Saturday, August 15, 2009

Pokisham - Movie review - Vimarsanam!!!!!!!!!!!!!!!!!

மகன் தனது இன்றைய காதலையும் , அவனது தந்தையின் காதலையும் அழகாக சொல்லி இருக்கும் படம் . ஒரு நிமிடம் வெயிட்டிங் கால் வந்தாலும் ஏவ கூட பேசிட்டு இருந்த என கேட்கும் இன்றைய காதலிக்கும் , காதலன் பிரிவினால் வாழ்வையே இழக்கும் அன்றைய காதலையும் வெளிச்சம் போடு காட்டும் உன்னத காவியம்.

லெனின் கப்பல் பணி அதிகாரி (சேரன் ) முஸ்லீம் பெண் பத்மப்ரியா கல்லூரி மாணவி (1970)ல் நடக்கும் கதை . அப்பா விஜயகுமார் சிகிச்சைக்காக மருத்துவமனை க்கு வருகிறார் அவரை பார்க்க வரும் சேரன் மற்றும் அங்கு அம்மாவின் சிகிச்சைக்கு வரும் பத்மப்ரியா இருவரும் இலக்கியங்களை பற்றி பேசி நட்பை வளர்கின்றனர். வேலைக்காக கொல்கத்தா செல்லும்போது பத்மப்ரியா உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார் . அவரிடம் சொல்லாமல்
வருத்தத்துடன் செல்லும் சேரனுக்கு அப்பா விஜயகுமார் அந்த பெண் தன்னை நன்றாக பார்த்துக்கொண்டார் நன்றி சொல்லி கடிதம் போடும்படி முகவரி அனுப்புகிறார் .


கடிதம் மூலம் காதல் செய்கின்றனர் ,பிறகு அப்பாவுடன் பெண் கேட்க செல்கிறார் சேரன் , சரி பெண்ணை தருகிறேன் என்று சொல்லி அனுப்பி , ஊரை காலிசெய்து சென்று விடுகிறார் பத்மப்ரியா அப்பா .அவர்களை தேடி அலைந்து கிடைக்காததால் அப்பாவுக்காக வேறு பெண்ணை திருமணம் செயகிறார்சேரன் .


சேரன் மகன் சொத்து பத்திரத்தை தேடும் போது சேரனின் கடிதம் ,டைரி படித்து
பத்மப்ரியாவை தேடும் போது எழுதிய கடிதங்களை எப்படி தன் அப்பா நினைவாக பத்மப்ரியாவை கண்டு பிடித்து சேர்க்கிறார் என்பது மீதி கதை .அவர் பத்மப்ரியாவை சந்தித்து தான் சேரன் மகன் அப்பா இறந்து விட்டார் என்று சொல்லும் போதும் , பத்மப்ரியா ஊரை கலி செய்து வந்தபின் என்ன நடந்தது என்பதை அறியும் போது எல்லோர் மனமும் கனக்கிறது.


அருமையான காதல் கதை சில இடங்களில் மட்டும் மெதுவாக செல்கிறது , சேரனின் முகம் தான் வயதான தோற்றம் அளிக்கிறது நடிப்பு அருமை ,பத்மப்ரியா அழகான முஸ்லீம் பெண்ணாக , அருமையான நடிப்பு இறுதிகாட்சியில் வரும் வயதான தோற்றம் மிக அருமை. ஒளிப்பதிவு ,பின்னணி இசை பாராட்டும் படி உள்ளது.

(1970) ல் நடக்கும் அனைத்து காட்சி அமைப்புகளும் அருமை .

காதல் நினவு சின்னம் இந்த பொக்கிஷம் .

குத்துபாட்டு ,ஹீரோ பறந்து வருவது , பஞ்ச் பேசுவது இல்லாமல் மனதை வருடும் படம் சேரனின் கொடியை உயரே பறக்கவிட்ட படம் .


காதலின் அழுத்தத்தை இதைவிட சொல்ல முடியாது. தமிழை தவிர பிற மொழிகளில் இப்படி ஒரு படம் வந்திருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

Read More...

சுத‌ந்‌திர ‌தின‌ வா‌ழ்‌த்துக‌ள் !!!


சுத‌ந்‌திர ‌தின‌ம்: செங்கோட்டையில் கொடியேற்‌‌றினா‌ர் பிரதமர்
63 வது சுதந்திர தினத்தையட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை, தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்‌றினா‌ர்.

நாடு முழுவதும் சுதந்திரத் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் 6வது முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்‌றினா‌ர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிரு‌ந்தது.

செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை 24 மணி நேரமும் அதிரடிப் படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். 40 இடங்களில் சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறி தவறாமல் சுடுவதில் கில்லாடிகளான தேசிய அதிரடிப்படை வீரர்கள் செங்கோட்டையை சுற்றியுள்ள உயரமான கட்டிடங்களின்மேல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

விழா முடியும் வரை செங்கோட்டைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. செங்கோட்டையை சுற்றியுள்ள வான் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்க மாவோ இயக்கம் அழைப்பு விடுத்து இருப்பதால் பீகாரையொட்டி உள்ள இந்திய-நேபாள எல்லையில் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More...

நடிகை தீபிகா படுகோனேயுடன் டோனி மீண்டும் காதல்; “பேஷன்” விழாவுக்கு ஒன்றாக வந்தனர்-Again Dhoni love with Deepika Padukone!!!!!!!!!!!

கேப்டன் டோனியும், இந்தி நடிகை தீபிகாபடுகோனேயும் முன்பு ஒன்றாக சுற்றி வந்தனர். இருவரும் தீவிரமாக காதலிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இடையில் அவர்கள் காதல் உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் டோனி நடிகை லட்சுமி ராயை காதலிப்பதாக கூறப்பட்டது. அடுத்து கல்லூரி மாணவி ஒருவருடன் சுற்றுவதாகவும் தகவல் வந்தது. ஆனாலும் அவர் யாரை காதலிக்கிறார் என்பது தெரியாமலேயே இருந்தது.

இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் டோனி கலந்து கொண்டார். அவருடன் நடிகை தீபிகா படுகோனேயும் பங்கேற்றார். இருவரும் நவீன ஆடைகள் அணிந்து மேடையில் ஒன்றாக தோன்றினார்கள்.
இருவரும் மீண்டும் காதலிப்பதாகவும் அதனால் தான் ஒன்றாக விழாவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி டோனியிடம் கேட்டபோது பதில் சொல்லவில்லை. அடுத்து நடக்கும் பேஷன் ஷோவில் இருவரும் ஒன்றாக பங்கேற்பீர்களா? என்று கேட்டதற்கு அப்போது கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பேன் என்றார்.

Read More...

Actress life's in Danger Zone in Family Life - Application of Divorse ---Sonia Agarwal,Vindhya,Kavya Madavan

தேவதைகளாக திரையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்த கதாநாயகிகள் பலர் குடும்ப வாழ்க்கையில் தோற்றுப்போய் நிற்கிறார்கள். திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து மனுக்களுடன் கோர்ட்டுபடியேறும் அவலங்கள் தொடர்கிறது.

விந்தியா, சோனியா அகர்வால், காவ்யா மாதவன், பிரகாஷ்ராஜ் ஆகிய நான்கு பேரின் விவாகரத்து வழக்குகள் திரையுலகின் தற்போதைய உலுக்கல் நிகழ்வுகள்.

“காதல் கொண்டேன்” படம் மூலம் தமிழுக்கு வந்த சோனியா அகர்வால் அப்படத்தின் இயக்குனர் செல்வராகவனை மணந்து சினிமாவுக்கு முழுக்குப் போட்டு ஒதுங்கினார். சந்தோஷமாக நகர்ந்த அவர்கள் குடும்ப வாழ்க்கையில் இப்போது புயல். இருவரும் விவாகரத்து கேட்டு நிற்கிறார்கள்.


விந்தியாவுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது. கணவராக வந்தவர் பானுப்பிரியாவின் தம்பி கோபாலகிருஷ்ணன். “சங்கமம்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நிறைய தமிழ் படங்களில் நடித்து முடித்தார். திருமணத்துக்கு பின் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பெற்றோர் குடும்பத்தினர் சூழ திருப்பதியில் திருமணம் நடந்தது.

சேர்ந்து வாழ்வார்கள் என்று பார்த்தால் கருத்து வேறுபாடு தோன்றி பிரிந்து விட்டனர். சில மாதங்களாகவே தனித்தனியாகத்தான் வாழ்கிறார்கள். விந்தியா தியாகராய நகரில் உள்ள தாய் வீட்டுக்கும் கோபால கிருஷ்ணன் வளசரவாக்கத்தில் உள்ள அவரது பழைய வீட்டுக்கும் போய் விட்டனர். இருவரையும் சமாதானபடுத்த பலர் முயன்றனர். பயன் இல்லை.

இவர்கள் வழக்கை அடுத்த மாதம் 17-ந்தேதி விசாரிக்கப் போவதாக நீதிபதி கூறியுள்ளார்.

வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜின் விவாகரத்து வழக்கு வித்தியாசமானது. இவருக்கு குழந்தைகள் உள்ளனர். மனைவி லலிதாகுமாரி பழைய கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை. பிரகாஷ்ராஜ் விவாகரத்து கேட்டாலும் லலிதாகுமாரிக்கு உடன்பாடு இல்லை. கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார். கோர்ட்டிலும் கணவனோடு சேர்த்து வையுங்கள் என்று மனுபோட்டுள்ளார்.

மலையாள நடிகை காவ்யா மாதவன் தமிழ் படங்களிலும் நடித்தார். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடந்தது. அந்த குடும்பமும் பிரிந்து நிற்கிறது. மேலும் பல நடிகர், நடிகைகளும், விவாகரத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த விவாகரத்து வழக்குகள் புதுமுக கதாநாயகிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. குடும்ப வாழ்க்கையை நினைத்து இப்போதே அச்சப்படதுவங்கி உள்ளனர்.

நடிகைகள் தற்கொலை முயற்சியை தடுப்பதற்காக நடிகர் சங்கம் விசேஷ கவுன்சிலிங் கூட்டங்கள் நடத்தியது. அதுபோல் நட்சத்திர குடும்ப சண்டைகளிலும் தலையிட்டு அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Read More...

சின்னத்திரை பற்றிய செய்திகள்

தங்கம்
ரம்யா கிருஷ்ணனின் தங்கம் தொடரில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சியில் இறங்கியிருப்பது ரம்யா கிருஷ்ணன் குழுதான். ரம்யாவும், த்ரிஷாவும் நெருங்கிய தோழிகள் என்பதால் இந்த முயற்சி நிச்சயம் சாத்தியம் என்கிறது சின்னத்திரை பட்சிகள்.

முற்றுப்பெறாத கோலங்கள்
ஆறு வருடங்களைக் கடந்த பிறகும் கோலங்கள் தொடர் எப்போது முடியும் என்பது ஆண்டவனுக்கே தெரியாத விஷயமாக இருக்கும் நிலையில் தொடர் யூனிட்டுக்கு மட்டும் எப்படி தெரியும்.

மக்களின் ரசிப்புத் தன்மை, டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடம் என்ற சில காரணங்களால்தான் இந்த தொடர் நீட்டிப்புக்குக் காரணம் என்கிறது யூனிட் அறிக்கை.

நடிகையின் விவாகரத்து
திருமணமானதும் சின்னத்திரை தொடரில் நடித்து வந்த சோனியா அகர்வாலும், அவரது காதல் கணவன் செல்வராகவனும் பரஸ்பரம் ஒத்துப் போய் விவாகரத்து பெற நீதிமன்றத்தின் படியை மிதித்து விட்டனர்.

அவர்களின் விவாகரத்து மனு குடும்ப நல நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More...

வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்: குடியரசுத் தலைவர் சுதந்திர தின உரை

நாட்டில் வன்முறை மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக நாம் போரிட வேண்டும் என்று கூறியுள்ள குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், வலிமையான, ஒன்றுபட்ட மற்றும் முன்னேற்றம் காணும் இந்தியாவை நமக்காகவும், நமது வருங்கால சந்ததியினருக்காகவும் நாம் உருவாக்க வேண்டும் என்று நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் 63வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். அதன் விபரம்:

நாட்டின் 63வது சுதந்திர தின விழாவை நாம் நாளை கொண்டாடுகிறோம். இதையொட்டி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர்
மற்றும் துணை ராணுவப் படையினருக்கும் சிறப்பு நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறேன். இதேபோல் மத்திய மற்றும் மாநிலங்களில் காவல்துறையினர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

பல தலைவர்களின் தன்னலமற்ற தியாகத்தின் காரணமாக இந்தியா விடுதலையடைந்தது. நமது நாட்டின் தேசிய தலைவர்கள், தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் சுதந்திர போரட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நமது ஆழ்ந்த மரியாதையை தெரிவிக்கும் வகையில் என்னுடன் இணைந்து அஞ்சலி செலுத்த குடிமக்களை கேட்டுக் கொள்கிறேன்.

நாடு விடுதலை அடைந்தவுடன் எவ்வித தாமதமுமின்றி நாட்டின் வளர்ச்சிப் பணிகள் தொடங்கியது. நமது கண்ணோட்டம், கொள்கைகள் மற்றும் பொறுப்புகளை நமது நாட்டு தலைவர்களும், மக்களும் தீர்மானிக்கத் தொடங்கினர். ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு மற்றும் நமது கலாச்சார பாரம்பரியம் ஆகியவை நான்கு முக்கிய தூண்களாக விளங்குகின்றன.

இந்த ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவை பொதுத் தேர்தல்களில் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களையும் சென்றடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பகுதியில் ஒரே ஒரு வாக்காளர் மட்டுமே இருந்தாலும்கூட, அவர் தனது வாக்கை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜனநாயகத்திற்கு ஒற்றுமை உணர்வும், ஒவ்வொரு குடிமகனின் கருத்தும் இணைந்திருக்க வேண்டியது அவசியமாகும். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. ஜனநாயகமும், இந்தியாவும் பிரிக்க முடியாதவை என்பதை நிரூபிக்கும் வகையில் ஜனநாயகத்தை நாம் முன்னெடுத்து சென்றிருப்பதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது மக்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதற்கான வாய்ப்புகள் கிடைப்பது போல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மூலமாக அவர்களது குரல் ஒலிக்க வேண்டும். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு உறுப்பினரும் சராசரியாக 13 லட்சம் வாக்காளர்களின் பிரதிநிதியாக உள்ளார். இது சில நாடுகளின் மக்கள் தொகையைவிட கூடுதலாகும் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதியின் பொறுப்பு அதிகமாகிறது. மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அவர் பணியாற்ற வேண்டும். அதே நேரத்தில் தங்களது உரிமைகள் பற்றி அறிந்திருப்பதால் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் வசிக்கும் மக்களுக்கு வசதிகள் மற்றும் சேவைகள் திறமையான நிர்வாகத்தின் மூலமாக வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடனும் நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி தவறாக பயன்படுத்தப்படும் போது தீங்கு ஏற்படுகிறது. சுகாதாரம், கல்வி, சமூக மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவது போன்ற பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வகையில் அரசின் நலத்திட்டங்கள் அமைந்துள்ளன. இந்தத் திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த ஆண்டு பருவ மழை இயல்புக்கும் குறைவாக உள்ளதால், வேளாண்மை பாதிக்கப்பட்டு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலைகளை சந்திக்க நாம் தயாராக வேண்டும். இதனை சமாளிக்க அரசு எல்லா வகையிலும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. எச்1என்1 ப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பை சமாளிக்கவும் அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசின் இந்த முயற்சிகளுக்கு உதவ பொது மக்கள் முன்வர வேண்டும். மற்ற வளர்ச்சிக்கான முயற்சிகளிலும் பொது-தனியார் பங்கேற்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமுதாயக் குழுக்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக அரசின் முயற்சிகளுக்கு உதவ வேண்டும். குடிமக்கள் தங்களது சமூக பொறுப்புகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும்.

நமது நீடித்த ஜனநாயக நடைமுறை மற்றும் நிலையான பொருளாதார முன்னேற்றம் இந்தியாவை உயரமான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க முடிந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான பெரிய உள்நாட்டு சந்தை மற்றும் வலிமை நம்மிடம் உள்ளது. அறிவுசார் பொருளாதாரத்திலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளிலும் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.

எதிர்காலத்தை நம்பிக்கையுடன் சந்திப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம். நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு நமது கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை வலுப்படுத்த வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா உயர் தரத்தை எட்ட வேண்டும். இது அறிவுசார் சமுதாயத்தின் சர்வதேச தரத்திற்கான அளவுகோலாக அமைய வேண்டும்.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்க வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது. இந்த நிலையை நாம் எட்ட முடியும். பழங்காலத்தில் இருந்தே இந்தியா பொருளாதார ரீதியில் சிறந்து விளங்கியதுடன் அதன் வளத்திற்கும் உலகளாவிய அளவில் முக்கியத்துவத்திற்கும் பெயர் பெற்றுள்ளதை வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. சமூக மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவு பணியாற்ற வேண்டும். இதில் நாம் முக்கிய இடம் வகிக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்கேற்க இயலாத நலிந்த மக்களும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தேசிய நீரோட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகியவை கிடைக்கச் செய்ய வேண்டும். இது அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். இன்றைக்கு மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பள்ளி செல்லாத பெற்றோர்களின் பெண் குழந்தைகள் கல்லூரிகளில் சேருகின்றன. ஒரு தலைமுறைக்குள் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இது. கல்வி அறிவு பெற்றவராக இருப்பதால் கிடைக்கும் பயன்களை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது அனைவருக்கும் கல்வி என்ற நமது இலக்கை அடைய உதவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாகும்.நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகித அளவிற்கு உள்ள பெண்கள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றும் வகையில், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் அவர்கள் சக்தி படைத்தவர்களாக மாற, அதற்கான தேசிய இயக்கம் உதவும்.

முன்னேற்றம் காணும் சமுதாயம், பொருளாதார வல்லரசு மற்றும் ஜனநாயக நாடாக இந்தியா முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனினும், நமது செயல்பாடுகளை கணிப்பதற்கு என்ன அளவுகோல் உள்ளது? உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்த மாற்றங்களை சமாளிக்க நாம் என்ன செய்ய போகிறோம்? மதநல்லிணக்கமும், அமைதியும் நமது கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இது எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும். எனவே நாம் முன்னேற்ற பாதையில் செல்லும் போதுகூட இவைதான் நமக்கு பலத்தை அளிப்பதாக அமையும். நல்ல பாரம்பரியத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இடையே இணக்கமான உறவு நிலவ வேண்டும்.

கடந்த பல நூற்றாண்டுகளுக்கு பல்வேறு குழுக்களால் நமது நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் தகுதி நமது நாட்டிற்கு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே பல்வேறு நிலைப்பாடுகள் இருந்த போதிலும் ஒன்றுபட்ட சமுதாயமாக நாம் இருந்து வந்துள்ளோம். இந்த ஒற்றுமை நமது தத்துவமாகவே இருந்து வந்துள்ளது. வேறுபாடுகளை அதிகப்படுத்துவதற்கு பதிலாக அவற்றுக்கு தீர்வு காண இது உதவுகிறது.

அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதம் அமைதிக்கு எதிரானதாகும். இது எல்லா மதங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்பதால் இது கண்டிக்கத்தக்கது. அமைதியான சமுதாயம் மற்றும் அமைதியான உலகத்தை உருவாக்கும் வகையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

கடந்த 1857-ம் ஆண்டு நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் இருந்து நாம் போராடி கொண்டிருக்கிறோம். பிரித்தாலும் கொள்கைக்கு எதிராக நாம் போராடியிருக்கிறோம். சுதந்திர போராட்டத்தில் உயர்ந்த கொள்கைகள் அடிப்படையிலேயே நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். மதச்சார்பின்மை அனைத்து மதங்களுக்கும் சம அளவு மரியாதை ஆகியவற்றை நாம் பின்பற்றி வந்துள்ளோம். இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிக்கள் என்று எந்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் எனது சகோதர, சகோதரிகளான அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்.

முன்னேற்றம் ஏற்பட சமூக நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. பல்வேறு நிறங்களையும், வாசனைகளையும் கொண்டுள்ள மலர்களை கோர்க்கும் நூலாக அது உள்ளது. மனிதர்களாக நாம் பிளவுபடாமல் ஒன்றுபட்டு இருப்பதை நாம் நிரூபிக்க வேண்டும். வன்முறை மற்றும் பிரிவினை வாதத்திற்கு எதிராக நாம் போரிட வேண்டும். அவநம்பிக்கை, வெறுப்பு போன்ற உணர்வுகள் இருந்தால் நாம் முன்னேற்றம் காண முடியாது. எனவே, நாம் வலிமையான, ஒன்றுபட்ட மற்றும் முன்னேற்றம் காணும் இந்தியாவை நமக்காகவும் நமது வருங்கால சந்ததியினருக்காகவும் உருவாக்க வேண்டும்.

குடிமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Read More...

Thursday, August 13, 2009

விவாகரத்து கோரி செல்வராகவன்- சோனியா அகர்வால் மனு - Director Selvaragavan, Actors Sonia Agarwal - Divorce

நடிகை சோனியா அகர்வாலும், அவரது கணவர் செல்வராகவனும் விவாகரத்து வழங்க கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து‌ள்ளன‌ர்.

'காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். பஞ்சாபை சேர்ந்த இவர், மும்பையில் மாடலிங் செய்து வந்தார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்தார். அப்போது, நடிகர் தனுஷின் அண்ணன் இயக்குநர் செல்வராகவனுக்கு அறிமுகமானார்.

இதையடுத்து, தனுஷ் நடித்த, 'காதல் கொண்டேன்’
திரைப்படத்தில் சோனியா அகர்வாலை கதாநாயகியாக செல்வராகவன் அறிமுகம் செய்தார். பின்னர், '7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் நடிக்க வைத்தார். அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2006 டிசம்பர் 15இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தனுசுடன் ‘புதுப்பேட்டை’, விஜயுடன் ‘மதுர’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

இந்நிலையில், சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் மனமுவந்து விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, செல்வராகவனும் சோனியா அகர்வாலும் தனது வழ‌க்க‌றிஞ‌ர் ஆர்த்தியுடன் செ‌ன்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்துக்கு நேற்று வந்தனர்.

அவர்கள் முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் ஆஜராகி தாங்கள் ஒருமனதாக விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Read More...

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க‌ சில யோசனைகள் - Tips to Avoid Swin Flu

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகளை பொது ம‌க்களு‌க்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதனை ‌பி‌ன்ப‌ற்‌றி ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை தடு‌ப்போ‌ம்.

சுகாதாரமாக வாழு‌ங்க‌ள்
தினமு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் ஒரு வேளை சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கு‌ளியு‌ங்க‌ள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பை‌க் கொ‌ண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல், முக‌ம், கழு‌த்து‌ப் பகு‌திகளை சு‌த்தமான த‌ண்‌ணீரா‌ல் ந‌ன்கு கழுவு‌ங்க‌ள்.

இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு உற‌க்க‌ம் அவ‌சிய‌ம்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.

மது அருந்த வே‌ண்டா‌ம்
மது அருந்தினால் உடலில் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி குறையு‌ம். இதனா‌ல் பன்றி காய்ச்சல் போ‌ன்ற நோய்க்கிருமிக‌ள் உடலு‌க்கு‌ள் எ‌ளிதாக ஊடுருவு‌ம் எ‌ன்பதா‌ல் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடை‌ப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.

இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ல்வதை த‌விரு‌ங்க‌ள்
தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவ‌ற்றை தொடுவதையும் தவிருங்கள்.

உட‌ல் நல‌க் குறைவை‌த் த‌விர வேறு எ‌ந்த‌க் காரண‌த்‌தி‌ற்காகவு‌ம் குழ‌ந்தைகளை மரு‌த்துவமனை‌க்கு அழை‌த்து வரா‌தீ‌ர்க‌ள்.

குழ‌ந்தைகளை வெ‌ளி‌யி‌ல் கொ‌ண்டு செ‌ல்வதை‌த் த‌விரு‌ங்க‌ள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் குழ‌ந்தைகளை‌த் தூ‌க்கா‌தீ‌ர்‌க‌ள். உடனடியாக உடலை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பி‌ன்னரே அடு‌த்த வேலையை‌த் துவ‌க்கு‌ங்கள‌்.

மரு‌த்துவரை அணுகு‌ங்க‌ள்
இருமல், காய்ச்சல் இருந்தால் மரு‌த்துவரை சந்தித்து ஆலோசித்து, அவரது யோசனைகளின்படி மருந்து சாப்பிடுங்கள்.

சாதாரண கா‌ய்‌ச்ச‌ல் எ‌ன்று ‌நீ‌ங்களாக எ‌ந்த மரு‌ந்தையு‌ம் வா‌ங்‌கி சா‌ப்‌பிடா‌தீ‌ர்க‌ள். கா‌ய்‌ச்ச‌ல் வ‌ந்தவ‌ரி‌ன் அரு‌கி‌ல் செ‌ல்வதை த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள். குழ‌ந்தைகளையு‌ம் அனு‌ப்ப வே‌ண்டா‌ம்.

வெ‌ளி நாடு ம‌ற்று‌ம் வெ‌ளி மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வ‌ந்தவ‌ர்களை செ‌ன்று பா‌ர்‌ப்பதை‌த் த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள்.

பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அவ்வப்போது அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

Read More...

அழகர் மலை - Azhagar Malai Movie Review

ஒரு ஊ‌ரில் இரண்டு பெ‌ரிய மனிதர்கள். இரண்டு பேருக்கும் ஜென்ம பகை... காலங்காலமாக சொல்லப்படும் கதைதான் அழகர் மலை. அதில் இயக்குனர் ஊற்றியிருக்கும் காமெடி சாறு... ரொம்ப ஜோரு.

நெப்போலியனும், ஆர்கேயும் அண்ணன் தம்பிகள். அண்ணன் தலைவனைப் போல என்றால் தம்பி தறுதலை. திருமணம் வேண்டாமென்று வெறுமனே இருக்கும் நெப்சுக்கு தம்பியை மணக்கோலத்தில் பார்க்க ஆசை. பெண்ணும் பார்க்கிறார். அங்குதான் ஆரம்பமாகிறது தலைவலி.

குடியும், கூத்துமாக இருக்கும் ஆர்கே என்றாலே ஓடி ஒளிகிறார்கள் பெண்ணை பெற்றவர்கள். அத்துடன் பலாத்கார புகார் ஒன்றும் விழுகிறது ஆர்கே மீது. ஊ‌ரின் இன்னொரு பெ‌ரிய புள்ளி லாலும் நெப்போலியன் மாதி‌ரியே காவி கட்டி அலைகிறார். ஆர்கே-க்கு திருமணமே நடக்கக் கூடாது என்பது லாலின் சபதம். காளைக்கேற்ற கயிறு மாதி‌ரி அவருக்கொரு தங்கை, ஸ்ரீவித்யா.

தோழி வீட்டுக்கு வரும் பானு ஆர்கே-யின் காயம்பட்ட மனசுக்கு களிம்பு தடவிப் போகிறார். ஆர்கே-யும், பானுவும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

கிக் பண்ண தெ‌ரிந்தால் ஆ‌க்சன் ஹீரோ, கிளிச‌ரின் போட்டால் சென்டிமெண்ட், ஆனால் காமெடி...? சிலருக்கு மட்டுமே சித்திக்கும் அபூர்வ வரம். ஆச்ச‌ரியமாக அதில் கொஞ்சம் ஆர்கே-க்கும் சிக்கியிருக்கிறது. இவரும் வடிவேலும் சேரும் போதெல்லாம் சி‌ரிப்பில் புரையேறுகிறது. நடனக் காட்சியில்தான் சோளக் கொல்லை பொம்மை மாதி‌ரி சுணக்கம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பானு. நடனக் காட்சியில் மட்டுமே திறமையை காட்ட வாய்ப்பு. படத்தின் காமெடி ஹீரோ வடிவேலு. இவரும் ஆர்கேயும் டீக்கடை பென்சை டாஸ்மாக் பாராக்குவது சி‌ரிப்பு போதை. ஒவ்வொரு முறையும் ஆர்கே வடிவேலுவை சிக்க வைப்பதும், வடிவேலு சின்னாபின்னமாவதும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சரவெடி.

பாசக்கார அண்ணன் நெப்போலியனும், பேசியே கொல்லும் லாலும் காவி கட்டுவதற்கு மணிவண்ணன் தரும் பிளாஷ்பேக் விளக்கம், பயங்கரம். ஸ்ரீவித்யாவின் தற்கொலை தேவையில்லாத திணிப்பு. ரஞ்சிதா, சுகன்யா, சரவணன் ஆகியோரும் வந்து போகிறார்கள்.

இசை இளையராஜா. கருகமணி பாடலில் மட்டும் ராஜா, மற்றபடி சாதா. கமர்ஷியல் இலக்கணம் மீறாத ஒளிப்பதிவு. ஆ‌க்சன் படமான அழகர் மலையில் காமெடிதான் தூ‌ண், மற்றதெல்லாம் வீண்.

Read More...

Wednesday, August 12, 2009

ஷேவாக் மீது மோசடி புகார் - Sehwag in criminal case

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர ஷேவாக். இவரது பெயரில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் உள்ளது. இந்த ஓட்டலை ஷேவாக்கும், அவரது பார்டனர் சித்தார்த்தும் நடத்தி வந்தனர். இந்த ரெஸ்டாரண்ட் பெயரில் ஒப்பந்த அடிப்படையில் (பிரான்சைஸ்) வேறு நகரங்களில் ஓட்டல் தொடங்கலாம் என்று 2006-ம் ஆண்டு விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஐதராபாத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் ரஜத் சர்மா ரூ.2.4 லட்சம் கொடுத்து பிரான்சைஸ் பெற விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு பிரான்சைசும் கொடுக்கப்படவில்லை. பணத்தையும் ஷேவாக் திருப்பி கொடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து பணத்தை திருப்பி தருமாறு ஷேவாக் மீது அலகாபாத்தில் உள்ள சிவில் சாலைஸ் போலீஸ் நிலையத்தில் ரஜத்சர்மா புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் மீது இதுவரை எப்.ஐ.ஆர். தயாரிக்கப்படவில்லை என்றும், முதல் கட்டமாக இது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் சிவில் லைனஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த தொழிலில் தன்னை தனது பார்ட்னர் சித்தார்த்தே ஏமாற்றி விட்டதாக ஷேவாக் கூறியுள்ளார்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009