Saturday, August 8, 2009

சுற்றுலா செல்ல இருக்கீங்களா...?

சுற்றுலா செல்வதென்றால் எல்லாருக்கும் குஷ’ தான். ஆனால், உள்ளூரில் இருக்கும் போது எடுக்கும் முன்னெச்சரிக்கையை விட, சுற்றுலாவின் போது நாம் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற குறிப்பிட்ட கோளாறை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை, மருந்து சாப்பிடுவது என்பது முக்கியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பொதுவாக பாதிக்கக்கூடிய கோளாறு, "டிராவில் டயேரியா'' தான். போகிற இடங்களில் சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருந்தாலோ, சரியான சுற்றுச்சூழல் சுகாதாரம் இல்லாமல் இருந்தாலோ இந்த கோளாறு யாருக்கும் வரும். அதிலும், குழந்தைகளுக்கு சுலபமாக வரும்.

சாதாரண மலச்சிக்கலில் இருந்து ஆரம்பிக்கும் இந்த பாதிப்பு, ஒரு வாரம் வரை விடாது. காய்ச்சல், வயிற்று வலி என்று பாடாய்ப்படுத்தி விடும். இன்னொரு பொதுவான சுற்றுலா பயணத்தில் வரும் கோளாறு கிறுகிறுப்பு.

"தலைசுற்றலில் ஆரம்பித்து வாந்தி, பேதியில் முடியும். அதனால், உடலில் தண்­ர் வற்றிப்போய், வேறு கோளாறில் விட்டுவிடும்; சிறுநீர் போவதில் பிரச்னை ஏற்படும்; இதனால், சுற்றுலா போகும் ஆசையே விட்டுவிடும் நிலை ஏற்படும்'' என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிபுணர் சுப்ரமணியன் கூறினார்.

இதனால், சுற்றுலா போகும் போது முதலுதவி பெட்டியில், அயோடின், பேன்டேஜ், டேப், கொசுவர்த்தி, எலக்ட்ரோலைட்ஸ், ஆன்டாசிட்ஸ், ஆன்டிபயோடிக் ஆயின்ட்மென்ட்ஸ், டயேரியா தடுப்பு மருந்து, காய்ச்சல், வலி நிவாரணி ஆகியவை வைத்திருக்க வேண்டும்.

சுற்றுலா போகும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பில் வாந்தி, பேதி ஏற்படும் போது, எலக்ட்ரோலைட்ஸ் மிக முக்கியம். அதை தண்­ரில் கலக்கி குடித்தாலே போதுமானது; பாதிப்பை தவிர்க்கலாம். மூக்கை உறிஞ்சுவது, இருமல் போன்ற பாதிப்புபோக, "ஆன்டிஹ’ஸ்டாமின்'' மாத்திரை பலனளிக்கும்.

தலை சுற்றல் இருப்பவர்கள் எலுமிச்சம்பழத்தை முகர்ந்து பார்க்கலாம். தலைவலி தைலங்களையும் எடுத்துச் செல்லலாம்.

Read More...

கடி ஜோக்ஸ் - Romba Kadi ! ! !

''எதுக்குடா எதிர்க்கட்சித் தலைவரை கடிச்சு வச்சீங்க?''

''நீங்கதானே தலைவரே அவர் மேல ''பல்முனை'' தாக்குதல் தொடர வேண்டுமுன்னு மேடையில அறிவிச்சீங்க!''

''இனிமேல் நீங்க அதிகமா நடக்கணும்!''

''உங்ககிட்டே ட்ரீட்மெண்டுக்கு வந்த பின்னாடி எங்கிட்டே இருந்த காரை வித்துட்டு இப்பல்லாம் எங்கே போனாலும் நடந்தேதான் போறேன் டாக்டர்!''

''நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்...''

''அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க...!''


''எருமை வெளியே போகும்போது தன் ஆண் கன்றிடம் என்ன சொல்லிட்டுப் போகும்?''


''BI SON''

மனைவி: என்னங்க இது ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே.. எதுக்கு?
கணவன்: நீ தானே "டெய்லி காலண்டர்" வாங்கிட்டு வாங்கனு சொன்னே..!

ராமு: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க...
சோமு: பரவாயில்லையே... நிஜமாகவா..?
ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..



மேனேஜர்: இந்த ஆபிஸ”க்கு நான் மேனேஜரா? இல்லே நீ மேனேஜரா?
வேலையாள்: நீங்க கோபப்படற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலையே சார்?
மேனேஜர்: அட... அதில்லையா.. கொஞ்ச நாளா எனக்கு ஞாபக மறதியா இருக்கு. அதான் கேட்டேன்..!

அந்தப் படம் பயங்கர சண்டைபடம்தான். அதுக்காக இப்படி பண்ணக் கூடாது...
ஏன்?
டிக்கட் கொடுக்கும் போதே மூஞ்சியில் ஒரு குத்து விடறாங்க.


ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் மசாலா படங்கள் எடுக்கறதில்லே?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.



பெரியவர்: டேய் உங்க அப்பா எங்கே.?
சிறுவன்: ஹோம் வொர்க் பண்ணிகிட்டு இருக்காரு...
பெரியவர்: உன்னோட ஸ்கூல் பாடத்தை அவர் எழுதறாரா?
சிறுவன்: இல்லே காய்கறி நறுக்கிகிட்டு இருக்காருன்னு சொன்னேன்.

Read More...

சாந்தனுவுடன் சந்தியா காதலா? Santhanu love with Sandhya

சாந்தனுவும், சந்தியாவும் காதலிப்பதாகச் செய்திகள் வெளியானது. இதுபற்றி சந்தியா கூறியதாவது: என் காதலை பற்றி நிறைய செய்திகள் வெளிவந்து விட்டது. இப்போது சாந்தனுவுடன் வருகிறது. அவரது சகோதரி சரண்யா எனக்கு நெருக்கமான தோழி. அவர் மூலமாக சாந்தனு அறிமுகமானார். இருவரும் நல்ல நண்பர்கள். அதை காதல் என்று கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். இதை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இந்த நிமிடம் வரைக்கும் யாருடனும் காதல் இல்லை. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஓடிப்போலாமா, நூற்றுக்கு நூறு, ஆப்த ரட்ஷகா என படங்கள் இருக்கிறது. இன்னும் புதிய புதிய கேரக்டர்களில் நடித்து புகழ்பெற வேண்டும் என்றார்.

Read More...

ஜ“வா - திவ்யா இணையும் சிங்கம் புலி

குத்து, கிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்த ரம்யா, இடையில் கன்னட சினிமாவுக்கு சென்றுவிட்டார். பொல்லாதவன் படம் மூலம் திவ்யாவாகி ரீ என்ட்ரி அடித்தவர், இப்போது கோலிவுட்டிலும் பிசி. ஐபிஎல் கிரிக்கெட் டீமை வாங்கியிருக்கிறார், அரசியலுக்கு வருகிறார் என பல பரபரப்புகளுக்கிடையே அவரை சந்தித்தபோது, அவர் அளித்த பேட்டி: என்னைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் அதை சாதாரணமா எடுத்துக் கொள்ளமாட்டேன். நிஜமான விஷயங்கள் வரும்போது அதை ஒப்புக்கொள்வேன். பொய்யான தகவல் பரவும்போது அதற்கு பதில் சொல்றது என் கடமை என பொறுப்பாக பேசுகிறார் திவ்யா. எம்.பி. சீட்டுக்கு போட்டியிட ஒரு கட்சியிலயிருந்து கேட்டாங்களாமே? என் குடும்பத்துக்காரங்க, சிலபேர் கர்நாடக அரசியல்ல இருக்கிறாங்க. அதனால கேட்டிருக்கலாம்.

ஆனா, எனக்கு அரசியல் ஞானம் கிடையாது. 25 வயசுதான் ஆகுது. எதை வச்சு என்னைப்போய் தேர்தல்ல போட்டியிட கேட்டாங்கன்னு யோசிக்கிறேன். ஐபிஎல் கிரிக்கெட் டீமை வாங்கிவிட்டதா பேச்சு அடிபட்டதே? புரளிதான். அது பத்தி பேசினது உண்மை. ஆனா அதுக்குன்னு நேரம் ஒதுக்கி, டீம் வளர்ச்சியில கவனம் செலுத்த நம்மால முடியாது. தமிழ்ல சிங்கம் புலி, காதல் டூ கல்யாணம் படங்கள் இருக்கு. கன்னடத்துல ரெண்டு படம் இருக்கு. வெற்றிமாறன் இயக்கத்துல இன்னொரு தமிழ் படத்துலேயும் நடிக்கப்போறேன். கன்னட டீம், ஐபிஎல்ல ஆடினா, அதை ஊக்குவிக்க போவேன். அக்டோபர்ல சாம்பியன் கோப்பை நடக்குது. அதுல பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் டீமோட விளம்பர அம்பாசிடரா என்னை தேர்வு பண்ணியிருக்காங்க. தமிழை விட கன்னட சினிமாவுக்கு முக்கியத்துவம் தர்றதா சொல்றாங்க? போன வருஷம் என்னோட ஒரு கன்னட படம் ரிலீசாச்சு. தமிழ்ல ரெண்டு படம். இப்போ தமிழ்ல மூணு படம் பண்றேன். கன்னடத்துல ரெண்டு படம்தான். என்னைப் பொறுத்தவரை மொழியை பார்க்கிறது கிடையாது. நல்ல ரோலுக்கு மட்டும் முக்கியத்துவம் தர்றேன். பெங்களூர்ல பிறந்தாலும் சென்னைல 16 வருஷம் இருந்திருக்கேன். என்னோட சிறுவயதை கழிச்ச இடம் இது. இதை மறக்கமாட்டேன். துரோகில நடிக்க மறுத்துட்டீங்களாமே? அது ரெண்டு ஹ“ரோயின் கதை. கதைப்படி அம்மா, பொண்ணுன்னு ரோல் இருக்கு. அது எனக்கு ஒத்துவராதுன்னு மறுத்துட்டேன்.

Read More...

சாயா சிங்குக்கு கல்யாணம் - Marriage for Chaya Singh

நடிகை சாயா சிங்குக்கு விரைவில் கெட்டிமேளம் கொட்டத் தயாராகிவிட்டனர் அவரது பெற்றோர். ஹைதராபாத்தைச் சேர்ந்த இரும்பு வர்த்தகரைத் திருமணம் செய்ய இருக்கிறார் சாயா சிங். திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் மூலம் படு பிரபலமாகி, பின்பு அதே வேகத்தில் காணாமல் போனவர் சாயா சிங். வல்லமை தாராயோ படத்தில் மீண்டும் நடிக்க வந்தாலும், பெரிய வரவேற்பு அவருக்குக் கிடைக்கவில்லை. இப்போது அவர் கைவசம் ஒரே ஒரு படம் மட்டும்தான் உள்ளது. அது ஷங்கர் தயாரிப்பில் நாகா இயக்கும் அனந்தபுரத்து வீடு. இப்போது இந்தப் படம் முடிந்த கையோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் சாயா.
அவருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த இரும்பு - ஹார்டுவேர் வர்த்தகர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப் பிறகும் சாயா நடிப்பைத் தொடர்வார் என முன்கூட்டியே தெரிவித்துள்ளார் சாயாவின் அம்மா.

Read More...

பாட கூப்பிட்டா சொல்லுங்க! - சரண்யா மோகன் (Ready to sing also by Saranya Mohan)!!!!!!!!!!

உள் மனசில் வைத்த ஐஸ் கிரீம் மாதிரி ஜில்லென்று இருப்பவர் சரண்யா மோகன். யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு என்று இவர் நடித்த படங்களில் பாதி சூப்பர் ஹிட்! மீதி படங்களோ சோக லிஸ்ட்! வெண்ணிலா ஹிட்டுக்கு பிறகு சென்னையில் பங்களா பிடித்து செட்டில் ஆகிவிடுவார் என்று எதிர்பார்த்தால், கேரளாவில் பி.ஏ.ஆங்கில இலக்கியம் படிக்க போய்விட்டாராம். அவ்வளவுதானா தமிழ்? கேரளாவுக்கு போன் போட்டு கேட்டால், “ஐய்யே... கொஞ்சம் கேப் விட்டா அப்படியே வீட்டுக்கு அனுப்பிடுவீங்களே” என்றார். (ஆஹா மூச் வந்திருச்சுங்க..)

தமிழ்ல நடிக்க நல்ல கதையா கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரம் அறிவிப்பு வரும் பாருங்க. வெண்ணிலா கபடிக் குழு படத்திற்கு பிறகு ஏராளமான படங்களில் நடிக்க ஆஃபர் வந்திச்சு. வந்தோமா, போனோமான்னு இல்லாம நல்ல கதையா இருக்கணும் என்று மெனக்கெடுறேன். அதனாலதான் இந்த கேப் என்றார். ஓய்வு நேரத்தில் சங்கீதம் கத்துக்கிறேன். யாராவது பாட கூப்பிட்டா சொல்லுங்க என்று ஐஸ்கிரீமில் மேலும் கொஞ்சம் சர்க்கரையை கொட்டுது பொண்ணு. ரீசண்ட்டா ஒரு கதை கேட்டேன். அப்படியே பிரமிச்சு போயிட்டேன். உடனே ஓ.கே சொல்லிட்டு ஷ§ட்டிங் போயாச்சு. கெமிஸ்ட்ரின்னு படத்து பேரு. வுஜி தம்பின்னு மலையாளத்திலே பேமஸ் ஆன டைரக்டர். புதுமுக ஹீரோவுடன் பாதி படத்துக்கு மேலே முடிஞ்சாச்சு. இதுக்கு பிறகு தமிழ்தான் என்றவரிடம், கிளாமரா நடிப்பீங்களா என்ற கேள்வியை கேட்டது தப்பா போச்சு. எதிர் முனை கட்! சிறிது நேரம் கழித்து நல்லாதானே பேசிட்டு இருந்தீங்க. ஏன் இப்படியெல்லாம் கேட்கிறீங்க என்றார். ஆஹா, கவர்ச்சிங்கிற வார்த்தையை சொன்னதுக்கே கட்டா? போச்சுரா...

Read More...

அரிசி, ரவையில் பூச்சியா...?


பருப்புகளை வேக வைக்க, தண்­ருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
உருளைக்கிழங்கை வேக வைக்க, தண்­ருடன் சிறிது மஞ்சள், எண்ணெய் சேர்த்து, வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். இதனால், உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

உளுத்தம் பருப்பை வடைக்கு ஊற வைக்கும்போது, ஒரு மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். அதிக நேரம் ஊற வைத்தால், நிறைய எண்ணெய் உறிஞ்சும்.


சிறு துண்டு பெருங்காய கட்டியை மஞ்சள் மற்றும் மிளகாய் தூளுடன் போட்டு வைத்தால் பூச்சுகள் வராது.

சர்க்கரை டப்பாவில் மூன்று அல்லது நான்கு கிராம்பை போட்டு வைத்தால் எறும்பு வராது.

சர்க்கரை டப்பாவை சுற்றி மஞ்சள் பொடி தூவி வைத்தால், எறும்பு வராது. அல்லது பெருங்காயத்துண்டுகள் உள்ள டப்பாவின் மேல் சர்க்கரை டப்பாவை வைத்தால் எறும்பு வராது.

Read More...

அன்புள்ள ஆவியே - A Lovable Ghost (Short story)

"ஙொய்ய்ய்..." என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத் துளைத்தது. படுத்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச் சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக் கூப்பிட்டார்.
"குருதேவா! இதென்ன விசித்திரமாக இருக்கிறது? இது மாதிரிச் சின்னச் சின்னப் பறவைகளை இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே!" என்றான் மட்டி.

அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன.

வலி தாங்காத குரு, கத்தினார், சீடர்களும் அவருடன் சேர்ந்து கூச்சல் போட்டனர்.

"குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?" எனக் கேட்டான், மடையன்.

அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், "ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் நூறு பறவைகள் இருந்தன. எல்லாவற்றையும் அம்பு கோட்டுக் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான் இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன" என்று புளுகினார்.

உடனே சிஷ்யர்கள், "அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை மன்னித்து, எங்களுக்குத் தொல்லை தராமல் இருங்கள்" என்று ஒவ்வொரு கொசுவிடமும் வேண்டினார்கள்.

"உஸ்ஸ்... சத்தம் போடாதே... ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால் எல்லாப் பறவைளையும் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்" என்று மெல்லக் கூறினான், முட்டாள்.


"குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!" என்று குதித்தான், மூடன்.


"அதைவிட, அதற்குக் 'கிச்சு கிச்சு' மூட்டி, அது சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!" என்றான் மண்டு.


"சரி...சரி... முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள்" என்று கட்டளை இட்டார் குரு.


மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை அடிக்க நினைத்தான் முட்டாள். தன் தலையில் இருந்த கொள்ளிக் கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.


மண்டையில நெருப்புப் பட்டதும், "ஐயோ..." என்று கதறினான் மண்டு.


மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப் பார்த்தார். அதற்குள் அது பறந்து போய் விட்டது.


சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் வேறு எங்கோ பறந்து சென்று விட்டன.


"குருவே" இந்தப் பறவைகளுக்கு மந்திரம் தெரியும் போலிருக்கிறது. நம் திட்டத்தைத் தெரிந்து கொண்டு மாயமாய் மறைந்து விட்டன" என்றான்.


"வேறு வழியில்தான் பிடிக்க வேண்டும்" என்றான், மண்டு.


"இந்தப் பறவைகளுக்கு எதிரியாக ஏதாவது பூச்சிகளைப் பிடித்து வந்துவிட வேண்டும். அவை இரண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்" என்றான் முட்டாள்.


முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர்.


இரண்டு நாட்கள் சென்றன. கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன.


"சே! பெரிய தொல்லையாகப் போய்விட்டதே! என்ன செய்வது?" என்று பரமார்த்தர் கேட்டார்.


"குருவே! எனக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றி விட்டது. 'மூட்டைப் பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம்' என்று சொல்கிறார்களே! அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று கேட்டான் மட்டி.


"ஆமாம் குருவே! நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம்!" என்றான் மடையன்.


"குருவே! அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம்! எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம்!" என்றான் மூடன்.


"அப்படிச் செய்தால் செத்துப் போய் விடுவோமே?" என்றான் மண்டு.


"செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!" என்றான் மூடன்.

"பலே மூடா!" என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர்.

அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்றனர்.

''திகு, திகு'' என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தலாய்க் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.

சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து காப்பாற்றினார்கள்.

அப்போதும் ''சே! இந்த அறிவு கெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப் பாழாக்கி விட்டார்களே!'' என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்!

Read More...

கந்தசாமியுடன் போட்டி போடும் பொக்கிஷம் - IS POKKISHAM CONTESTING WITH KANTHASWAMY

விக்ரம் நடிப்பில் கலைப்புலி தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள கந்தசாமி திரைப்படம் விரைவில் திரையைத் தொடவிருக்கிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தப் படம் 900 திரையரங்குகளில் ரிலீசாவதால், அந்த தேதியில் வெளியாகவிருந்த கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படமே தள்ளிப் போடப்படுகிறது. ஆனாலும் ஒரே ஒரு படைப்பாளி தனது படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக கந்தசாமியுடன் மோதத் தயாராக உள்ளார். அவர் சேரன்! அவரது பொக்கிஷம் படம் நாளை சென்சார் சான்றிதழ் பெறுகிறது.

கந்தசாமி வெளியாகும் அதே தேதியில் பொக்கிஷமும் உலகமெங்கும் வெளியாகிறது. நான் எந்தப் படத்தையும் போட்டியாக நினைப்பதில்லை. காரணம் நான் போட்டிக்குப் போவதில்லை. இந்தப் படம் இதயப்பூர்வமான காதல் கதை. இளைஞர்கள் விரும்பும் படமாக இருக்கும். ஜெயிக்கும், என்கிறார் சேரன்.

Read More...

இளமையாகும் குஷ்பு - Kuspoo

பல லட்சம் செலவில் குஷ்புவை இளமையாக்குகிறார்கள். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து தொழில்நுட்பக் கலைஞர்கள் சென்னை வந்துள்ளனர்.

என்ன குழப்பமாக இருக்கிறதா? குழம்புவதற்கு இதில் ஒன்றுமில்லை. விஷயத்தை வி‌ரிவாக கேட்டால் உங்களுக்கே விளங்கிவிடும்.

தியாகராஜன் இயக்கும் பொன்னர் சங்க‌ரில் குஷ்பு தாமரை நாச்சியார் என்ற வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஜெயராம். இவர்கள் இருவ‌ரின் இளமைக்கால காட்சி படத்தில் இடம் பெறுகிறது. இளமை என்றால், 16 வயது குஷ்பு, 20 வயது ஜெயராம்.

குஷ்புவை பதினாறு வயதாக காண்பிக்க வாரணம் ஆயிரம் சூர்யா மாதி‌ரி இளைக்க சொல்லவா முடியும்? கிராஃபிக்ஸில் இளமையாக மாற்றுவதற்கு ஹாலிவுட் கலைஞர்களை வரவழைத்திருக்கிறார்கள். இதற்கே பல லட்சம் பட்ஜெட்டில் காலியாகிவிடும் என்கிறார்கள்.

பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜரூராக நடந்து வந்தது. யானைகள் எல்லாம் படப்பிடிப்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தன. பழங்கால குடிசை, கோயில் என்று ஒரே அமர்க்களம். பிரசாந்த் நடித்த படங்களில் இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்கிறார்கள். எப்படியோ... அப்பாவும், புள்ளையும் கலக்குறாங்க.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009