Saturday, July 11, 2009

2009 அரையாண்டு படங்கள் ஓர் அலசல் - 2009 Half Yearly Movies Review

சென்ற வருடம் கிடைத்த பாடங்களிலிருந்து தமிழ் சினிமா எதையும் கற்றுக் கொண்டதாக‌த் தெ‌ரியவில்லை. 2008 வெளியான மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 84. அதில் கரை சேர்ந்தவை ஏழே ஏழு.

தமிழ் சினிமாவின் வியாபாரத்தை விஸ்த‌ரிக்கும் என்று எதிர்பார்த்த குசேலன், பீமா, குருவி, ஏகன், சத்யம் என மெகா பட்ஜெட் படங்கள் அனைத்தும் பெருத்த நஷ்டத்தை சந்தித்தன.தமிழ் சினிமாவை ஓரளவு காப்பாற்றியவை என்றால் அது புதியவர்களின் சமரசமற்ற முயற்சிகளான சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, சரோஜா போன்ற பட்ஜெட் படங்கள் மட்டுமே. சினிமாவின் முகத்தை ஹைடெக்காக மாற்றப் போவதாகக் கூறிய கார்ப்பரேட் ஜாம்பவான்கள் ஒருவர் பாக்கி இன்றி அனைவரும் மண்ணை கவ்வினர்.


எளிமையான கதை, சிறந்த திரைக்கதை, யதார்த்தத்தை மீறாத காட்சிகள். இவை இருந்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் வெற்றி பெறும் என்பது சென்ற வருடம் கிடைத்த பாடம். இந்த வருடத்தின் முதல் ஆறு மாத கால தமிழ் சினிமா வியாபாரம் அந்த பாடத்தை மீண்டும் உண்மையாக்கியிருக்கிறது.ஜூன் 30 வரை ஏறக்குறைய 51 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்தவை ஒன்பது. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் நம்ப முடியாத முன்னேற்றம். ஆனால் இது போதுமா?

பஞ்ச் டயலாக், பரபர சண்டைக் காட்சிகள், கால் மணிக்கு ஒரு குத்துப் பாட்டு என ஸ்டார் வேல்யூ ஃபார்முலாவில் வந்த ஏறக்குறைய அனைத்துப் படங்களும் இந்த வருடமும் பணால். விஜய்யின் வில்லு, விஷாலின் தோரணை சிறந்த உதாரணங்கள். பழைய ஃபார்முலாவில் வெளிவந்த ம‌ரியாதைக்கும் வரவேற்பில்லை.

இந்த ஆறு மாத காலத்தில் வெற்றியை அறுவடை செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். முதலில் வெண்ணிலா கபடிக்குழு. ஸ்டார் வேல்யூ இல்லாத சராச‌ரி நடிகர்களால் உருவான படம். இயக்குனர் சுசீந்திரனுக்கும் இதுவே முதல் படம். எளிமையான கிராமத்து இளைஞர்களின் கபடி ஆசையின் வழியாக அவர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்திய இப்படம் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது. இதன் வெற்றி யதார்த்த சினிமாவுக்கான இருப்பை உறுதி செய்தது.

ஆவி கதையுடன் வந்த யாவரும் நலம் இந்த வருடத்தின் எதிர்பாராத ஆச்ச‌ரியம். மாதவன் என்ற ஹீரோ நடித்திருந்தாலும் இயக்குன‌ரின் பழமை தவிர்த்த புதுமை சிந்தனையே படம் வெற்றியின் படிக்கட்டில் ஏற உதவியது.

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த சசிகுமா‌ரின் தயா‌ரிப்பில் வெளிவந்த படம் பசங்க. பதினாலு வயது சிறுவர்கள் நடித்த இந்தப் படம் ஸ்டார் வேல்யூ இல்லாமலே பாக்ஸ் ஆபிஸை கலங்கடித்தது. பத்து இயக்குனர்கள் நடித்த மாயாண்டி குடும்பத்தார் பி அண்டு சி சென்டர்களில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. நஷ்டத்தை சந்திக்காத படங்களின் வ‌ரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சமீபத்தில் வெளியான நாடோடிகளும் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.நாம் மேலே பார்த்த ஐந்து படங்களும் இரண்டிலிருந்து நான்கு கோடிக்குள் தயாரானவை. பிரமாண்டமான அரங்குகள், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தேவையற்ற சண்டைக் காட்சிகள் போன்ற தமிழ் சினிமாவின் சாபக் கேடுகள் ஏதுமற்றவை. எளிமையான கதையையும், யதார்த்தமான காட்சிகளையும், அ‌ரிதாரம் பூசாத நடிகர்களையும் நம்பி எடுக்கப்பட்டவை. இந்த ஆறுமாத காலத்தில் வழக்கமான ஃபார்முலாவில் ஜெயித்த படங்கள் நான்கு. படிக்காதவன், சிவா மனசுல சக்தி, அயன், மாசிலாமணி. இவற்றில் படிக்காதவன், சிவா மனசுல சக்தி, மாசிலாமணி ஆகியவை வெற்றி பெற்றதில் அப்படத்தின் தயா‌ரிப்பாளர்கள் தண்ணியாக செலவழித்த விளம்பர பணத்துக்கு கணிசமான பங்குண்டு.

இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் என்றால் அது அயன். கே.வி.ஆனந்தின் இப்படம் தமிழ் சினிமாவுக்கு பழக்கமான கடத்தல் கதையை பிரமாண்டமாக காட்டியது. சூர்யாவின் நடிப்புக்கும், தொழில்நுட்பத்துக்கும் இந்த வெற்றியில் கணிசமான பங்குண்டு.நல்லவனான ஹீரோ, கெட்டதை மட்டுமே செய்யும் வில்லன், டூயட்டுக்கு ஒரு ஹீரோயின் என்ற வழக்கமான அம்மாஞ்சித்தனங்கள் இந்த வருடம் வெற்றிபெற்ற படங்களில் இல்லை. விதிவிலக்குகள் படிக்காதவனும், மாசிலாமணியும்.ஒரு படத்தின் வெற்றி இயக்குன‌ரின் கையில் இருக்கிறது. சிலர் நம்பிக் கொண்டிருப்பதுபோல் ஹீரோவோ, பிரமாண்டமோ அல்ல படத்தின் வெற்றியை தீர்மானிப்பது. எளிமையான கதையிலேயே எவரெஸ்டை தொடலாம். புதியவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். உணர்ந்து திருந்த வேண்டியது ஒவ்வொருவ‌ரின் கடமை.

Read More...

Sneha Special Interview - No.1 mela Nambikai ellai

பத்த வைத்த மத்தாப்பாக தீபாவளி பிரகாசத்துடன் இருக்கிறார் புன்னகை இளவரசி சினேகா. சி‌ரிப்பை சீசாவில் பிடித்தால் பளீரென்று இன்னொரு பவுர்ணமி பண்ணலாம். அவ‌ரின் உற்சாக பேட்டியிலிருந்து...


காக்கி உடையணிந்து நடிக்கப் போகிறீர்களாமே?
ஆமாம். விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தை ‌ரீ-மேக் செய்கிறார்கள். அதில் விஜயசாந்தி நடித்த போலீஸ் ஆபிஸர் வேடத்தில் நடிக்கிறேன்.


இந்தப் படத்துக்காக ஸ்பெஷல் ட்ரெயினி‌‌ங் எடுத்துக் கொள்வது உண்மையா?
ஆ‌க்சன் படம் என்பதால் சண்டைப் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். வைஜெயந்தி ஐபிஎஸ்-ன் ‌‌ரீ-மேக் என்றாலும் இன்றைய சூழலுக்கு ஏற்ப கதையில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படம் என்னுடைய கோpய‌ரில் முக்கியமான மாற்றமாக இருக்கும்.

இப்போது எத்தனை பட‌ங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
போன வருடம் எனக்கு நன்றாக அமைந்தது போலவே இந்த வருடமும் சிறப்பாக இருக்கிறது. ஒன்பது பட‌ங்கள் கைவசம் இருக்கின்றன.

தமிழில் தற்போது உ‌ங்கள் இடம் என்ன?
இந்த நம்பர் ஒன், நம்பர் டூ மாதி‌ரியான கணக்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஏன் அப்படி?
அதிகபடியான கிளாமர், அதிகபடியான சம்பளம் இதை வைத்துதான் நம்பர் ஒன், டூ எல்லாம் கணக்கு போடுகிறார்கள். அந்த கணக்கு எனக்கு பிடிக்காது.

Read More...

நெய் சாதம் - Gee Rice

தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - கால் கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
முந்திரி - 5,
நெய் - 100 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
•அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
•அடி கெட்டியான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

•நீளமாக நறுக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கவும்.
•அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
•கொதிக்கும் போது அரிசியை சேர்த்து வேக விடவும்.
•முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைக்கவும்.
•அரிசி முழுதும் வெந்ததும் 10 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும்.

குறிப்பு:
தொட்டுக்கொள்ள சிக்கன் குருமா, மட்டன் குருமா, உருளைக்கிழங்கு-பட்டாணி குருமா நன்றாக இருக்கும்.

Read More...

Sirupuu Vedigalll - Jokes ! !

A Software company Employee to Municipality Sweeper,"I have Degree, Knowledge and good status in society"..
what about u?
Sweeper: I have a permanent job..!

Tamil hero's next file tittles:

Rajni: Robot, Remote car, Plane, Battery train
Vijayakanth: Dharmapuri, Salem, Namakkal, Erode..
Vijay: Villu, ambu, Vundi koll, remote thuppaakki..
Ajith: Agaen, Bgaen, Cgaen, Dgaen,
Suriya: Vaaranam aayiram, rendaaiyiram, naalaiyuram.. pinbilikki pilaakkii..
Jeeva: Thenavattu, kolaputtu, koluppu, nakkal..
Vishal: Sathyam, subham, Santham, Sree
Simbu: Silambattam, Oyilattam, maiyilaatam, korangattam, karagattam.
Barath: Seval, vaathu, maina, pura,


While a Monkey crossing the road,
Wife: Ennaaanga unga Sondhakaaranga yaaro pooraru paarunga..
Husband: En maamanaara enakku theriyadha enna?
wife..?

Varanaam aayiram dialogue in chennai toungue..
Indhaamae Malini..Naan dhaanmae Kishtannn..
Unnanda sollie aavanum, aana nee avloo azhaga keera..I
nga endha oru baemaaniyum evloo sokka paarthukira maattan..
Appaala naan unna daavadikkuren..

What is the best punishment in the world to a girl
Give new clothes,
Jewels,Cosmetics,etc..
and lock her in a room WITHOUT A MIRROR to see..

In Kandhasamy movie,
Vikram's costumes costs 75 Lakhs
But in the same film,Shreya's costume costs 1 crore
MORALVara Vara Kerchief rates lam kanna pinna nu eritte pogudhu..

LKG:
Girl: Pencil tharuviya?
Boy: Miss kitta solliduven..
4th:
Girl: Pencil Thariya?
Boy: Indhaa..
12th
Girl: Pen kudukka mudiyuma?
Boy: oh my god.. Black or blue enna color venum?
College:
Boy: Un pen sariya eluthala nu nenaikuren, indha.. ennoda pen use pannikoo
OFFICE:
Boy: Pudhusa pen vaangi irukken, nee first eludhi paarthuttu kudu..
EPPADI IRUNDHAVANA IPPADI AAKKITAANGAYA.....

Read More...

ஞாபகங்கள் - Gnabagangal

சினிமா எனும் ஆகிருதி எந்தவொரு மனிதனையும் தன்பால் ஈர்க்கவல்லது. சினிமாவின் மூலம் தனது முகம் அல்லது படைப்பு வெளிவந்தால் அது பெரும்பகுதி மக்களை போய் அடைகிறது என்பதே அதன் காரணம். இதுவரை திரைப்பாடல் ஆசிரியராக இருந்த கவிஞர் பா. விஜய்க்கும் அதுவே நடந்துள்ளது.


ஒரு நடிகன் என்ற பரிமாணத்தில் தனது முகத்தை செல்லுலாய்டில் பதிவு செய்துள்ளார். கவிஞனாகிய தன் களம் சார்ந்த விஷயத்திலிருந்து கதையைத் தேர்ந்தெடுத்து 'ஞாபகங்கள்' மூலம் பதிவு செய்ய முயன்றிருக்கிறார்.

திரைப்பாடலாசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னைக்கு வரும் மீராப்பிரியன் என்ற கவிஞனுக்கு ஏற்படும் காதல், லட்சியம், காதல் தோல்வி, போராட்டமே ஞாபகங்களாக திரையில் வருகிறது. காதல் கொடுத்த தோல்வியை தனது வெற்றியின் ஆகுதியாக்கி சாதிக்கப் போகும்போது தான் காதலித்த பெண் கைம்பெண்ணாய்... எதிரில். முடிவு என்ன? என்பதே கிளைமாக்ஸ்.

படத்துக்கு கதையும், கவிதையும் கைகொடுக்கும் என ரொம்ப நம்பியிருக்கிறார் விஜய். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. கவிதை ஓ.கே. கதையும், திரைக்கதையும் அந்தப் பணியிலிருந்து ரொம்பவே விலகியிருக்கிறது. கவிஞர் படமென்பதால் பாடலும், இசையும் தத்தம் கடமைகளை சரியாய் செய்துள்ளன. காட்சி அமைப்புகளும் அருமை.

வசனங்களும், சில உருக்கமான காட்சிகளும் இருந்தும்கூட பல இடங்களில் படம் உணர்வுகளை பதிவு செய்கிறேன் பேர்வழி என்று ஏகத்துக்கு பொறுமை இழக்க வைக்கிறது. நாயகி ஸ்ரீதேவிகா மட்டும் பளிச் பளிச். மற்றபடி நம்ம கவிஞர் பா.விஜய் ஒரு படம் எடுத்துருக்காராம். பரவால்ல தேவல. பார்க்கலாம்பா ரகம்தான் பா.விஜய்யின் - ஞாபகங்கள்.

Read More...

Nayanthara - Safe fa ella un safe fa??????

கையில் 'Pரபு' பச்சை. கண்களில் லேசான சோகம். ஆனால், முகத்தில் மட்டும் பொலிவு குறைந்தபாடில்லை. நயன்தாரா படங்கள் இல்லாமல் கடந்த ஒரு மாதமாய் எந்த பத்திரிக்கையும் வெளிவரவே இல்லை.

இந்நிலையில் நயன்தாராவுடன் அவரது அப்பாவும் அம்மாவும் கூடவே இருப்பதாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அவர்களது பாதுகாப்பு வளையத்திதுக்குள்தான் சிக்கியுள்ளார் என்று செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன

ஆனால், நயனோ, எங்க அப்பா, அம்மா என்னோட சுதந்திரத்தில் தலையிட மாட்டாங்க. யாரோட கண்காணிப்புலயும் நான் இல்லை. எந்த ஷூட்டி‌ங் ஸ்பாட்டுல யார் பார்த்தாங்க? என ரொம்பவே கோபம் காட்டுகிறார். பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றங்கள் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். விடுங்க நயன்! பிழைச்சுப் போகட்டும்.

Read More...

Friday, July 10, 2009

Jokes to Laugh - ஜோக்ஸ்

''எதுககுடா எதிர்க்கட்சித் தலைவரை கடிச்சு வச்žங்க?''

''நீங்கதானே தலைவரே அவர் மேல ''பல்முனை'' தாக்குதல் தொடர வேண்டுமுன்னு மேடையில அறிவிச்žங்க!''

''இனிமேல் நீங்க அதிகமா நடக்கணும்!''
''உங்ககிட்டே ட்ரீட்மெண்டுக்கு வந்த பின்னாடி எங்கிட்டே இருந்த காரை வித்துட்டு இப்பல்லாம் எங்கே போனாலும் நடந்தேதான் போறேன் டாக்டர்!''

''நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்...''
''அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க...!''

''எருமை வெளியே போகும்போது தன் ஆண் கன்றிடம் என்ன சொல்லிட்டுப் போகும்?''
''BI SON''


''என் மனைவி ரொம்ப நல்லவ.'' ''அப்புறம் ஏன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டே?''
''அவ நல்லவனு ரெண்டாவது கல்யாணம் பண்ண பிறகுதான் தெரியுது.''

''மாப்ளே! நேத்து பஸ்ல வரப்ப என் பாக்கெட்டுல ஒருத்தன் ''பிளேடு'' போட்டுட்டான்.''
''அச்சச்சோ! அப்புறம்?''
''என்ன பண்றது? அந்த பிளேடை எடுத்துக்கிட்டேன்.''

''தலைவரை விளையாட்டுப் போட்டிக்குத் தலைமை தாங்க கூப்பிட்டது தப்பு!''
''ஏன்?''
''நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்துல எவ்வளவு தூரம் ஓடணும்''னு கேட்கறாரு!''

''கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது...'' ''யாரு... எமனா?''
''இல்லை.... தமன்னா!''

''பிரபல நடிகரான நீங்க, தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்žங்க?''
''ஷ•ட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் ''படப்பிடிப்பு''க்குனு நினைச்சுட்டேன்!''


''என்ன! உங்க வீட்டு காப்பி ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது...?''
''நான்தான் சொன்னேனே... என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு.''

''ஏசியை போட்டதுக்கெல்லாம் ஒராளைத் தூக்குல போடுவாங்களா என்ன?''
''யோவ் அவன் ''போட்டது'' அசிஸ்டெண்ட் கமிஷனரை!''

Read More...

Thursday, July 9, 2009

முருகன் கோவில்கள்

பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்ற ஆறு கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவை அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன். இவற்றுள் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது திருச்செந்தூர் ஆகும். இது திருச்சீரலைவாய் எனவும் அழைக்கப்படும். மிக அரிதாக முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில் இதுவாகும். 130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.


சூரபத்மன் என்ற அரக்கன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று தனக்கு சர்வ வல்லமை வேண்டி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டான்.

சிவபெருமானும் அவனுக்கு காட்சி கொடுத்து, தமது சக்தியன்றி வேறு எந்த சக்தியாலும் அவனுக்கு மரணம் கிடையாது என்று வரம் அருளினார். அதன் பிறகு சூரபத்மனின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போனது. அவனால் துன்பத்திற்கு உள்ளான தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சூரனை அழிக்க சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை உருவாக்கினார். ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. கார்த்திகைப் பெண்கள் அறுவர் குழந்தைகளுக்குப் பாலூட்டினர். அம்மையும், அப்பனும் குழந்தைகளைப் பார்க்க வந்தனர். பார்வதி தேவி அந்த குழந்தைகளைத் திருக்கரங்களால் சேர்த்து அணைத்தாள். அப்போது ஆறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்டு ஒரு குழந்தையாக மாறியது. பார்வதி தேவியின் பாத சிலம்பில் நவசக்திகள் தோன்றினர். நவசக்திகள் வயிற்றில் வீரபாகு முதலிய இலட்சத்து ஒன்பது வீரர்கள் தோன்றினர். இவர்கள் முருகனுக்கு படைவீரர்களாக ஆனார்கள். சிவபெருமான் வெற்றி தரும் வேலை முருகனிடம் தந்தார். தன் அம்சமாகிய பதினொரு ருத்ரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார். அம்மையப்பர் ஆசியுடன் முருகன் படைகளோடு திருச்செந்தூர் வந்து தங்கினார். முருகப் பெருமான் வீரபாகுவைச் சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுவித்திடுமாறு செய்தி அனுப்பினார். சூரபத்மன் அதற்கு மறுத்தார். ஆகவே முருகப் பெருமான் சூரபத்மனோடு போரிட்டார். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயில் சேவலாக மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் என்று முருகன் புகழ் கூவியது.



ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்த 6ம் நாள் முருகன் சூரனை வென்றான். இதுவே கந்த சஷ்டி என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரபதமனின் தளபதிகளான யானைமுகன், சிங்கமுகன், சூரபன்மன் ஆகிய மூன்று அரக்கர்களை ஒழித்தான். இக்காலத்திலும் இம்மூன்று அரக்கர்களும் மாயை, கன்மம், ஆணவம் ஆகிய குணங்களாக மக்களிடம் குடியிருக்கிறார்கள். இவர்களை ஒழிக்கவும் திருச்செந்தூரான் அருள் பாலிக்கிறான். இந்த மூன்று துர்குணங்களையும் விட்டொழித்தால் சூரனைப் போல இறுதியில் இறைவனை அடைய முடியும். இந்த சூரசம்ஹார சம்பவத்தைச் சித்தரிக்கும் வைபவம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெறும். தீராத நோய் நீங்க வேண்டும் என்றும், பிள்ளைப்பேறு வேண்டியும், பல பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனர்.




பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இயற்கையை வழிபட்டனர். இயற்கையை முருகு எனப் பெயரிட்டு வணங்கினர். காடு, மலை, அருவி, கடற்கரை ஆகிய இடங்களில் கோவில் அமைத்து வழிபட்டனர். அத்தகைய தலங்களுள் ஒன்று திருச்செந்தூர் ஆகும்.



பதினாறாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்த போது, இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. எனினும் தற்போது உள்ள கோவில்களை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காசி சுவாமிகள், மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுக சுவாமிகள் என்ற மூவர் சுவாமிகள் ஆவர். இவர்கள் மூவரும் தத்தமது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும் அமைத்துள்ளனர். இவர்கள் மூவரும் இத்தலத்திலேயே ஜீவசமாதியும் அடைந்துள்ளனர். இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி காணப்படுகின்றன. இவர்களுக்கு பின்னர் வந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் ராஜகோபுரத்தை கட்டியதாக கூறப்படுகிறது.



இக்கோவிலில் மூலவர் பெயர் பாலசுப்பிரமணியர். கடற்கரையோரம் நின்று அருள்பாலிப்பதால் 'கடற்கரையாண்டி' என்றும் அழைக்கப்படுகிறார். இக் கோவிலில் மூலவர், வள்ளி, தெய்வானை கோயில்களுக்கு போத்திகளும், ஆறுமுகப் பெருமான், நடராஜர், சனீஸ்வரர் கோயில்களுக்கு சிவாச்சாரியார்களும் பூஜை செய்கின்றனர். வெங்கடாசலப் பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியார்கள் பூஜை செய்கின்றனர். கோயில் திருப்பணி செய்த மூவர் சமாதிகளில் ஓதுவார்கள் பூஜை செய்கின்றனர். மூலவரின் இடது பாதத்தின் அருகே தங்கச் சீபலி வைக்கப்பட்டுள்ளது. வலது பாதத்தருகே வெள்ளியாலான சீபலி உள்ளது. இந்த சீபலி மூலவரைப் போலவே உள்ள ஒரு சிறு விக்ரகம். தினமும் கோயில் பிரகாரங்களில் வலம் வந்து எல்லா சந்நிதிகளுக்கும் சென்று அந்தந்த கடவுளர்களுக்கு முறையாக நிவேதனம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த சீபலிக்கு உண்டாம். தன் கோயிலில் தன்னுடனே உறையும் பிற கடவுளர்களுக்கே படியளக்கும் இந்த பாலகுமரன், தன்னை நாடும் பக்தர்களை அவ்வாறே காத்து அருள்வான் என்பது உறுதி. கேரள மன்னர் மார்த்தாண்டவர்மன் இவற்றை கோவிலுக்கு வழங்கியுள்ளார்.



சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகளின் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி கோயில் திருப்பணியை மேற்கொள்ளும்படி ஆணையிட்டாராம். அதன்படி அவர் இங்கு தங்கி கோபுரம் கட்டி முடித்திருக்கிறார். அவ்வாறு கோபுரம் கட்டியபோது அந்தப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு கூலி கொடுக்க அவரிடம் பணமில்லை. மனதார முருகனை வேண்டிக்கொண்டு, அவர் பிரசாதமான விபூதியை இலையில் மடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். அந்த இலையை தூண்டுகை விநாயகர் கோயிலை தாண்டி சென்றதும் திறந்து பார்க்குமாறு கூறினார். பணியாளர்களும் அப்படியே பார்த்தபோது அவரவர் வேலைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் தனிதனியே ஊதியம் அந்த விபூதி இலைக்குள் இருந்தது கண்டு அதிசயித்தனர். ஆனால் கோபுரத்தின் ஆறாம் நிலை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்ட போது இந்த அற்புதம் நின்று விட்டது. சுவாமிகள் மிகவும் வருந்தினார். ஆனால் அன்றிரவே முருகன் அவரது கனவில் தோன்றி காயல்பட்டினத்தில் வசிக்கும் சீதக்காதி என்னும் வள்ளலிடம் சென்று பொருள் பெற்று வருமாறு பணித்தார். ஆனால் வள்ளலோ, சுவாமிகள் கொடை கேட்டவுடனேயே ஒரு மூட்டை உப்பை எடுத்துக் கொடுத்தார். சுவாமிகளுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. பணத்தை எதிர்பார்த்தால் உப்பு கிடைக்கிறதே என்று வருந்தினார். ஆனாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் உப்பு மூட்டையை வாங்கிச் சென்றார். திருச்செந்தூர் வந்து சுவாமிகள் மூட்டையைத் திறந்து பார்த்தால் அதற்குள் தங்கக் காசுகள் இருந்ததைக் கண்டு வியந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த காசுகளைக் கொண்டு கோபுரத்தைக் கட்டி முடித்தார் சுவாமிகள். கோயிலின் வடபுறத்தில் வள்ளி குகை அமைந்துள்ளது. இங்கு திரிசுதந்திரர்கள் பூஜை செய்கின்றனர். குகைக்குள் உள்ளே நுழையும் வாயில் 4 அடி உயரமே உள்ளது. குனிந்துதான் செல்ல வேண்டும். குகைக்குள் வள்ளியம்மன் சிலை சுவரையொட்டி அமைந்துள்ளது. முருகன் வள்ளியைச் சிறையெடுக்க வந்தபோது வள்ளியின் தந்தை நம்பிராசன் முருகனை துரத்தினான். முருகன், வள்ளியை இக்குகையில் ஒளிந்திருக்கச் சொல்லி பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு போருக்குச் சென்றதாக புராணம் சொல்கிறது. தெய்வயானையை திருமணம் முடித்து வருவதைக் கண்ட முதல் மனைவியான வள்ளி, முருகன் மீது கோபம் கொண்டு இக்குகையில் வந்து ஒளிந்து கொண்டதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது.



இக்கோயிலில் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார் ஆறுமுகப்பெருமாள். ஒரு காலத்தில் கேரளத்தவர்கள் இச்சிலையைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும் பிறகு குமரி மாவட்டம் பறக்கை என்ற ஊரில் இருந்த செட்டியார்கள் அதை மீட்டதாகவும் சொல்கிறார்கள். அவ்வாறு மீட்கப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு அவர்கள் தோசையும், சிறு பருப்பு கஞ்சியும் நிவேதனமாக படைத்திருக்கிறார்கள். அவ்வழக்கப்படி இன்றும் ஆறுமுகப் பெருமானின் உதயமார்த்தாண்ட நைவேத்தியத்தில் தோசையும், கஞ்சியும் தவறாமல் இடம்பெறுகின்றன. கேரள மன்னர்கள் ஆளுகைக்குட்பட்ட காலத்தில் தான் இக்கோவில் பிரபலமடையத் துவங்கியது என்கிறார்கள். ஆகவே, கேரள முறைப்படி இங்கு போத்திகள் மூலஸ்தானத்தில் பூஜை செய்கிறார்கள். அவர்கள் கோயிலுக்குள்ளேயே தங்கி பூஜை காரியங்களில் ஈடுபடுகின்றனர். இக்கோயிலில் இன்றும் பூஜை புனஸ்காரங்கள் கேரள முறைப்படியே நடப்பதால், தரிசனத்திற்கு செல்லும் ஆண்கள் கோயிலுக்குள் சட்டை அணியாமல் தான் செல்ல வேண்டும். கேரளக் கோயில்களில் மேற்கொள்ளப்படும் துலாபார பிரார்த்தனை இங்கும் நடக்கிறது.



இக்கோவிலில் வழங்கப்படும் இலை விபூதி பிரசாதம் வேறெங்கும் கிடைக்காது. பன்னீர் மர இலைகளில் பன்னிரண்டு நரம்புகளுள்ள இலைகளாகத் தேர்ந்தெடுத்து அதனுள் விபூதியை வைத்து மடித்து கட்டு கட்டாக வைத்திருப்பர். நோயால் பாதிக்கப்பட்ட முனிவர் விசுவாமித்திரருக்கு அந்நோய் நீங்க ஆறுமுகப் பெருமான் தம் பன்னிரண்டு கைகளாலும் இலை விபூதியை வழங்கி அவரை முற்றிலும் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் எந்த நோயினால் பீடிக்கப்பட்டாலும் இந்த இலை விபூதி பிரசாதம் நலமளிக்கும் என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நம்புகிறார்கள். கோயிலில் தினமும் உச்சிக்கால பூஜையின் போது மூலவருக்கு பாலாபிஷேகம் நடக்கும். முன்பு இதற்காக திருச்செந்தூரில் ஒவ்வொரு வீடாகச் சென்று யாசகம் செய்து பாலை கொண்டு வருவார்கள். இதற்கென இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு தலா ஆறு மாதம் பால் யாசிப்பது மட்டுமே வேலை. இப்படி வீடு வீடாக யாசகம் செய்து பாலாபிஷேகம் செய்வதால் இதனை பிச்சைப்பால் அபிஷேகம் என்றே சொல்கிறார்கள். ஆனால் தற்போது பக்தர்கள் தாமே கோயிலுக்கு நேரடியாக பால் கொடுத்து விடுவதால், யாசிக்கும் வழக்கம் இல்லை.



திருச்செந்தூரில் வியப்புக்குரிய ஓர் அம்சம், நாழிக்கிணறு. கடற்கரையை ஒட்டி வெகு அருகில் அமைந்துள்ள சிறிய கிணறு இது. இந்தக் கிணற்றிலிருந்து கிடைக்கும் நீர் உப்பு கரிப்பதில்லை என்பதும், இறைக்க இறைக்க வற்றாமல் நீர் அதே அளவில் சுரப்பதும் விடை காண முடியாத அதிசயமாகும். இது இயற்கை நீரூற்று. இதன் அருகிலேயே உள்ள நீள்சதுர கிணற்றின் நீர் கந்தக நெடியுடன் கல்ங்கிக் காணப்படுவதிலிருந்து நாழிக் கிணற்றின் தெய்வாம்சத்தைப் புரிந்து கொள்ளலாம். கடலில் நீராடிய பக்தர்கள் இந்த நாழிக் கிணற்றில் நீராடி செல்வது வழக்கம். சூரபத்மனை போரில் வென்ற முருகன் தம் படையினரின் தாகம் தணிக்க கடற்கரையில் ஓரிடத்தில் தன் வேலால் குத்தி நீர் வரச் செய்தார். முருகனே உருவாக்கிய பெருமையுடையது இந்த நாழிக்கிணறு என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன், சிறந்த முருக பக்தராகத் திகழ்ந்தார். அவரது காலத்தில் திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்தின் ஒன்பதாவது அறையில் உச்சி கால பூஜையின் போது, வெண்கல மணி தினமும் ஒலிக்கப்படும். 100 கிலோ எடை கொண்ட அந்த மணி சப்தம் கேட்டு திருச்செந்தூர் முதல், கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி வரை 40 மண்டபங்களில் அங்குள்ள மணிகளும் அடுத்தடுத்து ஒலிக்கப்படும். கடைசி மண்டப மணி ஒலிக்கப்படும் சப்தம் கேட்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டடயில் கட்டபொம்மன், திருச்செந்தூர் கோவிலில் உச்சி கால பூஜை நடப்பதை அறிந்து கொள்வார். அதன் பின் தான், அவர் பூஜைகளைச் செய்து அன்றைய உணவை அருந்துவார். திருச்செந்தூர் கோவில் உச்சி கால பூஜை பிரசாதம், அவருக்கு குதிரைகள் மூலம் அடுத்த சில மணி நேரத்தில் கோட்டைக்கு வந்து விடுமாம்.



அத்தகைய சிறப்பு வாய்ந்த மணியின் செயின் அறுந்ததால், கடந்த பல ஆண்டுகளாக பழுதாகக் கிடந்த அந்த மணியை சரி செய்ய வேண்டுமென கட்டபொம்மன் வாரிசு வீமராஜா மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 250 ஆண்டு பழமையான அந்த மணி தற்போது சரி செய்யப்பட்டு, ராஜகோபுர ஒன்பதாம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

Read More...

பார்த்தசாரதி பெருமாள் கோ‌யி‌ல்

மகாபாரத‌த்‌தி‌ல் தேரோ‌ட்டியாக வ‌ந்து அ‌ர்‌ஜூனனு‌க்கு அ‌றிவுரை சொ‌ன்ன ‌கிரு‌ஷ‌்ண‌ரி‌ன் அவதாரமான பா‌ர்‌த்தசார‌தி‌யி‌ன் கோ‌யி‌ல் ‌செ‌ன்னை ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.


108 திவ்ய தேசங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயிலு‌ம் ஒன்றாகும். இ‌ந்த கோ‌யிலு‌க்கு பல பெரு‌ம் ‌சிற‌ப்புக‌ள் உ‌ள்ளன. பிருந்தாரண்ய ஸ்தலம் என்றும், பஞ்ச வீரத்தலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகு‌ம். இ‌ந்த கோ‌யி‌‌லி‌ல் அமை‌ந்‌திரு‌க்கு‌ம் பா‌ர்‌த்தசார‌‌தி‌யி‌ன் ‌திரு‌முக‌த்‌தி‌ல் பல தழு‌ம்புக‌ள் இரு‌க்கு‌ம். அதாவது மகாபாரத‌ப் போ‌ரி‌ல் அ‌ர்ஜூனனு‌க்கு தேரோ‌ட்டியாக வ‌ந்து, போ‌ரி‌ல் ப‌ட்ட ‌விழு‌ப்பு‌ண்க‌‌ளி‌ன் தழு‌ம்புக‌ள் அவை. மேலு‌ம் ‌கிருஷ‌்ண அவதார‌ங்க‌ளி‌ல் ‌மீசையுட‌ன் காண‌ப்படு‌‌ம் அவதாரமு‌ம் இவ‌ர். அ‌ர்ஜூனனை பா‌ர்‌த்தா எ‌ன்று அழை‌ப்பா‌ர்க‌ள். தேரோ‌ட்டியை சம‌ஸ்‌கிருத‌த்‌தி‌ல் சார‌தி எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். எனவே பா‌ர்‌த்த‌னி‌ன் சார‌தியாக வ‌ந்த இவ‌ர் பா‌ர்‌த்தசார‌தி எ‌ன்று அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌க்கோ‌யி‌லி‌‌ல் பா‌ர்‌த்தசார‌தி‌க்கு‌ம், நர‌சி‌ம்மரு‌க்கு‌ம் த‌னி‌த்‌த‌னி கொடிமர‌ங்க‌ள் அமை‌க்க‌ப்ப‌‌ட்டிரு‌க்கு‌ம் கோ‌யி‌லி‌ன் அமை‌ப்பு கோ‌யி‌லி‌ல் அமை‌ந்‌திரு‌க்கு‌ம் மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் சேவை சாதிக்கிறார். பெரு‌ம்பாலு‌ம் பெருமா‌ள் தனது குடு‌ம்ப‌த்தாருட‌ன் கா‌ட்‌சி அ‌ளி‌ப்பது ‌மிகவு‌ம் அ‌‌ரிதாகு‌ம். சுமதி என்ற தொண்டைமான் மன்னனுக்கு ஏழுமலையான், பார்த்தசாரதியாக அரு‌ள் பா‌லி‌த்த தல‌ம் எ‌ன்று இ‌ந்த கோ‌யி‌லி‌‌ன் வரலாறு கூறு‌கிறது.

இவரு‌க்கு அடு‌த்ததாக பா‌ர்‌த்தசார‌தி ச‌‌ன்ன‌தி‌க்கு வலது புற‌த்‌தி‌ல் வேதவ‌ல்‌லி‌த் தாயா‌‌ரி‌ன் ச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது. ஒ‌‌வ்வொரு வெ‌ள்‌ளி‌க்‌கிழமையு‌ம் வேதவ‌ல்‌லி‌த் தாயாரு‌க்கு ‌சிற‌ப்பு பூஜைக‌ள் நட‌த்த‌ப்படு‌ம்.

அடு‌த்ததாக பா‌ர்‌த்தசார‌தி‌ ச‌ந்‌நிதி‌யி‌ன் ‌பி‌ன்புற‌த்‌தி‌ல், மே‌ற்கு நோ‌க்‌கியபடி உ‌க்‌கிர ‌நிலை‌யி‌ல் ஸ்ரீ நர‌சி‌ம்ம சுவா‌மி‌யி‌ன் ச‌ந்‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. இவரை அழ‌கிய் ‌சி‌ங்க‌ர் எ‌ன்று‌ம் அழை‌ப்ப‌ர். இவரது உ‌க்‌கிர‌ம் த‌ணி‌க்கு‌ம் வகை‌யி‌ல் நர‌சி‌ம்ம சுவா‌மி‌யி‌ன் ‌திருமா‌ர்‌பி‌ல் ல‌‌ஷ‌்‌மி தே‌வி‌யி‌ன் ‌திருவுருவ‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். அவரது முக‌த்தை‌ எ‌ப்படி‌ப் பா‌ர்‌த்தாலு‌ம் ‌சி‌ரி‌த்தபடியே நம‌க்கு‌க் கா‌ட்‌சி அ‌ளி‌ப்பா‌ர்‌.

அடு‌த்ததாக கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிக‌ளி‌ன் ச‌ந்‌நி‌தி வேதவ‌ல்‌லி‌த் தாயா‌ர் ச‌ந்‌நி‌தி‌க்கு ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் ‌கிழ‌க்கு நோ‌க்‌கியபடி அமை‌ந்து‌ள்ளது. அதாவது கஜே‌ந்‌திரா எ‌ன்ற யானை ‌நீ‌ர்‌நிலை ஒ‌ன்‌றி‌ல் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க‌ச் செ‌ன்றபோது அ‌ங்‌கிரு‌ந்த முதலை‌யி‌ன் வா‌யி‌ல் ச‌ி‌க்‌கி‌க் கொ‌ண்டது. தனது உ‌யிரை‌க்

கா‌ப்பா‌ற்றுமாறு யானை பெருமாளை வே‌ண்டியது. அ‌ப்போது உடனடியாக கருட‌னி‌ல் வ‌ந்த பெருமா‌ள் முத‌லை‌யிட‌ம் மா‌ட்டி‌யிரு‌ந்த யானையை ‌‌மீ‌ட்டா‌ர். அ‌ப்போது யானை‌க்கு அரு‌ள் பா‌லி‌த்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்த ச‌ந்‌‌நி‌தி‌யி‌ல் கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிகளாக ப‌க்த‌ர்களு‌க்கு கா‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறா‌ர்.

பா‌‌ர்‌த்தசார‌தி ச‌ந்‌‌‌நி‌தி‌யி‌ன் இடது புர‌த்‌தி‌ல் ஆ‌ண்டா‌ளி‌ன் ச‌ந்‌‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. ஆ‌ண்டா‌ள் பூதே‌வி எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர். இந்த கோயில் தீர்த்தத்தின் பெயர் கைரவினி சரஸ் என்பதாகும். இந்த திருக்குளத்தில் அல்லி பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் அல்லிக்கேணி என்ற பெயரும் ஏற்பட்டது. கோ‌யி‌லி‌ன் சிறப்புஇ‌‌த்‌திரு‌த்தல‌த்‌தி‌ல் பிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் மகரிஷி, சப்தரோம அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் என பலருக்கு இறைவன் காட்சி கொடுத்திருக்கிறார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகு‌ம். ஐப்பசி மாத திருமூல நன்னாளில் நடைபெறும் கைத்தல சேவை சிறப்பு வாய்ந்தது. உரியடி திருவிழா, இராப்பத்து, பகல்பத்து திருவிழாக்கள் சிறப்புடையவை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இந்த கோயிலில் சிறப்பாக வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

வழிபாட்டு நேரம்
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். த‌மிழக அர‌சி‌ன் அ‌ன்னதான‌த் ‌தி‌ட்டமு‌ம் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

எப்படி செ‌ல்வது?
பற‌க்கு‌ம் ர‌யி‌ல் சேவை‌யி‌ல் ‌திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம். ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி பேரு‌ந்து‌ ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து நட‌‌ந்து செ‌ல்லு‌ம் தூர‌த்‌தி‌லேயே இ‌க்கோ‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது. சென்னையி‌ல் எ‌ல்லா மு‌க்‌கிய பேரு‌ந்து வ‌ழி‌த்தட‌ங்க‌ளி‌‌ல் இருந்தும் இங்கு பேருந்துகள் விடப்படுகின்றன. செ‌ன்னை மெ‌ரினா கட‌ற்கரை‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் பேரு‌ந்துக‌‌ள் பலவு‌ம் ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி வ‌ழியாக‌த்தா‌ன் செ‌ல்‌கி‌ன்றன.

Read More...

ஆக்ரா கோட்டை! - Agra Fort

ஆக்ரா என்றாலே தாஜ் மஹால்!

காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ் மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.

தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் உறுதியான சுவர்களுடன் திகழும் இக்கோட்டை
ஓராயிரம் ஆண்டுக் கால வரலாற்றுச் சுவடாக விளங்குகிறது. முகலாயப் பேரரசர் ஷா ஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை, இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

இக்கோட்டையிலுள்ள மூசாம்மன் புர்ஜ், காஸ் மஹால் ஆகிய பகுதிகள் கட்டக் கலைக்கும், சிற்ப வேலைப்பாடுகளுக்கும் அழியாத சான்றாகத் திகழ்கின்றன.

தனது காதல் மனைவி மும்தாஜ் இறந்தபின், அவளின் நினைவாக படைத்த தாஜ் மஹாலை - தனது வாழ்வின் கடைசி காலத்தில் தனது மகனால் இதே கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது - மூசாம்மன் புர்ஜ் கலைக்கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ஷா ஜஹான் என்று வரலாறு கூறுகிறது.

ஆக்ரா கோட்டைக்குள் ஷா ஜஹான் கட்டிய அழகிய பகுதிகளில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ் மஹாலின் உன்னத காட்சியைக் காணலாம்.

தாஜ் மஹாலை நேரில் பார்ப்பதிலும், சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில், ஷா ஜஹான் ஆக்ரா கோட்டையில் இருந்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்த இடங்களில் இருந்து பார்ப்பதும் வித்தியாசமான அனுபவங்கள்.

ஆக்ரா கோட்டையில் ஷா ஜஹான் உலாவிய இடங்கள் ஒவ்வொன்றையும் படங்களிலும், காட்சிகளிலும் கண்டுவிடலாம், ஆனால் நேரில் பார்ப்பதிலும், ரசிப்பதிலும் கிடைக்கும் அனுபவத்தைப் பெற முடியாது.

அது தாஜ் மஹாலைப் போல, ஆக்ரா கோட்டை எல்லாவிதத்திலும் வித்தியாசமானது.

ஆக்ரா கோட்டை வரலாறு!
தங்கள் ஆட்சியின் தலை நகராக, அதிகார பீடமாக கொண்டிருந்த ராஜ புதன அரசர்கள் 1080ஆம் ஆண்டில் கட்டியது (ஆக்ரா)மண்கோட்டை. 400 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு, அவர்களைத் தோற்கடித்த சிக்கந்தர் லோடியின் (1487-1517) ஆட்சியின் கீழ் இக்கோட்டை வந்தது.

அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை இரண்டாவது தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி. சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார்.

இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

1526ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது. ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் - அதில் ஒன்றுதான் இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் - முகலாய பேரரசு வளமாக, பலமாக காலூன்ற உதவியது.

பாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆஃப்கானிய அரசர் ஷேர் ஷா கைவசமானது இக்கோட்டை.

1556இல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஆக்ராவிற்கு மாற்றினார்.

இன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என்றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

யமுனை நதிக்கரையில், உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷா ஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேர்ரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள்.

பேரரசர் அக்பர் உறுதியாகக் கட்டிய இக்கோட்டையின் சில பகுதிகளை இடித்துவிட்டு, பளிங்கு கற்களைக் கொண்டு பேர்ரசர் ஷா ஜஹான் கட்டிய கூடங்களும், கோபுரங்களும்தான் இக்கோட்டைக்கு பெருமை சேர்த்தன.

இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர் ஷா ஜஹானுக்கே உரியது.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009