Monday, October 5, 2009

அஜீத் கட்டும் புதிய ஏரோ-டிராம்! - Thala

மதுராந்தகத்திற்கு பக்கத்திலிருக்கிறது மின்னல் சித்தாமூர். கொஞ்ச நாட்களாகவே இங்கே அடிக்கடி மின்னல் அடிக்கிறது. அந்த மின்னல்...? அஜீத்! சென்னையிலிருந்து காரில் பயணித்தால் ஒன்றரை மணிநேர பயணம். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் இங்குள்ள பெரிய மைதானத்திற்கு வந்துவிடுகிறார். ஏன்?



தனது செலவில் இங்கே ஒரு மினி ஏரோ டிராம் கட்டி வருகிறார் தல. (இது அவரது நண்பருக்கு சொந்தமான இடமாம்) கொஞ்சம் பிசகியிருந்தால் பைலட் ஆகியிருப்பார் அஜீத். அந்தளவுக்கு குட்டி விமானங்களை இயக்குவதில் அலாதி பிரியம் அவருக்கு. வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த குட்டி விமானத்தில் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள பீச்சில் விமானம் ஓட்டுவது அவரது பொழுது போக்கு. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விமானத்தை தனித்தனியாக பிரித்து வைத்துவிடுவாராம். அதை மீண்டும் பொறுத்த சுமார் இரண்டு மணி நேரம் பிடிக்கும். பொறுமையாக இதை உருவாக்கி ஓட்டுகிற வரைக்கும் கண்கொட்டாமல் வேடிக்கை பார்க்கவென்றே அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்குமாம்.


தனது விமான ஆசையை ஒருத்தருக்கும் தொல்லை கொடுக்காமல் அனுபவிக்கதான் இந்த மினி ஏரோ டிராம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவரது வீட்டில் இருந்த ஒரே ஒரு விமானம் இப்போது இரண்டாகியிருக்கிறது. (குட்டி போட்டுருச்சா...?) இரண்டு விமானங்களை இரண்டு ரிமோட் உதவியுடன் ஒரே நேரத்தில் இயக்குவதுதான் தலயின் இப்போதைய தலையாய கடமை!

தேவைக்கு அதிகமா பணம் இருந்தா இப்படியெல்லாம்தான் யோசிக்க சொல்லும்...

Read More...

Sunday, October 4, 2009

Chennai yil Bayangaramm ------ Chennai its going to be a fear city ???

சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி, இவரது 13 வயது மகன் சூரஜ் ஆகியோர் கடந்த வாரம் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அனந்தலட்சுமி அணிந்திருந்த நகைகளும், வீட்டில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இக்கொலை தொடர்பாக வேல்முருகன் என்பவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த இரட்டை கொலை பரபரப்பு அடங்கும் முன்னர் நேற்று ஒரே நாளில் 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி நேரு நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 60). இவர் தனது 2 மகன்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். நேற்று மகன்கள் இருவரும் வெளியில் சென்று விட்டனர். மனோன்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.


அப்போது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் மனோன்மணியை அடித்துக் கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொலை நடந்த வீட்டின் மேல் தளத்தில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. அங்கு 4 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நேரத்தில் தான் இந்த துணிகர கொலை சம்பவம் நடந்துள்ளது. டைல்ஸ் பதிப்பதற்காக பெருங்குடியை சேர்ந்த வாலிபர் மனோன் மணியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல குன்றத்தூரை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணும் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூர் அருகே உள்ள சோமங்கலம் மேட்டூரை சேர்ந்தவர் தேசிகன். இவரது மனைவி சாந்தி. நேற்று மதியம் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்த நேரத்தில் 2 பேர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். சாந்தி தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்ற போது பின் தொடர்ந்த 2 வாலிபர்களும் சாந்தியின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் நிலை குலைந்த சாந்தி ரத்த வெள்ளத்தில் பிணமானார். அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் தபபிச் சென்றனர்.

இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் சமீப காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை கொன்று நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

இதனால் வீடுகளில் தனியாக இருப்பதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர். வயதானவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இச்சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் மத்தியில் நிலவும் இந்த பயத்தை போக்கி அவர்கள் நிம்மதியாக வாழபோலீசார் வழிவகுக்க வேண்டும்.

அடுத்தடுத்து நடந்துள்ள இந்த 3 கொலைகளுமே நகைக்காக நடந்த கொலை கள்தான். தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிவருவதும் இது போன்ற கொலைகளுக்கு காரணம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

இது போன்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களுக்கு திருட்டு நகைகள் விற்பதும் எளிதான காரியமாகி விடுகிறது. ஏதாவது அடகு கடைகளில் இந்த நகைகைள அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு கிடைத்ததை வாங்கிக் கொண்டு தப்பி விடுகிறார்கள். எனவே கொடுப்பதை கொடுத்து விட்டு நகைகளை அடகு வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி யாராவது நகைகளை கொண்டு வந்தால் அவர்கள் பற்றி உடனடியாக தகவல் தர வேண்டும் என்று அடகு கடைக்காரர்கிளடம் அறிவுறுத்தியுள்ளோம்.

அது போன்ற திருட்டு நகைகளை வாங்கும் அடகு கடை உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பகல் நேரங்களில் பாதுகாப்புக்காக காவலாளிகளை நியமிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Read More...

கருணாநிதிக்கு விருது ; வெட்கக்கேடு : ஜெ., காட்டமான சாடல்

சென்னை : "தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது, இந்தாண்டு கருணாநிதிக்கே வழங்கப்படுகிறது. விருதை வழங்கும் இடத்தில் உள்ள முதல்வரே, விருதைப் பெற்றுக்கொள்வது மரபு மீறிய செயல்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டித்துள்ளார்.

அவரது அறிக்கை: பிறரை வற்புறுத்தி, தனக்குப் பாராட்டு விழா எடுக்கச் சொல்வதும், குடும்ப உறுப்பினர்களை வைத்து பட்டிமன்றம் நடத்துவதும், தனக்குத் தானே விருதுகள் அளித்துக்கொள்வதும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அண்ணாதுரை நூற்றாண்டு விழாவில், அண்ணாதுரை படத்தை விட கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரின் படங்களே அதிகமாக காணப்பட்டன. காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில் அண்ணாதுரையின் கொள்கை, பெருமைகள், புகழைப் போற்றுவதற்கு பதிலாக, கருணாநிதியை பற்றிய பேச்சுக்களே அதிகம் இடம்பெற்றன. தி.மு.க., சார்பில் வழங்கப்படும் 2009ம் ஆண்டுக்கான அண்ணாதுரை விருதை, தனக்குத் தானே கருணாநிதி பெற்றுக்கொண்டுள்ளார். தன் பெயரிலான விருதை தனது மகனுக்கு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். கருணாநிதியின் குடும்பம் தான் தி.மு.க., என்று ஆகிவிட்ட நிலையில், விருதுகளை அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் அளிப்பதில் வியப் பில்லை.

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருதும், இந்தாண்டு கருணாநிதிக்கே வழங்கப்படுகிறது. பொதுவாக ஒரு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தும். அந்த வகையில் விருதை வழங்கும் இடத்தில் உள்ள முதல்வர் கருணாநிதி, மாநில அரசு வழங்கும் விருதை பெற்றுக்கொள்வது மரபு மீறிய செயல், உலகத்தில் இதுவரை யாரும் கடைபிடிக்காத நடைமுறை. இதை விட வெட்கக் கேடான செயல் எதுவும் இல்லை. விருது வழங்குவதில் கூட அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை நிரூபித்து இருக்கிறார் முதல்வர் கருணாநிதி. கடுமையான மின் வெட்டு, விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, அரிசி கடத்தல் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, உலக சாதனையாளர் விருது...

உள்ளாட்சித் தேர்தலை நடத்தியதற்கு, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை வேடிக்கை பார்த்ததற்கு, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப் பட்டதற்கு என பல சாதனைகளை நிகழ்த்தியதற்காக நீதிமன்றங்களிடம் இருந்தே சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார் கருணாநிதி. எனவே, தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் விருதைப் பெறாமல் இருப்பது தான் முதல்வர் கருணாநிதிக்கு அழகு. ஆட்சி அதிகாரத்தை, தன் குடும்ப உறுப்பினர்களுக்காக பயன்படுத்தும் முதல்வர், நதிநீர் பிரச்னை, விலைவாசி உயர்வு, மின் வெட்டு, தமிழக மீனவர்கள் தாக்குதல் ஆகியவற்றில் தன் கவனத்தை செலுத்தி, தமிழர்கள் துயர்துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read More...

மனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும் : மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

மும்பை : "மனைவி, எவ்வளவு கேவலமாக திட்டினாலும் அதை கொடுமையாக நினைத்து விவாகரத்து கோரக்கூடாது' என, மும்பை கோர்ட் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நபர், மும்பை ஐகோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் பி.பி.மஜும்தார் மற்றும் ஆர்.வி.மோரே அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டன்டாக பணிபுரியும் 33 வயதான நபர் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனக்கு திருமணமாகி 20 மாதங்கள் ஆகின்றன. என் மனைவி, என்னை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கிறாள். என்னுடன் அமர்ந்து சாப்பிட மறுக்கிறாள். காலம் முழுக்க இவளது கொடுமையான பேச்சை கேட்டுக் கொண்டு குடும்பம் நடத்த முடியாது. எனவே, விவாகரத்து அளிக்க வேண்டும்' என்றார். இது குறித்து, அந்த நபரின் இளம் மனைவியிடம் நீதிபதிகள் விசாரித்தனர். "சி.ஏ., படித்துள்ளதாக பொய் சொல்லி நிறைய சீதனங்களுடன் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனியார் நிறுவனத்தில் சாதாரண குமாஸ்தாவாக தான் வேலைப் பார்க்கிறார். இந்த உண்மை தெரிந்ததால் கோபப்பட்டு அவரை திட்டினேன்' என்பதை, மனைவி ஒப்புக் கொண்டார்.

இது குறித்து, நீதிபதிகள் குறிப்பிடுகையில், "ஆரம்பத்தில் இந்த பெண் கணவனுடன் அன்பாகத்தான் பழகியிருக்கிறார். கணவர் சி.ஏ.,படிக்கவில்லை என்பது தெரிந்த பிறகு தான், கோபம் ஏற்பட்டு, திட்டியிருக்கிறார். மனைவி திட்டுவதையெல்லாம் ஒரு கொடுமை என கூறி விவாகரத்து கோருவதை, ஏற்க முடியாது. மனைவியும் குடும்ப வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு சொற்களை பயன்படுத்த வேண்டும்' என கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

Read More...

ஆறுமுகம் (Aarumugam Review)

அண்ணாமலை பார்ட் டூ என்று பெயர் வைத்திருக்கலாம். ர‌ஜினிக்கு தைத்த ‌ஜிப்பாவில் பரத் பாவம், ரொம்ப தொள தொள.

பரத் பரம ஏழை. ரம்யா கிருஷ்ணன் கோடீஸ்வ‌ரி. சொல்லி வைத்த மாதி‌ரி ரம்யா கிருஷ்ணனின் தம்பிக்கும், பரத்துக்கும் இடையில் அப்படியொரு நட்பு. இந்த ஏற்றத் தாழ்வு நட்பு ரம்யாவுக்கு பிடிக்கவில்லை. சதி செய்து நண்பர்களை பி‌ரிக்கிறார். கூடவே பரத்தின் நிலத்தை ஏமாற்றி அபக‌ரிப்பவர் அதில் இருக்கும் பரத்தின் அம்மாவின் கல்லறையையும் இடிக்கப் பார்க்கிறார்.

பொங்கியெழும் பரத், ஒரே பாடலில் கோடீஸ்வரனாகி, ரம்யா கிருஷ்ணனை நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறார். ஹீரோவல்லவா... ரம்யாவுக்கு பாவ மன்னிப்பு வழங்கி அவர்கள் இழந்ததை அவர்களுக்கே திருப்பித் தருகிறார். ரம்யா கிருஷ்ணனும் பரத் அம்மாவின் கல்லறையில் மன்னிப்பு கேட்க, சுபம்.

தமிழ் ரசிகர்களின் ஞாபகசக்தியை இத்தனை மட்டமாக எடை போட்ட இயக்குனர் வேறு யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அண்ணாமலையை உட்டாலங்கடி செய்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. மழையில் இடுப்பு துண்டுடன் ரம்யாவுக்கு பரத் சவால்விடும் காட்சியை கூடவா மாற்றக் கூடாது?

ஒரே பாடலில் ஹீரோ கோடீஸ்வரனாவது, தெருவோரம் இட்லி விற்பவனுக்கு உலக அழகி ரேஞ்சில் காதலி இருப்பது, கடைசி நிமிடத்தில் வில்லி மனம் திருந்துவது... யப்பா, எந்த காலத்துலப்பா இருக்கீங்க?

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்ப்பதற்கு தகுதியான படம். மற்றபடி காலத்தையும், பணத்தையும் விரயம் செய்யாதீர்.

Read More...

Thursday, October 1, 2009

இப்போதைக்கு சினிமாதான் - விஜய் பேட்டி (Vijay Interview)

வரும்... ஆனா, வராது... என்னத்த கன்னையாவின் காமெடியை தோற்கடித்துவிட்டது நேற்றைய விஜய்யின் பேட்டி. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்தால் தள்ளிப்போன விஜய்யின் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பு, நேற்று வடபழனியில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் நடந்தது. அரசியல் பிரவேசம் பற்றி ஆணித்தரமாக ஏதாவது சொல்வார் என்று பார்த்தால் கிடைத்ததென்னவோ ஜவ்வு மிட்டாய் பதில்கள்.

"அரசியல் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெ‌ரியாது. தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் நல்லது நடக்க களத்தில் இறங்கி பாடுபடுவேன். தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல் கட்சியுடன் கைகோர்ப்பேன். ஆனால் அது எப்போது நடக்கும் என்று எனக்கு‌த் தெ‌ரியாது. யாரும் குழம்ப வேண்டாம், இப்போதைக்கு எனக்கு சினிமா மட்டும்தான்" தெ‌ளிவாக குழப்பிய விஜய்யின் இந்த முன்னுரைக்குப் பிறகு வளைத்து வளைத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும் மழுப்பலாகவே வந்தது பதில். அந்த தடாலடி கேள்விகளும், கொழ கொழ பதில்களும்...

காங்கிரஸில் சேர்வீர்களா?

இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ராகுல் காந்தியை ம‌ரியாதை நிமித்தமாக‌த்தான் சந்தித்தேன்.

அவர் அழைத்ததன் பே‌ரில் இந்த சந்திப்பு நடந்ததா?

என்னுடைய நண்பர், நலம் விரும்பி ஏற்பாட்டில் சந்தித்தேன்.

அந்த நண்பர் திரையுலகைச் சேர்ந்தவரா, அரசியல்வாதியா, தொழிலதிபரா?

நண்பர் அவ்வளவுதான்.

ராகுல் காந்தி உங்களிடம் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை விளக்கியதாக கூறியிருக்கிறார். காங்கிரஸின் கொள்கை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

காங்கிரஸ் சுதந்திரத்துக்காக போராடிய கட்சி. அதன் கொள்கை எல்லோருக்கும் பிடிக்கும், எனக்கும் பிடிக்கும்.

காங்கிரஸ் ஈழத் தமிழருக்கு எதிரான கட்சி என்ற பேச்சு நிலவுகிறதே?

அதுபற்றி எனக்கு‌த் தெ‌ரியாது. ஆனால் தமிழர்களுக்கு எதிராக எது நடந்தாலும் களத்தில் இறங்கி போராடுவேன்.

உங்கள் மக்கள் இயக்கம் தனிக் கட்சியாக மாறுமா?

மாறலாம்.

காங்கிரஸில் சேர்வீர்களா?

தெ‌ரியலை.

இளைஞர் காங்கிரஸில் நீங்கள் பதவி கேட்டதாக சொல்லப்படுகிறதே?

அது பற்றி பேசவே இல்லை.

தயாநிதி மாறனுடன் டெல்லி சென்று ஸ்டாம்ப் எல்லாம் வெளியிட்ட நீங்கள், இப்போது காங்கிரஸுக்கு ஆதரவாக பேசுகிறீர்களே?

கலைஞர் இந்த வயதிலும் இளைஞர் மாதி‌ரி துடிப்பா ஆட்சி செய்கிறார்.

ராகுல் காந்தியின் நதிநீர் இணைப்பு குறித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறதே?

நோ கமெண்ட்ஸ்.

ராகுல் காந்தியுடனான சந்திப்பில் விஜயகாந்த் பற்றி பேசினீர்களா?

இல்லை.

Read More...

டி.வி. பக்கம் ஒதுங்கும் ஜெனிலியா (Jenilia to conduct talk show in TV)

இனிமேல் சினிமாவில் வாய்ப்பே கிடைக்காது என்ற நிலையில் நடிகைகள் தேர்ந்தெடுக்கும் கடைசி அஸ்திரம், தொலைக்காட்சி. அதனை இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் இந்த பீக் ‌பீ‌ரியடில் எடுத்திருக்கிறார் ஜெனிலியா.

வட இந்திய இந்தி சானல் ஒன்று நடத்தயிருக்கும் டாக் ஷோவின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்ற ஒப்புக் கொண்டிருக்கிறார் இவர். ‌சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏனிந்த முடிவு? காரணங்கள் மூன்று.

தமிழில்தான் தொலைக்காட்சியில் தோன்றுவது கவுரவ குறைச்சலாக பார்க்கப்படுகிறது. சல்மான்கான் முதல் ஷாருக்கான் வரை பல முன்னணி நடிகர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டே தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். அங்கு அது கவுரவ அடையாளம்.

இரண்டாவது காரணம், ஜெனிலியாவை வைத்து தொடர்ந்து படம் பண்ணும் நிறுவனம்தான் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

மூன்றாவது காரணம், இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு வழங்கப்பட உள்ள மெகா சம்பளம். இந்த மூன்று காரணங்கள் இருந்தால் நாங்களும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயார் என்கிறார்கள் இங்குள்ள நடிகைகள். சம்பந்தப்பட்டவர்களுக்கு இது கேட்கிறதா?

Read More...

Wednesday, September 30, 2009

சுருட்டல் மன்னன் கருணாநிதி ! ! !

ஐயா கலைஞர் அவர்களே…
இதோ உங்கள் சொத்து பட்டியல் எங்களுக்கு தெரிந்த வரை தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.
*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின்

பக்கம் 81,82 ல்…………..
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்…………….
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்…………………………
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

Read More...

Tuesday, September 29, 2009

கீர்த்தி சாவ்லாவின் குளியல் - Keerthi Chawla Glamour in Swetha

இதுவரை யார் யாரோ தமிழ் சினிமாவுக்காக முக்குளித்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் உருவாக்காத புகையை கீர்த்தி சாவ்லாவின் குளியல் காட்சி உருவாக்கியிருக்கிறது.

சுவேதா படத்தில் கீர்த்தி சாவ்லா குளியல் காட்சியில் நடித்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் கிளுகிளுப்பாகவும், படத்தின் இறுதியில் டெரராகவும் இருமுறை முக்குளித்திருக்கிறார். இதுதவிர ரேப் காட்சியொன்றிலும் நடித்துள்ளார்.

இந்தக் காட்சிகள் படமாக்கும் போது அத்தனை கவர்ச்சியாக தெ‌ரியவில்லையாம் கீர்த்தி சாவ்லாவுக்கு. மானிட்ட‌ரில் பார்த்த பிறகுதான் கண்டபடி கவர்ச்சி காட்டியிருப்பது தெ‌ரியவந்திருக்கிறது. மேலும், படத்தின் விளம்பரத்துக்காக தயா‌ரிப்பாளர் வெளியிட்டிருக்கும் டூ பீஸ் ஸ்டில்களில் கவர்ச்சி ஆறாக ஓடுகிறது.

அப்செட்டான கீர்த்தி, கவர்ச்சியின் அளவை குறைச்சிடுங்க என தயா‌ரிப்பாளர் சங்க‌ரிடமும், இயக்குனர் சஞ்ஜெயிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்களிடம் எந்த ‌ரியா‌க்சனும் இல்லை. கேட்டால், படத்தோட பிசினஸே இதை வச்சுதான். மூலதனத்தையே ஏலமிட முடியுமா? என்கிறார்கள் உஷாராக.

பிளாட் போட்டு விற்பதென்று முடிவு செய்துவிட்டார்கள். கூவி கூவி விற்றாலும் கேட்காத மாதி‌ரி இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

Read More...

Monday, September 28, 2009

ரசிகைகளின் உற்சாகத்தால் கண்ணீர் வடித்த கமல்ஹாசன்

தன்னை காண வந்த ரசிகைகள் உற்சாக மிகுதியில் கண்ணீர் வடித்ததால் கமல்ஹாசனும் கண் கலங்கினார். கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்‌ததையொட்டி விஜய் டி.வி. சார்பில் கடந்த ஒரு மாதமாகவே சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். அதோடு நில்லாமல் ரசிகர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் கமலுடன் சந்திப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தது விஜய் டி.வி.! போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ரசிகர் - ரசிகைகள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து கலகலப்பாக பேசி மகிழ்ந்தனர். ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பானது. அப்போது கமல்ஹாசனை நேரில் பார்த்தது பற்றி ரசிகர்கள் பேசினார்கள். அப்போது ஒரு ரசிகை, கமலை கட்டிப்பிடித்து அழவேண்டும் போல் இருக்கிறது என்று கூறி உற்சாக மிகுதியில் கண்ணீர் வடித்தார். இதை கேட்டதும் கமல்ஹாசனும் கண் கலங்கினார். கமல் கண்கலங்குவதைப் பார்த்து அந்த அரங்கில் இருந்த அத்தனை ரசிகர்களும் கண்கலங்கினார்கள்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009