Saturday, July 18, 2009

Beauty Tips - Maintain u r beauty to follow this valuable tips

பளிச் முகத்துக்கு
பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள். பளிச் முகம் இப்போது!

முகப் பொலிவுக்கு

வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகு கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.

கருப்பு திட்டுகள் மறைய
மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம் ஜாதிக்காய் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்.. மங்கு படர்ந்த பகுதிகள் மளாரென மறைந்துபோகும்!

கருவளையம் மறைய
கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்... அதற்கு வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.

சருமம் கருமை மாற
முட்டைகோஸ’ன் வெளிப்புற இலைகளை எடுத்து மிக்ஸ’யிலிட்டு சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.

கழுத்தைப் பராமரிக்க
நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும்.... ஒரு ஸ்பூன் வெங்காயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய டபுள் சின் நாளடைவில் சூப்பர் சின் ஆகி விடும்!

முகத்தில் புதுப்பொலிவுக்கு
தர்பூசணி (Watermelon) பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசி வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும். பப்பாளிப்பழமும் (Papaya) அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது!

சிவந்த இதழ்களுக்கு
சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர செவ்வாய் (திங்களுக்குப் பின் வருவதல்ல சிவந்த அழகான இதழ்கள்) வரும் நிச்சயம்!

Read More...

வாமனன் விமர்சனம் - Vamanan Review

சுப்பிரமணியபுரம் வெற்றிக்குப் பிறகு ஜெய் நடித்திருக்கும் படம். சூப்பர் ஹீரோவாக பன்ச் டயலாக் பேசி எதி‌ரிகளையும், நம்மையும் வதம் பண்ணாமல் யதார்த்தமாக வந்து போவதற்கு முதலில் சபாஷ்.

இரண்டு டிராக்காக பயணிக்கிறது கதை. ஜெய்க்கு சினிமாவில் ஹீரோவாகும் ஆசை. ஊ‌ரிலிருந்து கிளம்பி வந்து நண்பன் சந்தானத்தின் அறையில் தங்கி சென்னையில் வாய்ப்பு தேடுகிறார். ஊ‌ரிலிருந்து கிளம்பி வரும் ஹீரோவுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகவே சென்னையில் ஒரு காமெடி நண்பர் இருப்பது இந்தப் படத்திலும் ‌ரிப்பீட்.


ஜெய் நடிக்க வாய்ப்பு கேட்டு போகும் இடங்கள் வாய்ப்பு தேடுகிறவர்களுக்கு பாடசாலை. திட்டு வாங்கிக் கொண்டு அதை சமாளிக்கும் இடத்தில் ஜெய் ' 'ஜெய்'க்கிறார்.

ப்‌ரியாவை பார்த்ததும் காதல் வருவதும், மோதலில் தொடங்கும் காதல் பிறகு கூடலில் முடிவதும் பழம் பஞ்சாங்க எபிசோட். ப்‌ரியாவின் அம்மா ஊர்வசியை சமையல் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்துவதாக கூறி ஜெய்யும், சந்தானமும் கலாய்க்கும் இடத்தில் வயிறு புண்ணாகிறது. ஊர்வசியின் நடிப்புக்கு நகைச்சுவை மாமணி பட்டமே தரலாம்.

காதலும் கலாட்டாவுமாக செல்லும் கதையில் க்ரைமை சேர்க்கிறது லட்சுமிராயின் மரணம். மாடலாக வந்து சொற்ப நேரத்திலேயே உயிரை விடுகிறார் லட்சுமிராய். அவரது கொலைப்பழி ஜெய் மீது விழ, பரமபத ஆட்டம் தொடங்குகிறது.

வாய்ப்பு தேடும் இளைஞனாக யதார்த்தத்தை மீறாமல் நடித்திருக்கிறார் ஜெய். ப்‌ரியாவுக்கு அதிக வேலையில்லை. கவர்ச்சியுடன் முடிந்து போகிறது லட்சுமிராயின் அத்தியாயம். ஆச்ச‌ரியம் என்றால் அது சந்தானம். இரட்டை அர்த்த வசனம் இல்லாமலே காமெடியில் கலக்குகிறார்.

அரசியல் சண்டையில் டெல்லி கணேஷை தீர்த்து கட்டும் சம்பத், அவருக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகா‌ரி தலைவாசல் விஜய், எதிர்பாராத வில்லன் ரகுமான் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

போலீசிடமிருந்து தப்பித்து ரகுமானிடம் அடைக்கலமாகும் ஜெய்யிடம், நான்தான் லட்சுமிராயை கொலை செய்தேன் என ரகுமான் கூறும்போது சூடு பிடிக்கிறது திரைக்கதை.

தமிழ்ப்பட கிளைமாக்சில் வரும் கட்டி முடிக்கப்படாத பில்டிங்கில்தான் இந்தப் படத்தின் கிளைமாக்சும். ரகுமானும்., ஜெய்யும் மோதும் காட்சியை ஆக்ரோஷத்துடன் எடுத்த அதே நேரம் புத்திசாலித்தனமாக மோதலை முடித்ததற்கு இயக்குனரை பாராட்டலாம்.

யுவனின் இசை படத்தின் ப்ளஸ். அதிலும் ஏதோ செய்கிறாய் பாடல் தாலாட்டுகிறது. படத்தின் குவாலிட்டியை உயர்த்தியிருக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. பழக்கமான கதையை ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ஒருமுறை பார்க்கலாம்.

Read More...

நயன்தாரா அடுத்த அருந்ததி - Nayanthara is Next Arunthathi


ஹீரோயின் ஓ‌ரியண்ட் படங்களை எடுப்பதில் கோடி ராமகிருஷ்ணா டாக்டரேட் வாங்கியவர். இவர் விஜயசாந்தியை வைத்து இயக்கிய படங்கள் அவரை லேடி அமிதாப்பச்சன் என கொண்டாடும் அளவுக்கு உயர்த்தியது. இவரது அருந்ததியில் நடித்த பிறகு அனுஷ்காவின் மார்க்கெட் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது நாடறியும்.

கோடி ராமகிருஷ்ணாவின் அடுத்தப் படத்தில் நாயகியாக நடிக்கப் போகிறவர் நயன்தாரா என்கின்றன ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள். இதுவும் அருந்ததியைப் போல ஹீரோயின் ஓ‌ரியண்ட் கதை.


எம்.எஸ்.ராஜுவின் சுமந்த் ஆர்ட் புரொட‌க்சன் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது. கோடி ராமகிருஷ்ணாவும் எம்.எஸ்.ராஜுவும் இணைந்து உருவாக்கிய அனைத்துப் படங்களும் சில்வர் ஜூப்லி கொண்டாடியவை என்பதால் இந்த புதிய படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. எம்.எஸ்.ராஜுவின் மகன் சுமந்த் அஸ்வின் இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

நயன்தாராவின் கடைசி நான்கு படங்கள் - குசேலன், சத்யம், வில்லு, ஏகன் - தோல்வியடைந்தன. சூர்யாவுடன் நடித்துக் கொண்டிருக்கும் ஆதவன் மட்டுமே தற்போது அவர் கைவசம் உள்ளது. இந்த சூழலில் கோடி ராமகிருஷ்ணாவின் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை புதுப்பிக்க நினைக்கிறார் நயன்தாரா.

ஆக, அடுத்த அருந்ததி நயன்தாராதான் என அடித்து கூறுகிறார்கள் ஆந்திராவில். பார்ப்போம், கோடி ராமகிருஷ்ணாவின் கடைக்கண் பார்வை யார் மீது விழுகிறது என்று.

Read More...

Friday, July 17, 2009

Tamil Hit Songs Download with high quality-Difficult to get

Those songs are very difficult to find out in internet with good quality.Download it & enjoy to watch this evergreen hit songs......... http://rapidshare.com/files/248385218/TamilClassic__AndhaNillavadhan.mpeg
http://rapidshare.com/files/248391165/TamilClassic_IdhuOruNilaaKaalam.avi
http://rapidshare.com/files/248398200/TamilClassic_IvalOru.mpeg
http://rapidshare.com/files/248402145/TamilClassic_KannanVandhuPaadugindraan.avi
http://rapidshare.com/files/248405778/TamilClassic_KarpooraBommai.mpeg
http://rapidshare.com/files/248410331/TamilClassic_ManathilUruthi.mpeg
http://rapidshare.com/files/248360626/TamilClassic_PaniVizhumIravu.mpeg
http://rapidshare.com/files/248363731/TamilClassic_PonmaalaiPoludhu.mpeg
http://rapidshare.com/files/248367001/TamilClassic_RajaRajaChozlan.avi
http://rapidshare.com/files/248370328/TamilClassic_RathiriNerathu.avi
http://rapidshare.com/files/248374830/TamilClassic_VaaNila.mpeg
http://rapidshare.com/files/248380223/TamilClassic_VetiVeruVaasam.mpeg

Read More...

Tamil Movie - Autograph 2004 Tamil Dvdrip


DramaCast : Cheran , Sneha , Ilavarasu , Gopika , Mallika , Kanika and Rajesh

Story-Screenplay –Direction : Cheran

Music : Bharadwaj

Cinematography : Vijay Milton, Shanky Mahendra, Ravi Varman and Dwarakanath


http://www.filefactory.com/file/55c209/
http://www.filefactory.com/file/460f7e/
http://www.filefactory.com/file/9467ed/

Read More...

கோவில் புளியோதரை - Temple Tamarind Rice

தேவையான பொருட்கள்
புளி - ஒரு ஆரஞ்சு அளவு,
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க:
------------------------
காய்ந்த மிளகாய் - 5,
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி,
தனியா - 2 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

எள் - 1 மேசைக்கரண்டி.
தாளிக்க:
-----------
கடுகு - 1 தேக்கரண்டி,
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி,
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 1கைப்பிடி,
பெருங்காயம் - சிறிது,
காய்ந்த மிளகாய் - 7,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
சாதம் கலக்க:
------------------
சாதம் - 4 கப்,
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்.

செய்முறை
•புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும்.
•வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து நைசாக பொடித்து வைக்கவும் (எள்ளை வாணலியில் போட்டு சடசடவென பொரிந்ததும் எடுக்கவும்).
•மிளகாயை கிள்ளி வைக்கவும்.
•வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து சிவந்ததும், வேர்க்கடலை சேர்த்து பிரட்டி கறிவேப்பிலை சேர்க்கவும்.
•கரைத்த புளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
•புளி பச்சை வாசனை போய், நன்கு கொதித்து கெட்டியானதும் பொட்த்த பொடியில் முக்கால் பாகம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
•சாதத்தை உதிர் உதிராக வடித்து நல்லெண்னெய் கலந்து ஆற வைக்கவும். நன்கு ஆறியபின், புளிக்காய்ச்சல், மீதியுள்ள பொடி சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கலந்து அமுக்கி வைக்கவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற விட்டு பரிமாறவும்.

குறிப்பு:
புளி ரொம்ப எரிப்பான புளியாக இருந்தால், ஒரு கொட்டைப் பாக்களவு வெல்லம் சேர்த்தால், புளியின் எரிப்பு இருக்காது. புளிக்காய்ச்சல் அதிகம் செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது கலந்து கொள்ளலாம். எண்ணெய் மிதக்கும் அளவு கொதிக்க வைத்து வைத்துக் கொண்டால், 15,20 நாளூக்குக்கூட கெடாது. ஃபிரிஜ்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் இருக்கும். மசக்கை இருப்பவர்கள் புளிக்காய்ச்சல் செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது கலந்து சாப்பிடலாம்.

Read More...

சாம்பார் சாதம் - Sambar Rice

தேவையான பொருட்கள்
வேகவைக்க
-----------
அரிசி - அரை கிலோ
துவரம் பருப்பு - இரு நூரு கிராம்
மஞ்சள் பொடி - அரை தேக்கராண்டி
சின்ன வெங்காயம் - பத்து
உப்பு - இரண்டு தேக்கரண்டி
காய் வேக வைக்க
-----------------
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 200 கிராம்
கேரட் - 1

பீன்ஸ் - பத்து
முல்லங்கி - 1
முருங்கக்காய் - ஒன்று (ஒரு இன்ச் அளவு வெட்டி கொள்ளவேன்டும்)
பச்ச மிளகாய் - முன்று
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஆறு தேக்கரண்டி
வெல்லம் - ஒரு பிட்டு
புளி - இரண்டு எலுமிச்சை அளவு
தாளிக்க
------
எண்ணை - ஐமது கிராம்
கடுகு - ஒன்னறை தேக்கரண்டி
சின்ன வெஙாயம் - ஐந்து
கருவேப்பிலை - ஒரு கை பிடி
வெந்தயம் - ஐந்து
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - ஆறு பல்
நெய் - 25 கிராம்
கொத்து மல்லி தழை - அரை கை பிடி

செய்முறை
•முதலில் பருப்பு அரிசி இரண்டையும் நன்கு களைந்து பத்து நிமிடம் ஊற வைக வேண்டும்.
•பிறகு அதில் மஞ்சள் பொடி ,சின்ன வெங்காயம்.போட்டு ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு குக்கரில் அரிசி பருப்பு சேர்த்து நாலைரை டம்ளர் வரும் அப்படியே டபுளாகா தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
•வெங்காயம், தக்காளி,பச்ச மிளகாய், முல்லங்கி,கேரட்,பீன்ஸ்,சேர்த்து அதில் ஒரு டம்ளர்தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவேண்டும்.
•பாதி வெந்து கொண்டிருக்கும் போது சாம்பார் பொடியை சேர்க்கவும்.
•பிறகு புளியை கரைத்து ஊற்றவும்.
•முருங்கக்காயை தனியாக வேகவைத்து சேர்க்கவும்.
•இப்போது வெந்த பருப்பு சாதத்தில் வெந்து வைத்துள்ள காய ஊற்றி பாதி நெய்யும் சேர்த்து கிளறவேண்டும்.
•கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிந்து கொட்டி மீடி நெய், கொத்து மல்லி தழை சேர்த்து கிளறி அப்பளத்துடன் சாப்பிடவும்.
•கமகமண்ணு நெய் மணத்தோடு மணக்கும் சாம்பார் சாதம் ரெடி

குறிப்பு:
முருங்கககாயை முதலே போட்டால் குழைந்து விடும்.தனிய கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு பின்ச் உப்பு, மஞ்சள் பொடி ஒரு பின்ச் போட்டு வெந்து அதை சேர்க்கனும் அப்ப அது முழுசக இருக்கும். காய் கொஞ்சம் கல்லு மாதிரி உள்ள காய் போடனும், குழைந்து போகிற காய்கள் போட கூடாது, தனியா செய்கிற சாம்பாருக்கு ஒகே. தேவை பட்டால் உப்பு கூட சேர்த்து கொள்ளுங்கள்.

Read More...

தேங்காய் சாதம் - Coconut Rice

தேவையான பொருட்கள்
அரிசி - 1/4 கிலோ,
தேங்காய் - 1 மூடி,
சின்ன வெங்காயம் - 5,
பச்சை மிளகாய் - 4,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்,
நிலக்கடலை - 1 டீஸ்பூன்,
முந்திரி - 5,
பொரித்த அப்பளம் - 2,

கடுகு - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்துமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்.

செய்முறை
•சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் தே.எண்ணெய், உப்பு கல்ந்து, ஆற விடவும்.
•தேங்காயை நைசாக துருவி வைக்கவும்.
•வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கவும்.
•வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, முந்திரி சேர்த்து, சிவந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
•வதங்கியதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
•தேங்காய் வாசம் வரும் வரை வதக்கி இறக்கவும்.
•ஆறிய சாதத்துடன் கலக்கவும்.
•பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, பொடித்த அப்பளம் தூவி கிளறவும்.

Read More...

தக்காளி சாதம் - Tomato Rice

தேவையான பொருட்கள்
1. சாதம் - 2 கப்
2. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. உளுந்து - 1 தேக்கரண்டி
6. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
7. பச்சை மிளகாய் - 2 (கீரியது)
8. வெங்காயம் - 4 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)


9. கொத்தமல்லி, கருவேப்பிலை
10. உப்பு
11. தக்காளி - 3 (நல்லா சிவந்து பழுத்த தக்காளி, பொடியாக நறுக்கியது)

செய்முறை
•கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
•இதில் பச்சை மிளகாய், வெங்காயம், மல்லி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
•வெங்காயம் வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து பச்சை வாசம் போய், தக்காளி குழைந்து வரும்வரை வேக விடவும்.
•எண்ணெய் பிரிந்து வரும்போது சாதத்தை கொட்டி கிளரவும். 5 நிமிடம் சிறுந்தீயில் சாதத்தோடு பிரட்டி எடுக்கவும்.

குறிப்பு:
சாதம் குழைந்து போகாமல் கிளர வேண்டும். சாப்பிட 1/2 மணி நேரம் முன்னதாக செய்து வைத்தால் தக்காளி சாதத்துடன் ஊறி சுவை கூடும். இதை அப்பளம், மசாலா வடை'யுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Read More...

தக்காளி பிரியாணி - Tomato Briyani

தேவையான பொருட்கள்
அரிசி -1கப்
தக்காளி -2
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
பிரியாணி மசாலா -1ஸ்பூன்
இஞ்சி,பூண்டுவிழுது -1ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணை(அ)நெய் -2ஸ்பூன்

கொத்தமல்லிதழை -1கைப்பிடி
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை -2

செய்முறை
•வெங்காயம்,மிளகாய்,தக்காளி நறுக்கி வைக்கவும்.
•அரிசியை 1/2மணி நேரம் ஊறவைக்கவும்.
•பாத்திரத்தில் எண்ணை(அ)நெய்விட்டு பட்டை,கிராம்பு,ஏலக்காய்,இலை தளித்து வெங்காயம்,மிளகாய் போடவும்.
•வெங்காயம் வதங்கியவுடன்,இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கி,தக்காளி போடவும்.
•தக்காளி நன்றாக வதங்கியவுடன் மஞ்சள்தூள்,பிரியாணிமசாலா,கொத்தமல்லிதழை போட்டு உப்பும் போட்டு வதக்கவும்.
•ஊறவைத்த அரிசியை நன்றாக கழுவி மசாலாவுடன் போட்டு பிரட்டி 2கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
•குக்கரில் வைப்பதென்றால் 3விசில் விட்டு இறக்கவும்.
•சுவையான தக்காளி பிரியாணி ரெடி.இத்துடன் தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.


குறிப்பு:
இங்கு நான் சொல்லியிருப்பது பாஸ்மதி புழுங்கலரிசி. அவரவர் உபயோகிக்கும் அரிசியைபொருத்துதண்ணீர் ஊற்றவும்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009