Tuesday, September 1, 2009

இந்தியா மீண்டும் சாம்பியன்

புதுடில்லி : நேரு கோப்பை கால்பந்து தொடரின் பரபரப்பான பைனலில் இந்திய அணி, "பெனால்டி ஷூட்-அவுட்' (5-4) முறையில் சிரியாவை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றது.

டில்லியில் 14 வது நேரு கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, லெபனான், சிரியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட ஐந்து அணிகள் "ரவுண்டு ராபின்' முறையில் லீக் போட்டியில் மோதின. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த முறையே சிரியா (12 புள்ளி), இந்தியா (6 புள்ளி) அணிகள் பைனலுக்கு முன்னேறின. இதன் பைனல் டில்லியில் உள்ள அம்பேத்கார் மைதானத்தில் நேற்று நடந்தது.விறுவிறுப்பான பைனலின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோலடிக்க முடியாமல் திணறினர். கிடைத்த "கார்னர் ஷாட்' வாய்ப்பை வீணடித்த இரு அணியினரும், 2வது பாதியிலும் கோலடிக்க முடியாமல் ஏமாற்றம் அளித்தனர்.இதனால் இரு அணியினருக்கும் கூடுதலாக தலா 15 நிமிடம் கொடுக்கப்பட்டது.

பரபரப்பான முதல் 15 நிமிடத்தில் இரு அணியினரும் பலமுறை கோலடிக்கும் வாய்ப்பை வீணடித்தனர். இரண்டாவது 15 நிமிடத்தில் அபாரமாக ஆடியஇந்திய அணிக்கு 114 வதுநிமிடத்தில் கிடைத்த "ப்ரி ஹிக்' வாய்ப்பை ரெனிடி சிங் கோலடித்து 1-0 என முன்னிலை தந்தார். தொடர்ந்துபோராடிய சிரியா அணிக்கு, அல்டோனியின் ஆட்டம் கைகொடுத்தது. கடைசிநிமிடத்தில் இவர் தலையால் முட்டி சூப்பர் கோலடிக்க, ஆட்டம் 1-1 கணக்கில் சமநிலையை எட்டியது. இதனால் போட்டி "பெனால்டி ஷூட்-அவுட்' முறைக்கு சென்றது. இதில் இந்தியா சார்பில் கிளிமாக்ஸ், ஷேத்ரி, ஸ்டீவன் டயாஸ், அன்வர் ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாக மாற்றினர்.

ரெனிடே, வாது தங்கள் வாய்ப்பை வீணடித்தனர். இந்திய கோல் கீப்பர் சுப்ரதா பவுல், சிரியாவின் மூன்று வாய்ப்பை தடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதனால் இந்திய அணி 5-4 என்ற கணக்கில் நேரு கோப்பை கால்பந்து தொடரை 2வது முறையாக கைப்பற்றி அசத்தியது. முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு நடந்த இத்தொடரின் பைனலில் இந்திய அணி, சிரியாவை வீழ்த்தியிருந்தது.

Read More...

தமிழக மீனவர்களை குறிவைக்கும் இலங்கை கடற்படை

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மறைவுக்கு முன், தமிழக கடலோர கிராமங்களில், தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவும், பாசமும், தமிழக மீனவர்களிடையே இருந்து வந்தது. ராஜிவ் காந்தியின் கொடுமையான மரணத்திற்கு பிறகு, பெரும்பாலான தமிழக கடலோர மீனவ கிராமங்களில், விடுதலைப் புலிகள் ஆதரவு குறைந்து போனது.

மீனவர்கள், விடுதலைப் புலிகளை தங்கள் இனமாகவும், உறவாகவும் கருதி செய்து கொண்டிருந்த உதவிகளும் குறைந்தன. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் ஒன்றிரண்டு, எல்லை தாண்டும் நிலையில் மட்டுமே, இலங்கை கடற்படை தாக்குதலுக்கும்,நடவடிக்கைக்கும் ஆளாகின.இலங்கை கடற்படை, விடுதலைப் புலிகளை அழிக்கவும், கட்டுப்படுத்தவும், தாக்குதலை சமாளிக்கவும் முழு மூச்சில் இருந்ததால், தமிழக மீனவர்கள் மீது கவனம் திரும்பவில்லை.தற்போது, விடுதலைப் புலிகள் பெருமளவில் ஒழிக்கப்பட்ட நிலையில், பிரபாகரன் மரணத்திற்கு பின், கடல் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் முற்றிலும் இல்லை.கடற்புலிகள் நடமாட்டத்தாலும், தாக்குதலாலும் பாதிப்பிற்குள்ளான இலங்கை அரசு, கடற்படையை பலப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முழு சுதந்திரத்தை கடற்படைக்கு வழங்கியது.

தற்போது, புலிகளின் நடமாட்டம் இல்லாமலிருந்தும், கடலில் வலம் வரும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர், எதிரிகளாக நினைத்து தாக்குவது தொடர்கிறது. இலங்கை கடற்படை - விடுதலைப் புலிகள் மோதல் திசை மாறி, தமிழக மீனவர்கள் - இலங்கை கடற்படை மோதலாக உருமாறி வருகிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறலால், தமிழக மீனவர்கள், விடுதலைப் புலிகள் தங்களுக்கு அரணாக இருந்து வந்ததாக நினைத்து, மீண்டும் புலிகள் மீது இரக்கமும், பாசமும், பரிவும் காட்டத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக, தமிழக கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் அதைச் சார்ந்த நகரங்களில், பிரபாகரன் ஆதரவு பெருகி வருவதும், இதற்கு சில புலி ஆதரவு பிரமுகர்கள், அரசியல்வாதிகள் உரமேற்றி வருவதும், மறைமுகமாக தொடங்கியுள்ளது.

இலங்கை கடற்படை அட்டூழியத்தை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவிட்டால், மீண்டும், தமிழக கடலோரங்களில் இருந்து விடுதலைப் புலிகள் ஆதரவு எழும் அபாயம் உள்ளது.

ஓய்வெடுக்கும் உளவுத்துறை : இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் மோதல் நடந்து கொண்டிருந்த போது, தமிழக மீனவ கிராமங்களில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஐ.பி., கியூ பிரிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார், விடுதலைப் புலிகள் ஒழிப்பிற்கு பிறகு, தங்கள் வேலை முடிந்து விட்டதாக, மீனவ கிராமங்களில் தொடர்பை துண்டித்து விட்டனர். வி.ஐ.பி.,களின் வருகையை மட்டும் அரசுக்கு தெரிவிப்பதோடு கடமை முடிந்து விட்டதாக எண்ணி, தலையெடுக்கும் தலைவலியைப் பற்றி சிந்திக்காமல், "ஹாயாக' ஓய்வெடுத்துக் கொண்டுள்ளனர். அதிகாரிகள் உளவுத்துறையினரை தட்டி எழுப்ப வேண்டியது மிகவும் அவசியம்.

Read More...

Monday, August 31, 2009

உஸ்....! ஸ்ரேயாவா இது!! இப்பவே கண்ண கட்டுதே...

சைஸ் ஜீரோ என்று மெலிந்த உடலை அப்பட்டமாக வெளிக்காட்டி கோடம்பாக்கத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருக்கும் நடிகை ஸ்ரேயா வெளியிட்டிருக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட், உஸ்... இப்பவே கண்ண கட்டுதே... என்று சொல்ல வைக்கிறது. அடுத்தமாதம் டொரண்டாவில் உலக படவிழா நடக்கிறது. இதில் ஸ்ரேயா நடித்த ஹாலிவுட் படமான குக்கிங் வித் ஸ்டெல்லா படமும் திரையிடப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க ஸ்ரேயாவுக்க அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து அம்மணி அளித்துள்ள பேட்டியில், இந்த அழைப்பே பெருமையாக இருக்கிறது. அடுத்த மாதம் 3 நாட்கள் அங்கு பட விழாவில் பங்கேற்க உள்ளேன். இதற்காக சிறப்பு ஆடைகளை தயாரிக்குமாறு காஸ்ட்யூமரை கேட்டு கொண்டுள்ளேன். இந்திய கலாசாரத்தை விளக்கும்படியான ஆடைகளையே அணிய விரும்புகிறேன். குறிப்பாக புடவையிலேயே செல்ல வேண்டும் என எண்ணியுள்ளேன், என்று கூறியிருக்கிறார். உண்மையிலேயே கண்ணைக் கட்டுதா?

Read More...

'போர்ஸ் இந்தியா' அபாரம் : 2வது இடம் பெற்று சாதனை - Formula 1

ஸ்பா-பிரான்கர்சாம்ப்ஸ் : பார்முலா-1 ரேசில் நேற்று இந்தியாவுக்கு பொன்னான நாள். பெல்ஜியம் கிராண்ட்பிரிக்ஸ் ரேசில் "போர்ஸ் இந்தியா' அணியின் கியான் கார்லோ பிசிக்கெலா இரண்டாவது இடம் பெற்று அசத்தினார்.

இதன் மூலம் "பார்முலா-1 ரேஸ் ஒரு விளையாட்டு அல்ல, வெறும் பொழுதுபோக்கு தான்' என விமர்சித்த மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு சரியான பதிலடி கொடுக்கப் பட்டுள்ளது.பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா பிரான்கர்சாம்ப்சில் பார்முலா-1 கிராண்ட்பிரிக்ஸ் ரேஸ் நேற்று நடந்தது. இதில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான "போர்ஸ் இந்தியா' அணியும் பங்கேற்றது. இதன் சார்பில் பங்கேற்ற இத்தாலியைச் சேர்ந்த கியான்கார்கலோ பிசிக்கெலா மின்னல் வேகத்தில் பறந்தார். இவர் இரண்டாவது இடம் பெற்றார். இதன் மூலம் "போர்ஸ் இந்தியா' அணி முதல் முறையாக பார்முலா-1 புள்ளிகளை பெற்று வரலாறு படைத்தது. முதலிடத்தை பெராரி அணியின் கிமி ரெய்கானன் பெற்றார்.

இது குறித்து பிசிக்கெலா கூறுகையில்,""ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் முதலிடத்தை பறிகொடுத்தது மிகுந்த கவலை அளித்தது. எங்களது இலக்கு பார்முலா-1 புள்ளிகளை பெறுவது தான். இரண்டாவது இடம் பெற்றதன் மூலம் 8 புள்ளிகள் கிடைத்தது மிகப் பெரிய விஷயம்,''என்றார்.

Read More...

காங்கிரசில் சேர திட்டமிட்ட விஜய்க்கு பலமுனை எதிர்ப்பு

சென்னை :விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு மறைமுக எதிர்ப்பும், அவரது படங்களுக்கு வெளிநாட்டில் தமிழர்களால் சிக்கல் ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.

நடிகர் விஜய், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலை டில்லியில் சந்தித்து விட்டு திரும்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள், விஜயை வரவேற்றுள்ளதால், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லது ராஜ்யசபா எம்.பி., பதவி அவருக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.விஜய் மீண்டும் ராகுலின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஆனால் விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி உள்ளது. அடுத்த மாதம் தமிழகம் வரும் ராகுலை சந்திக்கும் போது தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என, காங்கிரஸ் கட்சியில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களின் வாரிசுகள் கணக்கு போட்டு காத்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியில் விஜய் சேரும் பட்சத்தில், அவரது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் கொடுக்கப்படும்.

இதனால், பதவியை எதிர் பார்த்துக் காத்திருக்கும் காங்கிரசார் இப்போதே தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.மத்திய அமைச்சர்கள் சிலரை, விஜயின் அப்பா சந்திரசேகர் சந்தித்துப் பேசியுள்ளார். அமைச்சர் வாசன் மூலமாகவே ராகுலை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் விஜய் சேர்வது உறுதியாகி உள்ளது. விஜய் முடிவுக்கு வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் விஜய் மனைவியின் பூர்வீகம் இலங்கை. லண்டன் மற்றும் கனடாவில் அவரின் பெற்றோர்களும், உறவினர்களும் உள்ளனர். இதனால் கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விஜய் ரசிகர்களாக உள்ளனர். இதனால், விஜய் நடித்த படங்கள் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விஜய், காங்கிரசில் சேர்ந்தால் இந்நாடுகளில் அவரது படங்களைப் புறக்கணிப்போம் என்று கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்தக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் விஜய், மக்கள் இயக்கம் துவங்கி அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று புதிய அரசியல் கட்சி துவங்கப் போவதாக செய்திகள் வந்தன. இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாகவும், அவருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர்களும் குடிமக்கள் என்பதால், அவர்களும் அரசியலில் பங்கு கொள்ள உரிமை உண்டு. ஆனால் விஜய், காங்கிரசில் சேர முன் வந்தால், அதைத் தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள்.மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியின் போது தான் இலங்கையில் வரலாறு காணாத வகையில் இனப்படுகொலை அரங்கேறியது.காங்கிரஸ் கட்சியில் ராகுலுடன் விஜய் கைகோர்க்க எத்தனித்திருப்பது, இலங் கைத் தமிழர்களுக்கு செய்யக் கூடிய ரெண் டகம். விஜய் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விஜய் படங்கள், நடித்து வெளிவர இருக்கும் புதிய படங்களை உலகளாவிய அளவில் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்' என, கூறப்பட்டுள்ளது.

சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், விஜய் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது

Read More...

ரஜினிக்கு அரசியல் ஆசை மீண்டும் வருகிறது :ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு

தமிழக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், தற்போது நடித்து வரும், "எந்திரன்' படத்துக்குப் பின் கண்டிப்பாக அரசியல் கட்சி துவக்குவார் என, அவரது ரசிகர் கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது, தி.மு.க., - த.மா.கா., கூட்டணி ஆட்சியைப் பிடிக்க நடிகர் ரஜினிகாந்த், அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க.,வுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததே காரணம்.அப்போதே ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அவரது ரசிகர்களும் அதையே விரும்பினர். ஆனால், ரஜினி அரசியலுக்கு வரவில்லை.தமிழகத்தில் அடுத்தடுத்து நடிகர்கள் அரசியலுக்கு வந்து புதிய கட்சி துவக்கி வருகின்றனர். தங்களுக்கு இருந்த ரசிகர் மன்றங் களை ஒருங்கிணைத்து தே.மு.தி.க.,வை விஜயகாந்தும், அ.இ.ச.ம.க., கட்சியை சரத்குமாரும் துவக்கினர்.அதேபோல், நடிகர் டி.ராஜேந்தரும் லட்சிய தி.மு.க.,வை நடத்தி வருகிறார். நடிகர் விஜய்யும் விரைவில் புதிய கட்சியை துவக்குவார் என்று கூறப்படுகிறது.ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து, தன் நலம்விரும்பிகளிடம் ஆலோசனை செய்துள்ளதாகவும், அவர் தற்போது நடித்து வரும் எந்திரன் படம் ரிலீசுக்குப் பின் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் கட்சி துவக்குவார் என்றும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் சிலர் கூறியதாவது:தலைவர் ரஜினி அரசியலுக்கு வரும் முடிவை எடுத்து விட்டார். தற்போது அவர் நடித்து வரும் எந்திரனுக்கு பிறகு, கண்டிப்பாக மன்றங்களை ஒருங்கிணைத்து, அரசியல் கட்சி துவக்கவுள்ளார் என்பது அவரது நடவடிக்கையில் இருந்து தெரிகிறது. கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட எந்த மன்றத்துக்கும் இதுவரை பதிவு எண் கொடுக்கப்படவில்லை. தற்போது, அந்த ஆண்டுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட மன்றங்களுக்கு பதிவு எண் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவராகவும் தன்னை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் மூடில் இருப்பதால் தான், மக்கள் மத்தியில் செல்வாக்கின் உண்மை நிலையை அறிய, ரசிகர் மன்ற விழாக்களுக்கும், ரசிகர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் தன் நலனில் அதிக அக்கறையுள்ள அண்ணன் சத்திய நாராயணராவை அனுப்பி வருகிறார். அவருடன் ரஜினிக்கு மருமகன் உறவுமுறையில் உள்ள சந்திரகாந்த் என்பவரும் தற்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மக்களின் நாடித்துடிப்பை பார்த்து வருகின்றனர்.எந்திரன் படம் இன்னும் எட்டு மாதங்களில் முடியும் என தெரிகிறது. ஆகையால், அடுத் தாண்டு கண்டிப்பாக ரஜினி அரசியலில் காலடி எடுத்து வைப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முடிவு எப்போது? சத்திய நாராயணராவ் பேட்டி:""எந்திரன் படம் முடிந்த பிறகு அரசியல் கட்சி துவங்குவது பற்றி ரஜினி நல்ல முடிவை அறிவிப்பார்,'' என்று அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.திருச்சியில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வீட்டுத் திருமணங்களில் கலந்து கொள்ள நடிகர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ், இவரது மருமகனும், கர்நாடக மாநில ரஜினி மன்ற தலைவருமான சந்திரகாந்த் ஆகியோர் நேற்று காலை திருச்சி வந்தனர்.சிதம்பரம் நகர ரசிகர் மன்ற நிர்வாகிகள், நடிகர் ரஜினி குறித்து தயாரித்த, "மக்கள் மனம் கவர்ந்த மன்னன்' "சிடி' வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சத்தியநாராயணராவ், நிருபர்களிடம் கூறியதாவது:ரசிகர் மன்ற நிர்வாகிகளின் அழைப்புக்கு இணங்கி திருமண விழாக்களில் கலந்து கொள்ள திருச்சி வந்துள்ளேன். அரசியல் கட்சி துவங்குவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் ஏதும் நடத்தவில்லை. ரஜினி தற்போது எந்திரன் படப்பிடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படம் முடிந்ததும் அரசியல் கட்சி துவக்குவது குறித்து சரியான நேரத்தில், சரியான முடிவை அறிவிப்பார்.இவ்வாறு சத்தியநாராயணராவ் கூறினார்.

Read More...

Sunday, August 30, 2009

பட விழாக்களை புறக்கணித்த நயன்தாரா, மீரா ஜாஸ்மின் நமீதாவுக்கு நோட்டீஸ்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

படங்களை வியாபாரம் செய்ய தயாரிப்பாளர்கள் டிரெயிலர் வெளியீட்டு விழாக்களையும் ஆடியோ வெளியீட்டு விழாக்களையும் பெரும் செலவு செய்து நடத்துகின்றனர். நட்சத்திர ஓட்டல்கள், தியேட்டர்களில் இவ்விழாக்கள் நடைபெறும். இதற்காக ஆடம்பர அழைப்பிதழ்கள் அச்சிட்டும் விநியோகிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி யூனியன் நிர்வாகிகள் இத்தகைய விழாக்களில் பங்கேற்று படத்தை உயர்வாக பாராட்டி பேசுவர். இது அப்படத்தின் விளம்பரத்துக்கும் வியாபாரத்துக்கும் உதவியாக இருக்கும்.

ஆனால் இந்த விழாக்களில் அப்படங்களில் நடித்த கதாநாயகிகள் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை. கதாநாயகர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். நடிகைகள் வெளியூர் சூட்டிங், என்றே ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி வராமல் புறக்கணித்து விடுகின்றனர்.

சமீபத்தில் “ஆதவன்” பட ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சத்யம் தியேட்டரில் நடந்தது. விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நேரில் வந்து சூர்யாவையும் படக்குழுவினரையும் பாராட்டி பேசினார்கள். ஆனால் அதில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா வரவில்லை.

“ஆதி நாராயணா” என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. அதில் கதாநாயகியாக நடித்த மீரா ஜாஸ்மின் விழாவுக்கு வராமல் புறக்கணித்தார்.

நேற்று நமீதா கதாநாயகியாக நடிக்கும் “அழகான பொண்ணுதான்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் நடந்தது. படத்துக்கு சம்பந்தம் இல்லாத நடிகை குஷ்புவே இவ்விழாவில் மகளுடன் பங்கேற்று படத்தை பாராட்டி பேசினார். தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராமநாராயணன் வெளியீட்டு ஆடியோ சி.டி.யையும் பெற்றுக்கொண்டார்.

படத்தின் டைரக்டர் திரு, தயாரிப்பாளர் கேசவன், கதாநாயகன் புதுமுகம் கார்த்திக், இசையமைப்பா ளர் சுந்தர் சி.பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால் நமீதா வரவில்லை.

இந்த விழாவில்தான் பிரச்சினை வெடித்தது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சிவசக்தி பாண்டியன், வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகைகள் படங்களை விளம்பரப்படுத்தும் இது போன்ற விழாக்களுக்கு வருவதில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இக்கருத்தை குஷ்பு, பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் ஆகியோரும் வரவேற்று பேசினர். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி ஆகிய மூன்று சங்க நிர்வாகிகளும் கலந்து பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு, காணப்படும் என்று ராம நாராயணன் தெரிவித்தார்.

விரைவில் இதற்கான கூட்டம் நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக நயன்தாரா, மீரா ஜாஸ்மின், நமீதா, “அகம் புறம்” பட விழாவில் பங்கேற்காத அப்படத்தின் கதாநாயகி மீனாட்சி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவருக்கும் படவிழாவில் பங்கேற்காததற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

அவர்கள் அனுப்பும் பதில் கடிதத்தை வைத்து நடவடிக்கை இருக்கும். இனிமேல் நடிகைகள் அனைவரும் இதுபோன்ற பட விழாக்களில் பங்கேற்க சுற்றறிக்கைகள் அனுப்பப்பட உள்ளது.

Read More...

விஜய் - காங்கிரஸ் - விஜயகாந்த் : ராகுல் புது வியூகம்

"திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும்' என, மாஜி மத்திய அமைச்சர் இளங்கோவன் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகிறார். புதிய இளைஞர்களை கட்சியில் சேர்த்து, தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலுக்கும் லட்சியமாக உள்ளது. அதனால், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாஜி இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களை ராகுல் கேட்டறிந்து வருகிறார்.

தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுகளை கவரும் வகையில் சினிமா பிரபலங்களை காங்கிரஸ் கூட்டணியில் இணைத்து வலு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இதற்கான ரகசிய திட்டத்தை தீட்டி, மாஜி மத்திய அமைச்சர் ஒருவர் ராகுலுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார். அவரது திட்டத்தின் முதல் கட்டமாக புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கடந்த 23ம் தேதி நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "அரசியலில் நுழைய விருப்பம். வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்' என தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டி பேசினார் நடிகர் விஜய்.

இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பேசும் போது, "மாணவ, மாணவிகளுக்கு விஜய் அதிகமான அறிவுரைகளை கூறியுள்ளார். அவற்றை முறையாக பின்பற்றி நடந்து கொள்ள வேண் டும்' என வேண்டுகோள் விடுத்தார். "காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார்' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் பேசியுள்ளது, தமிழக காங்கிரசாருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. காங்கிரசை பலப்படுத்தி, தனித்து போட்டியிடும் வகையில், மாற்றியமைக்க ராகுல் ஒருபுறம் முயற்சி எடுத்து வரும் நிலையில், தற்போதுள்ள தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு இன்னொருபுறம் அச்சாரம் போடப்பட்டு வருகிறது.

"கூட்டணி தர்மத்திற்காக தி.மு.க., வை அனுசரிக்கிறோம், தமிழகத்தில் ஓராண்டுக்கு முன் 2010ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடத்த தி.மு.க., முடிவு செய்துள் ளது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என தி.மு.க., நினைக்கிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்ந்து நமக்கு சரிவு தான் ஏற்படும்' என்று வேலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் ஞானசேகரன் பரபரப்பாக பேசினார். தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த ராகுல் எடுத்துவரும் முயற்சியின் ஒருபகுதியாகவே ஞானசேகரன் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை ஞானசேகரன் எழுப்பியுள்ளார்.

டில்லியிலும் காங்கிரஸ் - தி.மு.க., தலைவர்கள் இடையே சுமூக உறவு இல்லை என கூறப்படுகிறது. இப்படி பல்வேறு திரைமறைவு அரசியலுக்கு மத்தியில், தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி வளர்ச்சி மற்றும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நடிகர் விஜயுடன் புது கூட்டணி அமைப்பது காங்கிரசுக்கு தமிழகத்தில் வெற்றியை தேடித் தரும் என்ற கருத்தை மாஜி மத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ராகுல் திட்டம் மற்றும் காங்கிரசாரின் விருப்பங்கள் எந்த அளவுக்கு பலனை அளிக்கப் போகின்றன என்பது விரைவில் தெரியவரும்.

Read More...

சமுத்திரக்கனி படத்தில் ரோஜா

தமிழைவிட அதிக பொருட் செலவில் தயாராகி வருகிறது நாடோடிகளின் தெலுங்கு ‌ரிமேக்கான சம்போ சிவ சம்போ. அஞ்சாதேயில் வரும் கத்தாள கண்ணால குத்தாத நீ என்னை... பாடலை சேர்த்து படத்தின் டெம்போவை கூட்டியிருக்கிறார்கள்.

சசிகுமார் நடித்த வேடத்தில் ரவிதேஜாவும், அனன்யா நடித்த வேடத்தில் ப்‌ரியாமணியும் நடிப்பது தெ‌ரியும். படத்தில் முக்கியமானது அந்த எம்பி கதாபாத்திரம். அதில் நடிக்க சமுத்திரக்கனி தேர்வு செய்திருப்பது நிஜ அரசியல்வாதியான ரோஜாவை.

தெலுங்கு தேசம் கட்சியின் மகளிரணி தலைவராக இருக்கும் ரோஜாவின் சாராய கடை உடைப்பு மற்றும் எதிர்கட்சியின‌ரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் கசமுச மேடை பேச்சுகள் ஏற்கனவே அவருக்கு ரவுடி இமேஜை ஆந்திராவில் ஏற்படுத்தியிருக்கிறது. வில்லி எம்பி வேடத்துக்கு அவரைவிட பொருத்தமானவர் ஆந்திராவில் இருக்க முடியாது.

சம்போ சிவ சம்போவை ஒரே ஷெட்யூல்டில் முடித்துவிட்டு கன்னட ‌ரிமேக்கிற்கு செல்லவுள்ளார் சமுத்திரக்கனி. அப்படியே இந்தி ‌ரிமேக்கையும் இயக்குங்க சார்.

Read More...

விஜய் - தனுஷ் மோதல்

விஜய்யின் வேட்டைக்காரன் பன்ஞ் டயலாக்கும், குத்துப் பாடலுமாக பரபரவென வளர்ந்து வருகிறது. சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் செட் போட்டு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள்.

வேட்டைக்காரன் விஜய்யின் 49 வது படம். மேலும் வில்லு, குருவி என இரு சுமார் படங்களுக்குப் பிறகு வெளியாகும் படம். நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலைமை.

வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட ஏவிஎம் திட்டமிட்டுள்ளது. ர‌ஜினி, கமல், அ‌ஜித், விக்ரம், சூர்யா என யாருடைய படமும் வரும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. வேட்டைக்காரன் மட்டும்தான் ஒரே மாஸ் ஹீரோவின் படம். அதனுடன் போட்டி போட இருப்பது தனுஷின் குட்டி.

விஜய்யின் அழகிய தமிழ் மகன் வெளியான போது தனுஷின் பொல்லாதவன் ‌ரிலீஸானது. அழகிய தமிழ் மகன் அவுட். பொல்லாதவன் ஹிட். வில்லு வெளியான போது படிக்காதவன் வெளியானது. வில்லு சுமார், படிக்காதவன் ஹிட்.

தீபாவளிக்கு வேட்டைக்காரனும், குட்டியும் மோதுகின்றன. ஜெயிக்கப் போவது யார்? காத்திருக்கிறார்கள் இருவ‌ரின் ரசிகர்களும்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009