மறுத்துவிட்டார் வரலட்சுமி. இதனால் கமல் மகள் ஸ்ருதியிடம் கால்ஷீட் கேட்டு வருகிறாராம் சிம்பு. அவரோ, நடிப்பே வேண்டாம். இசையமைப்பாளராக ஆவதே லட்சியம் என்கிறாராம். சட்டுபுட்டுன்னு ஏதாவது ஒரு படத்தை ஆரம்பிங்க சாரு...

Read More...

Wednesday, August 19, 2009

இந்தி கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் உடல் உறுப்புகள் “இன்சூரன்ஸ்”

இந்தி கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ஏராளமான இந்திப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கமலுடன் தசாவதாரம் படத்தில் வில்லியாக நடித்து அசத்தினார். “மித்” என்ற சீன மொழி படத்தில் நடித்து உலகமெங்கும் பிரபலமானார். ஏராளமான விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். இவரது பல படங்கள் சர்வதேச படவிழாக்களில் பங்கேற்று உள்ளன.

மல்லிகா ஷெராவத்துக் கென்றே நாடு முழுவதும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. சமீபத்தில் உலக அளவில் “செக்சி”யான நடிகைகள் பற்றி கருத்து கணிப்பை ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்தியது. அதில் இந்தியாவின் “செக்சி” நடிகை பட்டத்தை மல்லிகா ஷெராவத் வென்றார். எத்தனை இந்தி கதாநாயகிகள் இருந்தாலும் அவர்களுக்கு இந்த கவுரவம் கிடைக்கவில்லை.

தனது அழகை பாதுகாப்பதற்கு மல்லிகா ஷெராவத் தற்போது விசேஷ அக்கறைகாட்ட தொடங்கியுள்ளார். உடற்பயிற்சி, உணவு பழக்கவழக்கங்களில் தனி கவனம் செலுத்துகிறார். அத்துடன் தன்னுடைய உடல் உறுப்புகளை “இன்சூரன்ஸ்” செய்யவும் திட்டமிட்டு உள்ளார்.

ஏற்கனவே விளையாட்டு வீரர்கள், ஹாலிவுட் நடிகர்கள்தான் இதுபோல் உடல் உறுப்புகளை “இன்சூரன்ஸ்” செய்துள்ளனர். உலக கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்களை இன்சூரன்ஸ் செய்துள்ளார். ரொனால்டோவை பார்த்தே உடல் உறுப்புகளை இன்சூரன்ஸ் செய்யும் ஐடியா மல்லிகா ஷெராவத்துக்கு தோன்றியதாம். இன்சூரன்ஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. உடலில் எந்தெந்த உறுப்புகளை இன்சூரன்ஸ் செய்கிறார் என்பதை ரகசியமாக வைத்துள்ளார்.

Read More...

நயன்தாராவிடம் “திடீர்” மாற்றம்; கதாநாயகர்களுக்கு ராக்கி கயிறு கட்டுகிறார்

குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலக பிரமுகர்கள் பலர் காதலை முறிக்கும் படி தொடர்ந்து வற்புறுத்துகின்றனர். பிரபுதேவாவுக்கு மனைவி, குழந்தைகள் இருப்பதால் காதலை கைவிடும்படி நிர்ப்பந்திக்கிறார்கள். ஆனால் இருவரும் காதலில் விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது.

காதலினால் நயன்தாராவிடம் திடீர் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக பட உலகினர் கிசுகிசுக்கின்றனர். முன்பெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் கலகலப்பாக பழகுவார். சூட்டிங் முடிந்து போகும்போது பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்தும் அசத்துவார். இப்போது அப்படி இல்லை
படப்பிடிப்பில் யாருடனும் பேசுவதில்லையாம். தான் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிந்ததும் யாருடனும் பேசாமல் ஓரமாக ஒதுங்கிக் கொள்கிறார். யாரேனும் வலியபோய் பேசினாலும் பதில் சொல்வதில்லையாம். தன்னைப் பற்றி கிசுகிசுக்கள் வரக்கூடாது என்பதற்காகவே இந்த முன்னேற்படாம். அதோடு பேசுபவர்களில் பலர் காதல் விவகாரம் பற்றியே கேட்கிறார்களாம். அதை தவிர்ப்பதற்காகவும் விலகுகிறாராம்.

நயன்தாராவிடம் இன்னொரு மாற்றமும் தெரிகிறதாம். தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு ராக்கி கயிறு கட்டி விடுகிறாராம். அவர்கள் தன்னிடம் நெருங்குவதை தடுப்பதற்கு யாரோ சொல்லி கொடுத்த யோசனை இது என்கின்றனர். மலையாள நடிகர் திலீப் மட்டும் ராக்கி கட்டிக் கொள்ள மறுத்து விட்டார். இருவரும் மலையாள படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். அப்போது தான் இந்த ராக்கி கயிறை திலீப் கையில் கட்ட நயன்தாரா முயற்சித்தார். சகோதர உணர்வுகள் மனதில் இருந்தால் போதும் ராக்கி கயிறு கட்டித்தான் அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறி திலீப் மறுத்து விட்டார்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009